Skip to Content

06.அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னைக்குச் சமர்ப்பணம்!

கடந்த 9 வருடங்களாக "மலர்ந்த ஜீவியம்' படித்து வருகிறேன்.மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டியின் எல்லாப் புத்தகங்களும் வாங்கி படித்திருக்கிறேன். உங்களின் எழுத்துகள் எனக்குப் பலவிதங்களில் வழிகாட்டியாக இருந்திருக்கின்றன. உங்களின் படைப்புகளாகிய அத்தனைப் புத்தகங்களும் அற்புதம்! எனக்கு ஒரு பிரச்சினை இருந்தால்,கண்டிப்பாக மறுமாத "மலர்ந்த ஜீவிய'த்தில் ஏதாவது ஓர் இடத்தில் அதற்கு விடை கிடைத்திருக்கும். "எங்கள் குடும்பம்' தொடர் எனக்குப் பல வகைகளில் தெளிவு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் புரிந்துகொள்வது மிகவும் சிரமம்தான். மே மாத "மலர்ந்த ஜீவிய'த்திலுள்ள வாக்கியம் என்னை வெகுவாகச் சிந்திக்க வைத்தது. பக்கம் 28இல் "என்னால் முடியாது. என்னால் எப்படி முடியும்? என்னை உங்களிடம் ஒப்படைத்தேன். நான் செய்யவேண்டியதை எனக்காக, என் சார்பாக நீங்கள் செய்ய வேண்டும் - Agenda, Vol.5.P.101-102''.

பல சந்தர்ப்பங்களில் "நான்' என்று தான் முன்னின்று வரும். பல சந்தர்ப்பங்களில் நான் நம்பிக்கை இழந்திருக்கின்றேன். பிரார்த்தனை கூட செய்யத் தோன்றாது. ஆனால் மேற் சொன்ன வாக்கியம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது. எப்பொழுதுமே சமர்ப்பணம் என் நினைவுக்கு வரவேண்டும். நான் என்றும் அன்னையின் குழந்தையாகவே இருக்க ஆசைப்படுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் நான் அன்னையை விட்டு பிரியக் கூடாது என விழைகிறேன். அன்னையின் அருளும், தங்கள் நல்லாசியும் வேண்டி இக்கடிதத்தை முடிக்கின்றேன்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனித நோக்கத்தை தெய்வ இலட்சியமாக மாற்றுவதே திருவுருமாற்றம்.


 


 



book | by Dr. Radut