Skip to Content

05.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

                                 (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கணவர் - அது வந்தபின் அது பவர் பிராஜக்ட்டில் வர வேண்டும்;

பார்ட்னர் - டர்ஜ்ங்ழ் டப்ஹய்ற்இல் வந்ததால்தான் நமக்குப் பக்குவம் ஏற்பட்டு உள்ளது. நமக்கு ஆதாய மனப்பான்மை:

. கணவர் பேசுவதும், அதற்குப் பார்ட்னர் பதில் சொல்வதும் சரி. அதைக் கடந்தது ஒன்றுண்டு. பவர் பிராஜக்ட்டில் இறைவன் வரும் தருணம் தெரியாவிட்டால், கணவர் போன்றவர்க்கு அது தெரியாது. சாதாரண மனிதனுக்குத் தெரிந்த பாஷை அது. சுதந்திரம் வந்தது சுபிட்சமாக மாறாமல் எளிய மனிதன் சுதந்திரத்தைக் கண்டுகொள்ளமாட்டான்.

. இறைவன் வரும் தருணம் மௌனமாக வந்தால் சூழல் கனக்கும்,ஜோதியாக வந்தால் சூழல் பிரகாசமாக இருக்கும், அமைதியாக வந்தால் சூழல் இனிக்கும், ஆனந்தமாக வந்தால் உடல் புல்லரிக்கும்.சூழலில் இறைவன் திருவுருவம் தெரியும். அவனது அசரீரி கேட்கும்.மழையாகப் பொழியும். இதை இறைவன் வரும் தருணமாக அறிந்தவர்கள் உண்டு. அறியாதவருண்டு.

. அறிந்தவர் "இது போதாது. பவர் பிராஜக்ட்டில் வரவேண்டும்" என்று கூறுவது ஆதாய மனப்பான்மையாக இருக்கலாம். அற்புதத்தைக் காண விழைவதாகவுமிருக்கலாம்.

. பையன் பட்டம் பெற்றுவிட்டான் என்றால், "அது சரி. அது வேலையாக மாற வேண்டும்" என்பது அடுத்தகட்ட வெளிப்பாட்டை நாடுவது. அது சரி. தவறில்லை.

. ஆதாய மனப்பான்மை சரியில்லை. ஆனால் மனப்பான்மை மனநிலையைப் பொருத்தது. வாயால் வெளிப்படும் சொல்லைப் பொருத்ததன்று.

. உடலிலிருந்து ஆன்மாவரை உணர்வு, மனம்மூலமாக உயர்ந்து, மீண்டும் ஆன்மாவிலிருந்து உடல் வரை கீழிறங்கி வருவது பரிணாமம். ஒவ்வொரு நிலையும் substance பொருள், ஜீவியம் எனப் பிரிகின்றது. இப்பரிணாம நிலைகளை அறிந்தால் அடுத்த கட்ட வெளிப்பாட்டை மனம் நாடுவது முன்னேற்றம் என அறிகிறோம்.

. "உன் பிரியம் யாருக்கு வேண்டும்? எனக்கு வேண்டியது உன் பணம்" என்பது ஆதாய மனப்பான்மை.

. ஆதாய மனப்பான்மை ஆண்டவனிடம் எழுந்தால், ஆதாயம் வாராது, அருளும் வாராது.

. ஆதாய மனப்பான்மை ஆதாயத்தை நிரந்தரமாக விலக்க வல்லது.

அது அனைத்து நல்லதையும் விலக்கும்.

அது முக்கியமாக அன்பை விலக்கும்.

அன்பர் நம்மை விட்டு நகர்ந்தால் அது நம்மிடம் உள்ளது என யூகிக்கலாம்.

ஆதாயம் பாதாளம்.

மனைவி - அது புரிந்தால், அதைக் கடந்து சமர்ப்பணம் பலிக்கும்:

. சமர்ப்பணம் பலிக்க, புரிவது உதவும் என்பது இது தான்.அறிவு எந்தக் காரியத்திற்கும் உதவியாக இருப்பது போல் சமர்ப்பணத்திற்கும் உதவும்.

அறிவு உதவும்; அறிவு தடை செய்யும்; அறிவு செயல்படுவது நம்மைப் பொருத்தது.

கல்லூரி மாணவர்கள் அளவு கடந்து குடிக்கிறார்கள். ஒரு முக்கியமான காரணம், அப்படிக் குடிக்காவிட்டால் மற்றவர்கள் விலக்கி விடுவார்கள். சராசரியாக எவ்வளவு மாணவர்கள் குடிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து அதை விளம்பரப் படுத்தினார்கள். உடனே மாணவர்கள் குடிப்பது அதிகமாகக் குறைந்தது.

விவரமில்லாமல் நாம் செய்யும் தவறுகள்

அறிவு தெளிவுபடுவதால் பெரும்பாலும் குறையும்.

. ஆன்மாவின் அம்சங்கள் 12. மேலும் கூறலாம். அவை:

மௌனம், அமைதி, சத்தியம், நன்மை, அறிவு, ஜோதி, உறுதி, அன்பு, சந்தோஷம், அழகு, தூய்மை, அனந்தம், அமரத்துவம் போன்றவை.

. அறிவு இவற்றுள் எதனுடன் இணைந்தாலும் பெரிய நல்லது உற்பத்தியாகும். .

எந்தப் பெரிய நல்லதும் இவற்றுள் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவை இணைவதால் ஏற்படுவதாகும்.

. அறிவு உறுதியுடன் சேர்ந்தால் சக்தி பிறக்கும்.

அறிவு மௌனத்துடன் கலந்தால் மேதாவிலாசம் எழும்.

. நல்லது என்பது சத்தியமும் அறிவும் இணைந்ததே.

. அன்பு அறிவு பெற்றால் இனிமை எழும்.

. அமைதியும், உறுதியும் சேர்ந்து சுமுகம் உற்பத்தியாகிறது.

. உறுதியுடன் மௌனம் சேர்வது சாதனை.

. அறிவுடன் அமைதி சேர்வது ஞானம்.

. ஞானம் சத்தியத்துடன் சேர்வது உலகுக்குரிய சாதனை.

. அறிவு சமர்ப்பணத்துடன் சேர்ந்து சரணாகதியாகிறது.

. சரணாகதியுடன் ஞானம் இணைவது பிரம்மம்.

. அறிவும் ஆனந்தமும் இணைவது ஆனந்தமான அனுபவம்.

. உறுதியும் தூய்மையும் சேர்வது ஆன்மீகத் தலைமை.

. உறுதி எதனுடன் சேர்ந்தாலும் சாதனை, தலைமை உற்பத்தி ஆகும்.

. மௌனமும் அனந்தமும் பிரம்மத்திற்கு அழைத்துச் செல்லும்.

. உறுதியும், சத்தியமும் தூய்மையுடன் சேர்ந்தால் அமரத்துவம் எழும்.

