Skip to Content

08. மனித முயற்சியின் புனித உருவம்

மனித முயற்சியின் புனித உருவம்

கர்மயோகி

ஆசை தவறு, பேராசை பெரும் தவறு என்றவர்கள் விடாமுயற்சியின் பெருமையைப் பெரிதும் பாராட்டினர்

ஆதாய முயற்சி ஆசை, அது சரியில்லை.

இலட்சியமான முயற்சியை இடைவிடாது பின்பற்றுவது உயர்ந்தது.

இந்தியா ரிஷிகள் பிறந்த புண்ணிய பூமி.

ஸ்ரீ அரவிந்தம் ரிஷிகள் பாதையில் வாழ்வை ஏற்கச் சொல்கிறது.

ரிஷிகள் இறைவனுடன் இரண்டறக் கலந்தனர்.

ஸ்ரீ அரவிந்தம் இறைவனாக வாழ்வை மலரச் செய்கிறது.

இவை யோகத்தை நாடும் உயர்ந்தவர்க்குரியன.

யோக வாழ்க்கை எளிய மனிதனுக்குரியது.

யோக வாழ்க்கையை ஏற்றவரும் யோகத்தை மனதில் கொண்டால் அவர்கட்கும் ஆதாயம்; வருமானம் பொருட்டன்று.

உயர்ந்தவர் உன்னத இலட்சியத்தை நாடுவது சிறப்பு.

யோகத்தையும், யோக வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தையும் தவிர்த்து எதுவும் முடியாத எளியவனுக்குண்டானது என ஒன்றுண்டா? என்ற கேள்விக்குப் பதிலிறுக்கும் கட்டுரையிது.

1947க்கு முன் பிறந்தவர் வாய்ப்பே அறியாத மனிதர்.

1947க்குப் பின் பிறந்தவர் சுதந்திர மண்ணில் பிறந்தவர்.

1970, 1980க்குப் பின் பிறந்தவர் வாய்ப்பை அறிவர்.

1990க்குப் பின் வாய்ப்பு மனிதனை நாடி வர ஆரம்பித்தது.

2000க்குப் பின் வாய்ப்பு வந்து ஏற்குமாறு வயுறுத்துகிறது.

சுமார் 30 லட்சம் பேர் அமெரிக்கா சென்று அமெரிக்க வருமானம் பெறுகிறார்.  அதை வாய்ப்புஎன நாம் அறிகிறோம்.

அதைப் பெற்றவர் அதிர்ஷ்டம் பெற்றவர்.

அமெரிக்க வருமானம் தலைக்கு 40 ஆயிரம் டாலர். சுமார் 20லட்சம் ரூபாய். ஒரு வீட்டில் 4 பேரானால் இக்கணக்குப்படி அந்த வீட்டு வருஷ வருமானம் 100 லட்ச ரூபாய். மாதம் 8 லட்சம் ரூபாய்.

இந்தியாவில் அவ்வருமானம் உயர்மட்டத்திலுள்ளவர் பலர் பெறுகின்றனர்.

யோக இலட்சியம் என்பது கண்டம் அகண்டமாவது (finite becomes Infinite). மனிதன் கடவுளாவது யோக இலட்சியம்.

1956இல் வந்த சத்தியஜீவியம் வருஷாவருஷம் வலுப்பெறுகிறது.

1960இல் பிரார்த்தனை செய்து பலன் பெற்றவர், 2006இல் அதே பிரார்த்தனைக்குப் பெரும்பலன் வருவதைக் காண்கிறார். அன்று வாடகை வீட்டிற்குப் பிரார்த்தனை செய்தால் நல்ல மனிதருடைய வசதியான வீடு கிடைத்தது. இன்று அதே பிரார்த்தனைக்குச் சொந்த வீடு கிடைக்கிறது. இன்று அன்னையின் சூழல் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.

கடவுளாகாவிட்டாலும் அமெரிக்க வருமானம் இங்கேயே பெறும் சக்தி உலகில் வந்துவிட்டது என அன்பர்கள் அறிய வேண்டும்.

Moped பெற்றதைப் போற்றியவர் வீட்டில் இன்று காரும், வண்டியும்,moped உள்ளதைக் காண்கிறோம்.

1965இல் ரூ.1/- கூலி

இன்று அதே கூலி ரூ.150/-.

கூலி 150 மடங்கு உயர்ந்தது. இதற்கு மனிதன் செய்ததென்ன?

