Skip to Content

02.மழை

மழை

N. அசோகன்

     கடந்த சில வருடங்களாகப் போதுமான மழை இல்லாமல் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதை நாமறிவோம்அதுவும் குறிப்பாகச் சென்னை மாநகரம் தொடர்ந்து பல வருடங்களாக இந்த தண்ணீர்ப் பற்றாக்குறைஎன்ற பிரச்சினையைச் சந்தித்து வருகிறது என்பதையும் நாமறிவோம். மேலும் அடுத்த ஆண்டு கோடையில் வரவேண்டிய பற்றாக்குறை இப்பொழுதே சென்னையில் வந்துவிட்டதாக நாளேடுகள் அறிவிக்கின்றன.

     இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் அன்னை அன்பர்களாகிய நாம் மழைக்காகச் செய்யக்கூடியதென்னஎன்று தெரிந்துகொள்வது நல்லதுமழையில்லாமல் பூமியில் உயிரினங்களோ, வாழ்க்கையோ இருக்க முடியாது என்பது நாமெல்லோரும் அறிந்த விஷயம்.  "நீரின்றி அமையாது இவ்வியனுலகு'' என்று பழங்காலத்திலேயே இவ்வுண்மையை பழமொழியாக எடுத்து சொல்லியிருக்கிறார்கள் சான்றோர்கள்மாதம் மும்மாரி பெய்த- தாகக்கூட வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

     அப்படி மாதம் மும்மாரி பெய்த நிலைமை மாறி வழக்கமாகப் பெய்கின்ற மழைகூடப் பெய்யாமல் போகின்ற நிலைமை எப்படி வந்துள்ளதென்பதை நாம் கண்டறியவேண்டும்.

     மழைஎன்பது இயற்கை நமக்கு வருடந்தோறும் அளிக்கும் கொடை என்றொரு கருத்து பரவலாக மக்களிடையே நிலவி வருகிறதுஇயற்கையின் கொடைஎன்ற நிலையையும் தாண்டி மழைஎன்பது இறைவனின் அருளின் வெளிப்பாடு என்றொரு கருத்தை அன்னை வெளியிட்டுள்ளார்மழை அருளின் வெளிப்பாடுஎன்றால் அதை நாம் வரவேற்கக் கடமைபட்டவராகிறோம்மழை பெய்யும்பொழுது நம்மால் வெளியில் போகமுடிவதில்லை என்னும்பொழுது, மழையை நாம் ஒரு தொந்தரவாக நினைப்பதுண்டு. அப்படித் தொந்தரவாக நினைப்பது தவறு என்று இப்பொழுது புரிகிறதுமழைநீர் நம்மேல் பட்டால் சளி பிடிக்குமென்று நாம் குடை பிடித்துக்கொண்டு போகிறோம். அப்படிக் குடை பிடிப்பதுகூட தவறாக இருக்கலாம். கேரளாவில் மக்கள் மழையில் நனைந்துகொண்டே வேலைக்கு சந்தோஷமாகச் செல்வார்கள் என்று ஓர் அன்பர் கருத்து தெரிவித்தார்அங்குப் பெய்கின்ற ஏராளமான மழைக்கு ஏற்றாற்போன்ற மனோபாவத்தை அம்மாநில மக்கள் வெளிப்படுத்துவதை நாமிதிலிருந்து பார்க்கிறோம்.

     தண்ணீர்என்பது ஆன்மீகத்தில் உணர்ச்சிகளின் சின்னமாக விளங்குகிறது.  Water stands for emotions.  ஒரு நாட்டில் நீர்வளம் அபரிமிதமாக இருக்கிறதென்றால் அந்நாட்டு மக்களும் மனவளம் மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்றாகிறதுமனவளம்என்பது இங்கு அன்பு, கருணை, பக்தி, நல்லெண்ணம், இரக்கம் போன்ற உணர்வுகளைக் குறிக்கிறதுநீர்வளம் மிகுந்த இடங்களில் பயிர் விளைச்சல் அபரிமிதமாக இருக்கும்நன்றாகப் பயிர் விளைகின்ற இடங்களில் மக்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும். பசி, பட்டினி இல்லாதபொழுது மக்கள் மனநிலை சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தின் விளைவாக அவர்களுடைய மனவளமும் சிறந்து மேற்கண்ட மாதிரி அன்பு, இரக்கம், நல்லெண்ணம், பக்தி ஆகியவை மேலோங்கி இருக்கும் என்ற கண்ணோட்டத்திலும் நாம் இதைப் பார்க்கலாம்.

