Skip to Content

08.மனிதனுக்காக வாழும் சமூகம்

மனிதனுக்காக வாழும் சமூகம்

ஒருவன் திவாலாகிவிட்டால் அடுத்தவர் அனுதாபம் தெரிவிக்கலாம். அவனைத் திவாலிலிருந்து மீட்க முடியாது. கை தட்டிச் சிரிப்பவர்கள் உண்டு. 200 ஆண்டுகட்கு முன் இன்ஷுரன்ஸ் வந்தது. கப்பலில் முதலில் இன்ஷுரன்ஸ் ஆரம்பித்தது. ஆயுள் இன்ஷுரன்ஸில் இலட்ச ரூபாய் பாலிஸிக்கு அநேகமாக நாம் அதற்குச் சமமான தொகையைக் கட்டுவோம். தீ விபத்துக்கு அப்படியில்லை. 1 கோடி ரூபாய் சரக்கை தீ விபத்து இன்ஷுர் ஓர் ஆண்டிற்குச் செய்ய ரூ.50,000 பிரீமியம் செலுத்துவோம். ½% பிரீமியம் கட்டினால் 100% நஷ்ட ஈடு வரும்.

ஒருவனுக்கு வரும் நஷ்டத்தை முழுவதும் சமூகம் ஈடு செய்ய முன்வரும் ஏற்பாடு இன்ஷுரன்ஸ்.

நான் அனைவருள்ளும் இருக்கிறேன். என்னுள் எல்லோரும் இருக்கிறார்கள் என்ற ஆன்மீகத் தத்துவத்தை இன்ஷுரன்ஸ் நடைமுறையில் செய்கிறது. இன்ஷுரன்ஸ் ஆன்மீக சக்திவாய்ந்த சமூகக் கருவி. 100 ஆண்டிற்குமுன் நகரத்திற்குப் போவதைத் தடுக்கவும், இங்கிலாந்தில் இன்ஷுரன்ஸ் இருந்தது. நம் நாட்டில் பயிருக்கும் இன்ஷுரன்ஸ் பரவலாக வரவில்லை. பயிரை இன்ஷுரன்ஸ் செய்தால் இன்ஷுரன்ஸ் கம்பனியின் நிபந்தனைகளை விவசாயி கடைப்பிடிக்க வேண்டும். அதைச் செய்தால், நம் நாட்டு விவசாயம் அளவுகடந்து முன்னேறும்.

 

*******

 



book | by Dr. Radut