Skip to Content

10. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

46. அறிவுடையாரை அரசனும் விரும்பும்.

  • அன்பருக்கு அரசவையிலும் அமோக வரவேற்புண்டு.

47. அசை போட்டுத் தின்பது மாடு.

  • அசையாமல் விழுங்குவது வீடு.
  • உயிரைவிட்டுத் தீர்க்கும் பிரச்சினையை சமர்ப்பணம் உயிர் இனிக்கத் தீர்க்கும்.

48. அச்சாணி போன்றதோர் சொல்.

  • அன்னை வாழ்வின் அச்சாணி.

49. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?

  • அடி நாக்கு நஞ்சும், நுனி நாக்கு விஷமும் அன்பருக்கு அமிர்தம் தரும் பலனைத் தரும்.

50. அடி நொச்சி, நுனி ஆமணக்கா?

அடி எதுவானாலும் நுனி அருளாவது அன்னை பயிர்.

தொடரும்....

***
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

வெட்கமின்றிக் கேட்பது உணர்வின் கர்வமாகும். அதை ஏற்பது கண்மூடித்தனமான பாசமாகும்.

பாசம் வெட்கமில்லாத உணர்வை விரும்பி ஏற்கும்.
 


 

 

 



book | by Dr. Radut