Skip to Content

Volume I Chapter 01: Bingley Arrives in Meryton

 

Chapter 1: Bingley Arrives in Meryton

மெரிடனில்பிங்கிலியின்வருகை

Summary: We are introduced to Mr. and Mrs. Bennet, of Longbourn Estate. Mrs. Bennet has interesting news that a wealthy gentleman from the north is about to arrive in Netherfield, and move in to a nearby estate. She immediately plans to marry him to one of her five daughters. She asks her husband to call on the new neighbor Bingley as soon as he arrives. She reminds him of their daughters, while he teases her by feigning disinterest in the newcomer.
 

சுருக்கம் : லாங்பர்ன் எஸ்டேட்டை சேர்ந்த திரு. பென்னட்டும், திருமதி. பென்னட்டும் நமக்கு அறிமுகமாகின்றனர். ஒரு பெருஞ்செல்வந்தன், இங்கிலாந்து வடபகுதியிலிருந்து, நெதர்பீல்டிற்கு வந்துள்ளான், அருகிலுள்ள எஸ்டேட்டில் குடிவந்திருக்கிறான் என்று திருமதி. பென்னட் ஒரு சுவாரசியமான செய்தியைக் கொண்டு வருகிறாள். தன்னுடைய பெண்களில் ஒருத்திக்கு அவனை மணமுடிக்க உடனே திட்டம் தீட்டுகிறாள். பிங்கிலி வந்து சேர்ந்தவுடன், அவனைச் சந்திக்கச் செல்லும்படி தன் கணவனிடம் கூறுகிறாள். தங்களுடைய பெண்களை அவருக்கு ஞாபகப்படுத்துகிறாள். அவரும், தன்னுடைய அபிமான மகளான எலிசபெத்தை எல்லோரையும்விட புத்திசாலி என விவரிக்கிறார். காரணத்தை தெரிந்து கொண்டே, பிங்கிலியை சந்திக்க வேண்டிய முக்கியம் என்ன என்று கேட்கிறார்.

The comments were written as 3 sets. Two of them are translated into Tamil. The second set is not yet translated. In the next edition it will also be included.

விமர்சனம் மூன்று பகுதிகளாக எழுதப்பட்டது. அவற்றுள் முதற்பகுதியும், மூன்றாம் பகுதியும் தமிழாக்கம் செய்யப்பட்டு, ஆங்கிலமும், தமிழும் அச்சிடப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதி தமிழாக்கம் செய்யப்படவில்லை. அடுத்த வெளியீட்டில் அதுவும் தமிழில் வரும். இவ்வெளியீட்டில் இரண்டாம் பகுதி ஆங்கிலம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

