Skip to Content

14. X Conscious Force

 

X. Conscious Force
10. சித்-சக்தி
Page No. 80
Para No. 1
 
Existence can be phenomenal.
நாம் சிருஷ்டியில் தோற்றத்தை அறிவோம்.
It can have experience.
அது அனுபவத்தை நாடுகிறது.
That experience can be self-presentation.
தன்னைத் தானே உணரும் அனுபவம் அது.
In that existence resolves itself.
அனுபவத்தில் சத் புருஷன் மாறுகிறான்.
It resolves itself into Force.
சத் புருஷன் சக்தியாக மாறுகிறான்.
Force is a movement of energy.
(Force) சக்தி என்பது (energy) சக்தியின் சலனம்.
This energy assumes various forms.
சக்தி பல்வேறு ரூபங்களில் வரும்.
Those forms can be more or less material.
இவ் உருவங்கள் கிட்டத்தட்ட ஜட உருவங்களாக இருக்கும்.
They can also be more or less gross.
அவை கிட்டத்தட்ட பொருளாலான உருவங்களாகவுமிருக்கும்.
They can even be subtle forms.
அவை சூட்சும உருவங்களாகவுமிருக்கும்.
In ancient days human thought created images.
பண்டை நாளில் மனிதன் பிம்பங்களை உற்பத்தி செய்தான்.
It tried an image of this origin.
ஆதியான இந்நிலைக்குரிய பிம்பம், ரூபம், தயாரிக்க முயன்றான்.
This origin is a law of being.
ஆதி ஜீவனுக்குரிய சட்டம்.
It tried to make it real to itself.
இதுபோன்ற பிம்பம் தனக்குத் தெளிவாக இருக்க வேண்டும்.
It tried to make it intelligible.
அது தனக்குப் புரிய வேண்டும் எனவும் கருதினான்.
The origin is an infinite existence of Force.
ஆதி என்பது சக்திக்கு முன்னிலையான சத் புருஷனாகும்.
This was figured as a sea by them.
அதை, கடல், சமுத்திரம் எனக் கூறினர்.
They conceived it at rest initially.
முதலில் அது சலனமற்றிருந்ததாகச் சொன்னார்கள்.
At rest, it had no forms.
அமைதியான நிலையில், அதற்கு ரூபம் இல்லை.
It moved.
சலனம் எழுந்தது.
It was the first initiation.
அதுவே முதல் அசைவு, ஆரம்பம்.
It created forms.
ரூபங்களைச் சலனம் உற்பத்தி செய்தது.
Forms were necessary for that movement.
சலனமெழ ரூபம் தேவை.
It is the seed of the universe.
அது பிரபஞ்சத்தின் வித்து - பீஜம்.
Page No. 80
Para No. 2
 
Matter is the presentation of force.                   
ஜடம் என்பது சக்தி.
Force is most easily intelligible.            
சக்தியை உணர முடியும்.
It is our intelligence that perceives.
உணர்வது நம் புத்தி.
It is moulded by contacts in Matter.
ஜடம் ஜடத்தோடு இணைவதால் ஏற்படுவது ஜடம்.
That is how it is.
இவ்விதமாக ஜடம் உள்ளது.
Mind is involved in the brain.
மனம் மூளையிலுள்ளது.
The brain gives the response to matter.
மூளையிலுள்ள மனம் ஜடத்தை உணருகிறது.
The old Indian physicists had a view.
பழைய இந்திய விஞ்ஞானிகளுக்கோர் அபிப்பிராயமிருந்தது.
They describe the material Force.
அவர்கள் ஜடசக்தியை விளக்குகிறார்கள்.
They tell us about its elementary state.
அதன் ஆரம்ப நிலையைக் கூறுகிறார்கள்.
It is a condition of pure material extension in Space.
ஜடம் தன்னை விரிவுபடுத்தி இடமாக்குவது அந்நிலை.
It has a peculiar property.
அதற்கு ஒரு குறிப்பிட்ட குணம் உண்டு.
It is a variation of sound.
அது சப்தம்.
Sound typifies it to us.
சப்தம் அக்கணத்தைக் குறிக்கும்.
We want to create forms.
நாம் ரூபங்களை உருவாக்க முயல்கிறோம்.
Vibration in this state of ether is not enough.
வெளியின் கதிர் இந்நிலையில் நமக்குப் பயன்படாது.
To create forms, obstruction must be there.
உருவம் உருவாகத் தடை அவசியம்.
The force must be obstructed.
சக்தியைத் தடை செய்ய வேண்டும்.
There must be contraction.
அது சுருங்குவது அவசியம்.
Also, expansion must be there.
விரிவடைவதும் அவசியம்.
Interplay of vibration too is necessary.
கதிர்கள் கலந்து செயல்படுவதும் அவசியம்.
Force must impinge upon force.
சக்தி, சக்தியுடன் மோத வேண்டும்.
That creates a fixed relation.
அதனால் நிலையான தொடர்பு ஏற்படும்.
It also creates mutual effects.
இரு பக்கமும் அது பலன் தரும்.
Material Force’s first status is ethereal.
ஜடசக்தியின் முதல் நிலை ஆகாயம்.
It modifies it further.
அதை மேலும் மாற்றுகிறது.
The second status is called aerial.
இரண்டாம் நிலையை வெளி என்கிறோம்.
It is the old language.
இது ஆதிநாள் மொழி.
It has a special property.
அதற்குக் குறிப்பிட்ட குணமுண்டு.
It is a contact between force and force.
சக்தியும் சக்தியும் சந்திக்கின்றன.
This is the basis of all relations.
இதுவே எல்லாத் தொடர்புக்கும் அடிப்படை.
This contact is the basis.
தொடர்பு அடிப்படை.
Still real forms are not created.
இருப்பினும் உண்மையில் உருவம் எழவில்லை.
What we have is only varying forces.
மாறும் சக்திகளை நாம் காண்கிறோம்.
A sustaining principle is needed.
நிரந்தரமான தத்துவம் தேவை.
This is provided by a third modification.
மூன்றாம் மாறுதல் எழுகிறது.
It is a self-modification.
இது தன்னைத் தானே மாற்றுவது.
It modifies the primitive Force.
ஆதி சக்தியை மாற்றுகிறது.
The principle here is light.
இங்கு ஒளி தத்துவம்.
It is light, electricity, heat and fire.
அது ஒளி, மின்சாரம், உஷ்ணம், நெருப்பு.
Fire and heat are the characteristic manifestation.
நெருப்பும், உஷ்ணமும் இவை வெளிப்படுவதைக் குறிக்கின்றன.
Even then, we can have forms of force.
அப்படி என்றாலும் அவை சக்தியின் ரூபங்களாக இருக்கும்.
They will preserve their own character.
அவற்றிற்குத் தங்கள் சொந்தக் குணம் முத்திரையாய் விளங்கும்.
They will also preserve their peculiar action.
தங்களுக்கேயுரிய குறிப்பிட்ட செயலையும் அவை பெற்றிருக்கும்.
Still, stable forms of Matter will not be there.
இருப்பினும், நிலையான ஜடஉருவங்கள் எழா.
There is a fourth state.
இது நான்காம் நிலை.
It is characterised by diffusion.
இதன் முக்கியக் குணம் விரைந்து பரவுதல்.
It will be a first medium for the next stage.
அடுத்த நிலைக்கு அது முதல் வழி.
It is of permanent attractions.
நிரந்தரக் கவர்ச்சியுடையது.
Also of repulsions.
கவர்ச்சியுடன் விலக்கும் திறனும் உடையது.
It is termed water or liquid state.
அதை நாம் தண்ணீர் அல்லது திரவம் என்கிறோம்.
This is water.
இது தண்ணீர், ஜலம்.
A fifth state is also there.
ஐந்தாம் நிலையும் உண்டு.
It is a state of cohesion.
அது ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது.
It is a solid state.
அது கெட்டியானது.
It is earth, as they called it.
நாம் அதை மண், பூமி என்கிறோம்.
These are the elements.
இவை பூதங்களாகும்.
They are necessary.
அவை அவசியம்.
It completes their list.
இத்துடன் பட்டியல் முடிகிறது.
Page No. 81
Para No. 3
 