அமெரிக்கர் 40 ஆயிரம் டாலர் சம்பாதித்தால், அதே கணக்குப்படி இந்தியர் 3000 டாலர் சம்பாதிக்கின்றனர். 13 மடங்கு பெரியது அது. நாட்டில் கூலி 150மடங்கு உயரும் சூழல் பெற்றிருப்பதால் 13 மடங்கு இந்தியரால் இங்கேயே வருமானத்தை உயர்த்த முடியுமா?

இது பழைய தொழிலில் முடியாது.

பழைய மனப்பான்மை இதைச் சாதிக்காது.

9 மணிக்கு ஆபீஸ் போய் 5 மணிக்கு வீட்டிற்கு வர வேண்டும் என்ற மனநிலைக்குப் பலன் தாராது.

"எனக்குப் பிடித்த வேலை வேண்டும்'.

"என் சொந்த ஊரிலேயே வேண்டும்'.

"நிம்மதியாக வாழ வேண்டும்'.

"பிரச்சினையற்ற வாழ்வு தேவை' என்பவர் இதற்கு விலக்கு.

"எந்த வேலையாயினும் செய்கிறேன்'.

"எங்கு வேண்டுமானாலும் போகிறேன்'.

"எந்த சந்தர்ப்பத்திலும் என் சொந்த நிம்மதி கலையாது'.

"எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியும்' என்ற மனநிலையுள்ளவர்க்கு இது பலிக்கும்.

Courseஐத் தேர்ந்து, தெளிந்து எடுக்க வேண்டும்.

LAtest informationபுதியதை ஆர்வமாக ஏற்க வேண்டும்.

உலகில் அதிகபட்ச வருமானமுள்ளவருடன் சமமாக வேண்டும்.

ஒவ்வொரு நிமிஷமும் முன்னேற வேண்டும்.

புதிய வாய்ப்பு வருபவற்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மாறத் தயங்கக் கூடாது.

முன்னேறியவர் பயன்படுத்திய அத்தனை வாய்ப்புகளையும் ஒன்று விடாமல் ஏற்க வேண்டும்.

வாழும் ஆர்வம் முனைப்பாக இருக்க வேண்டும்.

நம்மைவிட 20 வயது குறைந்தவர் போல் செயல்பட வேண்டும்.

உலகின் முன்னணியை கண்முன் நிறுத்த வேண்டும்.

அவரைத் தேடி ஏராளமான வாய்ப்புகள் வரும்.

வருவதை ஏற்றால் பெற முடியாதவற்றை எல்லாம் பெறலாம்.

வாய்ப்புக்குக் குறைவில்லை, ஏற்பவர் குறைவு.

கண் விழித்துப் பார், கடவுள் தெரியும்.

அது முயல்பவர்க்குரியது.

இருந்த இடத்திலேயே, உள்ள வேலையை சிறப்பிற்கு எடுத்துக் காட்டாக, மனம் அன்னையில் முழுமையாக லயித்து, அனைவரிடமும் நல்ல பெயரெடுக்கும் அடக்கத்துடன் செய்தால் மனம் அடங்கும்.

வேலை சிறக்கும்.

வேலை செய்யுமிடத்தில் மௌனம் கனக்கும்.

சூழல் செறிவு பெறும்.

இத்தனை நாள் கேட்ட கூச்சலிருக்காது.

புலம்பியவர் அடங்குவர்.

குறை கூறியவர் நம்மை விட்டகல்வர்.

பொறாமைக்காரர் கண்ணில் படமாட்டார்கள்.

செய்யும் வேலையின் நேர்த்தி பிறர் கண்ணில் படும்.

புகழ்மாலை வரும்.

அது அடக்கத்தை உயர்த்தும்.

வேலை யோகமாக மாறும்.

ஊதுவர்த்தி கொளுத்தாமல் அந்த மணம் எழும்.

மனத்தில் அன்பு சுரக்கும்.

மறுத்துப் பேசியவர் மகிழ்ந்து காண்பார்.

அன்னை நெஞ்சில் தெரியும்.

சமர்ப்பணம் உள்ளிருந்து எழும்.

அது சரணாகதியாக மாறும்.

அமெரிக்க வருமானம் நம்மைத் தேடிவரும், மீண்டும் வரும். ஒரு முறை சுறுசுறுப்பான பக்தர்கட்குரியது. அடுத்த முறை அமைதியான

அன்பர்கட்குரியது. இரண்டிற்கும் முழுப்பலன் உண்டு. எதையும் யாரும் ஏற்றுப் பயன் பெறலாம்.

