Skip to Content

15. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. முழுமையான திருவுருமாற்றம்.
    முழுப்பொய்க்கு உலகில் போக்கிடமில்லை.
    ஆண்டவனும் உள்ளே நுழைய முடியாது.
    அதற்கும் திருவுருமாற்றம் உண்டு.
    மாறுவது அதன் பங்கு - மாற்றுவது இறைவன்.

    மாற முடிவு செய்துவிட்டால்
    அது எவரும் எட்ட முடியாத முழுமெய்யாகும்.

    இதை, கிராமத்தில் கண்டோம்.
    பணம் 100% தேதியோடு வந்துவிட்டது.
    ஒருவர்கூட பணத்தை பாங்க்கில் கட்டாமல் வீடு சேரவில்லை.
    மூட்டை கம்பு 20 ரூபாய். 4 மூட்டை பெரிய விளைச்சல் 100 ரூபாய் அதிக மகசூல். ரூ.100 என்பது 1ணீ இலட்சமாயிற்று. 1500 மடங்கு உயர்ந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு பொய்யாக இருக்கிறதோ, அது மாறினால் அவ்வளவுக்கு அவ்வளவு பெருகும்.
    10,000 ரூபாய் 2,40,000 ரூபாய் ஆனதை, 2000 ரூபாய் அப்படி மாற்றியதுஎனலாம். 2000 ரூபாய் 11 இலட்சமாயிற்று, 550 மடங்கு. அதையே "0' ரூபாய் 11 இலட்சம் ரூபாய் என்றால் 11 இலட்ச மடங்கு வளர்ந்தது எனலாம். இது கெட்ட எண்ணம் நல்ல எண்ணத்தின் சேவையால் பெற்றது.
    உண்மைஎன்பது 00, infinity மடங்கு வளரும். நம் வாழ்வில் infinityயைப் பார்க்க முடிவதில்லை.
    எது முக்கியம்?
    மாறுவது முக்கியம்.
    மாற எடுக்கும் முடிவு முக்கியம்.
    ஏன் இந்தப் பெருக்கம்?
    This is a JOY Brahman seeks.
    This JOY is not there even in heaven now.
    Therefore this infinite expansion.
    பொய் பெற்ற வாய்ப்பு மெய்க்கில்லை.
    பொய் மனம் ஒடிய வேண்டாம்.
    இல்லையென்பது இங்கில்லை.
    எவரும் வெறும் கையோடு போகவேண்டாம்.
    I classம், II classம் ரயில் ஒரே வேகமாகப் போகும்.
    Equality உண்டு, சுதந்திரம் உண்டு.
    நாம் விரும்பி, அறிந்து, முனைந்து, பணிந்து ஏற்க வேண்டும்.
    பொய்யும் மெய்யாகும் யோகம் பூரணயோகம்.

  2. பொறுக்க முடிந்தது, பொறுக்க முடியாதது, நினைக்கவே பயமானது.
    முடிந்ததை 1 மணியும், முடியாததை 1 நிமிஷமும், நினைக்கவே பயமானதை க்ஷணமும் ஏற்றால் இந்த 100 பயிற்சிகளில் பலன் பவித்திரமாகக் கிடைக்கும்.

     விளக்கெண்ணெய், Cod liver oil காட்லிவர் ஆயில், புரியாத புத்தகம், மாமியார் கொடுமை, மருமகள் அட்டகாசம் பொறுக்க முடிந்தவை. கசப்பின்றி, அறிவால் இவை நம் பிரதிபலிப்பு என ஏற்று 1 மணி நேரம் முகம் சுளிக்காமலிருப்பது பொறுமை.

    அதிகாரி பலர் முன்னிலையில் நம்மைத் திட்டுவது, கீழேயுள்ள சிப்பந்தி எதிர்த்துப் பேசுவது, பிறர் உள்ள பொழுது அதிகாரிக்குத் திறமையில்லை எனப் பேசுவது பொறுக்க முடியாதவை. இவையெல்லாம் நாம் இதுவரை பிறருக்குச் செய்தன, மீண்டும் வருகின்றன என விளங்கிக்கொண்டு, 1 நிமிஷம் மனம் கசங்காமல், நடக்க வேண்டியது நடக்கிறது என உள்ளே மலர்வது அடுத்த கட்டம்.