We are aware of forms of Matter.                     
ஜடத்தின் உருவங்களை நாம் அறிவோம்.
All of them are physical.                                   
அவை அனைத்தும் தொடுஉணர்ச்சிக்குரியவை.
Even the most subtle is physical.
மிக சூட்சுமமானதிலும் ஜடத்தன்மையிருக்கும்.
All of them are built by their combinations.
அவை பூதங்களின் கலப்பால் உருவாகின்றன.
The five elements so combine.
பஞ்சபூதங்கள் அப்படி உருவாயின.
Our experience is sensible.
நம் அனுபவம் உணர்வாலானவை.
It depends upon them.
இவ்வனுபவங்கள் அவற்றை நம்பியுள்ளன.
We receive the vibration.
நாம் அதிர்வைப் பெறுகிறோம்.
This is sense of sound.
இது சப்தமாகும்.
This is a world of vibrations.
இவ்வுலகம் அதிர்வுகளாலானது.
These are vibrations of Force.
அவை சக்தியின் அதிர்வுகள், கதிர்கள் எனலாம்.
The sense of touch arises by contact of things.
பொருள்கள் ஒன்றையொன்று தொடுவதால் தொடு உணர்வு வருகிறது.
Next is the sense of sight.
அடுத்தது பார்வை.
It is sustained by the force of light, fire and heat.
ஒளி, நெருப்பு, சூடு ஆகியவற்றால் பார்வை உண்டாயிற்று.
It is by the action of light.
இது ஒளியின் செயல்.
Light outlines and hatches forms.
ஒளி வரைந்து ரூபங்களை உற்பத்தி செய்கிறது.
There is a fourth element.
4ஆம் பூதம் உண்டு.
It is the sense of taste.
அது ருசி.
The fifth is the sense of smell.
ஐந்தாம் உணர்வு நுகர்வு, வாசனை.
All these are essentially responses.
இவையெல்லாம் அடிப்படையில் எதிரொலிகளாகும்.
They are responses to vibratory contacts.
அதிர்வுகளின் தொடர்புக்கு எழும் எதிரொலிகள் இவை.
The contacts are between force and force.
சக்தி சக்தியைத் தீண்டுவதால் எற்படும் தொடர்பு இது.
The human mind wants to understand.
மனித மனம் புரிய முயல்கிறது.
It tries to understand forms.
அது ரூபங்களை அறிய முயல்கிறது.
These forms are real to its senses.
இந்த ரூபங்களைப் புலன்கள் அறியும்.
They are solid and durable.
அவை திடமானவை, நாட்பட்டு வருபவை.
In truth they are only temporary phenomena.
உண்மையில் அவை எழுந்து மறையும் இயல்புடையவை.
It is like pure energy.
சுத்த சக்தி போன்றது உணர்வுகள்.
To the senses they are non-existent.
அவை புலன்கட்குப் புலப்படாதவை.
Also intangible and incredible.
கைக்கோ, மனத்திற்கோ தட்டுப்படாதது.
Man wonders about them.
மனிதனுக்கு அவை ஆச்சர்யம் தருபவை.
How can they be one permanent cosmic reality?
பிரபஞ்சத்தில் எப்படி இவை நிலையாக இருக்க முடியும்?
There is a gulf between Force and its modifications.
சக்திக்கும் அதன் முடிவான உருவத்திற்கும் இடையே வெளியுண்டு.
The Force is pure.
சக்தி சுத்தமானது.
Modifications go through several stages.
மாறும் உருவம் பல நிலைகளைக் கடந்து செல்லும்.
The ancient thinkers bridged that gap.
வேத காலத்து ஆராய்ச்சியாளர்கள் இடைவெளியைச் சரிப்படுத்தினர்.
Thus they satisfied themselves.
அது அவர்கட்குத் திருப்தி அளித்தது.
The ordinary human mind does not understand this gap.
எளிய மனிதன் இவ்விடைவெளியை அறியமாட்டான்.
It is prevented from understanding the gap.
இடைவெளியை அவன் அறியத் தடையுண்டு.
Page No. 81
Para No. 4
 
There is the problems of consciousness.           
சித் (ஜீவியம்) இருக்கிறது.
Our theory does not solve it.                
நாம் அதை விளக்கவில்லை.
Vibrations of Force come into contact.
சக்தியின் அதிர்வுகள் தொடர்பு கொள்கின்றன.
This gives rise to consciousness.
அதன் ஜீவியம் இதன் மூலம் எழுகிறது.
They are conscious sensations.
அவை ஜீவனுள்ள உணர்வுகள்.
It is not explained how.
எப்படி எனத் தெரியவில்லை.
The Sankhyas were analytical thinkers.
சாங்கியம் என்பது ஆராய்ச்சி.
They saw behind the five elements two things.
பஞ்சபூதங்களின் பின்னால் இரண்டைக் கண்டனர்.
They were Mahat and Ahankara.
அவை மகத், அகங்காரம்.
They were non-material principles.
அவை ஜடமான தத்துவங்களில்லை.
Mahat is Force.
மகத் என்றால் சக்தி.
It is the vast cosmic principle of Force.
பிரபஞ்சம் முழுவதும் பரவிய சக்தி அது.
The other is Ego.
அடுத்தது அகந்தை.
It is a formation.
அது ஓர் உருவம் அல்லது உருவகம்.
It is a divisional principle.
இது பிரிக்கும் தத்துவம்.
There is one more principle.
மேலும் ஓர் தத்துவம் உண்டு.
It is intelligence.
அது புத்தி.
They all three become active in consciousness.
இம்மூன்றாம் ஜீவியத்தில் (சித்தில்) செயல்படுகின்றன.
It is not by virtue of Force itself.
இவை சக்தியால் செயல்படவில்லை.
But it is by virtue of Conscious-Soul.
இவை ஆத்மாவால் செயல்படுகின்றன.
Conscious-Soul is inactive.
ஆத்மா சலனமற்றது.
These principles are reflected in it.
இம்மூன்று தத்துவங்களும் ஆத்மாவில் பிரதிபலிக்கின்றன.
That reflection changes these principles.
பிரதிபலிப்பு தத்துவங்களை மாற்றுகிறது.
That change is the hue of consciousness.
அம்மாற்றம் ஜீவியம் எனப்படும்.
Page No. 81
Para No. 5
 
Schools of Indian philosophy offer this explanation.
இந்தியத் தத்துவ மேதைகள் இப்படிக் கூறுகின்றனர்.
Modern materialism also speaks thus.
இக்காலத்து நாத்திகமும் இப்படியே பேசுகிறது.
Both are similar.
இரண்டும் ஒன்று போலுள்ளது.
The Indian mind was serious.
இந்தியர் எண்ணம் சிறந்தது.
It was also reflective.
அதனால் சிந்திக்க முடியும்.
This was a mechanical idea.
இது ஜீவனற்ற தத்துவம்.
Or an idea of mechnical Force.
அல்லது ஜீவனற்ற சக்தியைப் பற்றிய தத்துவம்.
It was a Natural Force.
இது இயற்கை சக்தி.
The Indian view may have its defects.
இந்தியர் கருத்து தவறாக இருக்கலாம்.
Its main idea was indisputable.
அதன் மையக் கருத்து மறுக்க முடியாதது.
It was generally accepted.
அதைப் பொதுவான அனைவரும் ஏற்றனர்.
We may explain consciousness as we like.
ஜீவியத்தை நாம் எப்படியும் விளக்கலாம்.
Nature may be an inert principle.
இயற்கை எனும் பிரகிருதி ஜீவனற்றதாக இருக்கலாம்.
It may be inert impulse.
அது ஜீவனற்ற உந்துதலாகவும் இருக்கலாம்.
Or it may be a conscious principle.
ஜீவனுள்ளதாகவுமிருக்கலாம்.
Nature, in either case, is certainly Force.
எப்படியானாலும் பிரகிருதி என்பது சக்தி.
There is a principle of things.
விஷயத்திற்குத் தத்துவமுண்டு.
It is a formative movement of energies.
விஷயம் எனில் உருவம் பெற்ற சக்தியின் சலனமாகும்.
There are unshaped forces.
அவை உருவமற்ற சக்திகளாகும்.
They meet.
அவை சந்திக்கின்றன.
They mutually adapt to each other.
ஒன்று மற்றதை மாற்றுகிறது.
Forms are born out of them.
அதனால் உருவங்கள் உற்பத்தியாகின்றன.
There are forms of Force.
இவை சக்தியின் உருவங்கள்.
They contact other such Forms.
அவை அதுபோன்ற உருவங்களைச் சந்திக்கின்றன.
They too are forms of Forces.
அவையும் சக்தியின் உருவங்களாகும்.
As a result, sensations arise.
இதன் விளைவாக உணர்வு எழுகிறது.
Action too is such a result.
செயலும் இதன் விளைவே.
This is our experience.
இதுவே நம் அனுபவம்.
It is our world.
இது நம் உலகம்.
We must start from here.
நாம் இங்கிருந்தே அனுபவிக்க வேண்டும்.
Page No. 82
Para No. 6
 
