Skip to Content

07.தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

51. அஞ்சியவனை குஞ்சும் விரட்டும்.

அஞ்சியவனையும் ஆதரிக்கும் அன்னைச் சூழல்.

52. காயாகக் காய்த்துப் பூவாகப் பூத்ததாம்.

காய்ப்பதன் முன், பூப்பதன் முன், பழுப்பது சமர்ப்பணம்.

53. காரிகை கற்றுக் கவி பாடாதவன்

பேரிகை கொட்டி பிழைப்பது மேல்.

(காரிகை = யாப்பிலக்கண நூல்)

அன்னைச் சூழலில் மகிழாதவன், உலகில் மகிழும் இடமில்லை.

54. காய்ந்த மரம் வளைந்து நிற்கும்.

நற்குணம் உடையோர் பணிந்து நிற்பர்.

அன்பு அமிர்தமாகி, அது அருளாவது

அன்னைக்குரிய அடக்கம்.

55. காய்ந்து கெடுத்தது வெயில்,

பெய்து கெடுத்தது மழை.

காய்ந்தாலும், பெய்தாலும் அன்பர் மகசூல் பெருகும்.

தொடரும்...

****



book | by Dr. Radut