Human Cycle என்ற நூலில் பகவான் Ideals of Social Development சமூக முன்னேற்றத்தின் இலட்சியச் சட்டங்கள் என்பதைப் பற்றி எழுதும்பொழுது

தனி மனிதன் சமூகத்திற்கு சமம் என்கிறார்.

தனி மனிதனுள் முழுச் சமூகமும் உள்ளது என்கிறார். குடும்பம், ஜாதி, நாடு, மனிதகுலம்என்ற நிலைகள் உள. மனிதன் இவற்றால் மனித குலத்தினின்று பிரிக்கப்படுகிறான். இடைப்பட்டவை அனைத்தும் மறைந்து மனிதன் மனித குலமாவான் என்கிறார் பகவான். அதுவே சமூகம் வளரும் இலட்சியச் சட்டம்.

ஒரு மனிதன் உலகம் சாதிப்பதைச் சாதிக்கலாம்என்று பொருள் எனவும் விளக்கம் கூறுகிறார். உலகில் உள்ள 600 கோடி மக்கள் சாதனையை உலகம் முழு முன்னேற்றம் பெற்ற நேரம் ஒருவன் சாதிக்கலாம். இது பகவான் இலக்கு.

அமெரிக்காவில் 30 கோடி மக்களில் 10 கோடி மக்கள் சராசரியாக 40 ஆயிரம் டாலர் சம்பாதிக்கின்றனர். இவர்கள் மேதைகளில்லை. அமெரிக்காவில் சராசரி மனிதர். அந்த வருமானத்தை முழு முயற்சியால் அருளின் துணைகொண்டு இங்கு இப்பொழுது இந்தியாவில் சம்பாதிக்கலாம்என்று நான் கூறுகிறேன்.

இலட்சக்கணக்கான இந்தியர் இந்த வருமானம் - 20 லட்சம் வருஷத்திற்கு - இப்பொழுது பெறுகின்றனர். இவர் உயர் மட்டத்தில் உள்ளவர். எல்லா மட்டங்களிலுள்ளவரும் பெற முடியும்.

  • முயற்சி முழுமையானால்,
  • மனித முயற்சி புனித முயற்சியானால்,
  • அகத்திலும், புறத்திலும் அருள் செயல்பட்டு,
  • அபரிமிதமான வருமானம் தரும்.
  • வேண்டியவை:

நம்பிக்கை, உறுதி, முயற்சியின்முழுமை.

Human Resourcefulness கற்பக விருக்ஷமான மனிதன்.

  • தனக்காக வேலை செய்பவன் பிறருக்காகச் செய்வதைவிட அதிகமாகச் செய்வான்.

தனக்காக எனில் ஆர்வம் முந்திக்கொண்டு வரும்.

7 மணிக்கு எழுபவன் தனக்காகஎன மாறினால் 5 மணிக்கு எழுவான்.

வேலையில் நேற்றுவரை படாத விஷயம் இன்று கண்ணில் படும்.

புதிய யோசனைகள் மனதில் எழுந்தபடியிருக்கும்.

பிறருக்காக 1 ஆண்டில் 2000 ரூபாய் சம்பாதித்தவர் தனக்காக மாறி 2 1/2ஆண்டில் 22,000 ரூபாய் சம்பாதித்தார்.

கடைப் பையன் முதலாளியானால் வாடிக்கைக்காரர் அனைவரும் நினைவில் எழும்.

அவர்கள் பழக்கம் அனைத்தும் யோசனைசெய்யாமல் புரியும்.

அமெரிக்கா வளமானதற்கு முனைவர் entrepreneur காரணம்.

நம் நாட்டில் முனைவர் அவருக்குச் சளைத்தவரில்லை.

முனைவர் அனைவரும் சொல்ப காலத்தில் கோடிக்கணக்காகச் சம்பாதிக்கிறார்கள்.

அமெரிக்காவில் அனைவரும் முனைவர்.

அமெரிக்க முனைவர் வேலையைத் திறம்படச் செய்வார்கள்.

நம் நாட்டில் ஆன்மீகச் சூழலாலும், அன்னைச் சூழலாலும் முனைவருக்குத் திறன் அதிகம்.

இன்று நாம், கடைத்தெரு பெருகுவதில் அதைக் காண்கிறோம்.

பெருகுவது பழைய மளிகைக் கடை, நகைக் கடையாகப் பெருகுகிறது.

புதுத் தொழில் - விளம்பரம், credit card, கம்ப்யூட்டரில் - இலாபம் அதிகம்.

அவற்றை இந்தியர் மேற்கொண்டால் பலன் பதினாயிரம் மடங்கு உயரும்.

 book | by Dr. Radut