    பாம்பு உள்ள அறைக்குப் போவது, மகன் ஜெயிலுக்குப் போயிருக்கிறான் எனக் கேள்விப்படுவது, வெளியிலிருந்து உள்ளே வந்தால் தம்பதியுடன் படுக்கையில் வேறொருவரிருப்பது போன்றவை நினைக்கவே முடியாதது.

    நான் என் கூட்டாளிக்குப் பாம்பாக இருந்தேன், நண்பரிடம் கோபப்பட்டு அவர் மகன் ஜெயிலுக்குப் போக நினைத்தேன், உடந்தையாயிருந்தேன், நடத்தையில் நான் என்தம்பதி போன்றவனேஎன மனம் அறிந்து, உணர்ந்து, ஞானமாக மலர்வது. நாம் மனதால் செய்தது மற்றவர் நமக்குச் செயலாகச் செய்கிறார்என்பது முக்கியம். நம்முடைய பங்கில்லாமல் நமக்கு நல்லதோ, கெட்டதோ வாராது. கர்மத்திற்குக் கட்டுப்பட்டவருக்கு கடந்தது இல்லாமல் நிகழ்வது இருக்காது. அருளைப் பெறுபவர்க்கு கர்மமோ, கடந்ததோ தேவையில்லை. அருள் தானே, காரணமேயில்லாமல் செயல்படுவது; பிரமேயமில்லாமல் பிரம்மம் செயல்படுவதை அருள் எனவும்; திறமையோ, தகுதியோ, சந்தர்ப்பமோ, அவசியமோ, காரண-காரியமோ இல்லாமல் பெரும்பலனை நம்மேல் திணிப்பது பேரருள்.

    • அருள் செயல்பட கர்மத்தை நம்பக்கூடாது.
    • பேரருள்வர நம் திறமையை நம்பக்கூடாது.

    நினைக்க பயமானதை, நம் பங்கினால் மனம் ஏற்றவுடன் பயங்கரமான நிகழ்ச்சி பவித்திரமாக மாறுவதைக் காணலாம். போலீஸ் இன்ஸ்பெக்டர், 4கான்ஸ்டபிள், விலங்குடன் நாம் வீடு திரும்பக் காத்திருப்பதை அது போல் மனம் ஏற்றால், இந்த நகரின் பாதுகாப்பைக் காப்பாற்றிய விருதை நமக்குச் சின்னமாக - விலங்கை - அளித்து மாலைபோடப்போவது தெரியும்.


  3. உலகை, தன் மூலம் அறிந்து, அனுபவிப்பது மனித சுபாவம்.
    உலகமே தன்னால் மட்டும் நடப்பதாக நினைப்பவருண்டு, பேசுபவருண்டு, நடிப்பவருண்டு. பிரம்மம் எந்த ஜீவனையும் தன் பாணியில் புரிந்து கொள்ளும், தன் சக்தியால் ஆளும், தன் ஆனந்தத்தால் அனுபவிக்கும், இது முடிவான தத்துவம்.

    RTO ஆபீஸில் நமக்கு லைசென்ஸ் பெற்று வந்தால், நாம் லைசென்ஸ் பெறும் ஆபீஸ் இதுஎன அறிகிறோம். பாங்க் கடன் கொடுத்தால், பாங்க் கடன் தருமிடம் எனப் புரிகிறது. எனக்குக் கடன் கொடுக்காவிட்டால், எவருக்குமே கடன் தாராவிட்டால் பாங்க் இல்லை. அதனால் என்னால்தான் பாங்க் இருக்கிறது. என்னால்தான் RTO ஆபீஸ் இருக்கிறது என்று பேசுபவருண்டு.

    பிரம்மம் தன் பாணியில் நம்மை அறிவதை, மனிதன் சுயநலமாக மாற்றி இதுபோல் பேசுகிறான். மனிதன் பேசுவது பிரம்ம பாஷை.

    பிரம்மம் நம்மை அப்படிப் புரிந்துகொள்வதால், ஆட்சி செய்வதால், அனுபவிப்பதால் அது மாறுவதில்லை. பிரம்மத்தின் அனந்தத்தில் இந்த அனுபவம் கரைகிறது.

    நாம் பெறும் லைசென்ஸ், கடன் நம்மை மாற்றுகிறது. அதுவே வித்தியாசம். கடன் பெறுவதால் நம் நிலை மாறாவிட்டால், லைசென்ஸ் பெறுவதால் நம் நிலை மாறாவிட்டால், நாம் பிரம்மமாவோம்.

