Skip to Content

09. அஜெண்டா

"Agenda"

Soldier with Mother's face going to war in Bangladesh in the dream of a Sadhak
 பங்களாதேஷ் போரில் சிப்பாய்கள் அன்னை முகத்துடன் போரிட்டதாக ஒரு சாதகர் கனவு கண்டார்.                  - அஜெண்டா

  • பிரார்த்தனையால் பலிக்கும் எந்தக் காரியத்தின் மீதும் அன்னையின் வெள்ளொளி, கரம், பகவானுடைய நீலநிறம், அன்னையின் கண்ணிலிருப்பது சூட்சுமப் பார்வையுடையவர்க்குத் தெரியும்.எதுவும் தெரியாவிட்டால் அப்பொருள் பிரகாசமாக இருக்கும்.அது சாப்பிடும் பொருளானால் அளவு கடந்து ருசியாக இருக்கும். அப்பொருள் வரும்பொழுது அங்கு ஊதுவர்த்தி மணம் எழும்.அப்பொருள் தொடுவதற்கு இதமாக இருக்கும்.

பிரார்த்தனையால் பலித்தபொழுது அன்னையின் அம்சம் ஏதாவது ஒன்று தவறாமல் இருக்கும்.

 ஓர் அமெரிக்கப்பெண் இங்கு வந்து தங்கினார்.

அமெரிக்காவில் சேவை செய்ய ஓர் அமெரிக்கர் இங்கிருந்து அங்கு சென்றார்.

இப்பெண் அவருக்குத் தன்காரைப் பயன்படுத்த அனுமதி தந்தார்.

அவர் காரை ஸ்டார்ட் செய்தார். நான்கு கதவுகளும் திறந்துகொண்டன. "இது என்ன, இந்தக் கார் அந்த அமெரிக்கப்பெண் போலவே இருக்கிறது?'' என்றார்.

அப்பெண்ணுக்கு எந்தக் கட்டுப்பாடுமில்லை.

யார் பேசினாலும் குறுக்கே பேசுவார்.

யார் செய்வதையும் மறுத்துச் செய்வார்.

அவருடனிருந்தவர் அவரைப் பிசாசுஎன்பர்.

அவர் குணம் அவர் காருக்குண்டு.

இது வாழ்வின் சட்டம்.

  • 1940இல் ஸ்ரீலங்காவில் ஒருவர் பணம் சம்பாதித்தார்.

அவர் மகன் அப்பணத்தைத் தொழிலில் பெருக்கினான்.

அதைக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வடக்கே சொத்து வாங்கினான்.

அதை விற்று தமிழ்நாட்டில் 1965இல் வேறொரு சொத்து வாங்கினான்.

1970இல் அதையும் கொடுத்துவிட்டு வடக்கே சென்றான்.

1985இல் அந்த சொத்தில் இலங்கை அகதிகள் வந்து தங்கினர்.

1940இல் அவர் சம்பாதித்தது உழைக்காமல், பிறருழைப்பால் சம்பாதித்தது.

1985இல் அவர் வாங்கிய சொத்தில் தங்கிய அகதிகள் வேலை செய்யாமல் சம்பளம் கேட்டனர்.

  • நாய் விற்ற காசு குறைக்கும்.
  • 1940இல் ஏற்பட்ட காசின் அம்சம் 1985இல் தெரிகிறது.
  • Pride and Prejudice என்பது 200 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட ஆங்கில நாவல். அன்பர்கள் பலரும் அதை 1980 முதல் Life Response க்காக விவரமாகப் படிக்க ஆரம்பித்தனர்.

அந்நாவல் சினிமாவாக ஒரு முறை அப்பொழுது வந்தது. மீண்டும் படமாக எடுத்தனர்.

மூன்றாம் முறையாகவும் படம் எடுத்தனர்.

எல்லா அன்பர்களும் அந்நாவலை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர்.

நாவலின் ஆசிரியர் ஜேன்ஆஸ்டின் வாழ்வைப் படமாக எடுத்தனர்.

Secret சமீபத்தில் பிரபலமாயிற்று. அதன் website ஒன்றிற்கு ஒரு நாளில் 80,000 பேர் வந்தனர்.

Pride and Prejudice websiteக்கு 1,50,000 பேர் வந்தனர்.

  • அன்னைஎனில் அபிவிருத்தி, பெருக்கம், முன்னேற்றம்.
  • அன்பர்கள் அக்கதையை நாடியவுடன் நாவலும், நாவலாசிரியையும் பிரபலமடைவது அன்னையின்முத்திரை.

***

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனத்திடமிருந்து உடல் அறிய அதிக நாளாவதில்லை.ஏனெனில் அது மேலிருந்து கீழே வருவது. உடலிலிருந்து மனம் அறிய பல நூற்றாண்டுகளாகும். அது மேலே போவதால் நாள் அதிகமாகும்.

அனுபவம் அறிவாவதைவிட அறிவு சீக்கிரம் அனுபவமாகும்.
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிறிய மனிதனுக்குப் பிரபஞ்சத்தை அனந்தன் அளிக்க முன்வந்தால், அனந்தனைத் தன்வாழ்வுக்குள் சுருக்க மனிதன் முனைகிறான்.

தன்னைக் காப்பாற்றுவதே சரிஎன்பது அனந்தனுக்கும், மனிதனுக்கும் பொது.
 


 


 



book | by Dr. Radut