Skip to Content

04.அன்பர் கடிதம்

 அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னைக்கு வணக்கம் செய்து எழுதுவது. நான் முன்பு இரண்டு கடிதம் எழுதினேன். தாங்களும் எனக்கு பிரசாதம் அனுப்பி இருந்தீர்கள். மிகவும் நன்றி. எனக்கு உடல்நிலை சரியில்லாத சமயம், நீங்கள் எழுதியதுபோல், "இந்த ஜுரம் வரக்கூடாது' என்று அன்னையிடம் வேண்டினேன். அதுபோல் 6 மாதம் ஆகியும் ஜுரம் வரவில்லை. எனது உடம்பில் கொப்புளம் அடிக்கடி வரும். அதையும் ஸ்ரீ அன்னையிடம் "இந்த கொப்புளம் இனிமேல் வரக்கூடாது' என்று வேண்டிக்கொண்டேன். அதுபோல் இதுவரை வரவில்லை. எனவே ஸ்ரீ அன்னைக்கு நன்றி கூறினேன். இப்போது என் மனைவி 2வது தடவையாக கர்ப்பமாக உள்ளாள். அவள் வயிற்றுவலி என்று அடிக்கடி கூறுகிறாள். எனவே அவளுக்கு வயிற்று வமீண்டும் வரக் கூடாது என்று வேண்டினேன். ஆனால் இப்போது சுமாராக உள்ளது. மேலும் வரும் 2-6-2008 அன்று செக்கப் செய்ய வரச் சொல்லி இருக்கிறார்கள். அவளுக்கு எந்தவிதமான நோயும் இல்லை என்றும் ரிசல்ட் வரவேண்டும். அதற்கும் ஸ்ரீ அன்னையைத்தான் நம்பி உள்ளேன். எதற்கு எடுத்தாலும் ஸ்ரீ அன்னையை நம்புபவன் நான். எனவே என் குடும்பத்தை எந்தவித நோயும் இல்லாமலும், இருக்கின்ற நோயும் இனிமேல் வரவிடாமலும் ஸ்ரீ அன்னை அருள் செய்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். ஸ்ரீ அன்னையின் பாதங்களில் "என் குடும்பத்தை ஸ்ரீ அன்னைதான் காப்பாற்ற வேண்டும்' என்று என் குடும்பத்தை ஸ்ரீ அன்னையிடம் ஒப்படைத்துவிட்டேன். இனிமேல் எல்லாம் அருள்தான், என் குடும்பத்திற்கு அரண்போல் இருக்க வேண்டும். ஸ்ரீ அன்னையுடன் வாரம் ஒரு முறை அழைப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், ஒரு வாரம் செய்தால் அடுத்த வாரம் தடங்கல் வருகிறது.எனவே அழைப்பில் அன்னையை அழைக்க, ஸ்ரீ அன்னை என்னை அழைக்க, எல்லாம்வல்ல ஸ்ரீ அன்னையே ஆசி வழங்கும்படி வேண்டிக்கொள்கிறேன். மிகவும் நன்றி. தங்களின் ஆசி வேண்டி நிற்கும் ஸ்ரீ அன்னையின் அன்பன் - . சந்துரு, களர் கிராமம்.

 

 



book | by Dr. Radut