Skip to Content

11. "Life Divine" - கருத்து

பிரம்மம் நிர்ணயிக்காது என்பது தவறில்லை, குறையில்லை, நிறைவு (P.333).

வேத காலத்திலிருந்து இந்துமதம் கண்ட ஆன்மீக உண்மை சச்சிதானந்தம். அதையும் கடந்தது பிரம்மம். வேதமும், அதன்பிறகு உபநிஷதமும், வேதாந்தமும், கீதையும் சச்சிதானந்தம், பிரம்மம் என்ற கருத்துகளை ஆமோதித்தனர். ஒவ்வொருவரும் சில மாறுதல்களையும் செய்தனர். அனைவரும் ஏற்ற கருத்துகள்.

  • பிரம்மம் அசைவற்றது, வளராதது, ஆதியும் அந்தமும் அற்றது.

பிரம்மம் அசையாதது என்பதால் உலகத்தை அதனால் சிருஷ்டித்திருக்க முடியாது என்றனர் அனைவரும். இதுவரை இந்து மதம் கண்டது பிரம்மத்தின் ஓர் அம்சம். பிரம்மம் அசையும், வளரும் என்கிறார் பகவான். அதனால் பிரம்மமே உலகை சிருஷ்டித்தது எனவும் கூறுகிறார். ரிஷிகள் கூறியதை பகவான் மாற்றிக் கூறுவதன் காரணத்தை மேற்சொன்ன கருத்து எடுத்துக் கூறுகிறது. கீழ்க்கண்டவற்றைக் கருதுவோம்.

  • மேட்டூர் அணையில் தேங்கி நிற்கும் 120அடி நீர் சக்தி வாய்ந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலும் பயன்படும் மின்சார சக்தியை அது உற்பத்தி செய்கிறது.
  • மௌனம் சலனத்தைவிட சக்தி வாய்ந்தது. சலனத்தின் திறன் முழுவதும் மௌனத்தில் உற்பத்தியாகிறது.
  • ஜனாதிபதி செயல்படுவதேயில்லை. மௌனமாக பேப்பரில் கையெழுத்திடுகிறார். ஆனால் நாட்டின் எல்லா அதிகாரங்களும் அவரிடம் உள்ளன. பிரதமரை நியமிப்பது அவரே. லோக் சபைக்கு உயிர் அளிப்பது ஜனாதிபதியே. பிரதம நீதிபதி, எலக்க்ஷன் கமிஷனர், ரிஸர்வ்பேங்க் கவர்னர் ஆகியவரை நியமிப்பவரும் அவரே. பிரதமரை அவரால் நீக்க முடியும். அவரைப் பிரதமரால் நீக்க முடியாது.

தத்துவம்:

பிரம்மம் எந்த முடிவும் எடுப்பதில்லை என்பது எந்த முடிவுக்கும் பிரம்மம் கட்டுப்பட்டதில்லை எனக் கூறுவதை நாம் அறியவில்லை. பிரம்மத்தின் அடிப்படை சுதந்திரம்.

பிரம்மத்தின் முடிவான சட்டம் சுதந்திரம். பகவான் அதன் சுதந்திரத்திற்குத் தரும் விளக்கம் வேறு.   "சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் அதனுடையது" என்கிறார். பிரம்மம் சுதந்திரத்தை இழந்து அடிமையாக முடியாது என்பதால், அதன் சுதந்திரம் குறைபடுகிறது. அக்குறைக்கும் பிரம்மத்தை நாம் ஆளாக்க முடியாது என்பது பகவான் விளக்கம்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
ஆன்மா உள்ளதைக் காணும் திறனுடையது. மனம் நடக்குமா, நடக்காதா என (Possibility) தன் திறமைக்கேற்ப நடக்கக் கூடியவற்றைக் கருதுகிறது. திறமையை நம்பும் மனத்தினின்று விலகி, உள்ளதைக் காணும்  ஆன்மாவை அடைந்தால், நடக்காதது நடக்கும்.
நடக்கும் என்பது ஆன்ம திருஷ்டி.
நடக்குமா, நடக்காதா என்பது மனத்தின் திகைப்பு.
 

 



book | by Dr. Radut