மனைவி - மனம் ஆதாயத்தைத் தாண்டிப் போக மறுக்கிறது:

. மறுப்பு உடலுக்குரியது.

. புதியதை மறுப்பது, உள்ளதைப் - பழைய பழக்கத்தைப் - பிடிவாதமாகப் பின்பற்றும்.

. ஆதாயம் கண்ணுக்குத் தெரியும்; கையால் தொடலாம். இலட்சியம் தெரியாது; தொட முடியாது.

. ஆதாயத்தைத் தாண்டிப் போக முடியாத மனம், ஜடமான மனம் physical mind.

. காட்டில் வாழ்பவனுக்கு மாமிசம் தெரியும்; அஹிம்சை இலட்சியம்,தெரியாது. "அஹிம்சை என்றால் என்ன?" என்று கேட்பான். அவன் உடலால் வாழ்பவன். அவன் மனம் சிந்திக்கும் மனமில்லை; ஜட மனம். தொடு உணர்ச்சி அவன் அறிவு. நாம் இன்னும் பல விஷயங்களில் அந்நிலையிலிருப்பதால், நமக்கு மனம் ஆதாயத்தைத் தாண்டிப் போக மறுக்கிறது.

. ஜடமனம் ஆதாயத்தைத் தாண்டிப் போக மறுப்பதைப் போல் vital mind உணர்வின் மனம் பாசத்தைக் கடந்து வாராது. ஜட்ஜ் முன் உறவினர் குற்றம் சாட்டப்பட்டு நின்றால் அவர் பாசம் சட்டத்தைக் காணாது;குற்றத்தைக் காணாது; பாசத்தை மட்டும் காணும்.

"அவன் குற்றவாளியில்லை" எனக் கூச்சமற்றுக் கூறுவார்.

. சிந்திக்கும் மனம் thinking mind, சிந்தனையைக் கருதும்; பாசம் அறியாது. உடன்பற்று அதற்கில்லை. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை மாற்றம் செய்வது சட்டம் என்பதை அதிகாரி சிந்திக்கும் மனத்தால் கருதினால், "என் மனைவிக்கு அடுத்த மாதம் பிரசவம்" என்பது அவர் காதில் விழாது. நண்பர் இரகஸ்யமானவர், நம்பிக்கைக்குரியவரில்லை என்று உணர்வு கூறினாலும் சிந்திப்பவன் "என் நண்பனுக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும்" என்று கருதினால் அவனிடம் இரகஸ்யம் போகக் கூடாது என்று உணர்வு அறிவுறுத்தினாலும், அவனிடம் அதைச் சொல்லாமலிருக்க மாட்டான்.

. சிந்திக்கும் மனத்தைக் கடந்தது மௌனமான மனம்.

மௌனமான மனம் ஆதாயத்தைக் கருதாது.

அதனால் ஆதாயத்தைக் கருத முடியாது.

ஆதாயம் ஜடமான பொருள்.

மௌனத்திற்கு சூட்சுமம் உண்டு.

மௌனத்திற்கு ஜடமான பொருளில்லை.

அதனால் மௌனமான மனம் ஆதாயத்தைப் பொருத்தவரை மௌனம் சாதிக்கும்.

அம்மௌனம் ஜடத்தை அசைக்கும்; ஜடத்தைத் தன்னுட்கொண்டது.

தாயாருக்கு அம்மௌனமில்லை. பொருளற்ற மௌனம் அவருக்குண்டு.

தாயார் மௌனம் காரியங்களைச் சாதிக்கிறது. அதனால் ஜடத்தை

அசைக்க முடியாது. ஜடத்தைத் தன்னுட்கொண்ட மௌனம் அதுவன்று.

பார்ட்னர் - நாம் ஜடமாக இருப்பதால் ஜடம் புரிகிறது. மனமாகவும் ஆகவில்லை:

. அன்னை இக்குடும்பத்தில் ஜடத்தில் செயல்படுவதால் கம்பனி, பவர் பிராஜக்ட் கமிஷன் வருகிறது. மேல் நோக்கிப் போய் கீழிறங்கி வந்து

ஜடத்தில் முடியுமிடத்தில் 150 கோடி கமிஷன் ஏற்பாடாகியுள்ளது.

கணவர் முதல் நிலை ஜடம். கமிஷன் முடிவான நிலைக்குரிய ஜடம்.

1. ஜடம், 2. உணர்வு, 3. மனம், 4. ஆன்மா, 5. ஆன்மா மனத்தில் வெளிப்படுவது, 6. ஆன்மா உணர்வில் வெளிப்படுவது, 7. ஆன்மா ஜடத்தில் வெளிப்படுவது.

அன்னை சக்தி அத்தனை நிலைகளில் செயல்பட்டாலும் கமிஷன் பெற 7ஆம் நிலையில் செயல்பட வேண்டும்.

. 7ஆம் நிலையில் கணவரிருப்பது வேறு. 7ஆம் நிலையில் தாயாரால், தாயார் பக்தியால், சூழல் செயல்படுவது வேறு.

. 150 கோடி ரூபாய் கமிஷனில் கணவருக்கு, இக்குடும்பத்திற்குப் பங்குண்டு என்பது தாயாருடைய பக்திக்குரிய பலன்;

கணவருடைய நம்பிக்கைக்குரிய பலனில்லை.

. தாயாருடைய பக்தியால் வந்ததைக் குடும்பம் பெற (negative qualification) குடும்பம் எள்ளளவும் தவறு செய்யாலிமருக்க வேண்டும்.

. கதையில் தாயார் எதிர்பார்ப்பது அதுவே. பெரியவனின் கேலி, சிறியவன் மனம் புண்படுவது, பெண் "ஆதாயமில்லாவிட்டால் அன்னை எதற்கு", கணவர் "அன்னை பிராஜக்ட்மூலம் வரவேண்டும்" என்ற மனநிலைகளைக் கைவிட்டு நன்றியுடன் வந்ததைப் பெறவேண்டும்.

. அன்னை நம்மை 7ஆம் நிலையில் எதிர்பார்க்கிறார்.

. நாம், கணவர்போல முதல் நிலையிருக்கிறோம்.

. இந்த 7 நிலைகளுக்கும் நம்மால் ஏற்பட்ட மாறுதல், சூழலால் ஏற்பட்ட மாறுதல் என்ற வித்தியாசம் உண்டு.

. இந்த 7 நிலைகட்கும் மூன்று பிரிவுகள் - மனம், உணர்வு, உடல்,1 to 9 - உண்டு.

. இந்த 7 நிலைகட்கும் ஜடப்பொருள், ஜீவியம் - Substance, Consciousness - என்ற பிரிவுகள் உண்டு.

.இந்த 7 நிலைகட்கும் வேண்டியது, வேண்டாதது - positive, negative- என்ற பிரிவுகள் உண்டு.

