Skip to Content

14. Agenda

Savitri contains infinitely more than what Mother has experienced

அன்னை அனுபவித்ததைவிட "சாவித்திரி"யில் அதிகமான சக்தியுண்டு.

- அஜெண்டா

  •  முதல் நாள் தாம் பெற்ற ஆன்மீக அனுபவங்களை மறுநாள் பகவான் சாவித்திரியில் எழுதியதாக அன்னை கூறியிருக்கிறார்.
  • மகாபாரதத்தில்லாதது உலகில் இல்லை.
  • சாவித்திரியில்லாதது இனி உலகில் நடக்கப் போவதில்லை.
  • உலகுக்கு ஒரு வாழ்வு மையம் உண்டு.
  • மகாபாரதம் அங்கிருந்து எழுதப்பட்டது.
  • அதனால் அதில் சொல்லப்படாதது உலகிருக்காது.
  • உலகம் இனி மாறும், முன்னேறும்.
  • பிரபஞ்சத்தின் வாழ்வு உலக வாழ்வாக இனி எதிர்காலத்தில் வரும்.
  • அதற்கொரு மையம் உண்டு.
  • சாவித்திரி அங்கிருந்து எழுதப்பட்டது.
  • அதனால் அதில் இல்லையெனில் இனி உலகில் அது எழாது.
  • பகவான் யோகம் உடலை எட்டியது. உடலின் ஜீவியத்துடன் நின்றுவிட்டது.
  • உடலின் பொருளை எட்டவில்லை.
  • அன்னை பகவானைக் கடந்து சென்றார்.
  • அதனால் பொறுக்க முடியாத வேதனையை அனுபவித்தார்.
  • இந்த யோகம் செய்யும்படி எவரையும் அழைக்கமாட்டேன் என்றார்.
  • யோகத்தில் பகவானைக் கடந்து சென்ற அன்னை, அவர் எழுதிய சாவித்திரியில் தானறியாதவையுண்டு என்பது எப்படி?
  • பல்கலைக்கழகத்தில் சேருபவன் Ph.D., D.Litt. எடுத்துவிட்டால், அதற்கு மேல் பட்டமில்லை. அதனால் பல்லைக்கழக இதர பாடங்கள் அவனுக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை.
  • அன்னை யோகத்தில் பகவானைக் கடந்து சென்றாலும், வாழ்விலும் ஆன்மீகத்திலும் (infinite) முடிவில்லாத ஞானமுண்டு. அவை அனைத்தையும் சாவித்திரி உட்கொண்டது. அன்னை அவற்றையறிய வேண்டிய அவசியமில்லை. அதனால் அன்னையால் அவற்றையறிய முடியாது என்பது பொருளன்று.

    Around him shone a great felicitous Day
    ஆனந்த ஊற்றான நாள் அவனைச் சூழந்தது 
    என்பது சாவித்திரியில் ஒரு வரி.

    இந்த வரி உலகிலும், பிரபஞ்சத்திலும், சிருஷ்டியிலும், அப்பாலும் உள்ள எல்லாவகை ஆனந்தங்களையும் குறிக்கும்.

    பிறந்த குழந்தையின் ஆனந்தம், பெறுவதின் ஆனந்தம், மலர்வதின் ஆனந்தம், மறுப்பதின் ஆனந்தம், உள்ளது என்பதன் ஆனந்தம், இல்லை என்பதின் ஆனந்தம், கொடுமை செய்வதின் ஆனந்தம், கொடுமைக்கு உட்படும் ஆனந்தம், ஏமாற்றுவதின் ஆனந்தம்என உலகிலுள்ள எல்லா வாழ்வின் அம்சங்கட்குரிய ஆனந்தங்களும் இவ்வரியின் பின்னால் உள்ளது. அன்னை அவற்றையெல்லாம் அனுபவித்தவரில்லையெனில், அவரைக் கடந்த பல நிலைகளுண்டு என்றாகும்.

    • நம்மைக் கடந்தது எனில் நம் திறமையைக் கடந்தது.
      நம் தேவையைக் கடந்தது, நம் இன்றைய அனுபவத்தைக் கடந்தது எனப் பொருளாகும்.
    • அன்னையால் அனுபவிக்க முடியாதது எனவும் பொருள் கொள்ளலாம்.
      அது அவருக்கில்லை.
    • அன்னை Occult சூட்சுமஞானம் பெற்றவர்.
      பகவான் அத்துறையைப் பரிசோதிக்கவேயில்லை.
      அதனால் Occultism பகவானைக் கடந்ததுஎனக் கொள்ள முடியாது.
      சூட்சுமம் பகவான் அனுபவிக்க வேண்டாம்என விலக்கியது.
      "சூட்சுமத்தை அன்னைக்கென ஒதுக்கிவிட்டேன்" என்றார்.

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கடமையேயில்லை என அறிவதே உயர்ந்த கடமை. அந்நிலையில் உலகைக் கடவுள் காண்பதுபோல் காண்கிறோம். அவருக்குக் கடமையில்லை.
 
 கடமையை உணர முடியாத கடமை கடவுளுக்குரியது.

 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அவதாரப் புருஷர், குரு, தலைவர்கள், மேதை, ஆகியவர்கள் தங்களை நெருங்கியுள்ள சிஷ்யர்கட்கு, புதியதாக வருபவர்களுடைய சந்தேகம் எழுவதைக் காணமுடியும். 
 
புதியவர் சந்தேகம் பழையவருக்கும் உண்டு.
 

 



book | by Dr. Radut