Modern science analysed Matter.                     
விஞ்ஞானம் ஜடத்தை ஆராய்ந்தது.
It came to the same conclusions.                     
அதுவும் அதே முடிவுக்கு வந்துள்ளது.
They do have doubts.
அவர்கட்கு ஐயப்பாடுகள் உள்ளன.
They may be a few.
அவை சில.
Such doubts do linger.
சில ஐயப்பாடுகள் தொடர்கின்றன.
Science and philosophy concur.
விஞ்ஞானமும் தத்துவமும் ஆமோதிக்கின்றன.
Intuition endorses it.
ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
Experience confirms it.
அனுபவம் உறுதிப்படுத்துகிறது.
Pure reason is satisfied.
பகுத்தறிவுக்குத் திருப்தி.
Its own essential conceptions are satisfied.
அதன் அடிப்படை இங்கு பூர்த்தியாகிறது.
We can view it in the view of the world.
உலகக் கண்ணோட்டத்தில் அதைக் காணலாம்.
Or, look at it from an act of consciousness.
அதை ஜீவியத்தின் செயலாகவும் பார்க்கலாம்.
There is always an act.
செயல் என்றும் உண்டு.
It is implied.
அது இல்லாமலில்லை.
An act is a movement of Force.
செயல் என்பது சக்தியின் சலனம்.
Force is a play of energy.
சக்தி செயல்படும்பொழுது தீவிரம் எழுகிறது.
Let us consider our experience.
நம் அனுபவத்தைப் பார்ப்போம்.
Let us examine from within it.
நம் உள்ளே அதைக் காண்போம்.
This is the fundamental nature of the world.
உலகின் அடிப்படை இயல்பு அது.
The old philosophies speak of triple forces.
மூன்று சக்திகளைத் தத்துவமறியும்.
They are forces of knowledge, desire and action.
ஞானம், பிராணன், கிரியை ஆகிய மூன்று அவை.
All our activities are covered by them.
நம் செயலனைத்தும் அவற்றுள் அடக்கம்.
There is an original Power.
ஆதியான சக்தியுண்டு.
It is identical.
அது ஐக்கியமானது.
It is Adya Shakti.
அதை ஆதிசக்தி என்பர்.
These three forces are its three streams.
மூன்று சக்திகளும் மூன்று ஓட்டங்கள்.
Our rest too is an activity.
அமைதியும் செயலாகும்.
It is an equal state of equilibrium.
அமைதி என்பது அமைதியைக் காக்கும் செயல் எனப்படும்.
Or it is a play of her movement.
அல்லது சலனத்தின் ஓருருவமாகும்.
Page No. 82
Para No. 7
 
We can admit of movement of Force.    
சலனத்தின் சக்தியை நாம் ஏற்க முடியும்.
Two questions arise.                                        
இரு கேள்விகள் எழுகின்றன.
How did the movement arise?
சலனம் எப்படி ஆரம்பித்தது?
How in the bosom of existence did it arise?
சத் புருஷனில் எப்படி சலனம் உண்டாயிற்று?
We may suppose it to be eternal.
அது என்றும் உள்ளதாக நாம் நினைக்கலாம்.
It is the very essence of all existence.
சத் புருஷனுக்கு அது சாரம் எனவும் கூறலாம்.
If this is so, no questions arise.
அது உண்மையானால், கேள்வி எழாது.
We have refused this.
ஏற்கனவே நாம் இதை ஏற்க முடியாது எனக் கண்டோம்.
We are aware of an existence.
சத் புருஷனை நாம் அறிவோம்.
It is not compelled by the movement.
சலனம் அதைக் கட்டாயப்படுத்த முடியாது.
This movement is alien to the repose.
அதன் அமைதிக்கு இச்சலனம் மாறானது.
It is an eternal repose.
அது அனாதியான அமைதியுடையது.
How does this movement arise?
இச்சலனம் எழுவது எங்ஙனம்?
By what cause?
காரணம் என்ன?
By what possibility?
எதனால் இது சாத்தியப்படுகிறது?
By what mysterious impulsion?
என்ன விந்தையான உந்துதல் இது?
Page No. 82
Para No. 8
 
There is an answer.                                         
இதற்குப் பதிலுண்டு.
It is most approved by the Indian mind. 
இப்பதில் இந்தியருக்கு ஏற்புடையது.
It is Force inherent in Existence.
சக்தி என்பது சத்தில் உள்ளது.
Shiva and Kali are one.
சிவனும் காளியும் ஒன்று.
Brahman and Shakti are one.
பிரம்மமும், சக்தியும் ஒன்று.
They are not two.
இவை வேறானவையல்ல.
They are not separable.
இவற்றைப் பிரிக்க முடியாது.
Force is inherent in existence.
சக்தி சத்தில் உள்ளது.
It may be at rest.
அது அசைவற்றுள்ளது.
It may be in motion.
அது அசையக் கூடியது.
At rest, it still exists.
அசைவற்ற பொழுதும் சக்தியுள்ளதன்றோ?
It exists nonetheless.
எப்படியும் சக்தியுள்ளது.
It is not abolished.
அதை அழிக்கவில்லை.
Not diminished.
அது குறையவில்லை.
Not essentially altered.
அடிப்படையில் மாறவில்லை.
This reply is rational.
இப்பதில் அறிவுக்குரியது.
It is entirely so.
முழுமையானது.
It accords with the nature of things.
நாம் காண்பதற்கு ஒத்து வரக்கூடியது.
We need not hesitate.
இதை ஏற்க நாம் தயங்க வேண்டாம்.
We can readily accept it.
இதை உடனே ஏற்கலாம்.
Here is an existence.
சத் புருஷனை நாம் அறிவோம்.
It is infinite.
அது அனந்தம்.
We cannot say Force is alien to it.
சக்தி அதற்குரியதன்று எனக் கூற முடியாது.
Nor can we say it entered from outside.
சக்தி வெளியிலிருந்து சத்தினுள் நுழைந்தது எனவும் கூற முடியாது.
“It was originally non-existent.”
“”ஆரம்பத்தில் சக்தியில்லை.
“It arose later at some time.”
“”பிற்காலத்தில் சக்தி உற்பத்தியாயிற்று.
These are unacceptable.
இப்படி எல்லாம் கூறுவது சரியில்லை.
The illusionist has a theory.
மாயாவாதிக்கொரு தத்துவம் உண்டு.
It admits of Maya.
அது மாயையை ஏற்கும்.
Maya is power of self-illusion in Brahman.
பிரம்மம் தன்னை ஏமாற்றும் வகை அது.
It is potentially eternal.
அதுவும் வித்தாக என்றும் உள்ளது.
It is in the eternal Being.
அனந்தமான புருஷனில் உள்ளது மாயை.
There is only one question.
கேள்வி ஒன்றுதான்.
It is manifestation or non-manifestation.
எப்பொழுது வெளிவரும்?
The Sankhya asserts the coexistence.
சாங்கியம் புருஷனும் பிரகிருதியும் ஒரே சமயத்திலுள்ளவை என்று
It is a coexistence of Prakriti and Purusha.
கூறுகிறது.
They are Nature and Conscious-Soul.
இயற்கை, ஆத்மா எனவும் நாம் கூறலாம்.
It is rest and movement.
சலனம், அமைதி எனவும் கூறலாம்.
It is the rest of equilibrium of Prakriti.
பிரகிருதியின் சலனமற்ற அமைதி எனலாம்.
Movement is disturbance of equilibrium.
அவ்வமைதிக்குப் பங்கம் விளைவிப்பது சலனம்.
Page No. 83
Para No. 9
 
Force is thus inherent in existence.                  
சக்தி இதன்படி சத்தினில் உள்ளது.
It has a double potentiality.                               
இதற்கு இரு திறன்களுண்டு.
It is the nature of the Force.
அது சக்தியின் இயல்பு.
Maybe it is the alternative potentiality.
அதற்கு வேறு வெளிப்படாத திறனிருக்கலாம்.
It alternates between rest and movement.
சலனம், அமைதி மாறி மாறி வரலாம்.
One is self-concentration in Force.
ஒன்று சக்தி செறிந்ததாக இருக்கும்.
The other is self-diffusion in Force.
அடுத்தது சக்தி பரவியதாக இருக்கும்.
The how of the movement is a question.
சலனம் எப்படி ஏற்பட்டது என்பது கேள்வி.
The question of the movement is there.
சலனம் ஏன் என்பதும் கேள்வி.
Its possibility is another question.
அதன் உண்மை அடுத்த கேள்வி.
Initiating impulsion must be explained.
எப்படிச் சலனம், அதன் உந்துதல் எழுந்தது என்பதை விளக்க வேண்டும்.
Its impelling cause arises.
என்ன காரணம் உந்தியது எனத் தெரிய வேண்டும்.
This potentiality must translate.
இது நடைமுறைக்கு மாற வேண்டும்.
It may translate into a rhythm.
ஓர் அலையாக அது மாறலாம்.
It is a rhythm of rest and movement.
சலனம், அமைதி மாறி வரும் அலையாக அது இருக்கலாம்.
They succeed each other in Time.
அவை ஒன்று மற்றதைக் காலத்தால் தொடரும்.
Or else it may be eternal self-concentration.
நிரந்தரமான நிஷ்டையாகவும் இருக்கலாம்.
It is a self-concentration of Force.
சக்தியில் செறிந்த நிஷ்டையாகவுமிருக்கலாம்.
It is the superficial play in existence.
சத் புருஷனின் மேலெழுந்த நிலையாக இருக்கலாம்.
It is a change of formation.
உருவம் மாறுவதாகவுமிருக்கும்.
It is like the waves of the ocean.
கடல் அலைகளாலானதாகும்.
This is a superficial play.
மேல் மட்டத்திற்குரிய அம்சம் அது.
(This is an inadequate image.)
(இவை தெளிவற்ற உருவகங்கள்.)
Maybe it is coeval with self-concentration.
செறிந்த நிஷ்டையுடன் சேர்ந்ததாக இருக்கலாம்.
Therefore it is also eternal.
அதனால் அதுவும் காலத்தைக் கடந்திருக்கும்.
Or it may begin and end in Time.
காலத்தில் ஆரம்பித்து முடிவதாகவுமிருக்கும்.
It may resume by a sort of constant rhythm.
நிலையான அலையாக அது மீண்டும் தொடரலாம்.
Then it is not eternal in continuity.
தொடர்ச்சியால் நிலையானதாக இல்லை.
It is eternal in recurrence.
மீண்டும் மீண்டும் வருவதில் நிலையாக இருக்கும்.
Page No. 83
Para No. 10
 
