Skip to Content

06.செல்வ வளத்தின் சின்னங்கள்

செல்வ வளத்தின் சின்னங்கள்

N. அசோகன்

     மனிதர்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம்வழிகாட்டுபவர்கள் ஒரு வகையினர். பின்பற்றுபவர்கள் இரண்டாம் வகையினர். முதலாமவர்கள் குறைவாகவும், இரண்டாமவர்கள் அதிகமாகவும் உள்ளார்கள்முன்னோடிகள், புதிய பாதைகளை வகுத்துத் தருகின்றார்கள்மற்றவர்கள் அப்புதிய பாதைகளைப் பின்பற்றுகின்றார்கள்முன்னோடிகளுக்குப் புதிய கருத்துகள் மற்றும் செயல்பாட்டு முறைகள் புரியும்ஆனால் வழிநடப்பவர்களுக்கு, கண்ணிற்குத் தெரியாத சூட்சுமமான கருத்துகள் புரிவதில்லைகண்ணிற்குத் தெரிகின்ற திடமான விஷயங்கள்தாம் அவர்களுக்குப் புரியும்.   அவர்களுக்குச் செல்வ வளம்என்ற கருத்தைவிட செல்வத்தின் சின்னமாக விளங்கும் வீடு, கார் மற்றும் நகை போன்ற பொருள்களைப் பற்றி எளிதில் புரியும்.

     பணத்திற்காக மனிதன் வேலை செய்வான் என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். வழக்கமான சூழ்நிலையில் இது உண்மையாக இருக்கலாம். ஆனால் புதிய சூழ்நிலையிலும் இது உண்மையாகும்என்று அவசியமில்லை. ஒரு கிராம முன்னேற்றத் திட்டத்தில் ஈடுபட்டிருந்த சேவகர்களால் அவ்வூர் மக்களை ஊக்குவிக்க முடியவில்லைபாசன வசதியில்லாத நிலங்களுக்குப் பாசன வசதி ஏற்படுத்தும் திட்டம் அது.  திட்டத்தைத் தொடங்கியவர்கள் கிணறு வெட்டுவதற்காகக் கடன் கொடுக்க ஒரு தேசிய வங்கியைச் சம்மதிக்க வைத்தார்கள்.  1973இல் அப்படியொரு வங்கி முன்வந்ததே வியக்கத்தக்க விஷயமாகும்ஆனால் ஒரு விவசாயிகூட அந்தக் கடனை வாங்கிக்கொள்ள முன்வரவில்லை.  யாரேனும் ஒருவர் வெற்றிகரமாகக் கிணறு வெட்டிவிட்டால் மற்றவர்கள் அவரைப் பார்த்துப் பின்பற்றுவார்கள்என்று திட்டம் தீட்டியவர்கள் நம்பி, ஓர் ஏழை விவசாயியைத் தேர்ந்தெடுத்து, கிணறு வெட்ட உதவினார்கள்.  அவரும் அதில் வெற்றி கண்டு கிடைத்த தண்ணீரை வைத்துக்கொண்டு அவ்வாண்டு ரூ.23,000 சம்பாதித்தார்.

     இதைக் கண்டு ஊரார் பொறாமைப்பட்டார்களேயொழிய பின்பற்ற முன்வரவில்லைஒரே ஆண்டில் அந்த ஏழை விவசாயியின் மரியாதை உயர்ந்து, ஊரிலுள்ள இரு பெரும்பணக்காரர்களிடையே தகராறு எழுந்த பொழுது இவர் நடுவராகச் செயல்படும் அளவிற்கு நிலைமை மாறியது.அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற விவசாயிகள் எல்லாம் மறுநாளே கிணறு வெட்டுவதற்கான கடன் வாங்க முன்வந்தார்கள்மனிதன் பணத்தைவிட மரியாதையைத்தான் அதிகம் தேடுவான்என்பதை இவ்வனுபவத்திலிருந்து கிராம வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் உணர்ந்தார்கள்.

     உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கார் வாங்க வேண்டுமென்று 1930இல் ஹென்றி போர்டு விரும்பினார்அவருடைய தயாரிப்பு முறைகள் குறைந்த விலைக்குக் கார் கிடைக்கும் நிலைமையை உருவாக்கியது. கார் அப்பொழுது கௌரவச் சின்னமாகக் கருதப்பட்டதுகார் வைத்திருப்பவர்கள் மரியாதைக்குரியவராகக் கருதப்படுவார்கள் என்று சாதாரண மனிதனுக்குப் புரிந்ததுநிறைய சம்பாதித்தால் கார் வாங்கலாம்என்று பல அமெரிக்கர்கள் உந்தப்பட்டு அதற்காகக் கடினமாக உழைத்தனர்காருக்காகப் பாடுபட்டவர்களை, காரில்லாமல் பெருஞ்செல்வம் ஈட்டலாமென்ற நோக்கத்திற்கு உழைக்கச் சொல்லியிருந்தால் முன் வந்திருக்கமாட்டார்கள்காரோடு மனிதனால் தொடர்புகொள்ள முடியும். ஏனென்றால் கார்என்பது செல்வத்தின் சின்னமான ஒரு பொருள்.

     குடும்ப நலனுக்காக உழைக்கச் சொன்னால் சாதாரண மனிதன் எளிதில் முன்வரமாட்டான்தன்னுடைய உயர்விற்காக உழைக்கச் சொன்னாலும் செய்யமாட்டான். ஆனால் ஸ்கூட்டர் வாங்குவதற்காக அரும்பாடுபடுவான். ஸ்கூட்டர், கார், வீடு, நகை என்ற ரூபத்தில்தான் சாதாரண மனிதனுக்குச் செல்வம் புரியும்சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள்கூட இப்பொழுது கல்வியின் அருமையைப் புரிந்து கொண்டுள்ளார்கள். ஆட்டோ டிரைவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், காய்கறிக் கடை வைத்திருப்பவர்கள் கூட நிறைய செலவு செய்து, நல்ல தரமான பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.

     பொதுமனிதனுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டதென்பதற்கு இதுவொரு நல்ல அடையாளம்கார் ஒரு பொருள்கல்வி ஒரு திறமைகார் மற்றும் கல்வியின் அருமையை இன்றுணரும் மனிதன் தன்னுடைய சொந்த முக்கியத்துவத்தை முழுவதுமாக உணர்ந்தால் அவனுடைய முன்னேற்றம் மேலும் விரைவு பெறும்.

தொடரும்....

****.
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மீகச் செயலுக்கு சூழ்நிலையைப் பூரணமாக நம்பி இருக்க வேண்டும். அதை முழுமையாக அறிவது ஆன்மீக ஞானமான அடக்கம் பெறுவதாகும்.

சூழலுக்கு அடக்கமென அறிவது ஆன்மீக அடக்கம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்தின் அபிப்பிராயம், உணர்வின் நோக்கம், உடலின் ஆழ்ந்த நோக்கம் ஆகியவை சொரணையாகின்றன. ஆழ்ந்த நோக்கம் உடலின் சொரணையானால் ஆழத்திலிருந்து செயல்படலாம்; தோல்வியில்லை.

ஆழ்ந்த நோக்கம் உடலின் சொரணை.


 



book | by Dr. Radut