. இந்த 7 நிலைகட்கும் காலம், இடம் -Time and Space- - உண்டு.

. இந்த 7 நிலைகட்கும் ஆன்மாவின் 12 அம்சங்களும் உண்டு. அதற்கும் பிரிவுகள் உண்டு.

. முதல் நிலையிலிருந்து முடிவான நிலைவரை நாம் கற்பனையாகச் சிந்தித்துப் பார்க்கலாம்.

. எந்தத் தவறும், வீட்டு மனிதர் எவரும் செய்யாவிட்டால், கமிஷன் கைக்கு வரும்.

. அது தாயார் பக்தியால் வந்ததைக் குடும்பம் தாயாருக்குள்ள - அன்னை பக்தையான தாயாருக்குள்ள - பிரியத்துடன், குறைந்தபட்சம் மரியாதையுடன் நடந்துகொண்டால் பெற்றுக்கொள்ளலாம்.

. அதை நல்லெண்ணம், பண்பு என்கிறோம்.

. அது பார்ட்னர் ஒருவருக்கு மட்டுமேயிருக்கிறது.

. குழந்தைகளுக்கு அவர் தாயார், கணவனுக்கு அவர் மனைவி என்பது இன்றைய நிலை. இது தத்துக்குத்தலான (precarious) உறவு. எந்த நிமிஷமும் கணவர் தம் அதிகாரத்தைச் செலுத்தலாம், குழந்தைகள் கோணல் செய்யலாம். அது தவறாகும்.

பார்ட்னர் - எண்ணமற்ற சொல் சிறந்தது. ஆனந்தமே எண்ணமாகவும், செயலாகவுமானால் முழுமை பெறுகிறது: மனைவி - விஷயம் என்பது ஆனந்தம், ஆச்சரியம், செயல், எண்ணம் அதனுள் உள்ளன:

. எண்ணமற்ற பொழுது சொல் எழாது. அப்படி எழும் சொல்லுக்குச் சக்தியுண்டு. அது மந்திர சக்தி.

. உலகமே ஆனந்தத்தில் எழுந்தது. இருப்பினும் எண்ணமும், செயலும் ஆனந்தத்திலிருந்து பிரிந்துள்ளது. 8 வயது குழந்தைக்கு, எல்லாம் செய்வது தாய். அவளும் கடமைகளை மட்டும் செய்து, பாசம் அற்றிருப்பதுண்டு. பாசமிருந்தால் முழுமை பெறும். ஆனந்தத்தில் எண்ணமும், செயலும் உற்பத்தியானாலும், ஆனந்தம் அவற்றுடன் இணைந்து வெளிப்படுவது முழுமை.

. எல்லா MLA க்களையும் பொதுமக்களே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் எதிர்ப்பில்லாமல் மக்கள் ஒருமனதாக, ஆர்வமாக ஒரு MLA யைத் தேர்ந்தெடுப்பது அரிது. அது விசேஷம்.

.விஷயம் என்பது செயல். செயல், நாட்டு விடுதலை போல் பெரியதாகவோ, அறுவடைபோல் சிறியதாகவோ இருக்கலாம். அறுவடையையும் பல சிறு செயல்களாகப் பிரித்தால், காவல் அதனுள் மிகச்சிறு செயலாகும்.

. எல்லாச் செயல்களும் ஆனந்தத்தில் உற்பத்தியாகின்றன.

. விஷயம் செயலானால், செயல் என்பது என்ன?

. ரூபம் பெற்ற சக்தி செயலெனப்படும்.

. உட்கார்ந்தவன் எழுந்திருப்பது ஒரு செயல்.

. செயல் எண்ணத்தில் ஆரம்பிக்கிறது.

. அச்செயலும், சிருஷ்டியும், போரை வெல்வதும், பெரும் காரியத்தை முடிப்பதும் அமைப்பைப் பொருத்தவரை ஒன்றே.

. ஜடத்தின் அடிக்கல் அணு.

. வாழ்வின் அடிக்கல் செயல்.

. அணுவினுள் உலகம் உள்ளது.

. செயலினுள் உலகம் உள்ளது.

. செயலை அறிந்தவன் செய்வது கூடிவரும்.

. செயல் உற்பத்தியாவது ஆனந்தம்.

. ஆனந்தம் அச்செயல்மூலம் வெளிப்படுவது சிறப்பு, முழுமை.

. நாம் சொல்வதைக் குழந்தை திருப்பிச் சொன்னால், குழந்தை சொல்லைக் கற்றது.

. நமக்கு அச்சொல் - கதை - புரிவதுபோல் குழந்தையும் புரிந்து கொள்வது முழுமை.

. குழந்தை "கதை சொல்லுங்கள்" என்றபொழுது "கதை" என்ற சொல்லைப் புரிந்து பேசுகிறது. அடுத்த குழந்தையிடம் "வா, கதை சொல்கிறேன்" எனில் "கதை" என்ற சொல் மூலம் குழந்தையின் ஆனந்தம் வெளிப்படுகிறது. அவ்வுணர்வு முழுமைக்கு முழுமை தரும்.

. எண்ணம் முழுமை பெற அதன் வழி ஆனந்தம் வெளிப்பட வேண்டும்.

செயல் முழுமை பெற அதன் வழி ஆனந்தம் வெளிப்பட வேண்டும்.

எது முழுமை பெறவேண்டுமானாலும், அதன் வழி ஆனந்தம் வெளிப்பட வேண்டும்.

ஆனந்தம் வெளிப்படாமல் எதுவும் முழுமை பெறாது.

எண்ணமற்ற சொல் ஆனந்தம் வெளிப்படும் தகுதியுள்ளது.

பார்ட்னர் - எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது அதுதானா?

. மனிதன் தேடுவது சந்தோஷம்.

. எப்பொழுதும் அது கிடைப்பது வாழ்வின் பூர்த்தி.

. ஆனந்தம் மனித வாழ்வில் சந்தோஷமாகிறது.

. சத், சித்தாகி ஆனந்தமாகும் பொழுது சச்சிதானந்தம் பூர்த்தியாகிறது.

. ஆனந்தம் மேல் உலகுக்குரியது.

. அதற்கு மறுபுறம் - வலி- அந்த லோகத்திலில்லை.

. அதன் மறுபுறமான வலிமனித வாழ்வுக்குரியது.

. மனித வாழ்வில் துன்பமும், இன்பமும் மாறி மாறி வருகின்றன.

. மாறி மாறி வாராமல் இன்பம் மட்டும் இருப்பது வெற்றி, பூர்த்தி.

. மாறி மாறி வருவது மனித இயல்பு.

. அதை நாடுவது நம் இஷ்டம் (choice).

. நாம் எப்பொழுதும் இன்பத்தை நாடினால் சந்தோஷமாக இருக்கலாம்.