How is eliminated.                                            
இனி எப்படி என்ற கேள்வியில்லை.
The question why remains.                               
ஏன் என்ற கேள்வியுண்டு.
This is a possibility of a play.
லீலைக்கு வழியுண்டு.
It is a play of the movement.
அது சலனத்தின் லீலை.
It is the Force that moves.
சக்தியே சலனம்.
The play translates itself.
அது லீலையாகிறது.
Why is there at all this translation?
ஏன் இந்த மாற்றம்?
Why should it not remain concentrated?
ஏன் சக்தியானது அப்படியேயிருக்கக் கூடாது?
Concentrated, it is infinite, free.
அந்நிலையில் அது அனந்தமான சுதந்திரம் பெற்றது.
It is thus free from all variation.
மாறுதலால் அது பாதிக்கப்படாது.
Also of formation.
உருவம் பெறும் அவசியமும் இல்லை.
Let us assume existence to the non-conscious.
சத் என்பது ஜீவனற்றது எனக் கொள்வோம்.
Consciousness is only a development.
ஜீவன் அதன் விளைவு என்போம்.
It is a development of material energy.
ஜடசக்தியிலிருந்து ஜீவன் எழுகிறது என்று கூறுவோம்.
We wrongly suppose material energy immaterial.
ஜடசக்தியை நாம் தவறாக ஜடமில்லை என்கிறோம்.
Then this question does not arise.
அப்படியானால் முதலில் எழுப்பிய கேள்வி எழாது.
Then we can say the following.
அதனால் நாம் கீழ்க்கண்டவாறு கூறலாம்.
The rhythm is the nature of the Force.
அலை எழுவது சக்தியின் இயல்பு.
The Force is in existence.
சக்தி சத்தாக உள்ளது.
Why should we look for a reason?
நாம் ஏன் காரணத்தை எழுப்ப வேண்டும்?
It is eternally self-existent.
என்றும் அது தன்னிறைவு பெற்று சுயமானதன்றோ?
That is its nature.
அதுவே அதன் இயல்பு.
Therefore no question of why arises.
அதனால் ஏன் என்ற கேள்வி எழாது.
Self-existence is eternal.
சத் புருஷன் அனாதி.
Self-force of existence is eternal too.
அதன் சக்தியும் காலத்தைக் கடந்தது.
Nature of impulsion to movement is inherent in self-force.
சலனத்திற்கான உந்துதல் சக்தியின் உள்ளுறை இயல்பு.
We cannot ask them why they exist.
ஏன் அவை இருக்கின்றன என நாம் கேட்க முடியாது.
Or how they came into existence.
எப்படி அவை எழுந்தன எனவும் கேட்க முடியாது.
We can inquire into its manner of self-manifestation.
எப்படித் தங்களை வெளிப்படுத்துகின்றன எனக் கேட்க முடியும்.
We can try to know its principles of movement.
சலனத்தின் சட்டம் என நாம் அறியலாம்.
We can ask about its formation.
அவற்றின் உருவகங்களை அறிய முடியும்.
Its process of evolution too can be inquired into.
அவற்றின் பரிணாமத்தையும் ஆராயலாம்.
We cannot go beyond that.
அவற்றைக் கடந்து நாம் செல்ல முடியாது.
Existence is inert.
சத் ஜீவனற்றது.
Force is inert.
சக்தி ஜீவனற்றது.
Their status is inert.
அவற்றின் நிலை உயிரற்ற நிலை.
Their impulsion is inert.
அவற்றின் சலனமும் அப்படியே.
Both of them are unconscious.
இரண்டும் தம்மை அறியாதவை.
Both are unintelligent.
இரண்டும் அறிவில்லாதவை.
Therefore there cannot be any purpose in evolution.
எனவே பரிணாமத்திற்கு இலட்சியமிருக்க முடியாது.
So also, there can be no final goal in evolution.
அதேபோல் இலக்கு என்பதும் பரிணாமத்திற்கிருக்க முடியாது.
Nor can there be any original cause.
ஆரம்பமான ஆதியான காரணமும் இருக்க முடியாது.
No intention can be there too.
எதை நினைத்தும் பரிணாமம் ஏற்படவில்லை என்றாகும்.
Page No. 84
Para No. 11
 
We can suppose Existence is conscious.           
சத் என்பது ஜீவனுள்ளது எனலாம்.
We can think it to be a Conscious Being.           
சத் என்பது ஜீவனுள்ள ஜீவன் எனலாம்.
Then the problem arises.
அப்படி எனில் பிரச்சினை எழும்.
We can suppose otherwise.
நாம் வேறு வகையாகவும் கூறலாம்.
It may be a Conscious Being.
அதை தன்னயறியும் ஜீவன் எனலாம்.
We may say it is subject to its nature of Force.
தன் இயல்பான சக்திக்குட்பட்டது அது எனவும் கூறலாம்.
It is compelled by the Force.
அதன் சக்தியால் அது கட்டாயப்படுத்தப்படுகிறது.
The Being, we can say, has no option.
சத் புருஷனுக்கு வேறு வழியில்லை.
It has no choice to decide its course.
என்ன செய்யலாம் என்ற சுதந்திரம் அதற்கில்லை.
Its manifestation or otherwise is decided by the Force.
சிருஷ்டிப்பதா இல்லையா என சக்தி நிர்ணயிக்கும்.
Of course, the Tantrics have such a God.
இது தந்திர யோகத்தின் தெய்வம்.
The Mayavadins too do so.
மாயாவாதிகளும் அதையேச் செய்கிறார்கள்.
They subject the Purusha to Shakti or Maya.
புருஷனை சக்திக்கும், மாயைக்கும் உட்படுத்தினர்.
It is a Purusha involved or controlled by Maya.
மாயைக்குட்பட்ட புருஷன் அது.
Obviously such a god is not supreme.
இது முழு முதற் கடவுளில்லை.
It is not the supreme infinite Existence.
உச்சகட்ட அனந்தமான சத் புருஷன் இது இல்லை.
We did start with that.
நாம் அதையே ஆரம்பமாகக் கொண்டோம்.
This is only a formulation of Brahman.
இதுவும் பிரம்மத்தாலானதே.
It is the Brahman in the cosmos.
பிரபஞ்சத்தின் பிரம்மம் இது.
This is logically anterior to Shakti or Maya.
சக்திக்கும், மாயைக்கும் முன்னுள்ள பிரம்மம் இது.
This takes her back from her works.
அவளுடைய செயலைவிட்டு அகற்றுகின்றனர்.
It takes back into its transcendental being.
அகற்றியவளை, ஆத்மாவின் நிலைக்கு அழைத்துச் செல்கிறாள்.
We started with a conscious existence.
நாம் தன்னையறிந்த சத் புருஷனில் ஆரம்பித்தோம்.
It is absolute.
அது தனித் தன்மையுடையது.
It is independent of formations.
தன் ரூபங்களைக் கடந்தது அது.
It is not determined by its works.
தன் செயலால் கட்டுப்படாதது.
It has an inherent freedom to manifest or not to manifest.
சிருஷ்டிப்பதா இல்லையா என முடிவு செய்யும் சுதந்திரம் உடையது.
It manifests its potentiality of movement.
தன் (பீஜமான) வித்தான சக்தியை வெளிப்படுத்தவல்லது.
A Brahman may be compelled by Prakriti.
பிரம்மத்தை பிரகிருதி கட்டாயப்படுத்தலாம்.
In that case, it is not Brahman.
அது உண்மையானால், அது பிரம்மமில்லை.
But it is an inert Infinite.
அது ஜடமான அனந்தம்.
It has an active content in it.
தன்னுள் ஜீவனுள்ளது அந்த ஜடம்.
It is more powerful than its continent.
பாத்திரத்தை விட அது சக்தி வாய்ந்தது.
It is a conscious holder of Force.
சக்தியைத் தன்னுள் அடக்கியுள்ளது.
But his Force is his master.
ஆனால் சக்தியே பெரியது.
We may say, it is compelled by itself as Force.
பிரம்மம் அதன் சக்தியால் ஆளப்படுகிறது எனலாம்.
It is done so by its own nature.
தன் சுபாவத்தால் அப்படிச் செயல்படுகிறது.
Even then, we do not get rid of its contradictions.
அப்படியும் பிணக்குகள் அழியவில்லை.
Our first postulate is evaded thus.
நம் ஆரம்பத் தத்துவத்தை நாம் கை விடுவதாகும்.
This takes us back to an Existence.
நாம் மீண்டும் சத் புருஷனிடம் வருகிறோம்.
It is really nothing but Force.
அது சக்தியன்றி வேறன்று.
It is Force at rest.
சலனமற்ற சக்தியது.
It may be Force in movement.
சலனத்திலுள்ள சக்தியாகவுமிருக்கலாம்.
Perhaps it is absolute Force.
தூய்மையான சக்தியாக இருக்கலாம்.
But it is not absolute Being.
தூய்மையான புருஷனாக இருக்கலாம்.
Page No. 84
Para No. 12
 
