Skip to Content

09.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்  

(சென்ற இதழின் தொடர்ச்சி....)        

    மகேஸ்வரி

     "அம்மா, என் அக்கா நாலைந்து நாட்களாக நீங்கள் சொல்லியபடியே கொடிரோஸை கொண்டுவந்து வைத்ததுஆனால், எங்கள் வீட்டில் சண்டை போடுறது அதிகமாயிடுச்சிகையில் பணமில்லைஎன்று சண்டை. காரணமே இல்லாமல் இரண்டு பேரும் சண்டை போட்டுகிறாங்கஎன்ன செய்வதென்று எனக்கு ஒன்றுமே புரியமாட்டேங்கிது. கொஞ்ச நாளைக்கு சண்டையை நிறுத்திட்டாங்கன்னா எப்படியும் மாப்பிள்ளை பார்த்து கண்ணாலம் கட்டிகிடலாம். ஏம்மா இதையும் மீறின பவரான பூ ஏதும் இருக்காம்மா?''

     "வீடெல்லாம் சுத்தமா இருக்குமா?'' ரோஜா செந்தாமரையிடம் கேட்டாள்.

     "என்னம்மா, எங்கள் வீடென்ன அரண்மனையா? ஒத்த ரூம்.அதற்குள்ளதான் சமைக்கணும், தூங்கணும். எல்லா சாமான் சட்டியும் குவிச்சி வைச்சிருப்போம்''.

     "நீ ஒண்ணு பண்ணு, உன் வீட்டு சாமானையெல்லாம் நல்லா துடைச்சி ஒன்னால முடிஞ்சவரைக்கும் சுத்தமா வைஅலங்காரமா வைக்கணுமின்னு சொல்லலை; சுத்தமா இருக்கணும்''.

     "துடைச்சா எல்லாம் போயிடுமுன்னு எங்க ஆத்தா சொல்லும்''.

     "ஆனா, எங்கம்மாவுக்கு (மதர்) சுத்தமா இருந்தாதான் வருவாங்க'' என்றாள் ரோஜா.

     "சரிம்மா, அப்படியே செய்றேன்''.

****

     "என்னடி அந்திமல்லி, நேற்றே பாலெல்லாம் வாங்கி பிரிஜ்ஜில் வைக்கவில்லையா? காலையிலேயே எங்கள் வீட்டு காப்பிக்கு வந்துவிட்டாயா?'' கேலியாகக் கேட்ட மல்லிகையிடம்,

     முல்லை தங்கள் முன்னால் நின்ற அந்திமல்லியின் முகமெல்லாம் வியர்த்து வெளிறிபோயிருப்பதைப் பார்த்து, அந்திமல்லியின் கையைப் பிடித்தாள்அதற்குள் சரிய ஆரம்பித்த அந்திமல்லி கீழே விழுந்தாள்.

     "மதர், மதர், Peace Mother, Peace Mother'' என்று சொல்ல ஆரம்பித்த மல்லிகை, அந்திமல்லியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, கண் திறந்த அந்திமல்லி,

     முல்லையின் கையைப் பிடித்துக்கொண்டு, "அக்கா, எனக்கு பயமாக இருக்கிறது. அவர் அப்போலோவிற்கு போயிருக்கிறார், இரத்த தானம் கொடுக்க. எனக்கென்னவோ பயமாக இருக்கிறதுஎன்கூடவே இருங்கள். என்னை விட்டுவிட்டுப் போகாதீர்கள்''.

     "ரோஜாக்கா வீட்டிற்கு போன் செய்து கத்தரிப்பூவும், கோழிக் கொண்டையும் இருந்தால் கொண்டுவரச் சொல் முல்லை''.

     இரண்டு பூக்களையும் கையில் வைத்துக்கொண்ட அந்திமல்லி அரை மணி நேரத்திற்குபின், "நான் என் வீட்டிற்குப் போகின்றேன்'' என்று கிளம்பினாள்.

     "மல்லிகை, அவளுக்கு இப்பொழுது தைரியத்தைவிட, பயமின்மையும் தீரமும் (boldness) தேவைப்படுகின்றதுதினமும் சந்திரனிடம் சொல்லி கொண்டுவந்து கொடுக்கச் சொல்'' என்றாள் முல்லை.

