Skip to Content

Introduction to the new forum “Pride & Prejudice for Prosperity & Accomplishment"

Pride & Prejudice
(மாம்பலம் தியான மைய சொற்பொழிவுக்கு முகவுரை)

The Life Divine அன்பர்கட்கு விளங்குவதற்காக எடுத்த முயற்சிகள் பல. இது தத்துவமான நூல். கடினமானது. இந்த நூல் எவருக்கும் விளங்கவில்லை என பகவானே ஒரு சமயம் கூறினார். நூல் வாழ்வைப் பற்றியது. வாழ்வு அனைவருக்கும் உள்ளது. அதனால் வாழ்வு புரிய வேண்டும். வாழ்வு புரியுமானால் நூல் புரியும் என நான் கொண்டு நூலின் தத்துவங்களை வாழ்வு மூலம் அறிய முயன்ற என் அனுபவங்களை தமிழில் பல நூல்களாக எழுதினேன். அதன் வழி திருப்தியடையாததால் "எங்கள் குடும்பம்" இரண்டு பாகம் மூலம் ஒரு கதை எழுதி, தத்துவங்களை விளக்கினேன், அதுவும் பூரண திருப்தி அளிக்கவில்லை. அதனால் 7, 8 ஆண்டுகளாக Pride and Prejudice கதை மூலம் The Life Divine தத்துவங்களை விளக்க முயன்று சுமார் 2400 நிகழ்ச்சிகளை எடுத்து அதன் உட்கருத்தை எழுதினேன். இந்த சொற்பொழிவில் அவற்றை விளக்க முற்படுகிறேன். அதை தொடர்ந்து முதல் 150 பக்கங்களில் ஒரு 6000 தத்துவங்களை தனியாகவும் நிகழ்ச்சி மூலமாகவும் கூற முயல்கிறேன். 8 reversals தலைகீழ் மாற்றங்களை நான் முக்கியமாக எழுதுகிறேன். இக்கதையில் 6 மாற்றங்கள் எழுகின்றன. அவற்றை விளக்கியுள்ளேன். 8 தலைகீழ் மாற்றமும் புரிந்தால் நூலில் புரியாதது எதுவுமிருக்காது. நூல் புரிய முக்கியமான நிபந்தனைகள் பல.

  1. பூரண சத்தியம்.
  2. இதுவரை நாமறிந்தவற்றை விட்டு அறவே விலகுதல்.
  3. எந்த நேரத்திலும் உஷாராக இருப்பது.
  4. அன்னையை நினைக்காமல் எந்த சிறு காரியத்தையும் செய்வதில்லை.

இக்கதை 18ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டது, பிரஞ்சுப் புரட்சி நடக்கும் நேரம். அது இங்கிலாந்துக்கு வரக்கூடாது என உயர்குடி மக்கள் மற்றவர்களை ஏற்று புரட்சியை தவிர்க்க முயன்றனர். இக்கதை அதன் பிரதிபலிப்பு. பெரும் ஜமீன்தார் டார்சி. சிறு ஜமீன்தார் மகளை அன்பிற்காக மணக்க விருப்பப்பட்டது கதை.

கதையை நாம் கதையாகப் படிக்கலாம். கதை புரியும், கதைக்குப் பின்னணியாக சமூகமும், அதன் பின் வாழ்வும், உள்ளன, கதையின் சூட்சுமம் சமூகத்தை அறிவதிலும், கதையின் பூரணம் வாழ்வை அறிவதிலும் உள்ளது. இதைப் பலவாறாகப் பூர்த்தி செய்யலாம். ஒவ்வொரு பாத்திரத்தையும் அடுத்த பாத்திரங்கள் மூலம் அறிவதும், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் இதர நிகழ்ச்சிகள் மூலம் அறிவதும் இதற்கு உதவும். டார்சி எலிசபெத்தை விரும்புகிறான். அவள் அவனை வெறுக்கிறாள். நிலைமை மாறி வெறுத்தவள் டார்சியை ஏற்க முடிவு செய்வதால் 50 பவுன் வருமானமுள்ள அவளுக்கு 10,000 பவுன் வருமானம் வருகிறது. யோக பாஷையில் இவள் உணர்வி(vital)லிருந்து அறிவுக்கு வருகிறாள். அது எளிய முயற்சியல்ல. பெருமுயற்சி. ஆனால் முதல் படி. அம்முயற்சிக்கு அவள் பெற்ற பலனிது. அன்பர்கள் அது போன்ற முயற்சியை மேற்கொண்டால் அதே போன்ற பலன் வரும். அவளுக்கு டார்சி மீது பிரியம் வரவில்லை. வெறுப்பு மறைகிறது. டார்சிக்கு அவள் மீது தீராக்காதல். அதையடைய அவன் பிரம்ம பிரயத்தினம் செய்கிறான். அவன் 8 கட்ட தலைகீழ் மாற்றங்களில் 6 அல்லது 7 கட்டங்களைத் தாண்டுகிறான். பிரெஞ்சுப் புரட்சி பின்னணியிலிருப்பதால், பெரும் ஜமீன்தார்கள் உயிரும், உடமையும் ஆபத்திற்கு உட்பட்டிருப்பதால் சிறு ஜமீன்தார் மகளுக்கு பெரும் வாய்ப்பு வந்தது.

  • முயற்சி செய்தது டார்சி.
  • பலன் பெற்றது எலிசபெத்.

அன்னை சூழல் பின்னணியிலிருப்பதால் அன்பர்கள் டார்சி காதலுக்காக எடுத்த முயற்சியை சுபிட்சத்திற்காக எடுத்தால் நான் வெகு நாளாக கூறி வரும் பெரும் பலன் 1 ஆண்டில் கிடைக்கும். எலிசபெத்தின் முயற்சி சிறியது. அம்முயற்சிக்கு அவள் 200 மடங்கு வருமானம் பெருகுவதைக் கண்டாள்.

  • அன்பர்கள் டார்சியைக் கடந்து முயல வேண்டும்.
  • குறைந்த பட்சம் டார்சி அளவாவது மனம் மாற வேண்டும்.

 



page | by Dr. Radut