Skip to Content

11.நம் வாழ்வில் அன்னையின் வருகை

நம் வாழ்வில் அன்னையின் வருகை

அன்னையை அறிந்தபின் சுண்டியிருந்த முகம் மலரும்.எண்ணெய் வழிந்த முகம் பளபளக்கும். துவண்டிருந்த உடல் நிமிர்ந்து நிற்கும்.

- கணவரை இழந்து டாக்டர் தொழில் செய்தவர் மனம் ஒடிந்திருந்தார். நண்பர் ஒருவர் அன்னை படம் கொடுத்து, அன்னையை ஏற்கச் சொன்னார். படத்தைப் பார்த்ததும் மனத்தில் தெம்பு வந்தது. எழுந்து நின்றதுபோன்றிருந்தது. குதூகலம் பிறந்தது. பிறந்தது வளர்ந்தது. வளர்ந்துகொண்டே இருக்கிறது. இவரைச் சந்திப்பவர் அனைவரும் அன்னையைப் பார்த்ததுபோல் மகிழ்ந்து, நெகிழ்ந்து போகின்றனர்.

- அன்னையை ஏற்றுக்கொண்டபின் பக்தரின் நண்பர்கள் "ஆளே மாறிவிட்டீர்களே, புதிய மனிதராகக் காணப்படுகிறீர்களே. நம்ப முடியவில்லை. பேச்சு, தெம்பாக மாறிவிட்டதே. என்ன நடந்தது?ஒன்றும் புரியவில்லையே''எனக் கேட்டனர்.

- "என் தோல் வறண்டுபோகும். கால் வீக்கம் வரும். அதனால் அடிக்கடி ஜுரம் வரும். வீக்கம் வாட மருந்து சாப்பிடுவேன். அன்னையை அறிந்தபின் அவை மறந்துபோய்விட்டன. தோல் வறட்சியில்லை. கால் வீக்கமில்லை. ஜுரம் வருவதில்லை. நான் இவற்றிற்காகப் பிரார்த்திக்கவில்லை. ஏனெனில் அவை நான் மறந்தவை''.

மேற்சொன்னவை கண்ணுக்குத் தெரியும் மாற்றங்கள்.

ஆன்மாவில் ஏற்படும் மாற்றங்கள் பெரியவை. அவை கண்ணுக்குத் தெரியா. மனத்திற்கும் புலப்படா.


 

*******


 



book | by Dr. Radut