Skip to Content

10.முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

SURRENDER & FAITH

சரணாகதி, நம்பிக்கை, சமர்ப்பணம்

நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என இரண்டாகப் பிரிக்கலாம். நம்பிக்கை (faith) என்பது ஆன்மாவிற்குரியது என்று அன்னை கூறியிருக்கிறார்கள். நம்பிக்கை உள்ளவர் ஆன்மவிழிப்பு உள்ளவர். மனத்தால் முடியாது என்பது ஆன்மாவிற்கு முடியும் என்பது உண்மை. நம்பிக்கை நம் வாழ்வில் முழுமையாகச் செயல்பட வேண்டுமானால் சமர்ப்பணம் அதற்குத் துணையாக நிற்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாததை நம்புவதே நம்பிக்கை. நம் மனம் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள், நம் திறமை, நம் அறிவிற்கு எட்டியது போன்றவற்றைக் கணக்கில் கொண்டு ஒரு செயலை, விஷயத்தை எடை போடுகிறது.

அவ்வாறு பகுத்துப் பார்க்கும்பொழுது இது ஒரு hopeless situation,காரியம் கைகூடாது என்று முடிவிற்கு வருகிறது. அதையே நம்புகிறது.

அன்னை மீது நம்பிக்கை இருக்கிறது என்பவரும், தன்னை அன்னையிடம் ஒப்படைத்துவிட்டேன் என்பவரும் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தன்னை சோதனை செய்து பார்த்தால், இந்த விஷயத்தில் நம்பிக்கை, குறைவாக இருப்பது தெரியும். டாக்டர் இந்த வியாதி குணமாவது கடினம் என்று கூறினால், மனம் அதைத் திரும்பத் திரும்ப நினைக்கிறது, நம்புகிறது. வாய், "அன்னை இருக்கிறார்'என்று கூறினாலும், உணர்வு, டாக்டர் சொல்லை நம்புகிறது. இதை எல்லாம் மீறி, உண்மையாக அன்னை மீது, அவர் சக்தி மீது நம்பிக்கை வைத்து, "டாக்டர் சொல்வது is a medical fact. ஆனால் அன்னை அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர், அன்னை சக்தி சத்தியஜீவிய சக்தி, எதையும் சாதிக்கும் சக்தி' என்று உணர்ந்தால்,நடப்பது Medical Miracle.

நம்பிக்கை உள்ளவர்க்கு அபாரப் பொறுமை உண்டு.அவசரப்படுபவர்கள் நம்பிக்கை இல்லாதவர்கள். பொறுமையாக,எதுவும் நம்மை disturb செய்யாமல் காத்திருப்பதும், யோசனை செய்யாமல் க்ஷணத்தில் ஏற்பதும் நம்பிக்கையின் ஆன்மீக இலட்சணங்களாகும். ஆர்வமாக நம்பிக்கையால் செயல்படுபவர்,தம்மை அன்னையிடம் ஒப்படைப்பவர், அன்னை மீது நம்பிக்கை உள்ளவர் என்றும் கூறலாம்.

நம்பிக்கையும், சமர்ப்பணமும் நெருங்கிய தொடர்புடையவை. சமர்ப்பணம் உயர்ந்தால் நம்பிக்கை உயரும். நம்பிக்கை உயர்ந்தால்,அசைக்க முடியாததானால், சமர்ப்பணம் பூர்த்தியாகும். காரியம் சமர்ப்பணம் ஆகவில்லை, விஷயம் முடியவில்லை என்றால், நம்பிக்கை குறைவாக இருக்கிறது என்று உணர வேண்டும். அன்னையிடம் நம்பிக்கையை உயர்த்த வேண்டும். நம்பிக்கைக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நாம் என்பது நம் திறமை. நாம் நம் திறமை மூலமாகமட்டும் முன்னேற முயல்கிறோம். அது சிறிய முன்னேற்றம். நம் திறமைக்கும்,personalityக்கும் தகுந்தாற்போல்தான் ரிசல்ட்டும் இருக்கும்.இதுதான் நம் வாழ்வின் சட்டம். அன்னைச் சட்டம் வேறு. திறமைப் பேரருளுக்குத் தடை. நம் திறமையை நம்பாவிட்டால் அருள் பேரருளாகிறது. நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தால், யோசனை செய்து பார்த்தால், நாம் திறமையால் சாதித்தவை என்று உணர்ந்த அனைத்தும் நம் திறமையை மீறிச் சாதித்தவையாகும் என்று அறிய முடியும். வாழ்வில் அதிகமாகச் சாதிக்க விரும்புபவன் திறமையை நம்பாமல் ஆன்மாவை, அன்னையை நம்ப வேண்டும். திறமையால் சாதிப்பது கை மண் அளவு; அன்னை கொடுப்பது உலகளவு என்ற தெளிவு வேண்டும். அதற்குரிய கருவி, சமர்ப்பணம். ஒரு காரியத்தைச் சமர்ப்பணம் அற்புதமாக்கும்.

அகந்தை மூலமாக நாம் செயல்படும் பொழுது result சிறியது, நம் வளர்ச்சியைத் தடை செய்வது. அன்னை என்பது அகந்தையை கடந்த நிலை. "நாம்'' இருக்கும் வரை அன்னைசக்தி அபரிமிதமாகச் செயல்பட முடியாது. நாம் அழிந்தபின், நம் வாழ்வு அன்னை பிடிக்குள் வருகிறது. அப்படிப்பட்ட வாழ்வு, அற்புதம் அன்றாட நிகழ்ச்சியாகும் வாழ்வு. அப்படி வாழ்வதற்கு அஸ்திவாரம் faith & surrender.

சுருக்கமாகச் சொன்னால், அன்னை அன்பர்களால் வாழ்வில் சாதிக்க முடியும், வருமானத்தைப் பல மடங்கு பெருக்க முடியும். அதற்குரிய பாதை, சாதனைக்குரிய முக்கியப் பண்புகளை நம் வாழ்வில் கடைப்பிடிப்பதாகும். சாதனையை விரைவுபடுத்தும் பண்புகள் பல இருந்தாலும் இந்தச் சொற்பொழிவில் நாம் முக்கியமாக,அத்தியாவசியமானது என்று எடுத்துக்கொண்டது 10 பண்புகள் மட்டும்தான். அவைகளை மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்.


 

1. கடின உழைப்பு (Hard work).

2. அறிவு மற்றும் திறமை (Intelligence&Skill).

3. துணிச்சல் (Risk taking).

4. விடாமுயற்சி, நிதானம் (Endurance).

5. தைரியம் (Courage).

6. சமயோசித புத்தி (Resourcefulness).

7. ஆர்வம் (Ambition&aspiration).

8. முறைப்படுத்துதல் (Organisation).

9. சுமுகம் (Harmony).

10. ஏற்புத்திறன் (Receptivity).

எல்லாவற்றிற்கும் மேலாக Surrender and Faith in Mother

முற்றும்

* * * *



book | by Dr. Radut