Skip to Content

03. ஆன்மாவின் சக்தி பற்றிய விழிப்புணர்வு

ஆன்மாவின் சக்தி பற்றிய விழிப்புணர்வு

N. அசோகன்

19-ஆம் நூற்றாண்டில் தென்அமெரிக்காவில் தங்கம் கிடைக்கிறதுஎன்று கேள்விப்பட்டு தன்னுடைய வீட்டையும், நிலத்தையும் விற்றுவிட்டு ஓர் ஏழை ஆப்பிரிக்கக் குடியானவன் தென்அமெரிக்காவிற்குச் சென்றான் என்றொரு கதை இருக்கிறது.அவனிடமிருந்து நிலத்தை வாங்கியவன் அந்நிலத்தை தோண்டிய பொழுது வைரக்கற்களைக் கண்டெடுத்தான். இந்தியா, ஆன்மீக வளம் நிறைந்தது. நம் நாட்டு ரிஷிகள் இறைவனை, சச்சிதானந்தமாகக் கண்டார்கள். சென்ற நூற்றாண்டில்தான் மேலைநாட்டு விஞ்ஞானிகள், இறுதியில் இருப்பது சக்திதான் (energy) என்று கண்டுபிடித்தார்கள். இதே உண்மையை நம்முடைய ரிஷிகள் உபநிடதக் காலத்திலேயே கண்டறிந்துவிட்டார்கள். அதோடு நிற்காமல் அதைத் தாண்டியும் சென்றார்கள். தாங்கள் கண்டறிந்த சக்தி (energy) என்பது அதற்கு முன்னிருக்கும் "சத்', அதாவது இருப்பிலிருந்து (Existence) வருவதாக அறிந்தார்கள். இந்த "சத்'தும் (Sat) இறுதியில்லைஎன்றும் அறிந்தார்கள். இந்த "சத்'திற்கும் (Sat) பின்னால் பிரம்மம் இருக்கிறது. அது அளவற்றது, நிரந்தரமானது. அதுதான் இறுதியானது. அதிலிருந்துதான் "சத்'தே வந்ததுஎன்று அறிந்தார்கள். இப்படிப்பட்ட அரிய ஆன்மீக உண்மைகளைக் கண்டறிந்த இந்நாடு ஏன் வறுமையில் வாடுகிறதுஎன்ற கேள்வி எழுகிறது. இயற்கை பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு இடங்களில் பல்வேறு சிறப்புகளை உருவாக்குகின்றது. இறுதிக் கட்டத்தில்தான் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து பூவுலக வாழ்க்கையை முற்றிலும் இறைமயமாக்குகிறது.

இந்தியா அடிமை நாடாக இருந்த வரையிலும் இந்நாட்டின் ஆன்மா மற்றும் அறிவுஎன்ற இரண்டுமே மங்கிப் போயிருந்தன. ஆனால் இப்பொழுது இந்நாட்டின் ஆன்மா விடுதலை பெற்றுவிட்டது. ஆனால் இந்நாட்டின் வாழ்க்கை ஏழ்மையிலும் அறியாமையிலும் மூழ்கி இருக்கிறது. பாரதமாதாவின் அடிமைத்தளைகளை உடைத்து எறிவது எவ்வளவு அவசியமாக இருந்ததோ அதே அளவிற்கு இந்நாட்டைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஏழ்மைப் பிணியிலிருந்தும் இந்தியத் தாயை விடுவிப்பதும் அவசியமாகிறது. இந்தியா சிறப்பாக இருந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் பக்தி உள்ளவர்களாகவும் நேர்மையானவர்களாகவும், உண்மை பேசுபவர்களாகவும் மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

மேலைநாட்டு வளமை, அறிவின் சாமர்த்தியத்தால் நிகழ்த்தப் பட்ட சாதனையாகும். அப்படிப் பார்த்தால் அறிவைவிட உயர்ந்த ஆன்மாவின் சாமர்த்தியம் இன்னும் பெரிதாக இருக்க வேண்டும். இது உண்மைஎன்றால் ஆன்மாவின் சாமர்த்தியத்தை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது? இந்தியாவை வளப்படுத்தும் இயக்கத்திற்கு யார் தலைமை தாங்குவது? அரசாங்கமா அல்லது ஒரு ஸ்தாபனமா அல்லது ஒரு தனி நபரா? ஆன்மாவின் சக்தியை பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் இந்நாட்டில் உள்ளது. இருந்தாலும் தேசிய அளவில் மக்களிடையே பரவலாக இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. நம் நாட்டின் சிறப்பம்சம் என்னஎன்பது பற்றிய விழிப்புணர்வு முதல் தேசிய அளவில் வரவேண்டும். அவ்விழிப்புணர்வு வந்தபிறகு அதை முறைப்படுத்த வேண்டும். இம்மாதிரி ஆன்மாவினுடைய சக்தி நம் நாட்டில் வெளிப்பட்டுள்ள சில இடங்களைப் பார்ப்போம்.

சுதந்திரம் வந்தவுடன் நாட்டிற்குத் தேவையான எதுவானாலும் அரசாங்கமே செய்ய வேண்டும்என்ற மனப்பான்மையிருந்ததால் சுமார் 10 அல்லது 20 ஆண்டுகள் நாட்டில் எதுவும் புதியதாகத் தொடங்கப் படவில்லை. மக்களுக்கு அத்தியாவசியமானவைஎன்பவை வருமானத்-திற்கு உரியவையாக இருந்தால் பொதுமக்கள் அரசாங்கத்தை எதிர்பார்க்கமாட்டார்கள். அப்படித் தானே நாட்டில் பெருகியவை:
(1) பஸ் போக்குவரத்து, (2) ஆங்கில மீடியம் நர்சரி பள்ளிகள், (3) சினிமா தியேட்டர்கள், (4) ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர்ப்பாசனம், (5) கல்யாண மண்டபங்கள், (6) என்ஜினீயரிங், மெடிக்கல், கலைக் கல்லூரிகள் - இவை நாட்டில் தொழில் பரவியதை விட அதிவேகமாகப் பரவி வருகின்றன.

நாட்டிற்கு நல்லது என்பதைத் தனக்குச் சொந்த லாபத்திற்காக ஒருவன் திறமையுடன் செய்து லாபமடைந்தால், அது நாட்டில் தானே பெருகும். பத்திரிகை உலகம் வளர்ந்ததும், சினிமா, .. பரவியதும், மோட்டார் பைக், ஙர்ல்ங்க் அளவு கடந்து உற்பத்தியாகிப் பயன்படுவதும் அரசு முனைந்து செயல்பட்டதைவிட மக்கள் ஆசைப்பட்டுச் செய்தது ஆகும்.

 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

அகந்தைஎன்பது உயர்ந்த ஜீவியத்தின் புதுமையான உடல்.

அது உருவம் பெற்றபின் சூட்சுமப் பார்வைக்குத் தெரியும்.


 

அகந்தையின் உருவம் சூட்சுமப் பார்வைக்குத் தெரியும்.
 


 


 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தொடு உணர்வின் இன்பம், உணர்வின் கிளர்ச்சி, உள்ளத்தின் ஆர்வவேட்கை, அறியாமை மனதின் அறிவு வேட்கை ஆகியவை ஜீவன் முழுவதும் பரவி நிலவும் தியானத்திற்குத் தடை.

உணர்ச்சி, கிளர்ச்சி, வேட்கை

ஜீவன் நிறைந்த தியானத்திற்குத் தடை.
 


 


 


 book | by Dr. Radut