Skip to Content

13.வாயு வேகம், மனோ வேகம், பூர்வஜென்ம ஞானம்

வாயு வேகம், மனோ வேகம், பூர்வஜென்ம ஞானம்

     நான் டெல்லிக்குப் போகவேண்டும் என்றால் மனம் டெல்லியில் உள்ளது. அது மனோ வேகம். "நான் டெல்லிக்குப் போகவேண்டும்'' என்ற சொற்கள் மனத்தில் உருவாவதைக் கண்டால், அதன்பின் எண்ண அலைகளைக் காணலாம். சொல்லை அழித்து, சொற்களற்ற எண்ணங்களைக் கண்டால் இந்த நான்கு வார்த்தைகள் உருவம் பெறுவதற்குள் 400 எண்ணங்கள் மனத்திரையில் தோன்றி மறைவதைக் காணலாம். அது சூட்சும மனம்; மனத்தைவிட வலிமை பொருந்தியது. எண்ண ஓட்டம் நின்றபின் மேலேழுவது அம்மனம்மனம் அங்கு நின்று படித்தால் இதுவரை 100 மணி நேரத்தில் படித்த புத்தகம் 10 மணி நேரத்தில் முடிவதைக் காணலாம். Concentration தியானம் நம்மை சொல்லிலிருந்து விலக்கி சொற்பதம் கடந்த மனத்திற்கு அழைத்துப் போகும். தியானம் அங்கு நிலைத்தால் புலன்கள் செயல்படா. கண்மூடி இருந்தாலும் மனம் நேரடியாகப் பார்க்கும்மனம் புலனுதவியின்றி செயல்படும்; நிஷ்டையில் அந்நிலை முனிவருடையது; விழிப்பில் அந்நிலை எட்டற்கரியது; பூரணயோகச் சாதகனுக்குரியது. அந்த நிலையில்,

மனம் நினைப்பது உடனே நடக்கும்.

    "நான் நினைத்தேன்; நடந்தது'' என்றபொழுது மனம் அந்நிலையில் இருந்திருப்பதை உணரமுடியும்சமர்ப்பணம் அந்நிலையில் போய் நிலைப்பது மனம் அழிய உதவும் பூரணயோகம்அந்நிலையை எட்டும்பொழுது, பிரச்சினைகள் பிரார்த்தனையின்றி கரையும். கேட்காமல் பெருவாய்ப்புகள் எழும். குறை எழுந்தால், எரிச்சல் உண்டானால், சந்தேகம் வந்தால், தயங்கினால், கவலை உருவானால், மனிதச் சுபாவம் மேலிட்டால் அந்நிலை மின்னலென அழியும். Mental impulses மனத்தின் வேகமான உந்துதல் எழும் இடம் அதுஅளவுகடந்து அவசரப்பட்டவர் க்ஷணத்தில் பெரிய பொறுப்பை யோசனையின்றி ஏற்பார்கள். "எதையோ நினைத்து, எதையோ செய்து விட்டேன்'' என ரோட்டில் போகும் பொழுது திருமணத்தை முடிப்பார்கள்; கேட்காமல், 20 லட்சம் வருமானமிழந்தவர் கடனை அடைக்கக் கொடுப்பார்கள்; முழுச்சொத்தையும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்இவர்களை அவசரப்பட்டவர் impulsive characters என்பார்கள். அப்படி எழுந்த பிரச்சினை ஆயுள்வரை தீராது. அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் தீர்வது போன்ற நிலை ஏற்படும்தீராதுபிரார்த்தனை மறந்துபோகும்.  மீண்டும் அதே இடம் போய் - மனத்தில் - நின்று பிரார்த்தனை செய்தால் உடனே தீரும். அங்கேயே மனம் லயித்துவிட்டால் யோகம் பலிக்கும்.

     பூர்வஜென்ம ஞானம் பிறர் தருவது பயன் தாராது. நாம் மேற்சொன்ன இடத்தில் நின்று நிஷ்டை பலித்தால் பூர்வஜென்ம அனுபவங்கள் தெரியும். ராமகிருஷ்ணர் விவேகானந்தரின் முற்பிறவியை அப்படி அறிந்தார்பூர்வஜென்ம ஞானம் யோகத்திற்குப் பயன்படும்வாழ்க்கைக்கு அது அவசியமில்லைஅன்னை சொல்லும் வேகம் ஒளியின் வேகத்தைக் கடந்தது. அது மனோ வேகத்தையும் கடந்ததுமனத்தில் சூட்சுமமிருப்பது போல் உடலுக்கும் சூட்சுமம் உண்டு. மனத்தின் சூட்சுமத்தைக் கடந்து, உயிரின் சூட்சுமத்தைக் கடந்து, உடலின் சூட்சுமத்தில் அன்னை யோகம் செய்தால், அங்கு அன்னை கூறும் வேகம் உண்டு. அது யோகசக்தியின் வேகம்நம்மையறியாமல் எண்ணமழிந்து, உணர்வு ஸ்தம்பித்து, உடல் கிளர்ந்தெழுந்து, அதன் சூட்சுமம் ஏதோ ஒரு சமயம் க்ஷணம் தென்படும். அந்த நேரம் மனத்தின் சூட்சுமத்தில் செயல்படும் அருள், உடலில் பேரருளாகிச் செயல்படும்.

- வாழ்வில் யோகசக்தி செயல்பட வேண்டினால் அதற்குரியது இது.

-வாழ்வுஎன்றால் அது நம் சொந்த வாழ்வாகாது; பொது வாழ்வாகும்.

- இதனால் நமக்குப் பலன் வர, உலகம் பயனடைந்து, அதனால் நாமும் பயன்      பெறுவோம்.

- நமக்கு, செல்போன் வேண்டும், போன்கால் மலிவாக வேண்டும் எனில் அது உலகில் அனைவருக்கும் வந்து, அதன்மூலம் நமக்கும் வர வேண்டும்.

-இந்த சக்தி செயல்பட நம் பிரார்த்தனை, "அனைவருக்கும் வந்தபின் எனக்கு வரட்டும்" என்றிருப்பது பொருத்தம்.

-கிராமத்திற்குப் பயிர் லோன் கேட்கப் போய், பாங்க் தேசீயமயமாகி, இந்திய விவசாயிகள் அனைவருக்கும் லோன் வந்து, நம் கிராமத்திற்கும் வந்தது ஓர் அனுபவம்.

-வரப் போகும் பிறவிகளில் செய்யவேண்டிய புண்ணியம் இப்பொழுது பலிக்க இந்த பூர்வஜென்ம ஞானம் பயன்படும்.

****



book | by Dr. Radut