    நட்பும், உறவும் நம்மை மாற்றுகின்றன.

    நட்பு, நட்பாக இருந்து, அதனால் நம் மனம் பாதிக்கப்படவில்லையெனில்; உறவு, சிறப்பான உறவாக இருந்து, உறவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் என்றும் போலிருந்தால், சித்திரத்திலலர்ந்த செந்தாமரையாக முகமிருந்தால், நாம் மனத்தால் பிரம்மமாகிவிட்டோம் எனப் பொருள்.

    ஒருவரை ஜெயிப்பதால் உயராமல், அவரிடம் தோற்பதால் குறையாமல் இருப்பது பிரம்மத்தின் நிலை.

    அந்த பிரம்மம் வாழ்வில் மலரும்பொழுது பிரம்மம் முழுமை பெறுகிறது. மரம் மலர்வதால் ஆயிரம் விதையுண்டாகி ஆயிரம் மரம் முளைக்க முடியும். இது மரம் உடலால் மலர்வது.

    மகாத்மா காந்திஜீ இந்த நாட்டில் தூசியான மனிதனை சுதந்திர வீரன் ஆக்கினார் (out of dust he made us into men). அது உயிரால் மலர்வது.

    ஒரு சீனுவாச இராமானுஜம் 1000 பேரை அவர்போல மாற்றுவது மனத்தால் மலர்வது.

    பகவான் ஸ்ரீ அரவிந்தர் நம் ஆன்மாவில் மலர்ந்தால் பக்தன் ஸ்ரீ அரவிந்தராவான்.

    அது ஆயிரம் பேரிலும் நடப்பது பிரம்மத்தின் முழுமை மனிதனில் மலர்வது.

    அது பூரணபிரம்மம்.

    பூரணம் நம்மில் பூரித்தெழுவது நாம் பூரணம் பெறுவத.

    அதுவே வளரும் ஆன்மா, சைத்தியப்புருஷன்.

    மனிதன் எந்தத் தவற்றைச் செய்தாலும், பாணி பிரம்மத்துடையது.

    அதனால் உலகில் தீமையில்லை.


  4. உயிருக்குயிரானவரை நினைத்தால் உள்ளம் புளகாங்கிதமடைவது போல் உயிரை எடுப்பவரை நினைக்கும்பொழுது உள்ளம் புளகாங்கிதமடைய வேண்டும்.
    • இது எப்படி நடக்கும் என்பது கேள்வி.
    • ஆதாயத்திற்காக இதைப் பலரும் செய்கின்றனர். அதை அன்புக்காகச் செய்வதே இம்முறை.
    • வேலையும் போய், மானமும் போய், வருமானமும் போய், மனம் ஒடிந்து விரக்தியின் எல்லைக்கு அனுப்பியவரை மீண்டும் போய் சேர்ந்து கொண்டது ஓர் அனுபவம். இதில் மேலும் விசேஷம் என்னவென்றால் பிரியம் முன்பைவிட இப்பொழுது அதிகமாக இருக்கிறது.
    • ஆதாயம் தேடும்பொழுது வெட்கம், மானம், சொரணையிருக்காது.
    • ஆண்டவனை நாடும்பொழுதும் அவையிருக்கா.
    • பழைய வெறுப்பெல்லாம் நாளாவட்டத்தில் புதிய பிரியமாக மாறுவது அனுபவம்.
    • வெறுப்பானவரிடம் உள்ள ஒரு நல்ல குணத்தை முழுவதும் பாராட்டி புனிதமாக மனம் உணர்ந்தால், அது வளரும்பொழுது படிப்படியாக நிலை மாறும்.
    • பழைய வெறுப்பு நினைவுக்கே வாராது. புதிய மனம் நறுமணமாக இருக்கும்.
    • இம்மாற்றத்தை ஆதாயத்திற்காகச் செய்யாமல் ஆண்டவனை அனுபவிக்கச் செய்யலாம்.
      அதன் தத்துவத்தைப் படிக்கலாம்.
      படித்ததை, நன்றாகப் புரிய முயலவேண்டும்.
      புரிந்ததை மனம் ஏற்கவேண்டும்.
      ஏற்றது இனிக்கவேண்டும்.
      இனித்தது தன்னை இழந்து உடலை எட்டிப் புல்லரிப்பது முடிவு.
    • அருணகிரிநாதர், விப்ர நாராயணர் இதுபோன்ற மாற்றம் பெற்றனர்.
    • நமக்கும் இதுபோன்ற அனுபவம் இல்லாமலிருக்காது.
    • அதை எடுத்து யோசனை செய்தால், யோசனை உணர்ச்சியாகும்.
    • எதிரியுடன் சேர்ந்தால் எப்பொழுதும் ஆபத்து.
      ஆபத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
      மனம் மாற, சம்மதிப்பது முக்கியம்.
      சம்மதித்தால், பிறகு மாறுவது கடினமில்லை.
      மாறக்கூடாது என்ற முடிவுள்ளவருக்கு இது பயன்படாது.
    • பிரான்சில் மனைவியுடனும், மனைவியின் காதலனுடனும் ஒரே வீட்டில் இருப்பார்கள்.
      அப்படிப்பட்ட வீட்டிற்கு பிரெஞ்சு மொழியில் சொல் உண்டு.
      அதேபோல் கணவனுடனும், அவன் காதலியுடனும் வாழ்கிறார்கள்.
      அதிகபட்ச சொரணையுள்ள இடத்தில் மனிதன் மாறியதற்கு இது அடையாளம்.
      அரசியலில் இந்த அனுபவம் உண்டு.
      இது ஆண்டவனுக்குரிய மனநிலை.

