Skip to Content

07.ஜீவியாஞ்சலி

 

ஜீவியாஞ்சலி

அன்னையே!

இரு சொர்ணப்பறவைகள் ஒரு மரத்தின் கிளையில்

இணைபிரியா நண்பர்களாக அகந்தையும் ஆன்மாவும் -

ஒரு ஜீவனில்

முன்னவை இணைந்ததால் இனிப்பையும் கசப்பையும்

சேர்த்து உண்டது.

பின்னவை பிரிந்ததால் என்றும் சேர்ந்து வளர்ந்தது.

நான்தான் அகந்தையென்றால் நானே அகந்தையென்று

இணைந்ததால் துன்பத்தில் வீழ்ந்தது.

நான்தான் ஆத்மாவென்றால் நானே ஆத்மாவென்று

உணர்ந்ததால் விடுதலை அடைந்தது.

ஆன்மாவே நானென்ற ஆத்ம தரிசனம்

அன்பின்அழகாகவும் ஒளியின்தேவதையாகவும்

உன்னை மாற்றும்.

இயல்பாக வாழ்வின் முரண்கள்தோற்று வாழ்வுவிரியும்.

உன்னை அறிந்து உன்னை இழந்தால்

உள்ளொளி பெருகி வழிகாட்டிடும் இன்பம்

என்றென்றும் சொந்தமாகும் பூலோகம் சொர்க்கமாகும்.

- -



book | by Dr. Radut