Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                                    லைப் டிவைன்                                     கர்மயோகி

XII The Divine Maya

Page No.112, Para No.1

13. தெய்வீக மாயை

We are in reality Existence

சத் என்பது நாம்.

Existence acts

சத் செயல்படுகிறது.

It creates by its act.

அதன் செயல் சிருஷ்டி.

It creates by a power.

சக்தியால் அது சிருஷ்டிக்கிறது.

The power is from pure delight.

சக்தி ஆனந்தத்தில் எழுகிறது.

It is the delight of the conscious being.

அவ்வானந்தம் சத் புருஷனுடையது.

That b eing is our self.

சத்புருஷனே நமது ஜீவன்.

It is the self of all our moods and modes.

நம் குணங்கள், செயல்கள் அதனின்று எழுகின்றன.

It is the cause, object and goal of our doing.

அதுவே காரணம், காரியம், இலக்கு.

Our doing is our becoming and creating.

நம் செயல் என்பது நம் சிருஷ்டி, நமது ஜீவன் பிரகிருதியாவது.

The poet, the artist and the musician also create.

கவி, ஓவியன், கருமானும் சிருஷ்டிக்கிறான்.

They create out of their inner potentiality.

அவர்களது சிருஷ்டி அவருள்ளிருந்து எழுகிறது.

It is a development of that potentiality.

சிருஷ்டி என்பது வித்து முளைப்பது.

The potentiality lies in the unmanifested self.

சிருஷ்டியைக் கடந்த பிரம்மத்தில் அவ்வித்துள்ளது.

It is developed into a form of manifestation.

வித்து உருவம் பெற்ற சிருஷ்டியாகிறது.

The thinker, statesman, mechanist also do so.

அரசியல்வாதி, சிந்தனையாளர், கருமான் ஆகியோரும் அதையே செய்கின்றனர்.

Something lies hidden in themselves.

இவற்றுள் புதைந்துள்ளது ஒன்றுண்டு.

They bring it out into a shape of things.

புதைந்துள்ளதை புனைவது அவர் கடமை.

It is truly themselves.

அதுவே நாம்.

It is still themselves cast into form.

சிருஷ்டி உருவம் பெற்ற நாம் என்பது கருத்து.

It is so with the world.

உலகமும் அதுவே.

It is equally so with the Eternal.

பிரம்மமும் அதுவே.

Creation is self-manifestation.

சிருஷ்டி என்பது பிரம்ம வெளிப்பாடு.

All becoming too is the same.

பிரகிருதி என்பதும் அதுவே.

The seed evolves.

விதை முளைக்கிறது

What evolves is already there.

முளை என்பது ஏற்கனவே உள்ளேயிருப்பது.

It is pre-existent in the being.

அது ஜீவனில் ஏற்கனவே உள்ளது.

It is pre-destined in its will to become.

அதன் சிருஷ்டித்திறனில் அது விதிக்கப்பட்டது.

It is pre-arranged in the delight of becoming.

இயற்கையின் ஆனந்தத்திலும் அது ஏற்கனவேயுள்ளது.

There is the original plasm.

ஆதியில் அது உள்ளது.

It holds it in its force of being the resultant organism.

முடிவு ஆதியிலுள்ளது.

It is always a secret.

அது இரகஸ்யம்.

It is self-knowing.

அது தன்னையறியும்

It is burdened with the secret.

அது இரகஸ்யத்தைத் தாங்கி வருகிறது.

Its impulse is irrestible.

அதன் உத்வேகம் தடுக்க முடியாதது.

It labours to manifest the form of itself.

தன்னுருவத்தை வெளிப்படுத்த அது பாடுபடுகிறது.

It is charged with that form.

ரூபம் அதனுள் பொதிந்துள்ளது.

There is a distinction between the man and the force.

மனிதனுக்கும், அவனுடைய சக்திக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.

The force works in himself.

சக்தி அவனில் செயல்படுகிறது.

He works in a material.

அவன் செயல் அவன் அரங்கம்.

It is important to know the distinction between himself, the force and the material.

தனக்கும், தம் சக்திக்கும், தன் அரங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிய வேண்டும்.

To do so he must be an individual.

அதை அறிய அவன் ஒரு ஜீவனாக இருப்பது அவசியம்.

It is he who creates and develops out of himself.

அந்த ஜீவன் சிருஷ்டிப்பான். தன்னுள்ளிருந்து சிருஷ்டிப்பான்.

There is a further reality.

இதைக் கடந்த உண்மையுண்டு.

It is the force in himself

அதாவது அவனே அச்சக்தி.

His consciousness is individualised.

அவனது ஜீவியம் அவனை ஜீவனாக்கியது.

It instrumentalises himself.

தன்னைத் தானே சிருஷ்டியின் கருவியாக்கிக் கொள்கிறான்.

That consciousness is himself.

ஜீவியமும் அவனே.

That instrumentalisation too is himself.

கருவியாக்குவதும் அவனே.

Form is the resultant.

ரூபம் முடிவு.

That too is himself.

அதுவும் அவனே.

Tha aim is self-play.

லீலையே இலட்சியம்.

The means is self-formation.

சொரூபம் லீலையின் கருவி.

There is only one existence.

சத் என்பது ஒன்றே.

Force also is one.

சக்தி என்பதும் ஒன்றே.

The delight of being too is one.

ஆனந்தமும் ஒன்றே.

It concentrates at various points.

பல இடங்களில் அது செயல்படுகிறது.

Each point appears to be a separate individual.

ஒவ்வொரு இடமும் தனித்தனியாகத் தெரிகின்றது.

Each proclaims, "This is I."

ஒவ்வொன்றும் "நானே அது" என அறிவிக்கின்றது.

Contd...

தொடரும்..

*******

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கணவனைத் தொழுது எழுபவள் பெய்யென பெய்யும் மழை.அதே சக்தியை அன்னை தம் பக்தர்கள் அனைவருக்கும் அளிக்கின்றார். பக்தன் மழை வேண்டுமென்றால், அது பெய்யும்.

பக்தன் பெற்றுள்ள பத்தினித் தெய்வம்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சத்திய ஜீவிய சக்தி ஒரே ஒரு முறையும் செய்ததைத் திரும்பச் செய்யாது. வெற்றியாகப் பயன்படுத்திய முறைகள், உபாயங்கள், அடுத்த முறை பயனில்லாமருப்பதை நாம் பார்க்கலாம். மறுமுறையும் பயன்பட்டால் அது சத்திய ஜீவிய சக்தியாகாது.

ஒவ்வொரு தரமும் முறை மாறும்.


 *******


 



book | by Dr. Radut