Skip to Content

10.லைப் டிவைன் - கருத்து

"Life Divine" - கருத்து

Mind is no independent and original entity.

மனம் தனியாக செயல்படக்கூடியக் கருவியில்லை.

.மனத்திற்கு முன்னுள்ள நிலைகள் 3.

.சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிவதால் மனம் ஏற்படுகிறது.எனவே சத்தியஜீவியம் மனத்தின் பிறப்பிடம்.

.சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் புறம்.எனவே சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தில் உற்பத்தியாகிறது.

.சச்சிதானந்தம் பிரம்மத்தில் உற்பத்தியாகிறது.மனம் தனியாகச் செயல்பட முடியாது. ஏனெனில் அதற்குச் சொந்தமான திறனில்லை.

உதாரணம்:

.நாம் காண்பது சர்க்கார் அல்லது நாம் வேலை செய்யும் ஆபீஸ்.இந்த ஆபீஸ் சர்க்காரின் பகுதி. சர்க்கார் என்பது இலாக்கா.இந்த இலாக்கா சர்க்காரின் பகுதி.சர்க்கார் சட்டசபையின் பகுதி.அதனால் சர்க்காரோ, இலாக்காவோ, நாம் வேலை செய்யும் ஆபீஸோ தனித்துச் செயல்பட முடியாது.

.கண் பார்க்கிறது. பார்வை கண்ணுடையது. பார்ப்பது மூளை. கண் கருவி. கண் தனியாகச் செயல்பட முடியாது.

.பாங்க் ஏராளமான பணம் வைத்துள்ளது.பணம் பொதுமக்களுடையது. பாங்க் பணத்தின் மூலமன்று; இருப்பிடம்.

.மூளை மனத்தின் கருவி.

மனம் ஆத்மாவின் கருவி.

மூளை தானே தனித்து இயங்க முடியாது.

.கடையில் விற்கும் பொருள்கள் கடையில் உற்பத்தியாகவில்லை.

பாக்டரியில் உற்பத்தியாகிறது.

கடை கருவி.

கடை தனித்து இயங்க முடியாது.

 .மனம் மேலிருந்து சச்சிதானந்தத்திலிருந்து எழுகிறது.

கீழிருந்து ஜடத்திலிருந்து பரிணாமத்தால் எழுகிறது.

எப்படிப் பார்த்தாலும் தனித்து இயங்கும் திறனுடையது மனமில்லை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

யோகத்தை மேற்கொண்டபின் ஒரு பழக்கம், ஒரு பண்பு, ஒரு மனிதரைக் கைவிட நேர்ந்தால் அதற்குச் சில சட்டம், முறை,கட்டுப்பாடுகள் ஆகியவற்றைப் பின்பற்றுகிறோம். வேறு சில பழக்கம், பண்புகள், மனிதர்களை இன்று ஏற்றுக்கொள்ள அதே சட்டம், முறை, கட்டுப்பாடுகளை அனுசரிப்பதில்லை. ஏற்கனவே தாம் விரும்பி ஏற்றுக்கொண்டவற்றிற்கும் (மனிதர்,பண்பு, பழக்கம்) அவற்றை (சட்டம், முறை, கட்டுப்பாடு)பின்பற்றுவதில்லை.

ஏற்பதற்கு நாடாத சட்டத்தை விடுவதற்கு நாடுகிறோம்.


 



book | by Dr. Radut