Skip to Content

04.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                          (சென்ற இதழின்தொடர்ச்சி....)                                 

                                                                                         கர்மயோகி

857) இன்று மனிதன் இறைவனுக்கு எதிர் நிலையிலிருக்கிறான். கடவுளை நோக்கி அவன் செல்வது ஆர்வம் எனப்படும்.

இறைவனை இதயம் நாடுவது பக்தி.

. மனிதச் செயல் திருவுள்ளத்திற்கு எதிரானது.

. திருவுள்ளத்தை ஏற்றால் பாரதியார் போல் நடக்கவேண்டும்.

. கழுதைக்குட்டியின் அழகுக்கு முத்தமிடுவதும், கட்டியுள்ள வேட்டியை பிச்சைக்காரனுக்குக் கொடுப்பதும் திருவுள்ளமாகும்.

. திருவுள்ளம் உலகில் செயல்பட்டால், பிட்டுக்கு மண் சுமக்க வந்தாலும், இறைவன் தூங்குவான், வேலை செய்யமாட்டான்.

. இறைவன் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டான்.

. நிலத்தைப் பயிரிடமாட்டான்.

. அவனுக்குக் கடமையில்லை; நாம் அதை ஏற்கமுடியாது.

. இறைவனுடைய போக்கு, மனிதனுடைய கடமைக்கு எதிரானது.

. மனிதன் இறைவனுக்கு எதிராக இன்று செயல்படுகிறான்.

. மனிதன் இறைவன் போக்கை ஏற்றால் வாழ்க்கை ஸ்தம்பித்துவிடும்.

. இறைவனுடைய போக்கில், மனிதனுடைய கடமைகளை ஆற்றுவது, பிள்ளையைக் கறி சமைப்பது போலவும், கத்தியால் குத்தியவனை காப்பாற்ற முனைவதும், மனைவியைப் பரதேசிக்கு அளிப்பது போலவும் ஆகும்.

. பௌத்தனும், சமணனும் மாமிசம் சாப்பிடுவதுபோலிருக்கும்.

. இறைவன் காலத்திற்கு ஒவ்வாதவன்.

. காலத்தைக் கடந்தால் மனிதனில்லை.

. காலத்துள் கடந்தவன் வந்து செயல்படும் திருவுள்ளம் இன்றில்லை.

. அதை அற்புதம், பூலோகச் சொர்க்கம், பிரம்ம ஜனனம் என்கிறார் அன்னை.

. அதிவேகமாகச் செயல்படும் அனாதிகாலத்துப் பொறுமையது.

. அறிவுக்கேற்ற நம்பிக்கை எனப்படும்.

. அன்பால் எழும் அதிகாரம் என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கம்.

. பக்தி ஞானவிகாசமாகும் கட்டம் அது.

. விபசாரியின் கற்பைப் போற்றும் உலகம் அது.

. கொடுமையின் கருணையை அறியும் இதயம் அத்திருவுள்ளம்.

*******

858) தவறு, குறை, தீமை என்பவை பரிணாமத்தின் பல நிலைகள் என்கிறார். நீயே அதுவானால் அல்லது அதன் பகுதியானால் அது வேதனையாகிறது. வெளியிலிருந்து பார்த்தால் அது மாறுதலில் ஒரு நிலை எனத் தெரிகிறது. நீயே அதுவாயிருந்து ஜீவியம் உயர்ந்தால், அவை அற்புதங்களாக மாறுகின்றன.

ஜீவியம் உயர்ந்தால் தவறு, குறை, தீமை அற்புதங்களாக மாறும்.

.உலகில் எந்த நாட்டிலும், இதுவரை நம் நாட்டிலும் தீமை என்பது என்ன என்று எவரும் கூறவில்லை.

. நம் நாட்டில் தீமையை தீமை என ஏற்கிறார்கள்.

. கிருத்துவர்கள் தீமை நரகத்திற்கும், நன்மை சொர்க்கத்திற்கும் அழைத்துப் போகும் என்கிறார்கள்.

. துஷ்டநிக்ரஹம் என்பது அவதாரங்களின் கடமை என்பது இந்திய மரபு.

. கடவுள் ஏன் தீமையைப் படைத்தார் என்பதற்கு இதுவரை பதிலில்லை.

. சிருஷ்டி எப்படி ஏற்பட்டது என்பதே தெரியாததால் அடுத்த கேள்வி எழாது.

. ஸ்ரீ அரவிந்தம் தீமை படைக்கப்படவில்லை என்கிறது.

. அகந்தையும், மேல்மனமும் தீமையை அறிகின்றன. அடிமனம் தீமையை நன்மையாக அறிகிறது.

. முழுமையான பிரம்மம் பகுதியான மனிதனாகி, அகந்தையில் சிறைப்பட்டு, மீண்டு வரும்பொழுது பகுதிக்கு வலி தெரிகிறது. தீமை அதன் வழிவந்ததே.

. பகுதியான மனிதனுக்கும் வலியில்லை. பகுதி அகந்தைக்கு உட்பட்டால் மீளும்பொழுது வலி ஏற்படுகிறது.

. தீமையில்லை என நாம் எப்படிச் சொல்லமுடியும்? பகுதி மீளும்பொழுது வலி ஏற்படுகிறதல்லவா?

. சிருஷ்டி ஆனந்தலீலை.

. ஆனந்தம் அதிகப்பட அதை இழந்து மீண்டும் பெறவேண்டும்.

. இழக்காமல், உள்ளதை இழக்காமல், உள்ளது பெருகாது.

. பெருக்கத்தின் முதல் நிபந்தனை நஷ்டம்.

. உபரியான ஆனந்தம் எழ பயிற்சி தருவது உள்ளது மறைவது.

. பயிற்சியானால் வலி என்பது உண்டல்லவா?

. பயிற்சியை எதிர்த்தால் வலியுண்டு.

. பயிற்சியை ஏற்றால் வலியில்லை.

. அகந்தையுள் அடங்குவது அவசியம் என்ற ஞானம் வலியை ஆனந்தமாக்கும்.

. வலி மட்டுமன்று, எதையும் நாடும் சுதந்திரம் மனிதனுக்குண்டு என்பதால், மனிதன் வலியை நாடுகிறான்.

. வலிய மனிதன் வலியை நாடாவிட்டால், தீமையைத் தேடாவிட்டால், மனித உலகில் வலியும், தீமையும், தாவரத்திற்கும், விலங்கிற்கும் இல்லை என்பது போலிருக்காது என்பது ஸ்ரீ அரவிந்தம்.

*******

தொடரும்.....

 

ஜீவிய மணி

ஒற்றுமை வேற்றுமையாகத் தெரிவது வாழ்வு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

குழப்பம், சந்தேகம், பூர்த்தியாகாத ஆசை, வன்மம், அறிவுத்தாகம் ஆகியவை மௌனம் நிரந்தரமாவதைத் தடுக்கும். அவற்றை அனுபவித்துத் தீர்த்துவிடவேண்டும். அல்லது மன உறுதியால் விலக்கிக் கரைக்கவேண்டும்.

அனுபவம் தீர்க்கும்; உறுதி விலக்கும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் ஆரம்பத்தை இழக்கவேண்டுமெனில் அது மௌனத்தால் நிரம்பியும், அதன் அமைப்பை இழந்தும் நிற்கவேண்டும். அந்நிலையில் (the force) சக்தி மௌனத்தைச் சந்தித்து அதில் கரைந்துவிடும்.

மௌனம் நிறைந்த மனம் சக்தியில் கரையும்.


 


 


 


 



book | by Dr. Radut