Skip to Content

08.சாவித்ரி

சாவித்ரி

P.56 Suggested a million renderings to the Mind.

மனத்தின் இலட்சம் இலட்சியங்கள்.

. உலகம் அதனால் ஒரு இலட்சியம் பெறும்.

. ஐயத்தில் எழுந்த யூகம்.

. குழப்பமான எண்ணம், தவறாகப் புரிந்த செய்தி.

. பேசுமிடத்தில் தவறும் இலட்சியம்.

. பிரபஞ்சச் சொல்லின் ஒரு துளி.

. பெரிய இரட்டை எழுத்துகளை அர்த்தமற்றதாக்குகிறது.

. உத்தரவின்றி நடுவிலுள்ள சின்னம் மாறியது.

. புதிரான பிரபஞ்சம்.

. முக்காலம் நிகழ்காலமானதுபோல்.

. மீண்டும் எழும் சுழற்சி.

. சூன்யத்தைச் சுற்றிவரும்.

. மறைந்துள்ள சிருஷ்டியில் பொதிந்துள்ள அர்த்தம்.

. பிரபஞ்சத்தைப் பிரித்தெடுத்துப் படிப்பதுபோல்,

. தெரியாத அக்ஷரம் சின்னமாக நோக்கும்.

. புதுமொழியால் திரையிடப்பட்ட நிலை.

. விளங்காத அற்புதச் சின்னம்.

. உன்னதக் கதையின் ஒரு பகுதி.

. அழியும் ஜந்துவின் நேத்திரம்.

. அர்த்தமற்ற அதிசயம் ஆர்ப்பாட்டம் செய்கிறது.

. வாழ விரும்பி தன்னை அழித்துக்கொள்ளும்.

. கடலைக் காணாத நதி.

. காலத்தின் விளிம்பில் வாழ்வாகவும், மரணமாகவும் ஓடும்.

. மீண்டும் சேரும் தவிர்க்கமுடியாத அவசியம்.

. இரவில் எழும் தீயின் பயங்கரத் தழல்.

. பிரிந்தது எதிராயிற்று.

. இரவும், பகலும் போன்று பிரிந்தவை.

. எழுந்த பெரிய விரிசலை நாம் பூர்த்தி செய்யவேண்டும்.

. தனித்து முடிந்த மெய்யை மீண்டும் தீண்டவேண்டும்.

. அனந்தத்தின் உயிர் அதிகாரம் தரும்.

. மனத்தையும், ஜடத்தையும் இணைக்கும் கோடு.

. மேலெழும் ஆத்மாவின் குறுகிய கடலோரம்.

. இருப்பின் இரகஸ்யத்தை இணைக்கவேண்டும்.

. இழந்த புனிதத்தை இதயம் அழைக்கிறது.

. பொருத்தமான சொல்லெழுந்து சேர்க்கும்.

******
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரிணாம வளர்ச்சியின் முதல் ஸ்பரிசத்தைப் பெறுவது, நம்முள் உள்ளவற்றில் மிக உச்சகட்டத்திலிருப்பதாகும். உதாரணமாக நம்மில் மனம் வளர்ச்சியை விரும்பும். பிராணனோ, உடலோ விரும்பாது. சமூக அந்தஸ்தில் உயர விரும்புவது மனம். மனம் விரும்புவதால் உடல் உழைக்கிறது.

நம் உச்சக்கட்ட திறமை இறைவனின் ஸ்பரிசத்தை முதலில் பெற்று உடலை உழைக்கச் சொல்கிறது.


 


 


 



book | by Dr. Radut