Skip to Content

09.சாவித்ரி

"சாவித்ரி"


 

P.89 Then glad of a glory of multitudinous mind.

பலதரப்பட்ட மனத்தின் மகிமையில் மனம் மகிழ்ந்தது.

. வாழ்வின் ஆனந்தம் தைரிய வீச்சால் மலர்ந்தது.

. ஜடத்தின் ரூபவண்ணம் செறிந்து அழகாயிற்று.

. காலத்தின் கதியினின்று அழியாத பிரம்மத்துள் நுழைந்தது.

. பொன்னான ஏணியால் ஆத்மாவை ஏந்திச் சென்றது.

. ஆத்மாவின் தூரத்து முனைகளை வைர இழையால் இணைத்து,

. இது ஜீவியம் ஜீவியமாக மாறுவது.

. சூட்சும ஜட இருளின் சக்தியின் துணை பெற்ற செயல்.

. அவசியமான அஞ்ஞானத்தின் அனந்தமான ஊற்று.

. உயிரளிக்கும் எல்லைக்குரிய கட்டிட மேஸ்த்திரி.

. ஜீவியம் எழுந்து ஜீவியத்தை நோக்கிச் செல்லும்.

. மூலத்தை நோக்கி முயன்றெழுந்து,

. அது மூலம், உள்ளதனைத்தின் மூலம் அது.

. மூலமே முடிவாகும், பூலோகமே சொர்க்கமாகும்.

. பெரியதடங்கி சிறியதாகச் செயல்படும் பிரம்மம்.

. அமைதியிலடங்கி, ஒடுங்கி, எழுந்துயர்ந்த உச்சியெனும் சிகரம்.

. அற்புதம் ஆச்சரியமாக விரியும் அதிசயம் போடும் நடை.

. விதிக்கப்பட்ட அரங்கம் விதிமதியாகும் பாதை.

. மலரும் ஆத்மாவின் வளரும் பாங்கு வகுக்கும் கட்டம்.

. சத்திற்கு அதன் வித்தை விளக்கும் வினோதம்.

. உச்சியையும் உளவறியும் ஆழத்தையும் ஒன்று சேர்க்கும் அசைவு.

. திரையிட்ட எதிரானதை ஏற்க வைக்கும் ஏற்றம்.

. சொல்லழிந்த அமைதியுடன் சிருஷ்டி இணையும் நேரம்.

. லோகங்கள் சேர்ந்த பெருலோகம்.

. இரவு இல்லை, தூக்கம் துறவறம் பூண்டது என்ற மலையின் மகுடம்.

. உயர்ந்த திரிமூர்த்திகளின் ஒன்று சேரும் ஒளி.

. இங்கு தேடுவதை அங்கு கண்ட திறன்.

. கடுகை அவிழ்த்துக் கடலெனப் பெருக்கி,

. சொந்த பிரம்மத்தின் சொர்க்க வாயிலைக் கடந்து,

. இருண்ட ஜடம் இறைவனின் இதயத்தைத் தன்னுள் கண்டு,

. மடமையில் மகிழும் எண்ணமும், எழுச்சியும்,

. சத்தியம் பெற்ற உடலை சத்தென சிக்கெனப் பிடித்து,

. ஜடத்தின் மௌனம் ஜனித்த சங்கீதம்.

. அனைத்துமழிந்த ஆழத்தில் பறித்த புது வண்ணம்.

. பெற்றதைப் போற்றி, பேச வாயெழாமல்,

. சுவர்க்கத்தின் ஸ்ருதி கனவென எழுந்து, கலைந்து,

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

சாக்ரடீஸும், நியூட்டனும் ஆழத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் அவர்கள் சொல்லியதை உலகம், முழுவதும் அறியப் பாடுபடுகிறது.

ஆழத்தில் பிறந்த அறிஞர்கள்.


 


 



book | by Dr. Radut