     நீர்வளம் குறைந்த இடங்களில் பயிர்வளம் குறைந்து, அதன் விளைவாக பசி, பட்டினி போன்றவை அதிகரிப்பதால், மக்களுடைய சந்தோஷம் கெட்டு, சுயநலம் மிகுந்தவர்களாக இருப்பதையும் பார்க்கிறோம்சுயநலம் மிகுந்துள்ளபட்சத்தில் பிறரிடம் காட்டக்கூடிய அன்பு, இரக்கம், நல்லெண்ணம் ஆகியவை குறைந்துபோவதிலும் ஆச்சர்யமில்லை.

     வயிறு நிறைந்து, வசதியான வாழ்க்கை வாழும்பொழுதுதான் நாம் கடவுளிடம் வெளிப்படுத்தும் பக்தி உண்மையிலேயே இறையார்வம் நிறைந்ததாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையால் வாடுகின்ற மக்கள் கடவுள் வழிபாடு செய்தாலும், அவ்வழிபாடெல்லாம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக தெய்வத்திடம் பிரார்த்தனை செய்வதாகத்தான் இருக்கும். வழிபாட்டில் இறையார்வம் வெளிப்படுவதும், பிரார்த்தனையில் இறைவனின் அருளை வேண்டும் யாசக மனப்பான்மை வெளிப்படுத்துவதும், இரண்டும் சமம் என்று சொல்லமுடியாதுமுன்னது உண்மையான பக்தியை வெளிப்படுத்துகிறதுஇரண்டாவது தேவையை ஒட்டிய கெஞ்சுகின்ற மனோபாவத்தை வெளிப்படுத்துகின்றதுஆகவே முதலாவது மனநிலைதான் மனவளத்தை குறிப்பதாகும். இரண்டாம் மனநிலை பொருள்வளம் கெட்டிருப்பதால் மனவளமும் கெட்டிருப்பதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

     ஆகவே நீர்வளம், மனம் என்ற இரண்டையும் எடுத்துக்கொண்டால்,இரண்டும் ஒன்றையொன்று பாதிக்கின்றனஎன்பது தெரிகிறது. Life responseபடி பார்க்கும்பொழுது மனவளம் மிகுந்திருந்தால் அதன் எதிரொலியாக நீர்வளம் மிகுந்து காணப்படுகிறதென்றாகிறது. சாதாரண- மாகப் பார்க்கும்பொழுது நீர்வளம் மிகுந்திருந்தால்தான் மனவளமும் மிகுந்திருக்கும் என்றாகிறது.

     தற்பொழுதுள்ள வறட்சியை life response கண்ணோட்டத்தில் பார்ப்போம்நீர்வறட்சி அதிகமாகியிருக்கிறதென்றால் அதற்கீடாக மனவறட்சி அதிகமாகிவுள்ளதென்றாகிறதுஇப்பொழுது எவ்விதத்தில் மனவறட்சி அதிகமாகிவுள்ளதென்பதை பார்ப்போம். அவரவருடைய குடும்பத்தாரிடம் காட்டும் அன்பு, பரிவு, நல்லெண்ணம் போன்றவை பெருமளவில் குறைந்து உள்ளதாகத் தெரியவில்லைகணவன்-மனைவிஎன்று தம்பதியரிடையே வெளிப்படுகின்ற பரஸ்பர அன்பு மற்றும் பெற்றோர்-பிள்ளைகளிடையேவுள்ள அன்பு ஆகியவை என்றும்போல சகஜமாகவே உள்ளதாகத் தெரிகிறதுபெற்றோர் தம் சிறுபிள்ளைகள்மேல் காட்டுமன்பு குறையவில்லை என்றாலும், வளர்ந்த பிள்ளைகள் வயதான பெற்றோர்மீது காட்டும் அன்பு, அக்கறை ஆகியவை நன்றாகவே குறைந்துபோய்தானுள்ளன.

     முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவருவதே இதற்கு போதுமான சாட்சிசென்னை மாநகரைப்பொருத்தவரை பக்தி வழிபாடு பெருகி வருவதாகத்தான் தெரிகிறது. சென்னையில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில்களுள்ளனஇங்கு தெய்வ வழிபாட்டிற்காக வருகின்ற மக்கள் கூட்டம் பெருகிவருவதைத்தான் நாம் பார்க்கிறோம்கூட்டம் அதிகரித்து இருப்பதால் பக்தி ஆழ்நிலையில் பெருகிவுள்ளதென்று நாம் வைத்துக் கொள்ள முடியாதுதெய்வத்திற்குச் செய்யும் அர்ச்சனையை மெக்கானிக்கலாக, ஜீவனில்லாமல் செய்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்அர்ச்சனை செய்யும்பொழுது நமக்கு நினைவெல்லாம் தெய்வத்தின் மேல்தானிருக்கவேண்டும்ஆனால் அப்படியில்லாமல் தெரிந்தவர்கள் யார், யார் வந்துள்ளார்கள், புதிதாக என்ன புடவை உடுத்தியுள்ளார்கள், என்ன நகை போட்டுள்ளார்கள் என்று கவனிக்கும் பக்தி உள்ளவர்கள் நிறையவுள்ளார்கள். கோயில் பிரகாரத்தைச் சுற்றி வலம்வரும்பொழுது தெரிந்தவர்களைச் சந்தித்து வீட்டு விஷயங்களைப் பேசுபவர்களும் உண்டுகார், வேன் என்று எடுத்துக்கொண்டு குடும்பமாக, திருப்பதி சென்று, வசதியான கெஸ்ட் ஹவுசில் நாலைந்து நாட்கள் தங்கியிருந்து, பல ஆயிரங்களை செலவழித்துவிட்டு வருவதைப்பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்ளும் பெருமாள் பக்தர்களுண்டுஇப்படி இறைவழிபாட்டில் ஆடம்பரமும் மற்றும் பெருமையுணர்வுகளும், போட்டி மனப்பான்மையும் வந்து கலந்து கொள்வதால் வழிபாட்டிலுள்ள பக்தி மற்றும் புனிதமிரண்டும் பின்னுக்குப் போய் விடுகின்றன.

     புராணங்களில் ரிஷியசிருங்கர் என்றொரு இளம் ரிஷிக்குமாரரைப் பற்றித் தகவல்கள் இருக்கின்றனபெண்கள் சகவாசமே இல்லாமல் வளர்க்கப்பட்டவராமவர்அங்க தேசத்தில் மழை இல்லாமல் வறட்சி நிலவியபோது மழையைக் கொண்டுவருவதற்காக அரசன் செய்த யாகங்கள் எதுவுமே பலிக்காமல்போக, கடைசியாக ரிஷியசிருங்கர் வந்து யாகம் செய்தால்தான் மழை வரும்என்று அந்தணர்கள் சொன்னதன்பேரில் அரசன் அவரை வரவழைத்து யாகம் நடத்தியபின்னர்தான் மழையே பெய்ததாம். அதாவது காமவுணர்வுகளே இல்லாத அளவிற்கு பவித்திரமான ஒருவருக்கு மழை கட்டுப்படும் என்றகருத்து இக்கதைமூலம் வெளியாகிறது.

     ராபர்ட் என்றவொரு அமெரிக்க சாதகருக்கு இத்தகைய மழையைக் கொண்டுவரும் ஆற்றலிருப்பதாக கர்மயோகி அவர்கள் தம்முடைய கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய ஆன்மா மிகவும் பரிசுத்தமானது என்பதால் அவருக்கு இப்படியொரு சக்தியிருப்பதாக விளக்கமும் அளித்துள்ளார்.

