Skip to Content

08.பிரெஞ்சுப் புரட்சி இமயமலையில் எழுந்தது

பிரெஞ்சுப் புரட்சி இமயமலையில் எழுந்தது

உலகம் கண்ட புரட்சிகளில் பிரெஞ்சு, ரஷ்யப் புரட்சிகள் பேர்பெற்றவை. தமக்கு ரஷ்யப் புரட்சியிலும் ஓரளவு பங்குண்டு என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

-எல்லா உலக நிகழ்ச்சிகளையும் நடத்துவது ஆன்மீகம்.

-இமயமலையில் ஒரு ரிஷி சுதந்திரத்தைப் பற்றிக் கனவு கண்டால் அது பிரான்சில் புரட்சியாக மலர்கிறது.

-சீனப் புரட்சியைத் தாம் ஆரம்பித்ததாக அன்னை கூறுகிறார்.

-தவம், யோகம் என்பவை தனிமனித மோட்சத்திற்கானவை.

-என்றாலும், தனிமனிதன் ரிஷியானால் அவன் பெறும் விடுதலை - மோட்சம் - உலகம் பெறும்.

-இமயமலையில் தவமிருந்தவர் பெற்ற ஆன்மீக சுதந்திரத்தை உலகுக்கு அளித்ததால் எழுந்தது பிரெஞ்சுப் புரட்சி.

-பூமியின் வாழ்வில் முக்கிய திருப்புமுனைகளில் தானும், ஸ்ரீ அரவிந்தரும் நேரடியாகப் பங்கு கொண்டதாக அன்னை கூறுகிறார்.


 


 


 



book | by Dr. Radut