  5. The sunlit path is always open to us, எந்த நேரமும் முழுச்சந்தோஷம் உண்டு.
    சிறுகுழந்தையின் கள்ளமற்ற உள்ளம் மலர்ந்த புன்னகையுடையது.
    வேண்டியவர் விஷயத்தில் நாம் இனிமையாக இருக்கிறோம்.
    பிறர் கோணத்தில் நாம் அடுத்தவரைக் கண்டால் அனைவரும் வேண்டியவரே.
    அன்னைமூலமாகக் கண்டால் அனைவரும் இதமானவரே.
    நம்மை விட்டகன்றால், வேண்டாதவர் இருக்கமாட்டார்.
    நிகழ்ச்சிகள் இருண்டும், பொருள்கள் தடையாகவுமுள்ளன.
    நிகழ்ச்சியின் ஒளியைத் தொட்டு, அதன்மூலம் உலகை நோக்கினால் உலகம் இருளாகத் தோன்றாது; ஒளிமயமாக இருக்கும்.
    ஜடமான பொருளின் ஒளி, உலகை விஸ்வரூப தரிசனமாகக் காட்டும்.
    மடையன் எப்படி ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்கிறான்என்பது, நமக்கு மடையனின் ஒளியை எட்டுவதாகும்.
    திருடனின் நோக்கம் திருவுருமாற்றத்திற்குரிய நோக்கம்.
    மடையனிலும், திருடனிலும், விபசாரியிலும் அன்னையின் நோக்கம் பரிணாம இலட்சியம்.
    எதிரி நம் வாழ்வை சிறப்பாக்கும் கருவிஎன்று உணர்ந்தால், நமக்கு எதிரியில்லை.
    சிறுகுழந்தைக்கு எதிரியில்லை.
    மனம் எந்த வயதிலும் சிறுகுழந்தையாக இருக்க முடியும்.
    அன்னையின் இலட்சியம் புரிந்தால், அனைவர் முகமும் நம்மை நோக்கி மலரும்.
    சிருஷ்டியைப் பரிணாமமாக்குவது அன்னை இலட்சியம்.
    ஆயிரம் ஆண்டை ½ நிமிஷமாக்குவது இறைவன் வரும் தருணம்.

    அன்றாட வாழ்வில் 7 அஞ்ஞானத்தைக் கைவிட முயன்றால் sunlit path ஒளிமயமான பாதை தெரியும்.
    கெட்டது போய், நல்லது வந்து, நல்லது போய் வாழ்வு எழுந்து, வாழ்வு தெய்வீக வாழ்வாவது ஒளிமயமான பாதை.
    எந்த நேரமும் ஓர் அடி அப்பாதையை நோக்கி எடுத்து வைக்க முடியும்.
    Sunlit path அப்பாதை நெடியது. நமக்குரிய இடத்தில் நாம் சேரலாம்.
    Non-reaction, no initiation எரிச்சல் படாமல், எதுவும் செய்ய முயலாமல் இருப்பது அவ்வழி.