. "நாம்" என்பதிலிருந்து - மாறி மாறி வரும் நிலை - மாறுவது இயல்பு.

. "நாம்" என்ற இடத்தில் சைத்தியப்புருஷன் வந்துவிட்டால், அவனுக்கு இன்பம் மட்டும் உண்டு.

. "நாம்" உள்ளவரை மாறிமாறி வரும்.

. சைத்தியப்புருஷனுக்கு மாற்றமில்லை.

. "நாம்" மேல்மனத்திலிருக்கிறது.

. அதற்கு எண்ணம் ஓடும்.

. கடந்ததைக் கருதும்.

. சிறியதாக இருக்கும்.

. தன்னை முக்கியமாகக் கருதும்.

. சைத்தியப்புருஷன் அடிமனத்திலுள்ளது.

. பாதாளமும், பரமாத்மாவும் சேருமிடம் அடிமனம்.

. அது பிரபஞ்சம் முழுவதும் பரவக்கூடியது.

. அடிமனத்திலும் சைத்தியப்புருஷன் குகையில் ஒளிந்துகொண்டுள்ளது.

. அடிமனத்திற்கும் மேல்மனத்திற்கும் இடையே உள்மனம் உண்டு.

. உள்மனம் காலத்தைக் கடந்தது.

. மோட்சம் தரவல்லது.

. நிர்வாணம் தரவல்லது.

. அவற்றை ஏற்றால் அடிமனம் போகமுடியாது.

. அவை தவத்திற்குரியவை.

. நாம் ஏற்பது சமர்ப்பணம்.

. சமர்ப்பணம் சைத்தியப்புருஷனில் முடியும்.

. அங்கு சந்தோஷம் நிரந்தரமாக உண்டு.

பார்ட்னர் - அழியாத நினைவு தவறாத சமர்ப்பணம். நினைத்துச் செய்வது பகுதி; தோன்றும்முன் செய்வது முழுமை. நினைவு மையம் மனத்திலிருந்து நெஞ்சுக்குப் பின்னால் போய் நிலைக்க வேண்டும்:

மனைவி - செயல் வாழ்வு, நினைவு யோகம்:

. நினைவு, நாம் முயன்று நினைவுபடுத்துவது.

. அழியும் நினைவை முனைந்து நிலைப்படுத்துவது நினைவு.

. நினைவு மனித முயற்சி.

. நினைவு மேல்மன வாழ்வு.

. நாம் "நினைவு" என்பது அழியும் நினைவு.

. அழியாத நினைவு ஆத்மாவின் ஆர்வம்.

. தானே அழியாத நினைவு, அழிய முடியாத நினைவை, அழியாத நினைவு என்கிறோம்.

. மேல்மனத்தைக் கடந்த உள்மனத்தின் நினைவு அழியாது.

. அடிமனத்தின் நினைவு பிரபஞ்ச நினைவாக இருப்பதால் அது மேல்மன நினைவுபோல் அழியும் தன்மையுடையதன்று. அது அழிய முடியாத நினைவு.

. மேல்மனம் பகுதி.

. தோன்றுவது மேல்மனத்தில்.

. என்றும் தோன்றுவது அடிமனம்.

. என்றும் இருப்பது அது என்பதால் அதற்குத் தோன்றுவது என்பது இல்லை.

. தோன்றும்முன் செய்வது அடிமனத்திலிருந்து செய்வது.

. அதற்கு முழுமையுண்டு. முழுமை மட்டும் உண்டு.

. நினைவு மனத்திற்குரியது - மேல்மனத்திற்கு.

. அடிமனம் நெஞ்சுக்குப் பின்னாலுள்ளது.

. உள்மனம் புருவ மத்திக்குரியது.

. மேல்மனத்திலிருந்து அடிமனம் போக உள்மனம் வழியாகப் போக வேண்டும்.

. தலையிலிருந்து புருவ மையத்திற்கு வந்து நெஞ்சுக்குப் பின்னால் போகும் பாதையது.

. வாழ்வுக்குரியது செயல்.

. செயலை நினைவால் நிலைநிறுத்துவது யோகம்.

. வாழ்வு யோகமானால் செயல் நினைவாகும்.

. நினைவே செயலைச் சாதிப்பது யோகம்.

. மேல்மனம், அடிமனம் என்றாலும்; பகுதி, முழுமை என்றாலும் ஒன்றே.

. காலம், காலத்துள் காலத்தைக் கடந்தது என்றாலும்; மேல்மனம், அடிமனம் என்றாலும் ஒன்றே.

மனைவி - தீயசக்தி மாறி பக்தி பெறுவது வாழ்வில் விலக வேண்டியவை விலகுவதாகும். நடைமுறையில் பெரிய தலைகள் உருளும்:

. தீயசக்தி என்பது, இறைவன் தவிர மற்ற எல்லாம் தீயசக்திகளே.

. வாழ்வில் anti-social forces சமூக விரோதிகள் என்பவர் யார்? சமூகத்திற்கு அடங்கி நடக்கும் நேரம் தவிர மற்ற நேரம் நம்மை கவனித்தால் எல்லா சக்திகளும் நம்முள் உள்ளன அத்தனையும் தீயசக்திகள் எனத் தெரியும். ஒரு ஹர்த்தால் வந்தால், அதுவே சந்தர்ப்பம் என அனைவரும் எதிரி மீது பழி தீர்த்துக் கொள்கின்றனர். பாகிஸ்தானிலிருந்து வந்த 50 லக்ஷம் இந்துக் குடும்பங்களும் செய்யாத அட்டூழியமில்லை.

. நாம் தீயசக்தி என்பது ஆன்மீக உண்மை.

. நாம் இப்படியே இருப்பதை விரும்புகிறோம்.

. நாம் மாற விரும்பவில்லை.

. எதிரியை அழிக்க மனம் துடிக்கிறது.

. விஷயம்என வந்துவிட்டால் நம்மைத் தவிர நமக்கு அனைவரும் எதிரி.

. தீயசக்தி தன்னை நிலைநாட்டப் பெரும்பாடுபடுகிறது.

. அது தவிர நம்மிடம் வேறு சக்திகளில்லை எனத் தெளிவாக நாம் காண்கிறோம்.

. நாம் மாற விரும்புவது நம்மைப் பொருத்தவரை இறைவன் வரும் தருணம்.

. இதுவரை நாம் மாற விரும்பினோமா என நினைத்துப் பார்த்தால்

இல்லை எனத் தெரியும்.

. மாற வேண்டும் என வாயால் சொல்லியிருக்கிறோமா என நினைத்துப் பார்த்தால், அப்படி ஒரு நினைவு வந்ததாகத் தெரியவில்லை.

. அப்படி ஒரு நினைவு வந்திருந்தால் அத்துடன் "அது வேண்டாம்" எனத் தீவிரமாகத் தோன்றியது இப்பொழுது நினைவு வரும்.

