Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.75-76       He read the orginal ukase kept back

                மறைவான முதல் உத்தரவைப் படித்தான்.

. ஆத்மா அந்தரங்கத்தில் பூட்டிவைக்கப்பட்ட மூலங்கள்.

.வீரியமான முத்திரை தெரிந்தது.

. படமெடுக்கும் நந்த சக்தியின் விவேகம்.

. அறியாமையில் செதுக்கும் ஞானத்தின் படிகள்.

. நித்திரையில் தெய்வம் சாகாவரம் பெற்ற கண்களைத் திறந்தது.

. ஆத்மாவற்ற ரூபங்களின் உருவமற்ற சிந்தனைகள்.

. ஆத்ம உணர்வு ஜடத்தின் கர்ப்பக் கரு.

. அறியமுடியாததை அறியும் மனத்தின் வீரவேட்கை.

. அதன் பொற்செல்வத்தை வயிற்றில் வளர்க்கும் வாழ்வு. .

.ஒளியில் பிரவாகமாக எழும் வெற்றிடமான எண்ணங்கள்.

. ஆத்மாவின் அறிகுறியால் உலகை உணர்பவன்.

. புறத்தின் புத்தகத்தை அகத்தில் படித்தான்.

. புதிர் கட்டவிழ்கிறது; முடிச்சான சிக்கல் வழிவிடுகிறது.

. பெரிய ஜோதி பெருநெறியில் சுடர்விடுகிறது.

. போக்கை இழந்த காலத்தின் மறைபொருளான இலக்கு.

. தற்செயலாய் தடுக்கி விழும்பொழுது கருவான கருத்து எழுந்து நோக்கும்.

. ஊமை உலகின் உள்வெளியை காத்திருந்த கடவுள் கலம் நிறைய நிரப்புகிறார்.

. சூன்யத்தில் அனைத்தையும் வெல்லும் அனந்தன் அரச கொலு வீற்றிருக்கிறான்.

. உறுதியும் நம்பிக்கையும் மலையெனயெழுந்து இதயத்தை நிரப்பின.

. அமானுஷிய ரூபத்தைச் சுவடாகக் காண்கிறான்.

. ஊனக்கண் அறியாத ஆத்மாவின் உயர்வை அவன் பார்வை நாடும்.

. புதிய பொன்னுலகைக் கீழே கொணர முயன்றான்.

. மின்னலாக அவன் கண்ட பொன்னான அற்புதம் அவன் புகலிடம் .

. சொர்க்கலோகச் சூரியன் ஒளிப்பிரவாகம் வரக் காத்துள்ளது.

. இருண்ட அறையும் அதன் இருளடர்ந்த படிக்கட்டும்.

. சிசுவான ஆத்மா சிறிய குழந்தைப் பள்ளியில்.

. அறியாத பாடத்தை அறிவிக்கும் பொருள்கள்.

. அறிவின் அங்க லக்ஷணத்தை அவிழ்த்தெறிந்தான்.

. புவியின் இயற்கை-கலையை இயல்பாக ஏற்க முன்வந்தான்.

. மனிதச்சொல் தெய்வப் பாஷையாயிற்று.

. சத்தியத்தை உயிரின் உருவங்களில் காண முயன்றான்.

. அனந்தத்தின் அலங்காரக் கோடுகளை அறிய முயன்றான்.

. இயற்கையின் சொந்த சத்தியம் அதன் பூர்வீக இலட்சியம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

வக்கிரம், அன்னை ஜீவியமாக மாறவேண்டுமென பிரார்த்திப்பது ஆர்வம். வக்கிரமே அன்னை ஜீவியமாக முன்வருவது உண்மை (sincerity). அதுவே சரணாகதிக்குரிய முறை.

வக்கிரம், அன்னை ஜீவியமாக

மாறவேண்டுமென பிரார்த்திப்பது ஆர்வம்.


 


 



book | by Dr. Radut