Skip to Content

06. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)          கர்மயோகி

859) ஒருவர் பெரிதும் விரும்பிப் பெற முடியாததை நாம் கொடுப்பது யோகவாழ்வில் ஜடத்தின் உதாரகுணமாகும். தம் கட்டுப்பாடு இடம் கொடுக்காததை அளவுகடந்து ஒருவர் விரும்பினால் அதை மறுப்பது வாழ்வில் ஜடத்தின் ஆன்மீக உதாரகுணமாகும்.

கொடுப்பதும், மறுப்பதும் உதாரகுணமாகும்.

. மனிதச் சுபாவத்திற்குப் பல குணங்களுண்டு.

. எந்தக் குணத்திற்கும் இரு முனைகளுள்ள வீச்சுண்டு.

. பெருந்தன்மை என்ற குணத்திற்கு எதிரானது கயமை.

. பெருந்தன்மைக்குப் பல கட்டங்களிருப்பதைப்போல் கயமைக்கும் பல கட்டங்களுண்டு.

. ஆபத்திற்கு எவரும் உதவுவார்.

. ஆபத்திலும் உதவாதவன் மனிதனில்லை.

. பிறருக்கு நஷ்டமேற்படுத்தி இலாபம் சம்பாதிப்பவன் மனிதனில் இராட்சசன்.

. தனக்கு இலாபமில்லாமல் பிறகு நஷ்டமேற்பட நடப்பவனை விவரிக்க எனக்கு வார்த்தையில்லை என்கிறார் கவி.

. நம்மால் முடியாததைப் பிறரைச் செய்யச் சொல்வது கயமை என்பது அன்னையின் விளக்கம்.

. ஒருவருடைய பெருமுயற்சியால் முடியாததை நாம் அவருக்குப் பெற்றுக் கொடுப்பது பெருந்தன்மை.

. நல்லது செய்வது நல்லது. கெட்டது செய்வதைத் தடுப்பது அதனினும் நல்லது.

. உதாரகுணமுள்ளவர்க்குக் கொடுக்காமலிருப்பது கஷ்டம்.

. மறுக்கவேண்டிய இடத்திலும் அவர்களால் மறுக்கமுடியாது.

. நம் உதவியால் ஒருவன் கெட்டுப்போவான் என அறியும்பொழுது அவ்வுதவியை மறுப்பது உதாரகுணமாகும்.

. சுயநலமிக்கு அது பிரச்சினையில்லை.

. உதவினால் உதவி திரும்பி நமக்கே தீமையாக வரும்என்றாலும் உதவ மறுப்பது நல்லவர்க்குச் சிரமம்.

. பணம் உபரியாகக் கொடுத்தால் மகன் அழிவான் எனத் தெரிந்தாலும் பல பெற்றோரால் தாராமலிருக்க முடியவில்லை.

. உதவி உபத்திரவம் என்பது சட்டம்.

. எவருக்கு உதவி செய்கிறோமோ அவருக்கே அது உபத்திரவம் என்பதும் உண்மை.

. ஆண்டவனுடைய உத்தரவுள்ள இடத்தில் செய்யும் உதவி திருவுள்ளம்.

. அதனால் நமக்கோ, பிறருக்கோ உபத்திரவம் வாராது.

*******

860) தவறான வாழ்வு வியாதியை உற்பத்தி செய்கிறது. அது புது மருந்துகளைத் தோற்கடிக்கும் தீராத வியாதியாகவும் இருக்கும். உடல் அவ்வியாதியை அழிக்க எழுந்தால் வியாதி மறையும். பரம்பரையான சர்க்கார் சட்டம், மாற்றுச் சட்டத்தால் போகும். மனம் மாறினால் ஜடம்

திருவுருமாற்றமடையும்என்ற பகவான் வாக்குக்கு இவை உதாரணங்கள்.

மனம் மாறினால் ஜடம் திருவுருமாறும்.

. உலகில் வியாதியில்லை. ஆயிரத்தில் ஒன்று வியாதியாக இருக்கும் என்கிறார் அன்னை.

. வியாதி என்பது என்ன?

. உடலில் போதுமான சக்தியில்லாதது வியாதியாகும்.

. உள்ள சக்தியை விரயம் செய்தால் வியாதி வரும்.

. சக்தியை விரயம் செய்வது மனம், உடலன்று.

. எனவே வியாதி உடலுக்கன்று; மனத்திற்கு.

. மனம் அறிவுக்குக் கட்டுப்படும்.

. அறிவை மனம் ஏற்றால், அது மாறமுடியும்.

. மனம் மாறினால் ஜடமான உடல் திருவுருமாறும்.

. மனம் உடலுக்கு வியாதியை உற்பத்தி செய்தால் அதைக் குணப்படுத்த மனமே சிறந்த கருவி.

. போலண்டில் அந்த நாளில் ஒரு பல்ப் மாட்ட ஒருவர் பல்பைக் கையில் எடுத்துக்கொண்டு ஏணியில் ஏறினால் இருவர் ஏணியைப் பிடித்துக் கொள்வார்கள். பல்பை சாக்கட்டில் செருகித் திருப்பவேண்டும் என்று அவர்கட்குத் தெரியாததால், இருவர் ஏணியை சுழற்றுவர், பல்ப் சாக்கட்டில் மாட்டிக்கொள்ளும்.

. நாம் உடலுக்கு வந்த வியாதியை மனதால் குணப்படுத்தாமல், உடலால் குணப்படுத்துவது போலண்டில் பல்ப் போடுவதுபோலாகும்.

. 25 வயது இளைஞனுக்கு கால் வலி. அவன் B.E. படித்தவன். டாக்டரிடம் காட்டினான். எலும்பு வளர்கிறது என்றார். பலரிடமும் காட்டினான்.

எலும்பு வளர்கிறது - வெட்டி எடுக்கவேண்டும்

என்பதே பதிலாகக் கிடைத்தது. யாராவது நல்ல பதில் சொல்லமாட்டார்களா என திருச்சியில் பேர் போன வயதான டாக்டரிடம் காட்டினான். அவர் மதுரையில் உள்ள பெரிய டாக்டரிடம் பேசினார்.

. ‘‘எலும்பு வளர்கிறது என்பது உண்மை.

. ‘‘வெட்டி எடுக்கலாம். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வளரும்.

. ‘‘மனத்தை மாற்றினால் ஆப்பரேஷன் தேவையில்லை என்றார்.

. ‘‘அவன் திருமணம் செய்தால் வலி நிற்கும் என்றார்.

பெண் பார்க்க போன அன்று அவன் வலி நின்றுவிட்டது.

உடலின் வாழ்வுக்கு மனம் சூட்சும மையம்.

தொடரும்.....

*******


 

ஜீவிய மணி

கலையும், கல்வியும் கடலென விரியும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

தாழ்ந்த பண்புகளை விட்டொழித்தபின்னரே உயர்ந்த புண்புகள் பலிக்கும். உயர்ந்தவற்றை ஏற்றுக்கொண்ட பின்னரும், தாழ்ந்தவற்றின்மீதும் ஆசையும், பெருமையும் மனிதனை விடாது. ஜனநாயகம் வந்தபின்னும் போருக்கு மரியாதையிருக்கிறது. சன்னியாசத்தை மேற்கொண்டபின்னும் பணத்திற்குரிய மரியாதை போவதில்லை.

விட்ட குறை தொட்ட குறை.


 


 


 

 


 


 



book | by Dr. Radut