Next is the relationship between Force and Consciousness.
சக்திக்கும் ஜீவியத்திற்கும் என்ன தொடர்பு?
What is consciousness?
ஜீவியம் எனில் என்ன?
Mental waking consciousness is consciousness for us.
விழிப்பில் நாம் நம்மை அறிவது ஜீவியம்.
Man possesses it in his bodily existence.
உடலின் வாழ்வில் நாம் அதை அறிவோம்.
It is during the major part of his life.
நம் வாழ்வில் பெரும் பகுதி அது.
His methods of sensation are superficial.
உணர்வு பெறுவது மேலெழுந்தவாரியானது.
Sleep deprives him of this sensation.
தூக்கத்தில் உணர்விருக்காது.
It can also be deprived otherwise.
வேறு வகையாகவும் உணர்வை இழக்கலாம்.
Even when stunned, man loses it.
திகைப்பிலும் உணர்வு மாறும்.
This is a narrow sense.
இது குறுகிய பார்வை.
Thus consciousness is an exception, not the rule.
எனவே ஜீவியம் என நாம் கூறுவது விலக்கு, சட்டமில்லை.
This is the order of the material universe.
இதுவே ஜட உலகின் சட்டம்.
We do not always possess it.
எந்நேரமும் ஜீவியமிருக்காது.
This is a vulgar shallow idea.
இது மூட நம்பிக்கை.
Thus we understand the nature of consciousness.
ஜீவியத்தை இந்த விதமாக நாம் அறிகிறோம்.
This colours our thought.
நம் எண்ணம் இப்படி மாசுபடுகிறது.
Our associations are governed by it.
நம் எண்ணங்களும், உணர்வுகளும் இதனால் பாதிக்கப்படுகின்றன.
Now we think philosophically.
தத்துவத்திற்கு வருவோம்.
This vulgar idea must go away from here.
மூட நம்பிக்கை விலக வேண்டும்.
Sleeping is an unconscious state.
தூக்கம் உணர்வற்ற நிலை.
At least it is apparently so.
பார்வைக்கு அப்படித் தோன்றும்.
When drugged, we are equally so.
மருந்தால் மயக்கமுற்றாலும் அப்படியே தோன்றும்.
In a swoon, we have no consciousness.
மயக்கமடைந்தாலும் உணர்விருக்காது.
While stunned, we lose consciousness.
திகைத்தால் உணர்வு மரத்துப் போகும்.
At all these times, there is something in us.
இந்நிலைகளிலெல்லாம் நாமிருக்கிறோம்.
It is conscious when we are ‘unconscious’.
நாம் உணர்வற்ற நிலையிலும் உயிரோடிக்கிறோம்.
These are the unconscious states of our being.
நாம் உணர்வை இழந்த நிலைகள் இவை.
It is the physical being.
அது உடல்.
We call our waking state conscious.
நாம் விழிப்பாக உள்ளபொழுது உணர்வோடிருப்பதாக நினைக்கிறோம்.
It is only a small selection from the whole.
பெரிய முழுமையிலிருந்து எடுத்த சிறு பகுதி இது.
The whole is the entire conscious being.
முழுமை என்பது ஜீவனுள்ள முழு ஜீவன்.
That is what the old thinkers said.
அதையே தத்துவ ஞானிகள் கூறினர்.
We are now sure of it.
இன்று அது உண்மை எனத் தெரிகிறது.
This is not even our whole mentality.
இது நம் முழு மனமில்லை.
It is only the surface.
இது மேல்மனம்.
There is the subliminal.
அடிமனம் உண்டு.
It is behind it.
அது பின்னாலுள்ளது.
It is much vaster.
அது பரந்தது.
It is also subconscient.
அது ஆழ்மனம்.
Both are the greater parts of ourselves.
இரண்டும் நம் பெரும் பகுதிகள்.
They contain height.
நம் உயர்வுள்ள இடங்கள் அவை.
Profundities too are in it.
நம் பெருமைகள் உள்ளதும் இங்கேதான்.
No man has yet fathomed it or measured it.
எவரும் இதைக் கண்டதில்லை, அளந்ததில்லை.
Page No. 85
Para No. 13
 
Materialism speaks of extension of consciousness.
ஜீவியம் பரந்து விரிகிறது என நாத்திக வாதம் கூறுகிறது.
To them, it is a material phenomenon.   
அது ஜடமான நிகழ்ச்சி என்கிறார்கள் அவர்கள்.
They are inseparable from our physical organs.
நம் உறுப்புகளினின்று பிரிக்க முடியாதவை என்கின்றனர்.
It is their result.
இது அதனுடைய பலன்.
It is not their utiliser.
அவற்றைப் பயன்படுத்துவது இது இல்லை.
This is an orthodox contention.
இது சம்பிரதாயமான வாதம்.
Knowledge is increasing like a tide.
அறிவு அலைகள் பெருகுகின்றன.
This does not hold against new knowledge.
ஆனால் புது ஞானத்தை இது தடை செய்யாது.
Orthodox view explains more and more.
சம்பிரதாயம் மேலும் மேலும் பேசுகிறது.
These explanations are less adequate.
ஆனால் விளக்கம் போதாது.
They strain more and more to explain.
விளக்கம் எழுவது சிரமமாக இருக்கிறது.
We now see a greater truth.
ஒரு பேருண்மை தெரிகிறது.
Our total consciousness has a capacity.
நம் ஜீவியத்திற்குத் திறனுண்டு.
Our parts of the body and being have a capacity.
நம் உடலுறுப்புகட்கும், ஜீவனுக்கும் திறனுண்டு.
Our organs, senses, nerves and the brain are there.
உறுப்புகள், புலன்கள், நாடி, நரம்பு, மூளை அவ்வுறுப்புகளாகும்.
One exceeds the other.
இவற்றைக் கடந்தது ஜீவியத்தின் திறன்.
Do these organs generate those capacities?
இவ்வுறுப்புகள் அத்திறன்களை உற்பத்தி செய்கின்றனவா?
These organs are only their habitual instruments.
உடலுறுப்புகள் பழக்கத்திலுள்ள கருவிகளாகும்.
They do not generate those capacities.
அவற்றால் திறனை உருவாக்க முடியாது.
Consciousness uses the brain.
ஜீவயம் மூளையைப் பயன்படுத்துகிறது.
The upward strivings of the brain do not produce the consciousness.
மூளையின் ஆர்வமான எழுச்சி ஜீவியத்தை உற்பத்தி செய்வதில்லை.
Brain has not produced consciousness.
மூளை ஜீவியத்தை உற்பத்தி செய்யவில்லை.
Nor does the brain use the consciousness.
மூளை ஜீவியத்தைக் கருவியாகப் பயன்படுத்துவதுமில்லை.
Consciousness produces the brain for its use.
ஜீவியம் தன் வேலைக்காக மூளையை உற்பத்தி செய்தது.
We see this in abnormal instances.
அரிதான நேரத்தில் நாம் இதைக் காண்கிறோம்.
They prove our organs are dispensable.
நம் உறுப்புகள் இன்றியமையாதவையில்லை என அவை                          அறிவுறுத்துகின்றன.
The heartbeat is not essential to life.
இதயத்துடிப்பு உயிருக்கு இன்றியமையாததில்லை.
Breathing too is not essential to life.
மூச்சும் உயிருக்குத் தேவையில்லை.
The organised brain cells are not necessary to thought.
வளர்ந்த மூளைச் செல்கள் சிந்திக்கத் தேவையில்லை.
An engine is constructed.
ஒரு என்ஜினைச் செய்கிறோம்.
There is its motive power of steam or electricity.
அதை ஓட்டும் நீராவி அல்லது மின்சாரமுள்ளது.
The engine does not cause the steam.
நீராவியை எஞ்சின் உற்பத்தி செய்யாது.
Nor does it explain it.
என்ஜின் நீராவி எப்படி வந்தது எனவும் கூறாது.
Similarly, our physical organism does not explain thought.
அதேபோல் நம் உடலுறுப்பு எண்ணம் எழுந்த வகையை அறியாது.
Nor does it explain consciousness.
அவை ஜீவியத்தையும் அறியா.
The force is anterior.
சக்தி முந்தையது.
Not the physical instrument.
உறுப்பன்று.
Page No. 86
Para No. 14
 
