Skip to Content

06.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

                                                        (சென்ற இதழின் தொடர்ச்சி....)                கர்மயோகி
 

XIII.The Divine Maya

Page No.120, Para No.18

13. தெய்வீக மாயை

We work through our mentality.

நாம் மனத்தால் செயல்படுகிறோம்.

It is governed by appearance.

மனம் தோற்றத்தை ஏற்கிறது.

The original power is something beyond.

ஆதிசக்தி அதைக் கடந்தது.

It is behind these appearances.

அது தோற்றத்தின் பின்னாலுள்ளது.

But it is immanent.

அது உலகினுள் மறைந்துள்ளது.

To the Mind, it can only be an interference.

மனம் அதை நேரடியாகக் காணமுடியாது.

Mind can only vaguely feel it.

மனம் அதைத் தெளிவாக உணர முடியாது.

We perceive a law.

ஒரு சட்டம் உள்ளது.

It is a law of cyclic progress.

அந்தச் சட்டம் மீண்டும் மீண்டும் வரும்.

Therefore we infer an ever increasing perfection.

அதனால் அதன் சிறப்பு வளரும் என அறிகிறோம்.

It is somewhere foreknown.

எப்படியோ நாம் அதை அறிவோம்.

It is an approximation,

அது தெளிவற்றது.

Everywhere we see a Law.

எங்கும் இந்தச் சட்டம் தெரிகிறது.

It is founded in Self-being.

அது ஜீவனிலுள்ளது.

It has a rationale of its process.

அது செயல்படுவதற்கு ஒரு சட்டம் உண்டு.

We can penetrate into it.

நாம் அதை ஊடுருவலாம்.

That Law expresses an innate knowledge.

சட்டம் அடிப்படை ஞானத்தை வெளிப்படுத்துகிறது.

It is inherent in existence.

அது சத்தில் உள்ளது.

It expresses itself.

அது தன்னை வெளிப்படுத்தும்.

It is implied in the force that expresses.

வெளிப்படும் சக்தியில் அச்சட்டம் உண்டு.

It is a Law developed by knowledge.

ஞானம் வளர்த்த சட்டம் அது.

The motion is directed.

இச்சலனத்திற்கு ஒரு போக்குண்டு.

It is directed towards a divine goal.

அது இறைவனின் இலட்சியத்தை நோக்கிப் போகும்.

It allows of a progression.

போக்கு வளரக்கூடியது.

Our reason too seeks to emerge out of the drift.

அறிவும் இக்குழப்பத்தைவிட்டு வெளிவர முயல்கிறது.

Reason tries to dominate the drift.

குழப்பத்தை மீற அறிவு முயல்கிறது.

It is a drift of our mentality.

அது நம் மனப்போக்கு.

Reason is only a messenger.

அறிவு கருவியன்று, கருவியின் தூதுவன்.

We perceive it.

நாம் அதைக் காண்கிறோம்.

There is a greater consciousness.

அது உயர்ந்த ஜீவியம்.

Reason represents it.

அறிவு அதன் பிரதிநிதி.

It is its shadow.

அறிவு அதன் நிழல்.

The greater consciousness is beyond reason.

உயர்ந்த ஜீவியம் அறிவைக் கடந்தது.

It has need to reason.

அதற்கு அறிவு தேவையில்லை.

It is all.

அதுவே எல்லாம்.

It knows all that it is.

அது தன்னை முழுவதும் அறியும்.

Reason has a source.

அறிவுக்கு ஆதியுண்டு.

It is identical with the knowledge.

அதுவும் ஞானமும் ஒன்றே.

That knowledge acts as Law in the world.

அந்த ஞானம் உலகின் சட்டம்.

This knowledge is sovereign,

இந்த ஞானம் சுயம்பிரகாசமானது.

It knows what it has been.

தான் எதுவாக இருந்ததென்று அது அறியும்.

It knows what it is and will be.

இப்பொழுது எப்படியிருக்கிறது, இனி எப்படியிருக்கும் எனவும் அறியும்.

It is so, because it cognises itself.

அது தன்னை அறியவல்லது.

That cognition is external and infinite.

சுயஞானம் முடிவற்றது, காலத்தைக் கடந்தது.

Being is infinite consciousness.

ஜீவன் அனந்த ஜீவியம்.

Infinite consciousness is omnipotent force.

அனந்தஜீவியம் எல்லாம்வல்லது.

It creates a harmony of itself.

அது தன்னுள் சுமுகத்தை ஏற்படுத்துகிறது.

That is how it makes the world.

உலகம் அப்படி சிருஷ்டிக்கப்பட்டது.

The world is its object of consciousness.

உலகம் அதன் ஜீவியத்திற்குப் புறம்.

So the world is sizeable by our thought.

எனவே உலகம் அதற்குப் புரியும்.

It is a cosmic existence.

அது பிரபஞ்சம்.

It knows its own truth.

அது தன் சத்தியத்தை அறியும்.

It realises the truth in forms.

அச்சத்தியத்தை ரூபத்தில் காண்கிறது.

Those forms it knows.

அது அந்த ரூபத்தை அறியும்.

Page No.120, Para No.19


 

Our mind is limited.

மனம் சிறியது.

It can react.

எரிச்சல் படக்கூடியது.

So the Mind can only imperfectly grasp the Truth.

சத்தியத்தை மனம் அரைகுறையாகவே அறியவல்லது.

The other consciousness is the higher consciousness.

நாம் கூறும் ஜீவியம் உயர்ந்த ஜீவியம்.

It can become really manifest to us.

நம்மால் அதை உணரமுடியும்.

It lies in the secrecy of mental stillness.

மனம் நிச்சலனமானபொழுது அந்த இரகஸ்யம் வெளிப்படும்.

To reach there we have to go deep into ourselves.

நாம் ஆழ்ந்து உள்ளே சென்றால் அதைக் காணலாம்.

And we must cease to reason.

நாம் சிந்திக்கக்கூடாது.

Reason is a pale, flickering light.

அறிவு பிரகாசமற்ற அலைபாயும் ஒளி.

It can uncertainly conceive of the Reality.

சத்தியத்தை விவரமற்று அறியும்.

Ceasing to Reason we can know it.

சிந்தனை நின்றால், நாம் அதை அறியலாம்.

It can increase in illumination.

அதன் ஜோதி அதிகப்படும்.

Knowledge waits beyond mind.

ஞானம் மனத்தைக் கடந்து காத்திருக்கிறது.

It is beyond intellectual reasoning.

அது பகுத்தறிவின் ஆராய்ச்சியையும் கடந்தது.

Itse self-vision is illimitable.

அதன் சுயதிருஷ்டிக்கு அளவில்லை.

It is luminous.

அது பிரகாசமானது.

Knowledge is seated there.

ஞானம் அங்கு கொலுவீற்றிருக்கிறது.

The end

முற்றும்.

*******

*******


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிரார்த்தனையும், காணிக்கையும் சேர்ந்து சேவையாகிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மேலே போகும்பொழுது சைத்தியப்புருஷன் அன்னையாகும்.

கீழே வரும்பொழுது அன்னை சைத்தியப்புருஷனாகும்.


 


 


 


 


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut