Skip to Content

07.சக்திவாய்ந்த மனம்

சக்திவாய்ந்த மனம்

வெளிநாட்டிலுள்ள அன்பர் அங்கு இந்தியர் சங்க உறுப்பினர். சைனாக்காரர்கள், மெக்ஸிகோ நாட்டவர் அங்கு ஓர் ஊரில் ஒரு சங்கம் வைத்திருப்பார்கள். இந்தியர் மட்டும் தமிழர், பெங்காலி, பஞ்சாபி எனப் பல சங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும். அந்நாட்டவர் நம்மை இது விஷயமாகக் கேலிசெய்வர்.

அன்பர் தமக்குத் தம் வீட்டு நிலையையும், இந்தச் சங்கங்களின் நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்து தாம் தம் மனத்தால் மாறி வீட்டுச் சுமுகத்தை நிலைநிறுத்த முடிவு செய்தார். மனம் இடங்கொடுக்கவில்லை. சமாளித்துக்கொண்டு செய்துவிட்டார். சுதந்திர தினம் வரப் போவதால் செய்யும் ஏற்பாடுகளில் இத்தனை ஆண்டு பிரிந்திருந்த சங்கங்கள் ஒன்று கூடி ஒரே சங்கமாயின.

தம் மனமாற்றம் வெளியில் பிரதிபலிப்பதைக் கண்டார். அத்துடன் வீட்டுச் சுமுகத்திலிருந்த தீவிரம் போய்விட்டது. மறுநாள் பேப்பரில், "நாங்கள் ஒன்று சேர்வதாக நினைத்தோம். நடந்தது, நாங்கள் மற்றவர்கட்கு உட்படுவதாக இருப்பதால் மீண்டும் பிரிகிறோம்'' என்றிருந்தது. தம் தவற்றை உணர்ந்து அன்பர் மனத்துடன் போராடி வென்றார். சுமுகம் வீட்டில் நிலைத்தது!அடுத்த நாள் பேப்பரில் பிரிந்த சங்கங்கள் பேசுகின்றன:

"இத்தனை ஆண்டுகள் கழித்துச் சேர்ந்து, மீண்டும் பிரிவது அர்த்தமற்றது. இனி பிரிய முடியாமல் சேர வேண்டும் எனப் பிரதிக்ஞை பூண்டோம்''

என அறிக்கையும், இதற்குரிய கேகார்ட்டூன்களும் பிரசுரமாயின.

மனம் மாறினால் உலகம் மாறும்.



book | by Dr. Radut