Skip to Content

14.M.E.அட்மிஷன்

M.E.அட்மிஷன்

தம்பி B.E. முடித்திருக்கிறான். M.E. சேர ஆசை. ரிஸர்வேஷன், சிபாரிசு, பணம், இவற்றைத்தாண்டி முற்போக்கு ஜாதி மாணவனுக்கு எப்படி இடம் கிடைக்கும்என்ற வேதனை பையனுக்கு. உடன்பிறந்த சகோதரிக்கு அன்னைமீது அசைக்கமுடியாத நம்பிக்கை. தமக்கையின் நம்பிக்கை தமக்கையுடன் முடிகிறது. தம்பியை எட்டித் தொட்டு, அவனது விரக்தியை எடுக்க உதவவில்லை.

"தம்பியின் விரக்தியில்லாவிட்டால் அன்னை அருள் எளிதாகச் செயல்படும். அவன் முகத்தைத் தூக்கிவைத்திருக்கிறான். இதையும் தாண்டி அன்னை செயல்படுவாரா எனக் கேட்பது நம்பிக்கையில்லை என்றாகும்'',

எனக் கருதி தம்பி இன்டர்வியூவுக்குப் போகும் நேரம் முழுநம்பிக்கையுடன் தமக்கை அன்னை படத்தின்முன் நின்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவுடன், அன்னையின் மலர்ந்த முகம் படத்திலிருந்து எழுந்துவந்து அவர் தோளைப் பற்றியது. உடல் சிலிர்த்தது. உடலை எல்லாம் அன்னை அன்புடன் அதேபோல் பிடிப்பது தெரிந்து தன்னைமறந்து, தன் பிரார்த்தனையையும் மறந்தார்.

போன் மணியடித்தது. தம்பிக்கு அண்ணா யூனிவர்சிட்டியில் M.Eஇல் இடம் கிடைத்த செய்தி போன்மூலம் வந்தது.

"நான் எனக்காக, என் தாயாருக்காக, தம்பிக்காக மட்டும் பிரார்த்தனை செய்கிறேன். இது சுயநலம். இனி என் சுயநலம் கரையவேண்டி நான் பிரார்த்திக்கப் போகிறேன்''என்ற முடிவுடன் தமக்கை எழுந்தார்.

*******



book | by Dr. Radut