1It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.
திருமணமாகாத பெருஞ்செல்வனுக்கு மனைவி தேவை என்பது உலகம் அறிந்த உண்மை
  1. Man evaluates life only from his point of view
    மனிதன் வாழ்வை தன் கோணத்தில் புரிந்து கொள்கிறான்.
  2. Life is mercenary
    ஆதாயம் நிதர்சனம்
  3. Man gloats over his mercenary success
    ஆதாயம் பலிப்பது மனிதனுக்கு அதிர்ஷ்டம்.
  4. Civilisation is born when Man acquires shame for being mercenary
    ஆதாயம் அசிங்கம் என உணர்வது நாகரீகம்.
2However little known the feelings or views of such a man may be on his first entering a neighbourhood, this truth is so well fixed in the minds of the surrounding families that he is considered as the rightful property of some one or other of their daughters.
அவனுடைய எண்ணம் என்பதை மறந்து அவன் ஒரு பெண்ணின் சொத்து என்பதை அங்குள்ள அனைவரும் உறுதியாக நம்புகின்றனர்.
  1. Presence of a tangible opportunity arouses the entire population
  2. The wish to grab another ignores the other’s view
3"My dear Mr. Bennet," said his lady to him one day, "have you heard that Netherfield Park is let at last?"
எனதருமை திரு. பென்னட் நெதர்பீல்ட் பார்க் இறுதியாக வாடகைக்கு விடப்பட்டு விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா ?என்று ஒரு நாள் திருமதி. பென்னட் கேட்கிறாள்
  1. Women hear everything that happens and every event that has not happened
  2. The woman, who waits for the man to approach her, is energetic in taking initiative
  3. Initiatives belong to women
    வேண்டியதைக் கேட்பது பெண்ணின் சுபாவம்.
  4. Energy takes initiative
    தெம்பு உந்தும்.
  5. Positive energy achieves within its context
    தெம்பு அதற்குரியதைச் சாதிக்கும்.
  6. Beyond its context even positive energy is an obstacle
    அசந்தர்ப்பம் அசம்பாவிதம்.
  7. Negative energy destroys by its initiative
    கெட்ட எண்ணம் தன்னை அழித்துக் கொள்ளும்.
  8. In a vastly positive atmosphere as in this story, negative energy by its initiative removes the negative obstacles including its own exuberant existence
    நேரம் பெரியதானால் முழு மட்டமான செயலும் முழு நல்ல பலன் எழத் தடைகளை விலக்கும்
4Mr. Bennet replied that he had not.
தனக்குத் தெரியாது என்று சொன்ன கணவரிடம் இப்பொழுதுதான் திருமதி. லாங்க் என்பவர் இவ்விஷயத்தை தன்னிடம் விவரமாகச் சொன்னதாக கூறுகிறாள். அப்படியும் மௌனமாக இருந்த திரு. பென்னட்டிடம் யார் வாடகைக்கு வரப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமா என பொறுமையிழந்தவளாகக் கேட்கிறாள்.
  1. Authority prevails
    அதிகாரம் சாதிக்கும்
  2. Authority is social, cultural, organisational, financial, parental, adult, etc
    ஊருக்கும் பணத்திற்கும் வயதிற்கும் வீட்டிற்கும் சந்தர்ப்பத்திற்கும் அதிகாரம் உண்டு.
5"But it is," returned she; "for Mrs. Long has just been here, and she told me all about it."
6Mr. Bennet made no answer.
7
"Do not you want to know who has taken it?" Cried his wife impatiently.
  1. Change needs the breaking of authority
    அதிகாரம் அழியாமல் மாற்றமில்லை.
  2. It is done clandestinely, subconsciously
    மாற்றம் மறைமுகமானது.
  3. Authority comes into existence by giving or taking
    வரவும் செலவும் அதிகாரம் தரும்.
8
"You want to tell me, and I have no objection to hearing it."
நீ சொல்ல வேண்டும் என நினைக்கிறாய். எனக்குக் கேட்பதில் எந்தவித ஆட்சேபணையும் இல்லைஎன்றார்.
 
  1. Responsibility lies with oneself even when the initiative is with others
    யார் எதைச் செய்தாலும் பொறுப்பு உடையவருக்குரியது
  2. Formal life, as in church going, is not so much religious, as a sanction by the population of the social authority of religion
    கோவிலுக்குப் போவது ஊரை ஏற்பது
9
This was invitation enough.
இது போதுமானதாக இருந்தது திருமதி. பென்னட்டிற்கு.
  1. An atmosphere of freedom unleashes Self-invitation
10
"Why, my dear, you must know, Mrs. Long says that Netherfield is taken by a young man of large fortune from the north of England; that he came down on Monday in a chaise and four to see the place, and was so much delighted with it, that he agreed with Mr. Morris immediately; that he is to take possession before Michaelmas, and some of his servants are to be in the house by the end of next week."
கேளுங்கள், இங்கிலாந்து வட பகுதியிலிருந்து ஒரு இள வயது செல்வந்தன், திங்களன்று வந்து இடத்தைப் பார்த்து விட்டு, மிகவும் பிடித்துப் போய்விட்டதால் திரு. மோரிஸிடம், தான் இந்த வீட்டை தசராவுக்குள் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக வாக்களித்துச் சென்றுள்ளான். அடுத்த வார இறுதிக்குள் அவனது பணியாளர்கள் வந்து விடுவார்கள்.
 