  6. ஆபத்து - அரிய வாய்ப்பு.
    அன்பர்கள் வாழ்வில் ஆபத்தின் சுவடு தானேஎழுந்ததாக 50 ஆண்டில் நான் கண்டதில்லை. அது அடிக்கடி வருவதைப் பிறர் வாழ்விலும், என் சொந்த அனுபவத்திலும் நான் அதிகமாகக் கண்டுள்ளேன்.
    அரிய வாய்ப்புகள் வாராதவரேயில்லை; பெற்றவர் எவரும் இல்லை.

    அரிய வாய்ப்புகள், பெரிய வாய்ப்புகள், நல்ல வாய்ப்புகள், இனிய வாய்ப்புகளை அன்பர்கள் அறிவதில்லை; பெறுவதில்லை; தெரிந்து கொள்வதில்லை. மிகச்சிறிய வாய்ப்புகளையே அன்பர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுவே என் அனுபவம். ஆபத்தின் சுவடுகள், ஆபத்தின் சூழல், சிறிய விபத்து, பெரியவை வந்ததேயில்லை. ஒரே ஒரு முறையும் அவை அன்பர்கள் வாழ்விலோ, என் வாழ்விலோ வந்ததில்லை. ஏன் அவை வருகின்றன?

    அவை வருமுன் பல நாட்களுக்குமுன் எழும் அறிகுறிகளை நாம் பொருட்படுத்துவதில்லை. ஏன் அவ்வறிகுறிகள் எழுகின்றன? காரணம் இரண்டு வகை. உயர்ந்த வாழ்வுக்கு எதிரான குணம், செயல், ஹற்ற்ண்ற்ன்க்ங், நோக்கம், initiative, நாமே விரும்பிச் செய்வது போன்றவற்றை நம்மால் விடமுடிவதில்லை. நாம் அவற்றை அறவே விட்டபின் அதுபோன்ற உறவு, நட்பை விடமுடிவதில்லை. இந்த நிலையிலும் முன்கூட்டி எழும் எச்சரிக்கைகளைக் கவனித்தால், அவற்றை விலக்கலாம். ஏதோ ஒரு நேரம் விழித்துக்கொள்பவருண்டு. அவர் செய்யக்கூடியது என்ன?

    அப்படி விழித்த நேரம் வேண்டாத குணத்தை, வேண்டாத உறவை மனத்திருந்து எடுத்துவிட்டு அன்னையை அழைத்தால், அழைக்க முடியவில்லை எனத் தெரியும். வாயால் சொல்வதை - அவற்றை விடுவதை - மனத்தால் ஏற்காமல் அழைத்தால் அழைப்பு எழாது. மனம் தெளிவாக எரிச்சல், அல்பமான செயல்கள், அதிகாரம் செய்வது போன்றவற்றை விட முடிவுசெய்தது உண்மையானால் அழைக்க முடியும். அழைப்பு ணீ மணியிலும் பலன் தரும், 2 நாளிலும் தரும். மனம் அவற்றிருந்து விலகிய தன் உண்மையைப்பொருத்து நேரம் தேவைப்படும்.

    பலனில்லை என்பதேயில்லை.
    நேரம் நம்மைப்பொருத்தது.

    மேற்சொன்ன சந்தர்ப்பங்களை "எங்கள் குடும்பத்தில்" ஒரு 50 அல்லது 100 முறை வீட்டு நிலைமையில் பொருத்தி விளக்கியுள்ளேன். இரண்டாம் பாகத்தில் அப்படிப்பட்ட ஒவ்வொரு வரியையும் எடுத்து 1 பக்கத்தில் பலவாறாகவும் விளக்கியுள்ளேன்.

    • ஆபத்து நமக்கில்லை.
    • தொடர்ந்த அரிய வாய்ப்பு நம் பிறப்புரிமை.
    • தீராத பிரச்சினையில்லை, தீர்க்காதவையுண்டு.
    • வாராத வாய்ப்பில்லை, பெறாதவை ஏராளம்.
    • அன்னையை அறிவது பாக்கியம், பெறுவது பேரருள்.

  7. முடியாது என உலகம் முடிவு செய்தது முடியும் எனக் கூறும் முறை.
    உலகம் நினைத்துப் பார்க்காததைச் சாதிக்கும் யோகம் இது.