. மாறும் நிர்ப்பந்தம் வந்த நிகழ்ச்சிகளை நினைத்தால் இப்பொழுது அந்நினைவால் உடலெல்லாம் எரியும்.

. "நான் நல்லவன்,

நான் பெரியவன்,

உலகம் என்னைப் போற்ற வேண்டும்,

உலகம் எனக்குப் பணிய வேண்டும்,

நான் அவ்வளவு அறிவுடையவன்,

ஏன் என்அறிவை உலகம் ஏற்கவில்லை?"

என்பது சாதாரண மனிதச் சுபாவம்.

. மாறவேண்டும் என்ற நினைவு உணர்வாவது பக்தி.

. அந்த பக்தி நாயனார்கட்கிருந்தது; எளிய மனிதனுக்கில்லை.

. ஆழ்வார்கட்கிருந்தது.

. இராமனுஜருக்குப் பின்னால் அது போன்ற பக்தி எழவில்லை என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

. பக்தி எழுந்தால் முன்தலைமுறைகள் தலையைச் சாய்க்கும்.

. பக்திமுன் அவை வாழ முடியாது.

கணவர் - அது மரணமில்லையா?

மனைவி - நமக்கு மரணம், வாழ்வில் உயர்ந்த ஜீவியம் உதயமாவது ஆகும்;

கணவர் - பயமாக இருக்கிறது:

. வீட்டிலிருந்து பையன் ஹாஸ்டலுக்குப் போனால், வேலை மாற்றம் வந்தால், வீடு மாற்றினால், பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்குப் போனால், மகன் அமெரிக்கா போனால் அத்துடன் எல்லாம் போய்விட்டதாக நாம் கருதுவதில்லை.

. பையன் வீட்டிலிருப்பதற்குப் பதிலாக ஹாஸ்டலிலிருக்கிறான், வேலை வேறு ஊரிருக்கிறது, பெண் கணவனுடன் புதுவாழ்வு வாழ்கிறாள், மகன் அமெரிக்காவில் படிக்கிறான்என நாம் அறிவோம். அடுத்த கட்டத்தில் அதே தெளிவு நமக்கிருப்பதில்லை. ஆத்மா அடுத்த உடலை நாடினால் நாம் அதை மரணம் என்கிறோம். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதாகக் கருதுகிறோம். ஆத்மா அழிவதில்லை, அதன் வாழ்வும் அழிவதேயில்லை என்ற ஞானம் பெறாதவர்க்கு ஆன்மீகமில்லை, ஆன்மீக வாழ்வும் இல்லை. அரசியல் பதவி மாறுகிறது, பதவி போகிறது, பதவி வருகிறது, மனிதன் மாறுவதில்லை.

. மேலும் ஆத்மா அடுத்த உடலை நாடுவது பிரமோஷன் வந்து மாற்றல் வருவது போன்றது.

. 5 வயதுக் குழந்தை தன் 3 வயது வாழ்வு போய்விட்டதாகப் புலம்புவதில்லை.

. 15 வயதில் சிறுவன் கல்லூரிக்குப் போனால், பம்பரம் விளையாட முடியவில்லை என சிணுங்குவதில்லை.

. ஏழை பணக்காரனானால், ஏழ்மையை இழந்ததற்கு வருந்துவது இல்லை.

. வியாதி போய் உடல்நலம் வந்தால் ஆஸ்பத்திரியைவிட்டு அகல மறுப்பவர்களில்லை.

. MLAஆக வெற்றி பெற்றபின் சட்டசபை போவதற்குத் துக்கம் கொண்டாடுவதில்லை.

. 20 வருஷம் பிரிந்திருந்தவர் சேர்ந்த பின் பிரிவைப் பிரிய மறுப்பதில்லை.

. நாடு செல்வம் பெற்றால் நாம் ஏழ்மையை இழந்ததற்குக் கஷ்டப்படுவதில்லை.

. சுதந்திரம் வந்தது; ஏன் இந்த மாற்றம்என நாம் கேள்வி எழுப்புவது இல்லை.

. கோர்ட்டில் கேஸ் ஜெயித்தபின் கோர்ட்டு வாழ்வு போய்விட்டது என அவலப்படுவதில்லை.

. பிடித்த பிசாசு போன பின் அதை வருந்தி அழைப்பதில்லை.

. உயிர் அடுத்த உடலை நாடினால் துக்கம் கொண்டாடுகிறோம்.

. அதைக் கேட்ட கணவருக்குப் பயம் வருகிறது.

. கெட்டது போய் நல்லது வந்தவுடன் பயம் வருவது தீயசக்திக்கு.

. நாம் நம் எண்ணத்தை ஆராய்ச்சி செய்தால் நல்லதாக அங்கு ஒன்றுமில்லைஎன விளங்கும். எண்ணமே தீயதுஎன்பது அன்னை விளக்கம்.

பார்ட்னர் - சித்தி நம் முயற்சி, அருள் ஆண்டவன் தருவது:

. நம் முயற்சியை நாம் அறிவோம். முயற்சி முடிந்து அருள் ஆரம்பிக்கும்

இடம் நாம் அறியாதது. (We are unconscious of Grace).

. நம் முயற்சி கர்மத்தைக் கடப்பது. நாம் முயல்கிறோம். ஏன் முயல்கிறோம், எதற்காக முயல்கிறோம், எப்படி முயல்கிறோம் என்பது நாமறியாதது.

. முயற்சி, கர்மம், செயல், சலனம், சிருஷ்டி, பிரம்ம ஜனனம் ஆகியவை

நம்மில் சந்திக்கின்றன. அவற்றுடன் காலம், இடம், மனம், அகந்தை,கண்டம், பிரம்மம், பரிணாமம் ஆகியவையும் அடுத்த கட்டத்தில் சந்திக்கின்றன.

. இவையனைத்தும் ஜீவாத்மாவின் மையம்.

. அவற்றுள்ளிருப்பது பரமாத்மா.

. ஜீவாத்மாவே பரமாத்மாஎன்ற ஞானம் - ஞானசித்தி - முடிவான சித்திகளில் ஒன்று.

. மேற்சொன்னவை அவற்றின் பகுதி.

. இந்த சித்தி முழுமையான பிரம்மம் நம்முள் சித்திப்பது.

. அதன் புறம் வாழ்வு.

. அதன் அகம், வாழ்வை உட்கொண்ட அகம்.

. அந்நிலைக்கு வந்த அன்னை, "ஓஹோ, இறைவன் இப்படித்தான் ஆனந்தம் பெறுகிறானா" என வியந்தார்.

. முயற்சி, கர்மம், செயல், சலனம், சமுத்திரம், சிருஷ்டி, காலம், இடம், மனம், அகந்தை, கண்டம், பிரம்மம் ஆகியவற்றை இக்கண்ணோட்டத்தில் காண்பது, முழுமையான பிரம்மத்தை சிருஷ்டியும், பரிணாமமும் சந்திக்கும் இடத்தில் காணும் ஞானசித்தி.