     புராணங்களில் வருணபகவானை மழைக்கு அதிபதியாக வர்ணித்து உள்ளார்கள். அன்னை மழை "overmental gods'' என்ற பெருந் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொல்கிறார். அன்னை இவர்களைத் தாண்டி சத்தியஜீவிய நிலையில் இருப்பவர். அன்பர்கள் மழை வேண்டி அன்னையிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது அன்னை அப்பிரார்த்தனையை நிறைவேற்றும்பொருட்டு மழையை நிர்வகிக்கும் பெருந்தெய்வங்-களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் அன்னையின் ஆணைக்குப் பணிந்து மழை பெய்ய வைப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

     மழைக்காக அன்பர்கள் அன்னையிடம் பிரார்த்தனை செய்யும்பொழுது எல்லாம் மழை தவறாமல் பெய்தால் மேற்சொன்னபடி பெருந்தெய்வங்களுக்கு கட்டளையிட்டு அன்னை நம்மை மகிழ்விக்கின்றார்என்று நாம் யூகிக்கலாம். ஆனால் பிரார்த்தனை சில சமயங்களில் தான் பலிக்கின்றது; பல சமயங்களில் பலிப்பதில்லை என்னும்பொழுது எந்தக் கட்டத்தில் தடை வருகிறதென்பதை நாமாராயவேண்டும்.

     பிரச்சினையின் அளவு மற்றும் கடுமைக்கேற்ப பிரார்த்தனையும் தீவிரமாக இருந்தால்தான் விஷயம் நகருமென்றவொரு இடமுள்ளதுதலைவலிஎன்பது சாதாரண சிறிய உடல் உபாதை. அதற்கு 5 நிமிடம் அன்னையிடம் பிரார்த்தனை செய்தால்போதும்; தலைவலி விட்டுவிடும் என்று நம்பலாம்ஆனால் கேன்சர், டி.பி., அல்சர் (வயிற்றுப்புண்) போன்றவை உயிருக்கு ஆபத்தை வரவழைக்கும் வியாதிகள் என்னும் பொழுது அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கீடான தீவிரமாக பிரார்த்தனை செய்தால்தான் குணமடைவார்கள் என்றாகிறதுதலை வலிக்கு லேசாகச் செய்யும் பிரார்த்தனைபோல் கேன்சருக்கும் லேசாக, நாளொன்றிற்கு 5 நிமிடங்கள் மட்டும் பாதிக்கப்பட்ட அன்பர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தால் அவர் எதிர்பார்க்கும் வேகத்தில் கேன்சரிருந்து குணமடைவது என்பது சிரமமாகும். இப்படியொருவர் லேசான பிரார்த்தனை என்ற அணுகுமுறையை மேற்கொண்டுள்ளார்என்றால் அவருக்கு வந்துள்ள கேன்சரை அவரே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாகிறது.

     அன்பர்கள் கேட்குமளவிற்கு, கேட்கும் வேகத்தில் மழை வருவதில்லை என்றால் அன்பர்களே மழையில்லைஎன்ற பிரச்சினையை அந்த அளவிற்கு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றுதான் நாம் முடிவு செய்ய வேண்டும். சென்னையில் வசிக்கும் பல அன்னை அன்பர்கள் tanker lorryஇல் வரும் தண்ணீர் சப்ளையை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அல்லது அவர்கள் வசிக்கின்ற அப்பார்ட்மெண்ட்ஸ் அசோசியேஷனிடம் water charges என்று தனியாக 500/- ரூபாய் அளவிற்குக் கொடுத்துவிடுகிறார்கள். ஆகவே மேல்மட்டம் மற்றும் இடை மட்டத்தை (upper &middle class) சேர்ந்த அன்பர்களுக்கு இந்த 500/- ரூபாய் கூடுதல் செலவு பெரிதாகத் தெரிவதில்லை. அவர்களுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறைஎன்ற பிரச்சினை வாராதபொழுது ஊர்மக்களும்,கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் தண்ணீருக்குப் படும்பாடு இவர்கள் நெஞ்சைத் தொடுவதில்லை என்றாகிறதுதம்மை மனதளவில் பாதிக்காத ஒரு விஷயத்தை பிரச்சினையாக நினைத்து அன்பர்கள் செய்கின்ற பிரார்த்தனையில் தீவிரம் வாராமல் போவதில் ஆச்சர்யமில்லை.

