Skip to Content

01. சாவித்ரி

சாவித்ரி
 

P.88. This was a forefront of God's thousandfold house.

ஆயிரம் மாடி அடுக்கு வீட்டின் முகப்பு இது.  

  • அரைகுறையாக திரையிடப்பட்ட கண்ணுக்குத் தெரியாத ஆரம்பம்.
  • மினுமினுக்கும் மந்திர வாயில்.
  • திரைமறைவிலுள்ள ஒளியின் நிழலின் பதட்டம்.
  • புதிரான உலக அரங்கின் சந்தையில் ராஜ்ய சபை.
  • அற்புதமான மாடியின் அழகான தோற்றம்.
  • எல்லையற்றதின் மூலம் அறிய முடியாதது எட்டிப் பார்த்தது.
  • காலத்தின் கதியின் ஓரத்தில் அது வந்து தங்கியது.
  • காலத்தைச் சுருக்கிய க்ஷணத்தின் மூலம் எட்டிப் பார்த்தது.
  • தெய்வங்கள் ஜனித்த இடத்தின் நிழல்.
  • ரூபமற்றதின் ரூபமாக உடலற்றதின் உடல் எழுகிறது.
  • அதன் நுதல் ஆத்மாவைக் கடந்த ஒளியாலானது.
  • அறிய முடியாத அனந்தமான பிரம்மத்தின் ரூபங்கள்.
  • சொற்பதம் கடந்ததின் கனவு அதன் நேத்திரம்.
  • அதன் முகம் காலத்தைக் கடந்த பார்வையுடையது.
  • பிரம்மாண்டமான பாதாளக் குகையை அவன் வாழ்வு அறியும்.
  • புலனறியாத புறவெளியின் சிறு முகப்பு கட்டவிழ்கிறது.
  • இடைவெளியின் இடை ஆடையை இழந்தது; இழந்தது கடந்தது.
  • ஒளிப்பிழம்பு ஒருங்கிணைந்தெழுந்ததின் தழல்.
  • பயங்கரப் பிரம்மாண்டம் பகுத்துணர்ந்ததை இங்கு கண்டோம்.
  • அதன் விரியும் ஆடையின் விகசிதமான குஞ்சம்.
  • அவை நம் ஜட வாழ்வின் சிறு வஸ்த்திரம்.
  • புலப்படும் பிரபஞ்சம் தன் புதிரான ரூபங்களை மறைக்கிறது.
  • அதன் இரகஸ்யங்கள் பரமாத்மஜோதியில் மறைந்தன.
  • பிரகாசமான சட்டங்களின் எழுத்தைத் தெளிவாக எழுதினார்கள்.
  • எண்ணத்தைக் கடந்த சூட்சுமச் சின்னத்தாலான வரைபடம்.
  • மனத்தின் ஆழத்தில் வரையும் வரைபடம்.
  • ஜடமான உலகின் பிம்பங்களை அது ஒளிவிடச் செய்தது.
  • அதன் முக்கியமான மெருகின் அர்த்தமுள்ள அடையாளம்.
  • அது தன் இதிகாச ஞானத்தை இலையிட்டது.
  • அது பிரம்மத்தின் புதிரைப் பிரதிலித்தது.
  • வாழ்வின் இரு முனைகளிடையே அது எழுந்து உலவும்.
  • அமைப்புடன் எழும் இராஜ்யத்தின் அர்த்தமுள்ள சட்டம்.
  • அனந்தம் காலத்துள் குதித்தெழுந்தது.

***

ஸ்ரீ அரவிந்த சுடர்
 

ஆன்மா சித்தித்த பின்னரே சரணாகதி ஆரம்பிக்கிறது. ஏனெனில் சரணாகதியைச் செய்ய வேண்டியது ஆன்மா. அதுவரை சமர்ப்பணத்தால் சரணாகதிக்கு நாம் நம்மைத் தயார் செய்துகொள்கிறோம்.

சரணாகதி ஜீவன் முக்தனுக்குரியது.
 

 


 

ஜீவியத்தின் ஓசை

ஆன்மா நொடிப்பொழுதில் உணர்வதை அறிவு ஆராய்ச்சிக்குப் பின்னர்தான் உணர்கிறது. நம் உணர்வு மையம் தோல்வியைச் சந்திக்கும் பொழுதுதான் உண்மையை உணர்கிறது. ஆபத்திற்கு ஆளாகும் பொழுதுகூட நம்முடம்பு உண்மையை உணர்வது இல்லை. அன்னை நம்முள் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டார் என்று தெரிந்தால், அதன் பின் நாம் அழைப்பை நிறுத்தலாம்.
 


 


 


 


 



book | by Dr. Radut