    சத்தியஜீவன் பிறப்பான்; உலகில் தீமையழியும்; காண்பவையெல்லாம் அற்புதமாக இருக்கும் என நினைத்தவரில்லை, பேசியவரில்லை.

    பூலோகம் சுவர்க்கமாக வேண்டும் என்றவர், மேலே போய் சுவர்க்கத்தை அனைவரும் அனுபவிக்க நினைத்தனர்; நாம் வாழும் இவ்வுலகமே சுவர்க்க லோகமாகும் எனக் கூறவில்லை. அவர்கள் தீமையற்ற உலகை நாம் நாடவேண்டும் என நினைத்தனர். பகவான் தீமை அற்புதமாக மாறும் என்கிறார்.

    முடியாதது முடியும் எனில் அதைச் சாதிக்க முடியும் என்பவற்றைக் கைவிட்டு முடியாததை முடிக்க முன்வரவேண்டும்.

    சாவித்திரி எமனை வென்றாள். வென்றாள் எனில் எமனை அழித்தாள்.

    நாம் நம் மனத்துள் உள்ள இருளை அழிக்கவேண்டும் - அதுவே முறை.

    மோட்சம் தவசி பெறுவது.

    யோகம் உலகம் முழுவதும் திருவுருமாறச் செய்வது.

    யோக இலட்சியம் அவ்வளவு பெரியது என்பதால் யோக சக்தி வாழ்வில் பலித்தால் இதுவரை உலகம் உச்சக்கட்டமாகச் சாதித்தது நமக்குப் பலிக்கும்.

    • பலனைக் கருதாது, முறையைக் கருதுவது முறை.
    • முறையைக் கருதாமல் மூலத்தைக் கருதுவது சிறந்தது.
    • மூலத்தையும் மறந்து அன்னை என் சரணாகதியை ஏற்க வேண்டும் என ஜீவன் விழைந்து, பூரித்து, மலர்ந்து சிறப்பது.
    • அன்னை முடிவு, அவரையடைய சரணாகதியே முடிவு;
      எனக்கென்று எதுவுமில்லை. வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை.
    • நாம் தேடுவது ஆத்மா இல்லை. உடலும், வாழ்விலும், மனத்திலும் தோன்றி, மலர்ந்து, பூக்கும் ஆத்மா - சைத்தியப்புருஷன்.
    • நாம் நம்மை மறந்த பிரம்மம்என நினைவுகூர்ந்து, மறந்ததை மீண்டும் அடைவது பரிணாமம்.
    • பிரம்மத்திலெழுந்த சிருஷ்டி பரிணாமம் மூலம் பிரம்மத்தையடைய வேண்டும்.
    • பிரம்மம் அது தேடும் ஆனந்தத்தை நம் வாழ்வில் நாம் காண்பது நம் யோகவாழ்வாகும்.
    • யோகமே வாழ்வு; வாழ்வே யோகம்.
      இம்முறை யோகவாழ்க்கையாகும்.

முற்றும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
எந்தக் கரணமும் தன்னைத் தானே அடக்க முடியாது.  உயர்ந்த கரணம் எளிதில் அதை அடக்கும். சுயக்கட்டுப்பாடு தன்னையறியும் அளவைப் பொருத்தது.
பெரியதற்கு சிறியது பணியும்.

 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
நாம் சிலரைச் சோம்பேறிகள் எனவும், மற்றவரைச் சுறுசுறுப்பு உள்ளவர் எனவும் அறிவோம். அவரவர்கள் கண்ணோட்டத்தில் மனிதர்கள் செயல்களைக் கவனமாகப் பார்த்தால், தங்களுக்கு முக்கியமானவற்றில், ஆர்வம் உள்ள விஷயத்தில் முழுச் சோம்பேறிகள் உட்பட அனைவரும் தீவிரமாகவும், கவனமாகவும், சுறுசுறுப்பாகவும் எதையும் தவறாமல் நாடுகிறார்கள் என்பது தெரியும். பெருந்தலைவரும், உபயோகமில்லாதவனும் இந்தக் கண்ணோட்டத்தில் சமம்
என்று தெரியும். இதை அறிவது விவேகம். இதுவே பிரம்மஞானம்.
சுறுசுறுப்பான சோம்பேறி.
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
இறைவனின் செயலை ஸ்பர்சிக்கும்
சைத்திய புருஷனின் உணர்வு, நன்றியாகும்.

 



book | by Dr. Radut