Skip to Content

1. Life Response

 

வில்லியம் தாக்கரே பிரபல ஆங்கில ஆசிரியர். சார்லோட் பிராண்டே என்பவரும் அவர்தம் இருசகோதரிகளும் பிரபலமான கதைகளை எழுதியவர்கள். இவர்களுள் சார்லோட், தாக்கரேயை குருவாக ஏற்றவர். அவர் பல கதைகள் எழுதினார். அதில் சிறப்பான கதையை தாக்கரேவுக்கு சமர்ப்பணம் செய்ய முடிவு செய்தார். அக்கதை,
ஜேன் என்ற அனாதைப்பெண் கொடுமையான பள்ளியில் படிப்பை முடித்து ஒரு ஜமீன்தார் வீட்டில் Governess வீட்டோடு ஆசிரியை ஆனாள். ஜமீன்தாருக்கு மனைவியில்லை. ஜேனுடன் பழகினார். மற்றவர்கள் ஜேனை எச்சரித்தனர். நடக்காத விஷயத்தில் ஈடுபடாதே என்றனர். ஜமீன்தார் உள்ளன்புடன் ஜேனை ஏற்றார். திருமணம் நிச்சயமாகி, சர்ச்க்குப் போனார்கள். திருமணம் பாதியில் நடந்து கொண்டிருக்கும் பொழுது வக்கீல் திருமணத்தைத் தடை செய்தார். ஜமீன்தாரின் முதல் மனைவி பைத்தியமாக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதால் அடுத்த திருமணத்திற்கு சட்டம் தடை செய்யும்.
இக்கதை அளவு கடந்து பிரபலமாயிற்று. சார்லோட் இக்கதையை தாக்கரேவுக்கு சமர்ப்பணம் செய்து முதல் பிரதி அனுப்பினார். அவரும் வாழ்த்தினார்.
 தாக்கரேயின் மனைவி பைத்தியமாகி, அறையில் அடைக்கப்பட்டிருப்பது சார்லோட்டிற்குத் தெரியாது. தாக்கரேயின் நிலை Life Response ஆக சார்லோட்டின் கதையைப் பெற்றது!
 
*****

 



book | by Dr. Radut