     எந்தவொரு பொருளையும் விரயம் செய்தால் அது நம்மை விட்டு விலகிப் போகும் என்பது

life response

நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பெரிய உண்மையாகும்

பணத்தை விரயம் செய்தால் வருமானம் குறையும்

,

மூலப் பொருளை விரயம் செய்தால் தொழிற்சாலைகளுக்கு வரும் ஆர்டர் குறையும்என்பதை அனுபவத்தில் பலர் பார்த்திருக்கின்றனர்

அதே ரீதியில் இன்று தமிழக மக்களுக்குத் தண்ணீர்ப்  பற்றாக்குறையாகிவுள்ளது என்றால்

,

தண்ணீர் நிறைய கிடைத்த காலத்தில் அதை நிறைய விரயம் செய்துள்ளார்கள் என்றாகிறது

. Overhead tank

நிரம்பிய பின்னும் தண்ணீரை வழியவிடுவது

,

தண்ணீர் கசிகின்ற குழாய்களை ரிப்பேர் பண்ணாமல் தொடர்ந்து தண்ணீரை ஒழுகவிடுவது

,

முனிசிபல் குழாய்களை மூடாமல் மணிக்கணக்காக தண்ணீர் போகவிடுவது

,

இலவச மின்சாரம் கிடைப்பதால் பம்ப்செட்டுகளை தேவைக்குமேல் ஓடவிடுவது என்று பலவகைகளில் தமிழக மக்கள் தண்ணீர் அபரிமிதமாகக் கிடைத்த நாட்களில் அதை விரயம் செய்துள்ளார்கள்

.

அந்த கர்மபலனைத்தான் இன்று நாம் வறட்சியாக அனுபவிக்கின்றோம்

.

அண்மையில் தமிழக அரசு விழித்துக்கொண்டு

,

மழைநீரின் அருமையை உணர்ந்து

,

மழைநீர் சேகரிப்பு திட்டங்களைத் தமிழகம் முழுவதும் அவசரமாக அமுல்படுத்தியுள்ளது

.

நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள கர்மபலனைக் கரைப்பதற்கு இது உதவியாக இருக்கும்

.

     அன்னை அன்பர்கள் இவ்விஷயத்தில் மழைக்கு ஒத்துழைக்க விரும்பினால் அவரவர் வீடுகளில் தண்ணீரைப் பயன்படுத்துவதில் விரயத்தைத் தவிர்த்து, சிக்கனத்தைக் கொண்டுவரவேண்டும். குளிப்பதற்கு ஒரு வாளி அல்லது ஒன்றரை வாளி தண்ணீர் போதுமென்றால், அதற்குள் குளித்து முடிக்கவேண்டும்இம்மாதிரி பாத்திரம் கழுவுவதற்கும், துணி துவைப்பதற்கும், வீட்டில் தரை துடைப்பதற்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கணக்கிட்டு, அதற்குள் வேலையை முடித்துக்கொள்ள கற்றுக் கொள்ளவேண்டும். Overhead tankஐ வழியவிடாமல் automatic ஸிஸ்டத்தை பொருத்தவேண்டும்குழாய்களில் தண்ணீர் கசிவது தெரிந்தால் உடனே plumberஐ வரவழைத்து washerஐ மாற்றி, கசிவை நிறுத்தவேண்டும். Sump மற்றும் overhead tank ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்து, பாசி மற்றும் அழுக்கேறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

     சென்னை நகர மக்கள் கூவமாற்றை ஒரு ஓடும் சாக்கடையாக மாற்றியுள்ளார்கள். ஜீவனுள்ள ஒரு நதியை சாக்கடையாக மாற்றுவது என்பது நீர்வளத்தை நாம் அவமதிப்பதாகும். கூவமாற்றை சுத்தப்படுத்த வேண்டுமென்று சென்னை நகரிலுள்ள Civic Associations மற்றும் Exnora போன்ற சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாப்பை பாராட்டும் அமைப்புகளெல்லாம் ஒன்றுசேர்ந்து குரலெழுப்பி, தமிழக அரசை இதன்பொருட்டு நடவடிக்கைகள் எடுக்கவைத்தால், அதற்கு மழை ஒரு நல்ல ரெஸ்பான்ஸ் கொடுப்பதை பார்க்கலாம்.

