Skip to Content

07.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)              

                                                                                                                                               N. அசோகன்

81. இறந்தவரை உயிர்ப்பிக்க முடியாதுஎன்பது விஞ்ஞானத்தின் கருத்து.  ஆனால் ஏன் இந்த நிலைமை என்பது விஞ்ஞானத்திற்குத் தெரியாது.

82. ஜடஉலகில் நிகழ்வனவெல்லாம் சூட்சும உலகில் ஏற்கனவே நிகழ்ந்தவற்றின் வெளிப்பாடுகள்தாம்எனவேதான் சகுனங்கள் ஜடஉலகில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிவிப்பதாக அமைகின்றன.

83. நம்முடைய ஜீவனில் வெளியில் தெரிவதாக அமைந்திருக்கக்கூடிய ஒரே பாகம் நம்முடைய உடம்புதான்நம்முடைய பிராணமையம்அறிவு, ஆன்மாஎன்று இந்த மற்ற பாகங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.  ஆனால் உண்மையில் பார்த்தால் கண்ணுக்குத் தெரியாத இந்த மூன்று பாகங்கள் உடம்பைவிட அளவில் பெரியதாக இருக்கின்றன.

84. விஞ்ஞானத்தைப்பொருத்தவரை மனிதனுடைய மூளையும், அறிவும் உலகிலேயே மிகவும் நுட்பமான பொருட்கள் ஆகும்ஆனால் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவ்வளவு நுட்பமாக இருந்தாலும் மனிதனுடைய அறிவு அறியாமையில் தான் மூழ்கி இருக்கிறது.

85. மரபுக்கூறுகள்மூலம் பெற்றோர்களுடைய உடலமைப்பில் உள்ள அம்சங்கள் பிள்ளைகளுக்குப் போகின்றனஎன்பதை விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறதுஆனால் பெற்றோர்களுடைய குணாதிசயங்கள் அதே மரபுக் கூறுகள்மூலம் பிள்ளைகளுக்கும் போகிறதுஎன்பதை விஞ்ஞானம் மறுக்கிறது. ஆனால் சூட்சுமமாக இதுவும் நடக்கிறதுஎன்பதுதான் ஆன்மீக உண்மை.

86. ஜடத்திலிருந்து உயிரினங்கள் தோன்றியதற்கும், மூளையிலிருந்து அறிவு தோன்றுவதற்கும் பௌதீகம் மற்றும் வேதியல் நிகழ்வுகளே காரணம் என்று விஞ்ஞானம் கூறுவதை ஏற்க முடியாதுகண்ணுக்குத் தெரியாத சூட்சும சக்திகளும் இதற்கு காரணமாகத்தான் இருக்கின்றன. அப்படி இல்லையென்றால் மனிதனிடமிருந்து சத்தியஜீவிய மனிதன் பிறப்பதற்கு வழியே இல்லை.

87. நம்முடைய மேல்நிலை பர்சனாலிட்டியைவிட நம்முடைய ஆழ்நிலை பர்சனாலிட்டி மிகவும் பெரியதாகும். மேலும் நம் ஆழ்நிலை பர்ஸனாலிட்டி மேல்நிலை பர்ஸனாலிட்டிக்கு எதிரானதாக இருக்கும்.

88. வடிவமில்லாத நம்முடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் நிஜமானவை என்று விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறதுநம்முடைய ஆன்மாவுக்கும் வடிவமில்லை; இருந்தாலும் அதுவும் உண்மையில் இருக்கிறதுஎன்பதை விஞ்ஞானம் நம்ப மறுப்பது வியப்பாக உள்ளது.

89. பரிணாம வளர்ச்சியில் கீழிருந்து பார்க்கும்பொழுது உயிரும், அறிவும் ஜடத்திலிருந்து தோன்றியுள்ளனஆனால் மேலிருந்து பார்க்கும்பொழுது உயிரும், ஜடமும் மனதிலிருந்து தோன்றியுள்ளன.

90. ஜடஉலகில் ஆண், சக்தி மிகுந்தவனாகவும், பெண், சக்தி குறைந்தவளாகவும் கருதப்படுகிறாள். ஆனால் சூட்சும உலகில் பெண் நியதி தான் சக்தி மிகுந்ததாகவும், ஆண் நியதி சக்தி குறைந்ததாகவும் காணப்படுகிறது.