     "அக்கா, நீ பரவாயில்லை. தைரியம் கொடுத்தால் போதும்என்று நான் நினைத்தேன். ஆனால், பயமின்மை இருந்தால் தீரம் வரும்அதன்பின் தைரியம் நன்றாக வேலைசெய்யும்என்பதை அனுபவத்தில் பார்த்து நானும் புரிந்துகொண்டேன்''.

     "அந்திமல்லி, நான் ஒன்று சொன்னால் கேட்பாயா?''

     "தாராளமாக, மல்லிகை. நீ எதைச் சொல்லிகேட்காமல் இருந்து இருக்கிறேன், சொல்''.

     "உன்னுடைய திருமணம் காதல் திருமணம்பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நடந்திருக்கிறதுபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பார்கள்தங்களை மீறி எதையும் செய்யக்கூடாது என்று விரும்புவார்கள்தங்கள் குழந்தைகளுக்கு எத்தனை வயதானாலும்,ஒன்றுமே தெரியாத சின்னஞ்சிறு குழந்தைகள்என நினைப்பார்கள்''.

     "ஏனிந்த பீடிகை, சொல்ல வந்ததைச் சொல்''.

     "நீ செய்தது சரியா?''

     "நாங்கள் இருவருமே அப்பா, அம்மாவை மதிப்பவர்கள். bஆறு வருடங்கள் போராடியிருக்கிறோம்எத்தனையோ விதங்களில் நானும் சரி, சந்திரனும் சரி சொல்லிப்பார்த்து இருக்கின்றோம், கெஞ்சியிருக்கிறோம்இருவரும் பட்ட கஷ்டங்கள், அவமானங்களை யாரிடமும் இதுவரை சொன்னது இல்லை. பெற்றோர்கள் பெற்றோர்களாக நடக்கவில்லை; எதிரிகளாகத்தான் நடந்துகொண்டார்கள்எல்லோருடைய உடம்பிலும் உள்ள இரத்தம் சிவப்பாகத்தான் இருக்கும்ஆனால் என் அப்பா, "சந்திரனின் உடம்பில் நல்ல இரத்தம் ஓடவில்லைஅவர் பார்க்கும் மாப்பிள்ளையின் உடம்பில் மட்டும்தான் நல்ல இரத்தம் ஓடும்' என்றார்.  எந்த தகப்பனாராவது பெண்ணை, அதுவும் தன் சொந்தப் பெண்ணை,ஆடையேயில்லாமல் அடைத்துவைப்பாரா? அப்படி இருந்தால் பெண் ஓடிப்போக மாட்டாள்என்ற தைரியம்வேண்டாம் மல்லிகை, இந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேசாதே! வேறு எதை வேண்டுமானாலும் சொல், தாராளமாக கேட்கிறேன்''.

****

     கம்ப்யூட்டரில் தலையை நுழைத்துகொண்டிருந்த சந்திரன் நிமிர்ந்து பார்க்க,

     "சார், நான் 10 நிமிடமாகக் கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன், தலையை தூக்கவேயில்லைஉங்களைத் தேடி ஓர் அம்மா வந்திருக்கின்றார்கள்'' என்றான் கோபி.

     "யாரையும் பார்க்க முடியாது, போய்ச் சொல்'' என்று கூறிய சந்திரன்,மீண்டும் தன் புரோகிராமுக்குள் (programme) கவனத்தைத் திருப்ப முயன்றவன் திடீரென்று, "கோபி, ஒரு நிமிடம் நில். அம்மாவா! என்ன வயசிருக்கும்?'' "அந்திமல்லி ஏன் ஆபீசுக்கு வந்திருக்கிறாள்! ஏதாவது மீண்டும் பயந்துவிட்டாளா? அப்படியிருந்தால்கூட செல்லில் பேசாமல் ஏன் நேரில் வந்திருக்கிறாள்? என்னதான் பயமோ காதலிக்கும்வரை எனக்கு தைரியம் சொன்னவள், ஒரு மாதமாக பயம், பயம் என்கிறாள்எதற்கு பயம் என்றால், "பயமாக இருக்கிறது' என்று திருப்பி, திருப்பி சொல்கின்றாள். பயத்தை இவளே "வா, வா' என்று கூப்பிடுகிறாளோ என்று தோன்றுகிறதுஎன்ன செய்வது என்று புரியவில்லை'' நினைத்துக் கொண்டே நடந்தவன் முன்னால் உட்கார்ந்திருக்கும் உருவத்தைப் பார்த்து,

     "என்னடா, வாயடைத்து போய் நிற்கின்றாய்? நான் யாரென்றே தெரியவில்லையா? நான்தான் உன்னை பத்து மாதம் வயிற்றில் சுமந்த அம்மா தெய்வநாயகி! இப்பொழுதாவது நினைவிற்கு வருகின்றதா?''