Momentous logical questions follow.                 
பெரிய பிரச்சினைகள் எழுகின்றன.
We see inertia and inanimation.            
ஜீவனற்ற தமஸைக் காண்கிறோம்.
Mental consciousness exists there.
அவற்றுள் மனத்தின் ஜீவியம் காணப்படுகின்றது.
If so, what about material objects?
அது உண்மையெனில், ஜடப்பொருளைப் பற்றி என்ன சொல்வது?
Is there a mind present there?
அவற்றுள் மனம் உண்டா?
Would it be universal subconscious mind?
அது பிரபஞ்சத்தின் ஆழ் மனமாகுமா?
It is incapacitated to act?
அதனால் செயல்பட முடியாதா?
Is it unable to communicate itself to the surface?
அதனால் மேல் மனத்துடன் பேச முடியாதா?
Can we say, it is due to want of organs?
உறுப்பில்லாததால் முடியாது என்று சொல்லலாமா?
What about the material state?
ஜடத்தின் நிலையைப் பற்றி என்ன சொல்வது?
Is it empty of consciousness?
அதற்கு ஜீவியமில்லையா?
Or, does consciousness sleep there?
அல்லது அங்கு ஜீவியம் துயிலுறுகிறதா?
What is it from the point of view of evolution?
பரிணாமப் பார்வையில் அது என்ன?
It is an original sleep.
அது அடிப்படையில் உறக்கம்.
It is not an intermediate sleep.
அது அரைத் தூக்கமன்று.
What is sleep?
தூக்கம் என்பது என்ன?
Let us learn from the human example.
மனித உதாரணத்திலிருந்து நாம் அறிய முயல்வோம்.
Sleep is not a suspension of consciousness.
தூக்கத்தில் ஜீவியம் நின்று போகவில்லை.
It is a gathering inward away from response.
செயலிலிருந்து விலகிச் சேர்ந்து ஒதுங்குவதாகும்.
At least from conscious physical response.
பதில் பேசும் நிலையினின்று விலகுவது தெரிகிறது.
The impact of external things does not evoke responses.
புற நிகழ்ச்சிகளின் மோதல் அதைச் செயல்படுத்துவதில்லை.
There is existence with no means of communication.
பேசும் திறனற்று வாழ்வுள்ளது.
They have not yet developed those means for outward communications.
புறத் தொடர்பை ஏற்கும் திறனை அவை இதுவரை பெறவில்லை.
The world is external and physical.
உலகம் என்பது புறம், ஜடம்.
Existence needs communication with this world.
வாழ்வுக்கு இதன் தொடர்பு அவசியம்.
Their position is this inability.
திறனற்ற நிலையே அதன் உண்மை நிலை.
Much of existence sleeps.
வாழ்வு தூக்க மயக்கத்திலுள்ளது.
Does something awake in them?
அதனுள் விழிப்பானதுண்டா?
Is it conscious?
அது ஜீவனுள்ளதா?
Is it Purusha or Soul?
அது புருஷனா? ஆத்மாவா?
Page No. 86
Para No. 15
 
We may go farther.                              
மேலும் ஆராய்வோம்.
We speak of subconscious mind.                     
நாம் ஆழ்மனத்தைப் பற்றிப் பேசுகிறோம்.
It is not different from our mentality.
அது நம் மனத்திலிருந்து வேறுபட்டதில்லை.
Only it is acting below the surface.
அது கீழே செயல்படுகிறது.
It is unknown to the waking man.
விழிப்பில் அது தெரியாது.
It has a deeper plunge.
அதற்கு ஆழமுண்டு.
And it has a vaster scope.
அது பரந்தது.
Subliminal is a different phenomenon.
அடிமனம் வேறுபட்டது.
It far exceeds the limits of this definition.
இந்த விளக்கங்களையெல்லாம் கடந்தது.
Its capacity is immensely superior.
அதன் திறமை பெரியது. வலிமையுள்ளது.
It is quite different in kind.
அதன் போக்கே வேறு.
It is different from our mentality.
நம் மனப்பான்மையிலிருந்து வேறுபட்டது.
Our mentality is in our waking self.
மனப்பான்மை விழிப்புக்குரியது.
If a subconscious is there, there must be a superconscious.
ஆழ்மனமிருந்தால், அதற்கு எதிரானதிருக்க வேண்டும். (அது பரமாத்மா)
That is, the conscious faculties have a range.
அதாவது ஜீவியம் பல நிலைகளிலுள்ளது.
There is organisation of consciousness.
ஜீவியம் திறனாக முறைப்படுத்தப்பட்டுள்ளது.
It rises high above the psychological stratum.
மனம் என்ற நிலையை அதிகம் கடந்தது.
We call that mentality.
அதை மனப்பான்மை என்கிறோம்.
The subliminal rises to the superconscious.
அடிமனம் உயர்ந்து பரமாத்மாவை எட்டும்.
So, it can sink into the subconscious.
அடிமனம் ஆழ்ந்து ஆழ்மனத்தைத் தொடும்.
Are there forms of consciousness that are submental?
ஜீவியத்திற்குப் பல உருவங்களுள்ளதுபோல், அதற்கு உபநிலைகளுண்டு.
We call them vital and physical consciousness.
அவற்றைப் பிராணன், உடல் என்கிறோம்.
Consciousness is confined by us to man and animal.
ஜீவியம் மனிதனுக்கும், விலங்குகட்கும் மட்டும் உண்டு என நினைக்கிறோம்.
We may suppose a force in the plant and metal.
தாவரத்திலும், உலோகத்திலும் சக்தியிருப்பதாகக் கொள்ளலாம்.
We can call that force too consciousness.
அது ஜீவிய சக்தி - சித்-சக்தி - எனவும் கூறலாம்.
Page No. 87
Para No. 16
 
This is probable.                      
இப்படியிருக்கலாம்.
Let us dispassionately consider it.                    
நிதானமாக ஆலோசனை செய்வோம்.
It is certain.
அது நிச்சயம்.
In us there is a vital consciousness.
நம்முள் பிராணனுண்டு.
It acts in the cells of the body.
அது உடலின் செல்களில் செயல்படுகிறது.
The automatic vital functions are by them.
தன்னிச்சையான செயல்கள் அவற்றால் இயங்குகின்றன.
Thus we go through purposeful movements.
அதன் செயல்கட்குக் காரணம் உண்டு.
Thus attractions and repulsions are obeyed.
எனவே விருப்பு வெறுப்புக்கேற்ற செயல் உண்டு.
Our minds are strangers to them.
நாம் அவற்றிற்கு விலக்கு.
It is more important in the animals.
விலங்குகளில் இதை அதிகம் காணலாம்.
In plants, it is intuitively evident.
மரம் செடி கொடிகளில் இது இயல்பாக இருப்பதைக் காணலாம்.
The movements of the plant are not mentality.
தாவரத்தின் அசைவுகள் மனப்பான்மையாகாது.
Plants seek or shrink.
தாவரம் சுருங்கும் அல்லது வளைந்து நீளும்.
They have pleasure and pain.
அவற்றிற்கு இன்ப துன்பம் உண்டு.
They sleep and are awake.
விழிப்பும் துயிலும் உண்டு.
They have all that strange life.
வினோதமாக அவ்வாழ்வுண்டு.
An Indian scientist demonstrated this.
இந்திய விஞ்ஞானி ஒருவர் இதை விளக்கினார்.
All these are movements of consciousness.
இவை ஜீவியத்தின் செயல்கள்.
But they are not of mentality.
அவை மனப்பான்மையில்லை.
Then, there is a submental vital consciousness.
பிராணனில் மனத்தின் பகுதியுண்டு.
It is precisely like the mental.
அது மனம் போலவேயிருக்கும்.
But it is different.
ஆனால் மாறுபட்டது.
Different in constitution of self-experience.
தன்னையறிந்து அனுபவம் பெறுவதில் அது மாறுபடும்.
The superconscient also so differs.
(பரமாத்மா) நம்மினும் உயர்ந்ததும் மாறுபடும்.
It too differs in constitution and self-experience.
அவை அமைப்பிலும், சுய அனுபவத்திலும் மாறுபடும்.
Page No. 87
Para No. 17
 
Consciousness has a range.                
ஜீவியத்திற்குள்ள நிலைகள் பல.
We recognise it in sub-animal life.                    
விலங்குக்குக் கீழ்ப்பட்டவற்றில் நாம் இதைக் காண்கிறோம்.
Does it stop with that?
அவற்றுடன் ஜீவியம் முடிகிறதா?
If so, this is a force alien to matter.
அப்படியானால், இச்சக்தி ஜடத்தைச் சேர்ந்ததில்லை.
It has entered into Matter.
அது ஜடத்துள் நுழைந்தது.
It has occupied Matter.
அது ஜடத்தை நிரப்பியது.
Perhaps, it came from another world.
வேறு உலகினின்று வரும் சக்தியோ?
From where can it come?
எங்கிருந்து அது வரமுடியும்?
The ancient thinkers believed in such a thing.
பழைய ரிஷிகள் அப்படி நினைத்தனர்.
It sustains life and consciousness in us.
நம் வாழ்வுக்கும் ஜீவியத்திற்கும் அவை ஆதரவு.
They can even call it out by their pressure.
அவர்களுடைய அழுத்தத்தாலும் அவை வெளிவரலாம்.
But they do not create it by their entry.
உள்ளே நுழைந்து இதை உற்பத்தி செய்வதில்லை.
If something is in Matter, it can evolve.
ஜடத்தில் உள்ளது, பரிணாமத்தால் வெளிவரும்.
If it is not already there, it cannot evlove.
ஏற்கனவே ஜடத்திலில்லாவிட்டால், பரிணாமத்தால் வெளிவர முடியாது.
Page No. 87
Para No. 18
 