  1. Word of mouth is more powerful than an advertisement in The New York Times
  2. Gossip belongs to the vital body
    வதந்தி பிராணனுக்குரியது. (உயிருக்குரியது).
  3. There is only one body
    உலகில் உள்ளது ஓருடல்.
  4. Everyone is susceptible to gossip
    வதந்திக்குப் பலியாவாதவரில்லை.
  5. Social existence is energised by news
    உலகை அறிவது ஊர் செய்தியை அறிவது
  6. News travels fast as each takes initiative to go and meet another to pass on the news
    பெற்றதைப் பிறருக்கு முயன்றளிப்பதால் செய்தி விரைவாகப் பெருகுகிறது
  7. Any communication receives a dose of addition from the giver of the information
    உலவும் செய்தி உள்ளுரப் பெருகும்.
  8. Embellishment is inevitable because the energy for the news to travel comes from that expansion
    விரைவாகப் பெருக விரிவடைவது அவசியம்
  9. He who receives any information has the power of listening which he can use either to listen or to make himself scarce
    கேட்பவருக்கு கேட்கும் உரிமையுள்ளது போல் மறுக்கும் உரிமையும் உண்டு.
  10. Women hear more of the local news than men
    உள்ளூர் விஷயம் பெண்கள் அறிவது அதிகம்
  11. News spreads through women. Men are passive recipients
    செய்தி பெண்கள் மூலம் பரவும். ஆண்கள் பெற்றது அமைதி.
  12. Essentially rumour carries correct news
    வதந்தியின் கரு உண்மை
  13. Interest does not miss occasions of attraction
    கவர்ச்சி எழுந்தால் கவனம் குறையாது
  14. A neighbourhood is a social cultural unit with a dynamic personality where news from one end to another goes instantaneously
    ஒன்று போல் உணரும் மக்கட்தொகை ஊர் எனப்படும்.அங்கு செய்தி தந்தி போலப் பரவும்.
  15. Every institution like marriage is the reinforcement of the social structure
    சமூக ஸ்தாபனங்கள் சமூகத்தை உறுதிபடுத்தும்.
  16. Marriage for the woman is profession for Man.
    ஆணுக்குத் தொழில் பெண்ணுக்குத் திருமணம்
  17. Marriage of a daughter is a social goal that is actively present
    பெண்ணின் திருமணம் மனம் நிறைந்த மகிமை பெற்றது.
  18. Man is property to woman
    கணவன் மனைவிக்குச் சொத்து
  19. A woman conceding that right to another is an indication of her society’s maturity to the point of physically recognising another
    பெண் கணவனை சொத்தாகக் கருதுவது சமூகம் வளர்ச்சியடைந்து அடுத்தவரை ஏற்கும் மனநிலை உற்பத்தியாவதைக் காட்டுகிறது.
  20. It takes centuries for the woman to evolve as a wife
    பெண் மனைவியாகப் பெரு நெறி தேவை
  21. No one wants any man to have any view when they think of his usefulness. They grant none to him
    எவருக்கும் எந்த உரிமையும் தர மனிதனுக்கு மனம் இசையாது.
  22. Each man wants to be the social determinant himself
    ஊரை உள்ளே அனுமதிக்க உள்ளம் இடம் தாராது.
  23. To think and act as if the entire society exists to serve himself as he chooses is the expansive evolutionary emotion of selfishness in the period of its growth, survival, and development
    மனிதன் வளர்ந்து மலரும்பொழுது உலகனைத்தும் தனக்கு மட்டும் சேவை செய்யக் கடமைப்பட்டிருப்பதை அறியும் மனிதன் சுயநலமி
  24. Rights are granted to one by his imagination
    கற்பனையால் நிறைந்து மகிழ்ந்த மனம் அதை உரிமையாக உலகினின்று பெறும்.
  25. Any act or thought lends itself to be generalized
    பொதுவான அம்சமில்லாததில்லை
  26. Good fortune is the repository of social authority saturated with the power of social functioning
    சமூகத்தின் அதிகாரம் அதன் சக்தியாவது அதிர்ஷ்ட சாகரம்.
  27. Truth exists at all levels from Matter to Spirit. Jane Austen here speaks of social truth
    ஜடம் முதல் ஆன்மா வரை எல்லா நிலைக்குரிய சத்தியம் உண்டு.
  28. Universal acknowledgement brings universal power. Acknowledgement is power
    மனிதன் இசைவது சமூக அதிகாரம்.
  29. People enter a new neighbourhood as they have the greatest chance to make a mark there, the environment being new
    புது ஊரில் எழாத புது வாய்ப்பில்லை
  30. A neighbourhood lives off many fixed truths fixed in their minds
    ஆழ்ந்து நம்பியதை அனுபவித்து உணர்வது வாழ்வு.
11
"What is his name?"
அவன் பெயர் என்ன?
 
  1. Man is instinctively interested in what his wife knows
    அவளறிந்தது அவனுக்கு முக்கியம்.
12
"Bingley."
பிங்கிலி.
 
13
"Is he married or single?"
கல்யாணமானவனா அல்லது தனியாளா?”
  1. The only way to treat a woman is to be soft'-British saying
    பெண்ணிடம் இதமாக மட்டும் பழக வேண்டும் - பிரிட்டிஷ் பழமொழி
14
"Oh! Single, my dear, to be sure! A single man of large fortune; four or five thousand a year. What a fine thing for our girls!"
ஆஹா! தனியாள் தான். வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்தாயிரம் பவுன் வருமானம் உள்ளவன். நமது பெண்களுக்கு எவ்வளவு சிறப்பான செய்தியிது.
  1. Fortune is Man
    பணமுள்ளவன் மனிதன்.
  2. Imagination avails of imaginative opportunities exhaustively in the plane of imagination
    கற்பனை உலகில் கற்பனை வாய்ப்புகளை கற்பனை முழுவதும் அனுபவிக்கிறது.
    Exhaustive utilisation is the characteristic of power
    அடியிலிருந்து நுனி வரை அனுபவிப்பது அதிகாரம்.
    Utilisation is partial limited by capacity or interest
    திறமையுள்ளவன் ஆர்வமிருக்கும் வரை அனுபவிப்பான்.
15
"How so? How can it affect them?"
எப்படிஎப்படி இது நமது பெண்களைப் பாதிக்கும்.
 
