Skip to Content

09.சாவித்ரி

சாவித்ரி

P.57 The Alpha and the Omega in one second.

ஆதியும் அந்தமும் அடங்கிய அக்ஷரம்.

. புருஷனும், பிரகிருதியும் ஒன்றே.

. புதிரின் இரு முனைகள்.

. பரந்த பிரம்மத்தின் பரவெளிச் சின்னம்.

. சலனமற்ற மௌனத்தின் வெண்மையான பிறந்த மேனி.

. பொன்மயமான சூரியனின் பொறுக்கமுடியாத பிரகாசம்.

. ஊனக்கண் தாங்காத கதிரின் திரை.

. சுதந்திரமான ஆன்மாவின் வலிமையின் முழுமை.

. இறைநினைவின் சிந்தனைத் தழல்.

. பூரிப்பும், பிரகாசமும் அடங்கிய ஆழ்ந்த அமைதி.

. புண்பட்ட நெஞ்சம் தேடும் புகடம்.

. சோகத்தை நாடி விலகிய எண்ணம்.

. வேதனைக் குரலெழுப்பும் சக்தியினின்று விலகியவன்.

. அகலாத ஆனந்தத்தின் வாழ்வு.

. தூய்மையான ஞானமும் சக்தியும்.

. அனந்தனின் கட்டளைமீது அமரும் அமைதி.

. அவனது சட்டம்போல் அவனே முடிவு.

. இலக்குமில்லை, இலட்சியமுமில்லை.

. காலத்தின் கறைபடாத தூய்மை.

. ஆதாயமும் காணிக்கையும் ஏற்புடையதன்று.

. எதிர்ப்பையும் மடமையும் எதிர்கொண்ட நிலை.

. பாவத்தையும் புண்ணியத்தையும் பாராட்டாத பாங்கு.

. துதியையும் பாராட்டையும் கேளாத செவி.

. குறையின் ஆட்சிக்குக் கூட்டுச்சேராத கூட்டம்.

. சத்தியத்தின் மௌனக் காவலர்கள்.

. ஆழ்ந்த சரணாகதி அதிக வலிமை தரும் சூழல்.

. இரண்டறக்கலந்து பெற்ற ஞானம்.

. நித்திரைபோன்ற அசைவற்ற செயல்.

. வானவெளியில் வதியும் கலகத்தைக் கடந்த சாந்தம்.

. மரணத்தின் செயலைக் காணும் மரணமிலா நிலை.

. யுகங்கள் கடக்கும் அசைவற்ற அஸ்திவாரம்.

. விதியின் விளையாட்டு விளக்கும் விபரீதம் தொடாத பற்றற்ற நிலை.

. ஆசையோ ஆபத்தோ அசைக்காத ஆழம்.

*******


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வுஎன்பது தடையின்றி, தானே இயங்கும் அமைப்பு. க்ஷணம் தவறாமல் இயங்கவல்லது. அதன்மீது ஒரு திரை படிந்துள்ளதைப்போல் நம்மில் அது அமைந்துள்ளது.பிரார்த்தனை, சமர்ப்பணம், அழைப்பு ஆகியவை திரையை விலக்கிச் செயல்படும் திறனுடையவை. அங்கு (Life Response )வாழ்வின் எதிரொலி கேட்கிறது. அதாவது செயல்கள் தடையின்றி நடக்கின்றன. அதே நிலையில் நாமிருந்தால் தடையற்ற முன்னேற்றம் தொடர்ந்திருக்கும்.


 

எதிரொலியில் நின்று நிலைத்தால் முடிவற்ற முன்னேற்றமுண்டு.


 



book | by Dr. Radut