Skip to Content

06. என்னை எவரும் வணங்க வேண்டாம்

 என்னை எவரும் வணங்க வேண்டாம்

கர்மயோகி
 

"என்னை எவரும் வணங்க வேண்டாம்'' என்று அன்னை அவ்வப்பொழுது கூறுவார். தெய்வத்தை வணங்குவதற்குப் பதிலாக சாதகர்கள் தெய்வமாக வேண்டும், அன்னையாக வேண்டும், இறைவனாக வேண்டும்என்பது அன்னை கருத்து.

"இது என்ன சாமி இது! புதியதாக இருக்கிறதே! எதைக் கேட்டாலும் பலிக்கிறதே! இப்படியுமிருக்க முடியுமா! நம்ப முடியவில்லையே!'' என்று ஒரு தொழிலாளி அன்னையை அறிந்த புதிதில் கூறி ஆச்சரியப்பட்டார்

அன்னை கேட்பனவெல்லாம் தரும் தெய்வம்

"என்னை எது வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று அன்னை கூறுகிறார். அன்பர்கள் அனுபவத்தில் அடுத்ததும் உண்டு. நாம் ஆசைப்பட்டு மறந்தவையுண்டு. இன்று அவை நினைவிருக்காது. அன்னையிடம் வந்து ஈடுபாடு ஏற்பட்டவுடன் அவை ஒவ்வொன்றாய்ப் லிக்கும்.

SSLCயை முடித்து ஆசிரியரானவருக்கு மேலே படிக்க ஆசை. எந்தப் படிப்பை எடுத்தாலும் அதில் ஆங்கிலத்தில் எழுதும் பேப்பர் இருப்பதால் அந்த ஆசை மறந்துவிட்டது. 1951இல் SSLC படிப்பு முடிந்தது. 1970இல் அன்னை அறிமுகமானார். அந்த ஆங்கிலப் பேப்பர் விலகியதுB.O.L. பட்டம் எடுத்தார். பிறகு M.A பட்டம் எடுத்தார். அதன்பின் M.Ed பட்டம் எடுத்தார். பட்டம் எடுக்க ஆசைப்பட்டார், ஆனால் M.A.யைக் கனவிலும் கருதவில்லை.

  • அதற்கு அடுத்த கட்டமும் உண்டு.

பழைய ஆசைகள் மறந்துவிடுகின்றன.

அப்படி ஓர் ஆசையிருந்ததே மறந்தும்விடும்.

அவை உயிர் பெறும், பலிக்கும்.

பலித்தபின் லேசாக இப்படி ஓர் ஆசையிருந்தது சில சமயங்களில் நினைவு வரும்.

அவையும் ஈடுபாடு அதிகமாகும்பொழுது அபரிமிதமாகப் பலிக்கும்.

சிறு வயதிலிருந்தே வீட்டிலும், பள்ளியிலும், ஆபீசிலும் வேலையே செய்யப் பிரியப்படாதவர் ஒருவர்.

அப்படிப்பட்டவருக்கு வேலை போவது வழக்கம்.

20 ஆண்டில் அப்படிப்பட்டவர் 19 வேலைகளிருந்தார்.

வேலை செய்யப் பிரியப்படாத இந்த மனிதர் அன்னையிடம் வந்தார்.

வேலை செய்யாமல் சம்பளம் வேண்டும் என்றார்.

10 ஆண்டு சர்வீஸ் இருக்கும்பொழுது இவருக்கு ஓய்வு, 10 ஆண்டு
சம்பளம், பென்ஷனுடன் வீட்டிற்கு அனுப்பினார்கள்.

"இது என்ன, தவறான பிரார்த்தனை பலிக்கிறதே?'' என்றார் அப்படிப் பட்டவர் ஒருவர்.

சமூகத்திற்குத் தவறு, வாழ்வில் ஆழ்ந்த அம்சம்.

அன்னையை ஆழ்ந்து ஏற்றுக்கொண்டால், ஆழ்ந்த அம்சங்கள் பலிக்கும்.

கேட்பதைவிட அதிகமாகத் தருவதும், கேட்காததைக் கொடுப்பதும்,
முடிவான பலனை முன்பே தருவதும், கேட்கத் தெரியாததைக் கொடுப்பதும் அன்னையின் பாங்கு.

  • எதையும் கேட்காமலிருப்பது நல்லதுஎனவும் கூறியுள்ளார்.

நாம் வேறு, அன்னை வேறுஎன்ற நிலையில் நாம் அன்னையைக் கேட்கிறோம்.

நெருங்கி வந்தால், கேட்கத் தோன்றாது, மறந்து போகும்.

ஐக்கியமானால் கேட்க முடியாது.

எப்படி நம்மையே நாம் கேட்பது?

கேட்காமலிருப்பது நாமே அன்னையாவது என்பது சட்டம்.

  • "ஏன் எனக்கு உங்கள் நினைவு வருவதில்லை?'' என அன்னை பகவானை சூட்சும உலகில் கேட்டார்.
  • "என்னோடு ஐக்கியமானதால் நினைவு வரவில்லை'' என்றார் பகவான்.
  • ஈடுபாடு அதிகமானால் மனம் செயல்படாது; உணர்வு மேலிடும்;நெஞ்சம் நெகிழும்.

அதற்கும் அடுத்த கட்டம் உடல்.

அதனினும் உயர்ந்த நிலை ஜீவன்.

ஜீவனில் அன்னையுடன் ஐக்கியமானவரால் அன்னையை எதுவும் கேட்க முடியாது.

M.A., M.Ed. எடுத்த அந்த அன்பர், வயது முதல் அத்தனை சந்தர்ப்பங்களையும் ஒதுக்கிவிட்டு, அன்னையை மட்டும் நம்பி Ph.D. எடுக்க முயன்றால் அதுவும் பலிக்கும்.

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனின் (uniqueness) தனித்தன்மை உச்சத்தை அடைய, இறைவனோடு அவன் ஐக்கியமாக வேண்டும்.

உச்சக்கட்ட உயர்வு ஐக்கியத்திலுள்ளது.

 


 ஸ்ரீ அரவிந்த சுடர்

சுமுகம்என்பது வலுவானது தன் தாழ்ந்த பகுதியில் உள்ள விழிப்பின் அளவைப் பொருத்தது.

உயர்ந்தது தாழ்ந்ததில் விழித்தால் சுமுகம் ஏற்படும். 


 



book | by Dr. Radut