Skip to Content

1.எதிர்பாராதது

ஒரு டிரைவர் ஆஸ்பத்திரிக்கு வெளியில் காத்திருந்தபொழுது அங்கு வேறோரு கார் வந்து நின்றது. காரிலிருந்து ஓர் இளம்பெண் இறங்கி வந்தாள். கேட்டில் நின்ற போலீஸ்காரன் அவளுக்கு சலாம் போட்டான். டிரைவருக்கு ஆச்சரியம். அவள் அவனறிந்த பெண். அவன் வேலை செய்யும் வீட்டில் 10 அல்லது 12 வருஷங்கட்கு முன் இப்பெண் குழந்தையைப் பார்த்துக்கொண்டவள். அந்த வீட்டு கம்பெனியில் வேலை செய்யும் பெண். டிரைவர் அவளை அணுகி,

"என்ன விஜி, காரிலிருந்து இறங்குகிறாய்,
செக்யூரிட்டி சல்யூட் அடிக்கிறான்.
என்ன நடந்தது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே'' என்றான்.

இந்த டிரைவர் இப்பெண்ணுக்கு நல்ல பழக்கம். அவள் இனிமையானவள். பொதுவாக இதமாகப் பேசும் குணம் உடையவள். டிரைவரைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். டிரைவர் கேட்ட கேள்வி அவளை மகிழ வைத்தது.

"கம்பனியில் வேலை செய்யும்பொழுது நான் தினமும் கம்பனிக்குப் போகும்பொழுது டிபுடி தாசில்தார் வீட்டைத் தாண்டிப் போவேன். அவர் எங்கள் தெருக்கோடியிருந்தார். ஒரு நாள் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து என் தகப்பனாரிடம் பேசிக்கொண்டிருந்தார். என்னைத் திருமணம் செய்துகொள்ள என் தகப்பனாரிடம் வந்து பேசியிருக்கிறார். அதன் பிறகு எங்கள் திருமணம் முடிந்தது. அவர் தாசீல்தாரானார். இப்பொழுது டிபுடி கலெக்டராக இருக்கிறார்'' என்று பெண் பதில் கூறி முடித்தாள்.

டிரைவரின் ஆச்சரியம் விளக்கம் பெற்றது. இப்பெண் வேலை செய்த கம்பெனி அன்பர்கள் நடத்துவது. அங்கு அன்னைச் சூழல் உண்டு. சூழலில் உள்ள அதிர்ஷ்டம் அங்குள்ளவர் பெறுவது, அக்கம்பெனியில் உள்ளவர் அனைவரும் அறிந்ததே. 

  • பொதுவாக எதிர்பாராதது, அன்பர்கட்குப் பலிப்பது.
  • பெண் சிவந்த நிறமாக, அழகாக இருப்பாள்.
  • தன் அழகை அவள் பாராட்டுவதில்லை.

    அவள் பாராட்டாத காரணத்தால் அடுத்தவர்
    அனைவரும் பாராட்டுவர். அது அதிர்ஷ்டம்.

  • அன்னைச் சூழலிருந்து அதிர்ஷ்டம் ஏதாவது ஒரு வழியில் வாராதவர் இல்லை.
  • சூழலை அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் சூழலில் பலிக்கும்.

****** 



book | by Dr. Radut