Skip to Content

11. அஜெண்டா

"Agenda"

மனிதன் தன் அகங்காரம் பூரணமடைய வாழவில்லை.

இறைவன் திருவுள்ளம் பூர்த்தியடைய வாழ்கிறான்.

     டெல்லியில் அன்னை பேரால் நடக்கும் பள்ளியில் ஒருவரை வேலை நீக்கம் செய்ததால், ஆசிரியர் வேலை நிறுத்தம் செய்தனர்பள்ளி மூடப்பட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஆசிரியர் அன்னையைச் சந்தித்தார்.  "நீயே போய் நிலைமையை சரி செய்'' என்று அன்னை மீண்டும் டெல்லிக்கு அனுப்பினார். .

  • விஷமம் செய்தவரையே அதைத் திருத்தச் சொல்வது அன்னை முறை. அது திருவுருமாற்றத்திற்குரியது.
  • மனிதன் நல்லவன், கெட்டவன் என்று பிரிக்கப்படுவான்.

எவரும் நல்லவராக இருக்கப் பிரியப்படுவார்.

யோகம் செய்ய கெட்ட மனிதனால் முடியாது என்பதுபோல நல்ல மனிதனாலும் முடியாது. நல்லது ஒரு குணம். குணம் யோகத்திற்குத் தடை.

நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்ற நிலைமைகளைக் கடந்து மனிதன் உண்டு.

நல்ல மனிதன் முயன்று செய்வதை, மனிதன் இயல்பாகச் செய்வான்.

மனிதன்என்ற நிலையை எய்தியபின், தெய்வம் என்ற நிலையை எட்ட முடியும்.

அகங்காரம் உள்ளவரை நல்லவன், கெட்டவன் உண்டு.

அகங்காரம் விலகினால் கெட்டது விலகுவதுபோல், நல்லதும் விலகும்.

அகங்காரம் அற்ற மனிதன் மனிதன்.

. பிரச்சினையை உற்பத்தி செய்பவன் தவறான மனிதன்.

தானே அப்பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டால் தவறான மனிதன் மாறுகிறான். அதுவே அன்னை முறை.

. உத்தமி, குணவதி என்பவள் நல்ல குடும்பம் நடத்த உதவுவாள்.

அவள் கணவன் யோகம் செய்ய உதவமாட்டாள்.

கணவன் முன்னேறுவதைப் பாராட்டுபவள் நல்ல மனைவி.

எவ்வளவு முன்னேறினாலும் அவன் குறையைச் சுட்டிக்காட்டும் மனைவி அவனை யோகப்பாதைக்குத் திருப்புபவள்.

அன்னை மனைவி ரூபத்தில் வந்து, "நீ நல்ல மனிதனாவதற்குப்பதிலாக எரிச்சல்பட முடியாத, எடுத்துக்காட்டான மனிதனாகும்படி நான் உன்னைப் பணிக்கிறேன்" என்பவை அவனுக்கு யோகக்கருவி.

யோகத்தை மேற்கொண்ட கணவனுக்கு நல்ல மனைவியைவிட அவன் யோகத்தைப் பூர்த்திசெய்யும் மனைவியை அன்னை தருகிறார்.

எது அவள் குணக்குறை என உலகம் உணருகிறதோ, அதை ஊடுருவிப் பார்த்தால் அதன்பின் அன்னையின் கரமிருக்கும். அந்த திருஷ்டி பூர்த்தியானால் மனைவி அன்னையாகத் தரிசனம் தருவாள்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தவிர்க்க முடியாத பிரச்சினையை ஒதுக்கி அன்னையை அழைப்பது, வாழ்வுக்கெதிராக அன்னையை ஏற்பதாகும். அது யோகத்தை ஏற்கும் திருப்புமுனையாகும்.

யோகத்தை ஏற்கும் அழைப்பு.


 


 


 


 


 



book | by Dr. Radut