. இதுவரை தத்துவம்.

. இக்கதையில் இந்தத் தத்துவங்களை எல்லா இடங்களிலும் காண முடிவது, இக்கதையால் பயன் பெறுவதாகும்.

. மேலே 12 அம்சங்கள் புறத்திலும், அகத்திலும் கூறப்பட்டுள்ளன.

. முயற்சி என்பது ஓர் அம்சம்.

. இக்கதையில் ஒரு பாத்திரத்தை எடுத்து "முயற்சி" என்ற தலைப்பில்

சிந்தனை செய்தால் பலன் பெரியது.

. அந்த ஆராய்ச்சி "முயற்சி"யினுள் முழு உலகமும் உள்ளதைக் காட்டும்.

. பெரும்பலன் தரும் சிந்தனை அது. கைமேல் பலன் தரக்கூடியது.

. ஒரு சிறு முயற்சிக்கும் பெரும்பலனுண்டு என்பது கதையில் அநேக இடங்களில் வருவது.

. மனம் அவற்றை உணர வேண்டும்.

. அறிவு ஆராய்வது பலனுண்டு.

மனைவி - மனத்தில் வரவில்லை எனில் அன்னை ஏற்றுக்கொண்டார்;

கணவர் - நம்மையே அன்னை எடுத்துக் கொண்டால் நல்லது;

மனைவி - கொடுத்தால் எடுத்துக் கொள்வார்:

. மனத்தில் பவர் பிராஜெக்ட் வரவில்லை என்பது பெரிய விஷயம்.

மனத்தில் வரவில்லை எனில் நினைவில் வரவில்லை எனப் பொருள்.

. நினைவு என்பது கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் இணைப்பது.

. நினைவில்லைஎனில் கடந்தகாலமும், நிகழ்காலமும்ó இணைந்தன என்றாகும்.

. அது காலத்தைக் கடந்த நிலை.

. காலத்தைக் கடந்த நிலை தற்காலிகமாக ஏற்படுவதற்கும், நிலையாக ஏற்படுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

. தற்காலிகமாக நடப்பது நமக்கு காலத்தைக் கடக்கும் திறமையுள்ளது எனக் காட்டும்.

. திறமையிருந்தால் அதை எப்படி நிலையாகச் செய்வது?

. இதுவரை நமக்குத் திறமையில்லை என நினைத்திருந்தால்,

அந்நினைவு தவறு என அறிந்து, புதிய அறிவு ஏற்படுவது, பெற்றதை நிலையாகப் பெற உதவும்.

. காலத்தை மூன்றாகப் பிரிப்பது மனம்.

. கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே வந்து அவற்றைப் பிரித்த மனம் விலகியதால் அவை சேர்ந்தன.

. மனம் வேலை செய்தால் காலம் பிரியும்; மனம் வேலை செய்யாமல் இருந்தால் அவை சேரும்.

. மனம் வேலை செய்யாத நிலை மௌனம்.

. திறமையில்லை என நினைப்பதும், மனம் வேலை செய்வதும் ஒன்றே.

. மனம் வேலை செய்தால் திறமை குறையும்.

. திறமை பகுதி.

. திறனற்ற நிலை முழுமை.

. நினைவு, காலம், திறமையற்றது, அறிவில்லாதது, பகுதி ஆகிய அனைத்தும் ஒன்றே.

. நினைவழிந்து, காலத்தைக் கடந்து, மௌனமாகி, ஞானம் பெறுவதும் முழுமையும் ஒன்றே.

. அது சமர்ப்பணத்திற்குரிய நிலை.

. சமர்ப்பணம் தற்காலிகமாகப் பெற்றதை நிலையாகப் பெற்றுத் தரும்.

. சமர்ப்பணம் மேல்மனத்தினின்று அடிமனம் போகும் பாதை.

பார்ட்னர் - புரிவதற்கும், செய்வதற்கும் ஏகப்பட்ட தூரம்;

மனைவி - வாழ்வுக்கும், அன்னைக்கும் உள்ள தூரம்:

. வாழ்வில் பயம், தைரியமுண்டு. அன்னையில் தைரியம் மட்டும் உண்டு;பயமில்லை.

. Twelve o'clock High என்ற படத்தில் அமெரிக்க தளபதி கொஞ்சம் விமானங்களை வைத்துக்கொண்டு, ஹிட்லருடைய ஆயிரக்கணக்கான விமானங்களை எதிர்த்துப் போராடுகிறார். மனோ தைரியத்தால் விமானிகள் செயல்படுகிறார்கள். எதிர்ப்பு பிரம்மாண்டமாக இருப்பதால் ஒரு கட்டத்தில் விமானிகள் மனம் தளர்ந்தனர். அவர்கள் கமாண்டரும் "அது சரி, அதற்கு மேல் விமானிகளைக் கட்டாயப்படுத்தக்கூடாது" என முடிவு செய்கிறார். அவர் பெயர் கீத் Keith.அவர் மேலதிகாரி Savageசாவேஜ். சாவேஜ் தளபதியின் கீழுள்ளவர். இம்மூவரும் சந்தித்துப் பேசிய பொழுது தளபதி கீத் சொல்வதை ஏற்று அவரைப் பதவியிலிருந்து நீக்கி, சாவேஜை அந்த இடத்திற்கு நியமிக்கிறார். சாவேஜின் ஆவேசமான பேச்சு விமானிகளை அசைக்கவில்லை. பிஷப் என்ற விமானி மீது சாவேஜுக்கு நம்பிக்கையிருப்பதால், பிஷப்பை அழைத்துப் பேசுகிறார். பிஷப் தாம் விமானிகள் பிரதிநிதியாக வந்திருப்பதாகக் கூறி அனைவரும் டிரான்ஸ்பர் கேட்பதாகக் கூறுகிறார். மனம் விட்டுப் போன சாவேஜ் "வேறு இலாக்காவுக்குப் போகலாம். கடமையை விட்டு மாற்றல் கேட்கலாமா?" என்கிறார். பிஷப் பிடி கொடுக்காமல் எழுந்து போனாலும், மனம் மாறி மாற்றலை வாபஸ் செய்கிறார். அனைவரும் அவரைப் பின்தொடர்ந்தனர். நிலைமை எதிராக மாறி டிரைவர்,ஆபீஸ் மானேஜர் உள்பட அனைவரும் திருட்டுத்தனமாக விமானத்தில் நுழைந்து, எதிரியை நாசம் செய்கின்றனர். சாவேஜால் மனம் உடைந்த இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி, தெம்பு கொடுத்து, தைரியம் கொடுத்து சாதிக்க முடிகிறது. இது புரிவதற்கும் செய்வதற்கும் உள்ள தூரம்.

