Skip to Content

13.சார்லிசாப்ளின்

சார்லிசாப்ளின்

அமெரிக்க ஜனாதிபதி உலகை ஆள்பவர். அந்த ஸ்தானத்திற்கு ஒரு நகைச்சுவை நடிகர் வந்தார். இரண்டு பீரியடிருந்தார். சட்டம் தடையில்லாவிட்டால், ஆயுள் முழுவதும் அவரே ஜனாதிபதியாக இருந்திருப்பார். சார்லிசாப்ளின் அவருக்கு முன்னோடி. முதன் முறையாக உலகப் பிரசித்தி பெற்ற நடிகர் அவர்.பொதுமக்கள் ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டால், அதன் ஸ்தாபகரையும் மிஞ்சுவார்கள்.

*தீவிர கம்யூனிஸ்ட்டுகளை எதிரிகள், "நீங்கள் காரல் மார்க்ஸையும் மிஞ்சுகிறீர்கள்'' என்பார்கள்.

*தீவிர கிருஸ்துவர்களை, "ஏசுவே வந்து சொன்னாலும் நீங்கள் ஏற்கமாட்டீர்கள்'' என்பர்.

*நக்கீரர் சிவபெருமானையே ஏற்கவில்லை என்பது இலக்கிய வரலாறு.

சார்லி சாப்ளின் பிரபலமாக இருந்த நாட்களில் அவருடைய ரசிகர்கள் ஆங்காங்கு சங்கங்கள் அமைத்து, பல வகைகளிலும் அவர் பெருமையைக் கொண்டாடினர். ஓரிடத்தில் சாப்ளின் போன்ற தோற்றமுடையவர்களைச் சேர்த்து பந்தயம் நடத்தினர். ஒருவரை முதல்வராகத் தேர்ந்து பரிசு அளித்தனர். நான்காம் இடத்தில் வந்தவர், "நான் எப்படி ஏமாந்தேன்?'' என வினா எழுப்பினார். அவர் உண்மையில் சார்லி சாப்ளினாகும். எவரும் அறியாமல் போட்டியில் கலந்து தோற்றார்.

மூட நம்பிக்கைகள் ஏராளம். அதில் இது ஒன்று. மகாத்மா காந்தியின் சீடரான மார்டின் லூதர் கிங்கிற்கு நோபல் பரிசு அளித்தவர், மகாத்மாவை மறந்தனர்.

****


 



book | by Dr. Radut