Skip to Content

02.அஜெண்டா

"Agenda"

Personally and physically I kept a contact with everyone.

ஒவ்வொருவருடனும் நான் உடலால் நேரடியான தொடர்பு வைத்திருந்தேன். ஸ்ரீ அன்னை

ஆஸ்த்மாவால் வேதனைபட்ட சாதகி இரவில் வலி தாங்க முடியாமல் எழுந்து உட்கார்ந்த பொழுது தம் கால் சில்லிடுவதை அறிந்து காலை நோக்கினால் அது அன்னையின் திருப்பாதமாகத் தெரிந்தது. வலி போய் விட்டது. அன்னையிடம் அதைக் கூறிய பொழுது தாம் அந்த இரவு அச்சாதகியுடன் இருந்ததாகக் கூறினார்.

. அன்னையின் உடல் பிரபஞ்சம் முழுவதும் ஒரு சமயம் பரவியது.

. உலகில் உள்ளது ஒரே உடல். நாம் அனைவரும் அதன் பகுதிகளாகும்.

. பழம், மலர் மறைவாக இருந்தாலும் மணம் காற்றில் வரும். அது சூட்சுமமாக நம்மை வந்தடைகிறது. கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்  காற்றில் மிதந்து வருகிறது.

. சூட்சுமம் மூவகை subtle, occult, casual. நாம் மூன்றையும் சூட்சுமம் என்கிறோம். மணம் ஒரு வகை. காற்றில் வரும் "ஆவி" - இறந்தவர் ஆவி

- அடுத்த வகை. அதிர்ஷ்டம், அருள் நம்மை நோக்கி வருவது மூன்றாம் வகை.

. அன்னை நம்முடன் வாழ்ந்தது பூதவுடல், ஜடமாக நாம் அவரைக் காண முடிந்தது.

. பிரார்த்தனைக்குப் பதில் தரும் அன்னை சூட்சுமமானவர்.

. ஆகர்ஷண சக்தி, புவிஈர்ப்பு சக்தி என்பது கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. கல்லைக் கையில் எடுத்து விரலை அகற்றினால் தரையில் விழுகிறது. அச்சக்தி செயல்படுகிறது.

. தியானத்தில் அன்னையின் கண், பாதம், விரல்கள் தெரிவது வேறொரு வகை சூட்சுமம்.

. அரை அடி தூரத்தில் வந்த லாரி திடீரென பிரேக் போட்டு நிறுத்தியபொழுது சூட்சுமப் பார்வையுள்ள பக்தர் ஒரு கல் சுவர் லாரியைத் தடுத்ததைக் கண்டார். கல்சுவராக அன்னை சூட்சுமத்தில் உறைகிறார். சுவர் அன்னையின் உடலின் பகுதி. நாம் காண்பதில்லை.

. வடஇந்தியாவில் டெல்லியில் கிரெடிட் கார்டைக் கொடுத்தால் கடையில் பொருள் வாங்க முடிகிறது. நம் பணம் அங்கே சூட்சுமமாக உள்ளது போல் அன்னையின் மனமும், உணர்வும், உடலும் எங்கும் உள்ளன. தேவைப்பட்ட பொழுது, தேவைப்பட்ட அளவில் செயல்படும்.

. அன்னை படம் வரையும் கலைஞர் உணர்ச்சிவசப்பட்டால் அவர் விரல்கள் அன்னை விரல்களாக மாறுவதைக் காண்பார். மாறிய இடம் ஒளிமயமாகும். இன்பமான இதமான உணர்வு சில்லென எழும்.

. தென்னந்தோப்பில் தேங்காய் தலையை நோக்கி விழும் பொழுது, காற்று வேகமாக அடித்து தேங்காய் விலகும் பொழுது, காற்றைச் சூட்சுமப் பார்வை அன்னையின் உடலாக, கையாகக் காணும். பக்தனுக்குப் பாதுகாப்புத் தரும் கரம் அது.

. அன்னையின் ஆத்மா, மனம், உயிர், உடல் இல்லாத இடமில்லை. காண அதற்குரிய சூட்சுமத்திறன் தேவை.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பைத்தியம், குழப்பம், துரோகம், வேதனை, கொடுமை ஆகியவை மனம், உணர்வு, உடல் திருவுருமாற்றமடைய தவிர்க்க முடியாத பாதைகள்.

மாறும் வழிகள் மனம் ஏற்கக்கூடியதல்ல.


 


 



book | by Dr. Radut