. வாழ்வுக்கும் அன்னை வாழ்வுக்கும் உள்ள தூரம் மேலும் அதிகம்.

. நாம் வாழ்வால் நிரம்பியுள்ளோம். We are occupied by life.

. நமக்கு நல்ல எண்ணம் என்பது இல்லை. அப்படியொன்றிருந்தால் அதுவே நலமான நல்லெண்ணமாகும்.

. எண்ணமே கெட்டது என்பது அன்னை.

. அப்படி நம்மைச் சோதித்தால், நம் எல்லா எண்ணங்களும் கெட்ட எண்ணங்களாக இருக்கும்.

. அவை ஒவ்வொன்றிற்கும் வேகமிருக்கும்.

. நம்மால் இரகஸ்யத்தைக் காப்பாற்ற முடியாது எனில் வந்த செய்தியைச் சொல்லத் துடிப்போம்.

. பிறருக்கு உதவ ஆசையிருந்தால், அதனால் அவருக்குப் பலனுண்டு

என நம்புவோம். உதவத் துடிப்போம்.

. எந்தச் சுபாவமும், நேரம் வந்தால் துடிக்கும்.

. துடிப்புள்ளவரை அது நம் வாழ்வு.

. துடிப்பு அடங்க வேண்டும்.

. அன்னையை மட்டும் நம்முள் செயல்பட அனுமதிக்க வேண்டும் (equality) என்ற முடிவு வேண்டும். அது சமர்ப்பணமான முடிவு.

. எல்லா முடிவுகளும் சமர்ப்பணமாவது, அன்னை வாழ்வு.

அது நெடுநாளைய கம்பனி. அங்குத் தொழிலாளர்கள் சர்க்கார் ஆதரவோடு அராஜகம் செய்கிறார்கள்:

. சர்க்கார், முதலாளிக்கு ஆதரவாகப் பழைய நாட்களில் போலீஸ் உதவி செய்தது. முதலாளி அட்டகாசம் செய்தான்.

. இன்று தொழிலாளிக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுவதால், தொழிலாளி அழிச்சாட்டியம் செய்கிறான். அன்று அழிக்கப்பட்டவர்,இன்று சுதந்திரம் பெற்றது, சமூக வெற்றி. ஆனால் நாட்டில் அராஜகம் அழியவில்லை. அதுவே இன்றைய நிலை.

. அதிகாரத்தின் ஆதரவு அழிச்சாட்டியம் செய்யச் சொல்லும்.

. நம் வாழ்வில் நாம் அதை முழுமையாகச் செய்கிறோம். அதை அறிவது ஞானம்.

. அன்னையிடம் வந்தபின் நாம் பெறும் சக்தியை அதிகாரமாக மாற்றி மேலும் அழும்பு செய்கிறோம்.

. இந்தக் கதையில் கணவர் வயிற்று வலிபடும் குமாஸ்தாவைக் கண்டு கொள்ளாமலிருப்பதும், பெரியவன் சிறியவனைக் கேலி செய்வதும்,கவர்னர் பார்ட்டிக்குப் புதுடிரஸ் கேட்பதும், கோயம்புத்தூருக்குக் காரில் போகவேண்டும் என்பதும், நமக்கு அது போன்ற செயல்கள் மேலும் உண்டு.

. எட்டமுடியாத உச்சிக்குத் தாயாரால் குடும்பம் வந்துவிட்டது எனக் கண்டபின்னும், கணவன் அவரை மனைவியாகவே நடத்துவது, வரும் அருளில் பெரும்பாகம் தடைப்படும் என அறியாதது அப்படிப்பட்ட செயல்.

. புதிய அந்தஸ்தை நகைக்கடையில் காட்ட முயல்கிறார்.

. பார்ட்னர் கொடுத்ததைத் தமக்குரியதாக பெற்றுக்கொள்கிறார்.

. வருவது, வரவேண்டியது தானே என்ற நினைவு தொழிலாளியின் அராஜகம் போன்றது.

. நம் மனம் பழைய மனநிலையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

. அதன் வெளிப்பாடுகள் ஆயிரம்.

. அன்னையும், அவர் ஜீவியமும் வந்தபின், அவ்வெளிப்பாடுகள் அழிச்- சாட்டியம் என நாமறியோம்.

. அராஜகம் செய்யக்கூடாது எனில் அவ்வெளிப்பாடுகள் ஒவ்வொன்-றையும் கட்டுப்படுத்தி, நேர் எதிராக மாற்ற முயல வேண்டும்.

. நமக்கு அப்படியொரு கடமையுண்டு என நாம் அறியோம்.

. அதைச் செய்யாத வரை முதலாளியின் அராஜகம், தொழிலாளியின்

அராஜகம், பொதுவான அராஜகம் ஆகியவற்றைப் பேச நமக்குரிமை இல்லை.

. உலகில், உலகின் சூழலில் அராஜகம் உண்டு. அது அழியாதவரை எவர் மூலமாகவாவது வெளிப்படும்.

. அன்னை ஜீவியம் அராஜகத்திற்கு எதிரி.

. நமக்கு அது இருப்பதால், நம்மிடம் முதலாளி தொடர்புகொண்டால் அவருக்குத் தொழிலாளிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்.

. இக்கதையில் அதுவும் கிடைக்கிறது.

பொதுவாகப் பார்ட்னர் பேசியதிலிருந்து அவர்கள் சில விஷயங்களைப் பின்பற்றிப் பலன் பெற்றிருக்கின்றனர்:

. மனிதன் சூட்சுமமானவன்.

. செய்தி சூட்சும உலகில் பரவும்.

. சூட்சும உலகில் பரவுவது அதிவேகமாகப் பரவும்.

. நேற்று ஓர் ஊரில் நடந்த செய்தி இன்று அடுத்த ஊர்களுக்கெல்லாம் பரவுகிறது.

. சமூகம் புதுப்பணக்காரனை, அரசியல் தலைவர்களை, நடிகைகளை,

பெரிய மனிதர்கள் என்பவர்களைக் கூர்ந்து கவனிக்கிறது. காலையில்

இங்கெல்லாம் நடப்பது மாலையில் ஊர் முழுவதும் பரவும்.

. சூட்சுமமாகப் பரவுவது வாய்மொழியாக ஆர்வமாகப் பரவுவது.

. பொதுவாகக் காதல் திருமணம், ஓடிப்போன பெண், கொலை, மரணம்,கொள்ளை, திருட்டு, அசகாயச் சூரனுடைய அதிசயமான வெற்றி,தலைவர் வருகை வாய் மொழியாகப் பரவும். அதற்குப் பத்திரிகை உதவி தேவையில்லை.

. சூட்சும உலகில் பரவுவது வேறு; சூட்சுமமாகப் பரவுவது வேறு.

