Skip to Content

08.சாவித்ரி

சாவித்ரி

P.66 Driven by his own formidable Power.

தன் சொந்த பயங்கரமான சக்தியால் நடத்தப்பட்டு,

. அசுர ஆட்டத்தில் தன் கூட்டாளியுடன்

. தன் விதியின் தலைவனாக அவள் ஆணையை ஏற்றான்.

. தன் சுக, துக்கங்களுக்கு அவள் இஷ்டத்தைச் சட்டமாக்கினான்.

. அவள் அரசாணைக்குத் தன்னைப் பணயமாக்கினான்.

. அவள் தரும் தண்டனைக்கோ, வரத்திற்கோ அவன் தயாரானான்.

. வலியென புலன்கள் உணர்த்துபவையும்,

. அவள் ஸ்பர்சத்தின் இனிமையை உணர்ந்தான்.

. அனுபவம் அவள் ஆனந்தத் தீண்டல்.

. அவள் பாதம் அவன் மார்பில் பதிந்தது.

. அவள் வருகையின் ஆனந்தம் அவனுக்கு ஆச்சரியம்.

. எந்தச் செயலும் எந்த க்ஷணத்தின் சந்தர்ப்பத்திலும்

. அவள் செய்கை அவன் பார்வைக்கு அற்புதம்.

. அவளில் அவன் பூரிக்கிறான். ஆனந்தமெனும் அவள் கடல் நீந்துகிறான். .

உலகின் லீலை அவளது. அவன் பயிலும் ஆனந்தம் அளவற்றது.

. அவள் எண்ணம், அவள் செயல் அவனுக்கு ஆனந்த ஊற்று.

. அவள் விருப்பம், அவன் ஆணை.

. அவள் பிரியம் அவனுக்கிட்ட கட்டளை.

. ஆத்மா, ஏகனான அநேகன்.

. காலத்தைக் கடந்த அவன் பேற்றையும் கைவிட்டு வந்தான்.

. முடிவற்ற காலத்தில் முடிவில்லாத பிறப்பு அவன்.

. அவள் சிறியதின் பரப்பு அனந்தத்தின் இடம்.

****

. சத்புருஷன் நாமே.

. நம் சக்தியுடன் கண்ணாமூச்சு விளையாடுகிறோம்.

. இயற்கையின் கருவி இறைவனின் ஆட்டம்.

. உள்ளுறை ஆத்மா சொந்த வீடென உறையும்.

. பிரபஞ்சம் அவன் பொழுது புரளப் பயன்படும் பரப்பு.

. பரந்த விளையாட்டரங்கம் அவன் வலிமையின் பாசறை.

. அனைத்தும் அறிந்தவன் நம் இருளை ஏற்கிறான்.

. மனிதனாகவும், விலங்காகவும் வந்த தெய்வம்.

. காலத்தை வென்றவன் காலத்திற்கும், விதிக்கும் பணிகிறான்.

. அழியாதவன் அழிவோடு ஆடச் சம்மதிக்கிறான்.

. ஞானத்தின் உறைவிடம் அஞ்ஞானத்துள் வந்தது.

. ஆனந்த சாகரம் ஜடத்தோடு வாழ்கிறது.

. சச்சரவும், வலியுமான உலகில் பிறப்பெடுத்தான்.

**** 


ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரார்த்தனை பலிப்பதை நாம் கண்டாலும், பலிக்கும் வகையை நாம் அறியோம். சூழலில் உள்ளதும், நம் மனதிலுள்ளதும் ஒன்றேயாகும். நம் மனதிலுள்ளது சூழலில் ஓர் இழையாகும்.நம்முள் உள்ளதை மனத்திற்குரியது, உணர்வுக்குரியது,உடலுக்குரியது எனப் பிரிக்கலாம். இவற்றுள் மனத்திற்கு உரியதற்கே வலிமை குறைவு. உணர்வுக்குரியதற்கு வமை அதிகம். உடலுக்குரியதற்கே அதிகபட்ச வலிமையுண்டு. உடலிலுள்ள ஆன்மீகத் (will) திறனை வெளிக்கொணர்ந்து செயலாற்ற முனைவதே இந்த யோகத்தின் இலட்சியம்.

உடலின் ஆன்மீகத் திறன் செயல்படும் யோகம்.


 



book | by Dr. Radut