     சரமாரியாக கேள்விகளைக் கேட்ட சந்திரனின் காது மூளைக்கு எந்தவொரு தகவலையும் அனுப்பாமல் ஸ்தம்பித்து நின்றதுகண்களோ, காதுடன் சேர்ந்து ஒத்துழையாமை போராட்டத்தை நடத்த ஆரம்பித்தன.வயிற்றிலிருந்து அலை, அலையாக ஏதோவொன்று கிளம்பி இனம் தெரியாமல், எங்கே செல்வதுஎன்று வழி தெரியாமல் தவித்தது. தொண்டை உலர, நின்றால் விழுந்துவிடுவேன்என்று கால்கள் சொல்ல, கையில் கிடைப்பதை பற்றிக்கொள்ளலாம் என்ற கைகளுக்குக் கிடைத்தது தெய்வநாயகியின் கைகள்தாம்.

     மூளை, "இதுவென்ன கை, கால், கண், காது, வயிறுஎன எல்லாமே stand stillஆக இருக்கிறதே, என்னவாயிற்று இவைகளுக்கு' என, அவசர சிக்னல்கள் எதையும் எதிர்பார்க்காமல் அனுப்பியவுடன், தொடக்கூடாத மின்சாரத்தைத் தொட்டவன்போல் சந்திரன் கையை எடுக்க நினைத்தான்.

     "அம்மா'' என்று மெதுவாகச் சொன்னவனுக்கு உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

     "உன் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. அவருக்கு நாளைக்கு ஆப்பரேஷன். நீ என்னுடன் வா'' என்றாள்.

     அப்பா என்று சொல்லியவுடனேயே சந்திரனுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. கண் முன்னால் மதுரைவீரன்போல் கையில் அரிவாளுடன்,போதை தலைக்கு ஏறியதால் கண்களில் சிவப்புடன், தள்ளாடிய ஒரு உருவம் தோன்றியது.

     அதற்குள் தெய்வநாயகி சந்திரனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

****

     "மல்லிகை, இன்றைக்கு நானும் உன்னுடன் ரோஜாக்கா வீட்டிற்கு மாலை வருகிறேன்மனதே சரியில்லைமுன்பிருந்த அளவு பயமில்லை என்றாலும் ஏதோவொன்று நடக்கப்போகிறதென மனது சொல்கிறது.அமைதியாக ஓரிடத்தில் உட்காரவேண்டும்போல் தோன்றுகிறது.  வருகிறாயா, கடற்கரைக்குப் போகலாமா? அலைகளைப் பார்த்துக்கொண்டே இருந்தால் மனது சமாதானம் ஆகும்'' கைபேசியில் மல்லிகையுடன் பேசிகொண்டிருந்தாள் அந்திமல்லி.

     "சாரி, அந்திமல்லி. இன்றைக்கு எதுவும் முடியாதுஎனக்கொரு முக்கியமான நபரைப் பார்க்கவேண்டியிருக்கிறதுபத்து வருடத்திற்குப்பின் இன்றைக்குத்தான் பார்த்தேன்நாளைக்கு நிச்சயமாக நீ சொன்ன இரண்டு இடங்களுக்கும் கூட்டிச்செல்கிறேன்''.

     அவசரமாக ஆபீசுக்குக் கிளம்பிகொண்டிருந்த சந்திரனின் கைபேசி இசைக்க ஆரம்பித்தது. இசைக்கு மயங்கி சிறிது நேரத்திற்குபின்தான் எப்பொழுதும் பதில் கொடுக்கும் சந்திரனின்கை இன்று எதையும் எதிர்பார்க்காமல் "பதிலை' அமுக்கியது.