Why should we suppose life stops here or anywhere?       
உயிர் இங்கே முடிகின்றது என ஏன் சொல்ல வேண்டும்.
Neither does the consciousness need to do so.
ஜீவியமும் அப்படி முடிய வேண்டியதில்லை.
Because it is material, it is not so.
ஜடம் என்பதால், அப்படியில்லை.
Recent research and thought speak out.
சமீப கால ஆராய்ச்சியும், சிந்தனையும் பேசுகின்றன.
They speak of life in metal and earth.
மண்ணிலும், உலோகத்திலும் ஜீவனிருப்பதாகக் கூறுகின்றனர்.
It is the obscure beginning of life.
அது குருட்டுத்தனமாக வாழ்வு எழுமிடம்.
Maybe a sort of inert consciousness it is.
ஜீவனற்ற ஜீவியம் எனக் கூறலாமா?
Or a suppressed one in there.
அல்லது ஒடுக்கப்பட்டது எனலாமா?
Not only in metal but in ‘inanimate’ forms too.
உலோகம் மட்டுமன்று, ஜீவனற்றதுள்ளும் உயிர் இருப்பதாகக் கூறுகின்றனர்.
At least the first forms of consciousness are there.
ஜீவியத்தின் ஆரம்பம் இருப்பதாகக் கொள்ளலாம்.
I have called something consciousness.
நாம் ஜீவியம் என ஒன்றைக் கூறுகிறோம்.
I recognise it as such.
அதை நான் அப்படி உணர்கிறேன்.
It is my conception.
எண்ணம் அப்படி என்னில் உருவாகியுள்ளது.
Only in the plant, we can recognise it.
மரத்தில் நாம் இதைக் காண முடியும்.
Matter is an inert form.
ஜடம் ஜீவனற்றது.
It is difficult to understand it.
அதைப் புரிந்து கொள்வது சிரமம்.
It is difficult to imagine too.
அதைக் கற்பனை செய்வதும் சிரமம்.
Therefore we think it is right to deny.
எனவே அது இல்லை என்று கூறுவதைச் சரி என நினைக்கிறோம்.
We have pursued consciousness thus far.
இதுவரை ஜீவியத்தைத் தொடர்ந்தோம்.
It is very far in Nature.
இயற்கையில் அது தூரம்.
Maybe so far into its depths.
ஆழ்ந்து இயற்கை தூரமாகிறது.
Now we are faced with a gulf.
எதிரே இடைவெளியுண்டு.
It is incredible.
இதை நம்ப முடியவில்லை.
The characteristic of thought is unity.
சிந்தனையின் முத்திரை ஐக்கியம்.
It finds unity everywhere.
ஐக்கியம் எங்கும் காணப்படுகிறது.
In every other phenomenon there is unity.
எல்லாம் நிகழ்ச்சிகளிலும் ஐக்கியத்தைக் காண்கிறோம்.
In one class it is apparently denied.
ஓரிடத்தில் அது காணப்படவில்லை.
Maybe it is concealed, not denied.
ஒரு வேளை மறைந்திருக்கலாம், இல்லாமலிருப்பதாக நினைக்க வேண்டாம்.
We can suppose unity is unbroken.
ஐக்கியம் எங்கும் விட்டுப் போகாமலிருப்பதாக நாம் கருதலாம்.
Then it gives us consciousness in all.
அது எங்கும் ஜீவியம் தரும்.
Forms of Force are at work in the world.
சக்தியின் உருவங்கள் எங்கும் செயல்படுகின்றன.
In all those forms there is consciousness.
அவ்வுருவங்களில் ஜீவியமுண்டு.
Thus we arrive at consciousness in all forms.
அவ்வழி எல்லா உருவங்களிலும் ஜீவியத்தைக் காண்கிறோம்.
There may be no conscient Purusha in all forms.
எல்லாவற்றிலும் புருஷனில்லாமலிருக்கலாம்.
Or superconscient Purusha may not be there.
பரமாத்மா இல்லாமலிருக்கலாம்.
There is a conscious force of being in all forms.
எல்லா ரூபங்களிலும் ஜீவனின் சக்தியுண்டு.
Their outer parts partake of that form.
அகத்திலுள்ளதை புறம் பங்கு கொள்கிறது.
It may be overt or inert partaking.
நேரடியாகவோ, ஜீவனற்றோ பங்கு கொள்கிறது.
Page No. 88
Para No. 19
 
This is a revolutionary view.                 
இது புரட்சிகரமான கருத்து.
This view changes the meaning of the word itself.
உலகைப் பற்றிய நம் கருத்தை இக்கண்ணோட்டம் மாற்றிவிடும்.
It is necessary.
இது அவசியம்.
Now consciousness is synonymous with mentality.
மனப்பான்மையும் ஜீவியமும் ஒன்றே.
It is a self-aware force of existence.
சத் புருஷனின் சக்தி தன்னையறிந்த நிலையது.
Mentality is its middle term.
மனப்பான்மை நடுவில் உள்ள சொல்.
Below mentality it is vital and physical.
மனப்பான்மைக்குக் கீழே உணர்வும், உடலும் உண்டு.
They are subconscient to us now.
நமக்கு அவை கீழ்ப்பட்டவை, நம் உணர்வைக் கடந்தவை.
Above it rises to the supramental.
மேலே சத்தியஜீவியம் உண்டு.
It is superconscient to us.
சத்தியஜீவியம் நம் அறிவு நிலைக்கு அப்பாற்பட்டது.
But in all it is one and the same thing.
எப்படியாயினும், இவையனைத்தும் ஒன்றே.
It organises itself differently.
வெவ்வேறு வகையாகத் தோற்றம் தெரிகிறது.
This is the Indian conception of Chit.
இதுவே சித் என்பது இந்திய யோக மரபு.
Chit is energy and creates the worlds.
சித் என்பது சக்தி, உலகைச் சிருஷ்டிக்கின்ற சக்தி.
We arrive at unity from the other end.
அடுத்த முனையில் நாம் ஐக்கியத்தைக் காண்கிறோம்.
Materialistic Science perceives it.
விஞ்ஞானம் அதைக் கண்டு கொண்டது.
It finds Mind cannot be another force than Matter.
மனம், ஜடத்திலிருந்து வேறுபட்டதில்லை என விஞ்ஞானம் கூறுகிறது.
It asserts that finding.
தான் கண்டதை விஞ்ஞானம் வலியுறுத்துகிறது.
To it, Mind must be a development of Matter.
மனம் ஜடத்தின் அடுத்த நிலை என விஞ்ஞானம் கூறுகிறது.
It says, it is the outcome of material energy.
மனம் ஜடத்திலிருந்து எழுவதாகக் கூறுகிறது.
Indian thought has reached the depths.
இந்திய மரபு ஆழத்தைத் தொட்டது.
Its affirmation is different.
அது கூறுவது வேறு.
To it, Mind and Matter are of the same energy.
மனமும், ஜடமும் ஒன்றே என்பது இந்திய ரிஷிகள் கண்டது.
They are only different grades.
அவை வெவ்வேறு நிலைகட்குரியன.
Both are of one conscious Force and Existence.
ஆனால் இரண்டும் ஒரு சத் புருஷனுடைய ஜீவிய சக்தியாகும்.
They are of different organisations.
அவற்றின் அடிப்படைக் கட்டுக்கோப்பான அமைப்புகள் வேறு.
Page No. 88
Para No. 20
 