    பூமாதேவி என்பவள் எல்லையற்ற பொறுமையுடையவள் என்று புராணங்கள் வர்ணிக்கின்றன. "அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வார் பொறுத்தல் தலை'' என்பது வள்ளுவருடைய கூற்று. ஆனால் இப்படிப்பட்ட பூமாதேவியின் பொறுமையையே சோதிக்குமளவிற்கு நம் நாட்டில் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு (environmental pollution) அதிகரித்து உள்ளது. இப்பாதிப்பு air pollution, water pollution மற்றும் land pollutionஎன்று மூன்று வகைகளாகவும் அதிகரித்துள்ளதுபஸ் மற்றும் காரிலிருந்து வெளியேறும் புகை நம்மைச் சுற்றியுள்ள காற்றை எந்த அளவிற்கு மாசுபடுத்தியுள்ளது என்பதை, சொல்லத் தேவையில்லை. தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வீட்டிலிருந்து வெளியேறும் waste water போன்றவை தண்ணீர் வளத்தை எந்த அளவிற்குக் கெடுத்துள்ளது என்பதையும் நாம் நன்றாக அறிவோம். காடுகளை வெட்டிச் சாய்ப்பது, மற்றும் மலைபோல மாநகரக் குப்பைகளைக் கொட்டிக் குவிப்பது, ஆற்றுப்படுகையில் வரையறை இல்லாமல் ஆற்றுமண்ணை தோண்டி எடுத்துச் செல்வது போன்ற பல வகைகளில் நாம் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்துள்ளோம்.

     2001 குடியரசு தினத்தன்று குஜராத்தில் வந்த நிலநடுக்கம் காரணமாக விளைந்த பேரழிவு, பருவமழை தவறுதல் மற்றும் குறைந்துபோதல், காவிரி போன்ற நதிகளில் நீர்வரவு குறைந்துபோதல், கோடைவெப்பம் கடுமையாக அதிகரித்தல் ஆகியவையெல்லாம் பூமாதேவி நமக்கு வழங்கும் எச்சரிக்கைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்இந்த எச்சரிக்கைகளை புரிந்துகொண்டு, நம் நாட்டு மக்களும் அரசாங்கமும் மனோபாவத்தையும் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொண்டு, இயற்கைக்கும் பூமாதேவிக்கும் ஒத்துழைக்கும் வகையில் நடந்துகொண்டால், நாமிழந்த மழையெல்லாம் நமக்குத் திரும்பக் கிடைப்பதைக் காணலாம்.

     "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை'' என்பது ஔவையாரின் கூற்று. முடியாட்சி நடைபெற்ற காலத்தில்,அரசனே நாட்டின் ஜீவனாக விளங்கிய காலத்தில் சொல்லப்பட்ட கருத்து இதுஅதாவது அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்தால் அதற்குப் பரிசாக நாடு முழுவதும் மழை பெய்யும் என்ற பொருள்பட அவர் எழுதியுள்ளார்.

     இன்று முடியாட்சி போய் குடியாட்சி வந்துள்ளதுஇருந்தாலும் ஔவையாரின் கூற்றிலுள்ள உண்மை மாறவில்லைபாரதமாதா பாராட்டும் வகையிலும், அவருக்கு மேலிருக்கும் சத்தியஜீவிய அன்னை பாராட்டும் வகையிலும் நம் நாட்டை ஆள்பவர்கள் நடந்துகொண்டார்கள் என்றால், ஔவையாரின் கூற்று இன்றும் பலிப்பதைக் காணலாம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிருஷ்டியின் தலைவியான அன்னை, தம்முடன் சேரும் பாக்கியத்தை உரிமையாக நமக்களிக்கிறார்.

அதைச் செய்யாமல் அன்னையிடமிருந்து எப்படிப் பெறுவது?

. நம்மிடம் வேலை செய்பவர்களை நம் நிலைக்குயர்த்த நமக்கு மனமிருக்கிறதா?

. தொழிலாளி முதலாளியாக முதலாளி மனம் இசையுமா?


 


 



book | by Dr. Radut