91. நாம் அற்புதம் என்று விவரிப்பது உயர் நிலையில் உள்ள ஒரு சக்தி கீழ் நிலையில் செயல்படுவதாகும்அதனுடைய நிலையில் இயற்கையாகத் தெரிவது கீழ் நிலையில் அற்புதமாகத் தெரிகிறது.

92. மனித சுபாவத்தில் சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் மூன்றும் சமநிலையில் கலந்திருப்பது நன்றாகும்சத்வ குணத்தினால் கிடைக்கும் அறிவிற்கு, ரஜோ குணத்தினுடைய சக்தியும் தேவைப்படுகிறது. ரஜோ குணத்தின் வேகத்தை கட்டுப்படுத்த தமோ குணத்தின் மந்தமும் உதவும்.

93. நமக்குள்ள சிறந்த ஆதாரம் நம்முடைய அறிவுதான்இயற்கை வளங்கள் குறைகின்றபொழுது நம் அறிவு வளத்தை வைத்துக்கொண்டு அந்த பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.

94. மேல் இருக்கும் அறிவு, கீழ் இருக்கும் வேலையை நிர்ணயிக்கும்பொழுது உற்பத்தித் திறன் அதிகரிக்கிறதுஆனால் வேலையை முதலில் செய்துவிட்டு, பின்னர் அனுபவத்தால் அறிவைச் சேகரம் செய்யும்பொழுது உற்பத்தித் திறன் குறைகிறது.

95. முதல் மற்றும் டெக்னாலஜியைவிட organisation மேலும் சக்தி வாய்ந்ததுஎன்பதை பலர் அறிவதில்லைகுறைந்தபட்ச எனர்ஜியை செலவு செய்து அதிகபட்சப் பலனைத் தரக்கூடிய சாதனம் அதுஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படக்கூடிய ஆப்பரேஷன் சிஸ்டம்களை உருவாக்கி அதன்மூலம் organisation செயல்படுகிறது.

97. பழங்காலத்தில் தேவையாக இருந்த ஒன்று இப்பொழுது தேவையில்லாமல் போவதை நாம் காலம் கடந்த விஷயம் என்கிறோம்.

98. சமூகத்தின் அடிமனதில் இருக்கின்ற அறிவிற்கு வெளிப்படையாக வடிவம் தருபவர் முன்னோடியாவர். இப்படிப்பட்ட முன்னோடிகளின் புரட்சிகரமான செயல்பாடுகளின் காரணமாகத்தான் சமூகம் முன்னேறுகிறது.

99. முன்னோடிக்கு எதிர்ப்பு வந்தால் அவர் சமூகம் தயாராவதற்கு முன் அவர் வந்துவிட்டார்என்று அர்த்தம்அவருக்கு ஆதரவு கிடைத்தால் உரிய நேரத்தில் வந்துள்ளார்என்று அர்த்தம். அவர்களுக்குப் பெரும்பாலும் எதிர்ப்புதான் கிடைக்கிறதுஎன்பதை வைத்துப் பார்க்கும்பொழுது பெரும்பாலும் அவர்கள் சமூகம் பக்குவம் அடைவதற்கு முன்னேயே வந்துவிடுகிறார்கள்என்று தெரிகிறது.

100. தனிஉடைமைக் கொள்கைகளைவிட கம்யூனிசப் பொதுஉடைமை சிறந்த அரசியல் முறையாகும்மக்கள் தாமாகவே பொதுஉடைமைக் கொள்கைகளை ஏற்றிருந்தால் அதன் சிறப்பு வெளிவந்திருக்கும்ஆனால் அரசாங்க நிர்ப்பந்தம் பொதுஉடைமையை மக்கள் உதறி தள்ளும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது.

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நெடுநாட்களாக உன்னை வாட்டும் குணம் ஒரு முக்கியமான இடம். அது ஒரு கதவு. அது திறந்தால் அளவுகடந்த முன்னேற்றம் ஏற்படும். (.ம்.) அவசரம், 'தான்' எனும் உணர்வு, கடுமையாகப் பேசுதல்.நெடுநாளாக உனக்குப் பயன்பட்ட நல்ல குணங்களும் அது போன்ற ஒரு திறவுகோலாக அமையும். அவை வழிவிட்டால் பெருமுன்னேற்றம். (.ம்.) நல்லெண்ணம், விஸ்வாசம்,மிருதுவான பேச்சு, நாணயம்.

குணங்கள் விலகி குறிப்பிடும் சொர்க்கம்.


 


 



book | by Dr. Radut