We describe here Consciousness as Force. 
இங்கு ஜீவியத்தை சக்தி என்கிறோம்.
Is this a just description for this Force?
இது சரியான விளக்கமா?
Do we have a right to it?
இப்படிக் கூறும் உரிமை நமக்குண்டா?
Consciousness has three attributes.
ஜீவியத்தின் அம்சங்கள் மூன்று.
They are intelligence, purposefulness, self-knowledge.
புத்தி, நோக்கம், விழிப்புணர்வு ஆகிய மூன்றாகும்.
They may take different form from our mentality.
நம் மனப்பான்மையிலிருந்து மாறிய தோற்றங்களை அவை பெறலாம்.
Even from this point of view, we are right.
இப்படிப் பார்த்தாலும், நாம் செய்வது சரி.
Everything supports our description.
நம் விளக்கத்திற்கு அனைத்தும் ஆதரவு தரும்.
Nothing contradicts our position.
நாம் கூறுவதை மறுப்பவர் எவருமிலர்.
Our idea is a universal conscious Force.
பிரபஞ்சத்தின் ஜீவிய சக்தி என்பதே நம் தெளிவு.
For instance, let us consider the animal.
விலங்கை நினைத்துப் பார்ப்போம்.
Operations are perfectly purposeful.
விலங்கினத்தின் செயல்களுக்கு நோக்கமுண்டு.
They are even exact.
அவை துல்லியமானவை.
The knowledge here is scientifically minute.
அவை பெற்றுள்ள அறிவு விஞ்ஞான நுணுக்கத்திற்குரியது.
They are quite beyond animal mentality.
விலங்கின் அறிவுக்கு எட்டமுடியாத நிலை.
Man himself can acquire only by long culture.
மனிதன் இத்திறனைப் பெற நெடுநாள் பயில வேண்டும்.
Equally long education is needed for him.
கல்வியின் மூலம் பயின்றாலும் பயிற்சி அதிக நாள் தேவை.
When he uses them, he will be less exact.
அப்படிப் பயின்ற பின்னும் மனிதனுக்கு அது தெளிவாக வாராது.
He will be much less sure in his speed.
அவனது வேகமும் குறையும்.
Here is a proof.
ஒரு நிரூபணம் உண்டு.
There is a general fact.
ஒரு பொது உண்மையுண்டு.
It proves the conscious Force at work.
அது ஜீவியசக்தி செயல்படுவதைக் காட்டும்.
It is in the animal and the insect.
அது விலங்கிலும், பூச்சிகளிலும் உண்டு.
This exceeds the greatest known intelligence.
இதுவரை நாமறிந்த புத்தியைக் கடந்த திறன் அது.
It is more purposeful.
அதற்குச் சரியான நோக்கம் உண்டு.
It is more intelligent.
அதன் புத்திசாலித்தனம் அதிகம்.
It is more aware of its intention.
இயற்கையின் இலட்சியத்தை அது அதிகமாக அறியும்.
It takes care of its ends, means and conditions.
நிலைமை, முறை, முடிவுகளை கவனமாகப் பாதுகாக்கிறது.
No such mentality is yet manifested on earth.
அதுபோன்ற மனப்பான்மை இதுவரை உலகில் எழவில்லை.
Inanimate Nature operates this way.
ஜடமான இயற்கை இதுபோல் செயல்படுகிறது.
Here is a characteristic.
அதன் முத்திரையை இங்குக் காண்போம்.
It pervades the operations.
செயல்களை அதன் தன்மை ஊடுருவுகிறது.
It is supreme hidden intelligence.
உன்னதமான ஞானம் மறைந்துள்ள நிலையில் காணப்படும்.
It is ‘hidden in the modes of its own working’.
தன் செயலினுள் மறைந்துள்ள ஞானம்எனக் கூறப்படும்.
Page No. 89
Para No. 21
 
There is one argument against.             
அதற்கெதிரான சொல் ஒன்றுண்டு.
We say it is a conscious intelligent source.           
அது அறிவுள்ள, தன்னையறிந்த ஊற்று என்கிறோம்.
It is for this purposeful work.
ஒரு குறிக்கோளுக்காக வேலை செய்வது எனலாம்.
It is a work of intelligence, selection, adaptation and seeking.
புத்திசாலித்தனம், தேர்ந்தெடுப்பது, மாற்றிக் கொள்வது, தேடல் என்பது சேர்ந்த நிலையாகும்.
That element too is in Nature’s operation.
இயற்கையின் தொழிற்பாட்டில் அனைத்தும் காணப்படுகின்றன.
We call that argument waste.
விரயம் என நாம் அதைக் கூறுகிறோம்.
Ours is human intellect.
நம் அறிவு மனித அறிவு.
It is obviously limited.
அதற்கு அளவுண்டு என்பது தெளிவு.
Human mind is rational.
மனித மனம் பகுத்தறியும்.
But its rationality is particular.
அதன் பகுத்துணரும் தன்மை குறிப்பானது.
It is good enough for human ends.
அது மனித இலட்சியங்கட்குப் போதும்.
It applied that rationality to the World-Force.
அதை உலகத்தின் செயலுக்கு உபயோகப்படுத்துகிறது.
We see only part of Nature’s purpose.
நாம் இயற்கையின் நோக்கத்தில் ஒரு பகுதியையே காண்கிறோம்.
We call the rest waste.
மற்றதை விரயம் என்கிறோம்.
We do so because the rest is not useful.
மீதி பயன்படவில்லை என்பதால் அப்படிக் கூறுகிறோம்.
Our own human action is like that.
மனிதன் செய்யும் காரியங்கள் அத்தகையவை.
It is full of apparent waste.
பார்வைக்கு ஏராளமான விரயம் தோன்றும்.
It is right for the individual.
தனி மனிதனுக்கு அது சரி.
But it subserves the universal purpose.
உலகத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவும்.
We can detect that part of the intention.
அக்கருத்தையும் நாம் கண்டு கொள்ள முடியும்.
Nature gets done enough.
இயற்கையின் காரியங்கள் முடிகின்றன.
In spite of the waste much gets done.
விரயமிருந்தாலும், வேலை நடக்கிறது.
Perhaps because of the waste much is accomplished.
விரயமிருப்பதால் அதிகக் காரியம் முடிகிறது.
There is the other part we do not detect.
நாம் காணாத பகுதியுண்டு.
We may well trust Nature here too.
இங்கு இயற்கையை நாம் நம்பலாம்.
Page No. 89
Para No. 22
 
Let us consider the rest.                       
மீதியை ஆராய்வோம்.
Nature has her drive of set purpose.     
இயற்கைக்கு ஏற்பட்ட இலக்குண்டு.
It is apparantly a blind tendency.
பார்வைக்கு அது குருட்டு நோக்கமாகத் தோன்றும்.
It appears to guide Nature.
அது இயற்கையை நடத்திச் செல்வதாகத் தெரிகிறது.
This is the characteristic of Nature.
இது இயற்கையின் சுயமான இயல்பு.
Eventually She comes to the target set.
எப்படி இலக்கை எட்டுகிறது?
She does so immediately.
உடனேயும் எட்டுகிறது.
The World-Force operates in the animal.
உலக சக்திகளை நாம் விலங்கில் காண்கிறோம்.
It does so in the plant.
தாவரத்திலும் அது உண்டு.
In inanimate things too it operates.
ஜடத்திலும் அது செயல்படுகிறது.
Matter was the Alpha and Omega to the scientist.
விஞ்ஞானிக்கு ஜடமே ஆதியும் அந்தமும்.
They are reluctant to admit intelligence to Nature.
இயற்கைக்குப் புத்தியுண்டு என நம்மால் ஏற்க முடியவில்லை.
Nature’s intelligence is the mother of intelligence.
இயற்கையின் புத்தி, புத்தியின் உற்பத்தி ஸ்தானம்.
It was an honest scruple.
இத்தயக்கம் நியாயமானதே.
But it is no more so.
இனி அப்படியில்லை.
Now it is an outworn paradox.
இனி அது நைந்த பழங்கதை.
Scientists affirm the emergence of human intelligence.
மனிதனின் புத்தி எழுவதை விஞ்ஞானி வலியுறுத்துகிறான்.
They say it emerges out of unconsciousness.
அது ஜடத்திலிருந்து எழுவதாக விஞ்ஞானி விளக்கம் தருகிறார்.
They do so for mastery and consciousness.
ஜீவியத்திற்காகவும், வெற்றி பெறவும் அவர்கள் அதைச் செய்கிறார்கள்.
They look to blind driving unconsciousness as source.
குருட்டுத்தனமான ஜடமே ஆரம்பம் என்கின்றனர்.
No form ever existed in unconsciousness.
ஜடத்தில் ரூபமில்லை.
No substance ever existed in Nature previously.
இயற்கையில் இதற்கு முன் விஷயமில்லை.
Man’s consciousness is a form of Nature’s consciousness.
மனித ஜீவியம் இயற்கையின் ஜீவியரூபம்.
It is there below mind.
மனத்திற்குக் கீழும் உள்ளது.
It emerges in Mind.
மனத்திலிருந்து உற்பத்தியாகிறது.
It shall ascend beyond Mind.
மனத்திற்கு மேலேயும் போகிறது.
The Force that builds the world is a conscious Force.
உலகை சிருஷ்டிக்கும் சக்தி சித்-சக்தி.
Existence manifests itself in it.
சத் புருஷன் அதனுள் வெளிப்படுகிறான்.
It is a conscious Being.
அது தன்னையறிந்த புருஷன்.
Emergence in form is the sole object.
ரூபமாக வெளிவருவதே நோக்கம்.
The potentials must have a perfect emergence.
உள்ளேயுள்ளது சிறப்பாக வெளி வரவேண்டும்.
We can rationally conceive it.
நம் பகுத்தறிவுக்கு அது புரியும்.
The potentials thus manifest in this world.
உள்ளேயுள்ள வித்து உலகில் வெளிப்பட வேண்டும்.
This is a world of Forms.
இது ரூபங்களாலான லோகம்.



book | by Dr. Radut