. சூட்சும உலகில் பரவுவது எறும்புக்கு மழை வருவது தெரிவது போல் முன்கூட்டியே வாய்மொழியுமில்லாமல் உணர்வில் தெரிவது.

. தற்பொழுது வந்துள்ள ஒய்ற்ங்ழ்ய்ங்ற் இவையிரண்டையும் கலந்ததுபோல் செயல்படுகிறது.

. வதந்தி உள்ளூருக்குரியது. நாடு முழுவதும் பரவும் வதந்தி நாட்டுக்கு உரிய செய்தியைப் பற்றியது.

. இன்டர்நெட் உள்ளூர் வதந்தியை உலகம் முழுவதும் கொண்டு போகும் அமைப்புடையது.

. தனக்கு வேண்டிய விஷயம் எவரிடமிருந்தாலும், அச்சொல் அரைகுறையாகக் காதில் விழுந்தாலும், அதை முழுவதும் அறிந்து பலன் பெறுவது மனித சுபாவம்.

. இரண்டு கோடி சம்பாதிக்கும் கம்பனி மூட வேண்டிய நேரத்தில்,கன்சல்டண்ட் "நீங்கள் 12 கோடி சம்பாதிக்க முடியும்" என்று கூறிய ஒரு வார்த்தையிருந்து, "நீங்கள் எங்கள் கம்பனியுள் 12 கோடியைக் கண்டால் அதை நாங்கள் எடுக்க முடியும்" என்று கூறி எடுத்த கம்பனியைப் பற்றி நான் எழுதுவதுண்டு.

. பார்ட்னர் பேசுபவை பலன் தரக்கூடியதுஎன்று புரிந்தவுடன், அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டு இப்பெருமுதலாளி பயன் பெற்றிருக்கிறார்.

. வெளிநாட்டு கன்ஸல்டண்டை ஒரு நாளைக்கு 1 லட்சம் கொடுத்து ஒரு கம்பனி வைத்தவுடன், தொழில் போட்டியிடுபவர் அந்தக் கம்பனியில் நடப்பதை வேவு பார்த்து அக்கம்பனி பெறும் பலனுக்குச் சமமாகச் செலவில்லாமல் பலன் பெறுகின்றனர். இது மனித சூட்சுமம்.

. ஒரு மனிதனுக்குச் செல்வமோ, செல்வாக்கோ, வேறு எந்த விஷயமோ இருந்தால் அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அனைவருக்கும் அது சூட்சுமமாகத் தெரிந்துவிடுகிறது.

"பார்த்தால் தெரியவில்லையா,

இதை வேறு எடுத்துச் சொல்ல வேண்டுமா?''

எனக் கேட்பதை நாம் அறிவோம்.

2, 3 பேர் பார்ட்னரைச் சூழ்ந்து கொண்டு முதலாளிக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்டனர்:

. ஒருவருக்கு உதவி செய்ய மற்றவர் எடுக்கும் முயற்சி இது.

. பொதுவாக இது மனிதாபிமானம்.

. இங்கு ஒருவர் பெருமுதலாளி என்பதால் மற்றவர் முன்வருவது.

. குடும்பத்தில், நண்பரிடையே இது போன்ற பரோபகாரம் எழும்.

. அது பற்றால் எழும், பாசத்தால் வரும், பணத்தால் வரும்,பதவியால் வரும். எதுவுமின்றி எழுவது மனிதாபிமானம்.

. மனித சுயநலம் பரநலமாகும் நேரமிது.

. சுயநலம் ஊருக்காகப் பரநலமாகும்.

. சுயநலம் சுயநலத்திற்காகப் பரநலமாகும்.

. எக்காரணத்தால் பரநலம் ஏற்பட்டாலும், பரநலம் சுயநலத்தைவிட நல்லது.

. இது கடுமையான நேரம்.

. இந்த முதலாளி, இந்த நேரம் யார் வீட்டுக்குப் போகவும் தயாராக இருக்கிறார். அவர் அப்படியிருப்பதால் அவருக்குப் பலன் எதிர்பாராமல் வருகிறது.

. இந்த நேரத்திலும் "என்னை வந்துப் பார்க்கச் சொல்" என்பது அகங்காரம்.

. ஒரு ஆபத்து ஏற்பட்டபொழுது அனைவருக்கும் இந்த நல்லெண்ணம் எழுகிறது.

. பொய் மெய்யை எதிர்க்கும்பொழுது அனைவருக்கும் ஏதாவது செய்து மெய்யை அழிக்கத் தோன்றும். அப்பொழுதும் அனைவருக்கும் சமயோசிதமாக இப்படித் தோன்றும். சமயோசிதம் மனிதனுக்கு உண்டு. நமக்கு பிறரை அழிக்க அது வரும். அது மாறி பிறர் வாழ சமயோசிதம் வருவது உலகம் அன்னை வாழ்வுக்குத் தயாராகிவிட்டது எனப்பொருள்.

. சமூகத்தில் பல கட்டங்கள் (levels of social existence) உண்டு. எந்த கட்டம் சுயநலத்தைப் பொருத்த அளவில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவது ள்ர்ஸ்ரீண்ஹப் ஜ்ண்ள்க்ர்ம் சமூகத்தின் விவேகம்.

. இந்த கட்டத்தில் சமூகம் என்றும் உயிரோடிருக்கிறது.

இதே கட்டம் மனிதனுக்குண்டு.

மனிதன் சதாசர்வகாலமும் ஜீவனோடுள்ள நிலையிது.

மனிதன் இந்நிலையில் சமூகத்தையொட்டி அல்லது தன்னையொட்டி - சுயநலமாக - வாழ்கிறான்.இந்த மையத்தில் ஒருவன் அன்னையை ஏற்றால் அவன் அன்பன் ஆகிறான்.

இம்மையம் உணர்வால் இயங்குகிறது.

இம்மையம் ஆன்மாவால் இயங்க வேண்டும் என்பது பூரண யோகம்.

அது சாட்சிப்புருஷனில்லை; psychic being வளரும் ஆன்மா.

சாட்சிப்புருஷன் இங்கு எழுந்தால் க்ஷணத்தில் செயல்பட்டு விலகுவான்.

வளரும் ஆன்மா இங்கு எழுந்தால், க்ஷணத்தில் செயல்படும்.

மீண்டும் அதை விட்டு விலகாது.

கவர்னர் நம் கிராமத்திற்கு வந்தால் வருவார், உடன் போவார்.

அவருள்ள நேரம் அனைத்தும் பறக்கும்.

கவர்னர் நம்மூரில் பிறந்தவரானால், எந்த நேரமும் அவர்

நம்மூருக்கு உரியவர்.

. சமூகம் - நம் உணர்வு - வளரும் ஆன்மாபோல இன்றைய வாழ்வில் செயல்படுகிறது.

தொடரும்.....


 



book | by Dr. Radut