     செய்தியைக் கேட்ட சந்திரன் உறைந்தான்.

     "அந்திமல்லி, முடியுமானால் நீ ஓர் ஆட்டோவில் ஆபீசுக்குப் போ.இல்லையென்றால், மல்லிகையை உன் ஆபீசில் விடச்சொல்எனக்கொரு அவசர வேலை'' சொல்லிக்கொண்டே வண்டியை எடுத்துவிட்டான்.

     சாவியைக் கதவிலிருந்து எடுத்த அந்திமல்லி,

     "என்னவாயிற்று இவருக்கு, ஒன்றும் சொல்லாமல் போகிறார். ஒரு நிமிடம் நின்று விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகக்கூடாதா? தலைபோகிற விஷயமா? ஒரு வாரமாகவே சந்திரனின் முகம் சரியாக இல்லைஎதுவும் பேசுவதும் இல்லைசில நாட்களில் எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகின்றார் என்றே தெரியவில்லைஇந்த ஆறு மாதங்களில் நடக்காதது எல்லாம் இந்த ஒரு வாரத்தில் நடக்கின்றதுபுதுவீட்டில் சந்தோஷமாக இருக்கலாம் என்றால், என்னவென்று தெரியாத கவலையா, பயமா! ஒன்றும் புரியவில்லை' என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே ஆபீசுக்குச் சென்றாள்.

****

     படுக்கையில் படுத்திருந்த சந்திரனைப் பார்த்த அந்திமல்லி,

     "என்னாயிற்று உனக்கு?'' என்று கேட்டுக்கொண்டே தொட்டவளின் கை சுட்டது.

     "அக்கா, பத்து நாட்களாக சுரம் குறையவேயில்லை. எல்லா டெஸ்ட்களும் எடுத்தாயிற்று. மலேரியா, டைபாயிடு, வைரல் பீவர், புதிதாக வந்த சிக்கன்குனியா என்று எதுவுமில்லை என்கிறார்நீங்கள் மல்லிகைமூலமாக கொடுத்தனுப்பிய மலர் பிரசாதத்தை தினமும் அவர் உடம்பின்மீது வைத்தேன். டாக்டர்களும் ஒன்றும் சொல்லமாட்டேன் என்கிறார்கள். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு, துணை எல்லாம் சந்திரன்தான்நீங்கள்தான் ஏதாவது செய்யவேண்டும்'' என்று கெஞ்ச ஆரம்பித்தாள் ரோஜாவிடம் அந்திமல்லி!

     "அம்மா, உங்கள் மகள் சொல்வது கேட்கிறதா! என்னவென்று தெரியவில்லையென்றாலும் சந்திரனின் உடம்பை சரிசெய்யுங்கள்'' என்று மனமுருகி ரோஜா பிரார்த்தனை செய்தாள்.

    பூவரசம்பூ, பருத்தி ரோஜா பூக்களை எடுத்த ரோஜா,

     "அந்திமல்லி, சந்திரனின் உடல்நிலை சரியாகவேண்டுமென நீயே ஆரோக்கியத்தையும், அருளையும் அன்னைக்குச் சார்த்தி பிரார்த்தனை செய். பிரச்சினைக்குரியவர்களே பிரார்த்தனை செய்தால், அதுவும் நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால் நிச்சயம் அன்னையின் அருள் கிடைக்கும். பூக்களை சந்திரனின் கையில் வைத்தும் பிரார்த்தனை செய், சரியாகி விடும். ஒன்றும் இருக்காது'' என தைரியம் கொடுத்தாள்.


 

தொடரும்....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

இறைவனை நோக்கிச் செல்லும் பாதையில் உன் அனைத்துச் சக்தியும் செலவாகிவிட்ட நிலையே முதற்படி.

முழுசக்தியும் செலவான முதற்படி.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மன உயர்வைத் தரும் வாய்ப்புகள் உயர்ந்தவையானால்,அவை தங்களுடன் உயர்ந்த சிரமங்களையும் தாங்கி வருவதால், அவற்றை விரும்பி நாடமுடியாது.

தானே வரும் வாய்ப்புகளே மனஉயர்வைப் பெற்றுத் தரும்.


 



book | by Dr. Radut