Skip to Content

04.அஜெண்டா

“Agenda”

Mother asks for handwriting.

கையெழுத்தைப் பார்க்கவேண்டும் என அன்னை கேட்டார்.

. கையெழுத்து நம் ஆழ்ந்த சுபாவத்தை அப்பழுக்கின்றிப் பிரதிபலிப்பது.

. 1900க்கு முன் கையெழுத்தைப் பற்றி 100க்கு மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன.

. கையெழுத்து ஒரு சாஸ்திரம். ஜோஸ்யம், கை ரேகை, numerology சொல்பவற்றைக் கையெழுத்து சொல்லவல்லது.

. O, a போன்ற எழுத்துக்களை என வட்டம் மூடப்படாமல் எழுதுபவர் வாயில் இரகஸ்யம் நிற்காது.

. வாக்கிய முடிவில் முற்றுப்புள்ளி வைக்காதவர், குறிப்பாக கையெழுத்துக்குப் பின் முற்றுப்புள்ளி வைக்காதவர் எந்த வேலையையும் அரைகுறையாகவே முடிப்பார்.

. A,N,M போன்ற எழுத்துக்கள் முனை கூர்மையாக இருக்கும். A.N.M. என வட்டமாக இருக்கும். கூர்மையாக இருந்தால் எழுதுபவர் கோபக்காரர். வட்டமாக இருந்தால் நிதானமானவர்.

. Initial இல் தகப்பனார் பெயர் வரும். k.Sharma என எழுதுபவருண்டு. K.Sharma என எழுதுவதும் உண்டு. K.. தகப்பனாரைக் குறிக்கும் சொல். தகப்பனார் பெரிய உத்தியோகம், அந்தஸ்து, செல்வம், திறமை, பிரபலமானவரானால் K. பெரியதாக இருக்கும். குமாஸ்தா மகன் ஆபீசரானால், தகப்பனார் படிக்காதவர், நாணயமில்லாதவர், வாட்ச்மேன் போன்றவர் பிள்ளைகள் kயை சிறியதாக எழுதுவார்கள். ஒரு I.A.Sஆபீசருக்கு, தகப்பனாருடன் சண்டை வலுத்தது. "இனி உன் முகத்தில் விழிக்கமாட்டேன்' என வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் தம் initialஐப் போடுவதேயில்லை.

. சிலர் எழுதுவது எழுத்து தொடர்ந்துவரும் Concentration வேறு சிலர் Concen tration என இடைவெளி விட்டு எழுதுவர். தொடர்ந்து எழுதுபவர் எடுத்த வேலையை முடிக்காமல் நகரமாட்டார். இடைவெளி விட்டு எழுதுபவர் வேலையை போட்டுவிட்டுப் போய் திரும்புவார்.

. கையெழுத்தைப் போட்டு அடியில் கோடிடுபவர் உண்டு (S.Vaithinathan). அவர்கள் பெருமைக்கு ஆசைப்பட்டவர்களாக இருப்பார்கள். தம் கையெழுத்து முக்கியம், தாம் முக்கியம் என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

. ஒரு நோட்டில் எழுதும்பொழுது கையெழுத்து நேராக இருக்கும், வளைவாக இருக்கும், வளையும் எழுத்து மேற்பக்கமாகவோ, கீழ்ப்பக்கமாகவோ வளையும் மேற்பக்கமாக வளைந்தால்,

. தைரியம், தெம்பு, முன்னுக்குவரும் ஆசையுள்ளவராக இருப்பார்கள்.

கீழ்ப்பக்கமாக வளைந்தால்,

. பயம், சோர்வு, ஒதுங்கி மறையும் பாங்குள்ளவராக இருப்பார்கள்.

. தம் ஊர், தாம் படித்த பள்ளி மீது ஆசையுள்ளவர், வெறுப்புள்ளவருண்டு. வெறுப்புள்ளவர் அச்சொல் வரும்பொழுது அடித்துத் திருத்துவார்கள். ஆசையுள்ளவர்க்கு அச்சொற்களில் எப்பொழுதும் தவறு வாராது.

 

*******


 



book | by Dr. Radut