  1. People starved of attention are creative in providing occasions for attention
    ஒதுக்கப்பட்டவர் மனம் கவனத்திற்குரிய சந்தர்ப்பங்களைக் கருத்தாக உற்பத்தி செய்யும்.
  2. No one can feel attention is enough at some point. Attention is infinite can be seen in Man requiring his lady’s attention
    கவனம் போதும் எனக் கூறியவரில்லை.
    முடிவில்லாமல் தேவைப்படுவது கவனம்.
    மனைவியின் கவனத்திற்கு ஏங்கும் மனம் முடிவு கண்டதில்லை.
16
"My dear Mr. Bennet," replied his wife, "how can you be so tiresome! You must know that I am thinking of his marrying one of them."
எனதருமை திரு.பென்னட் அவர்களே, எனது பொறுமையை நிறைய சோதிக்கிறீர்கள். நமது பெண்களில் ஒருவரை அவனுக்கு மண முடிக்க நான் ஆசைப்படுவது உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரியும் என்றாள் திருமதி. பென்னட்.
 
  1. Not fully sharing one’s enthusiasm is to be tiresome
    உற்சாகமாகப் பேசுவதை கேட்டுக் கொள்ளாவிட்டால் எரிச்சல் வரும்.
  2. Man wishes others to think his own thoughts
    அனைவரும் தன்னைப் போல் நினைக்க வேண்டும் என மனிதன் நினைப்பான்.
17
"Is that his design in settling here?"
அவன் இங்கு வசிக்க வருவதின் நோக்கம் இதுதானா?”
 
  1. The process of thinking considers alternates, accepts one and rejects the other
  2. Man rejects and disapproves of his thoughts in others
    தன்னைப் போல் பிறர் நினைப்பதை மனிதன் ஏற்பதில்லை.
  3. Sarcasm is the source of sourness
    கேலி புண்படுத்திச் சுடும்
  4. Sarcasm stings
    கேலி சுடும்.
  5. Man who is incapable of seeking pleasant relationship stings
    இனிமையில்லாவிட்டால் கடுமை எழும்.
18
"Design! Nonsense, how can you talk so! But it is very likely that he may fall in love with one of them, and therefore you must visit him as soon as he comes."
நோக்கமா, எப்படி உங்களால் இப்படிப் பேச முடிகிறது? நமது பெண்களில் ஒருவர் மீது அவன் கவனம் திரும்பி, அவன் கல்யாணம் செய்து கொள்ள விருப்பப்படலாம். அதனால் நீங்கள் கண்டிப்பாக அவனைச் சென்று சந்திக்க வேண்டும்.
 
  1. No one likes exposure
    குட்டு உடைய மனம் அனுமதிக்காது.
  2. It is not exposure that hurts, but its recognition by another
    தெரிவதல்ல பிறர் அறிவது கசக்கும்.
  3. Initiative interferes
  4. Expectation postpones
  5. Non-stop initiative is the trait of the physical
    ஜடமானவரால் எதையாவது செய்யாமலிருக்க முடியாது.
19
"I see no occasion for that. You and the girls may go, or you may send them by themselves, which perhaps will be still better, for as you are as handsome as any of them, Mr. Bingley might like you the best of the party."
அதற்கு அவசியமேயில்லை. நீ உனது பெண்களை அழைத்துக் கொண்டு சென்று வா அல்லது அவர்களே தனியாகப் போகட்டும். ஆம். அதுதான் நல்லது. ஏனெனில் நீ எல்லோரைக் காட்டிலும் அழகாக இருப்பதால் ஒருவேளை அவனுக்கு உன்னை மிகவும் பிடித்து விட்டால்.
  1. Man disapproving or disagreeing with his own thoughts in others is his effort at identification with others
    பிறருடன் ஐக்கியமாக முயலும் மனிதன் அவர்கள் எண்ணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறான்.
  2. Caustic humour is humour at others’ expense, but it is really at one’s own expense. It is indelicate insensitivity
    குத்தலாகப் பேசினால் மற்றவர் மனம் புண்படும்.
    முடிவாகப் பார்த்தால் புண்படுவது பேசியவராகும்.
  3. Neglected people intentionally prolong the conversation by pretending not to understand
    யாரும் பேசாதவன் பேச்சை வளர்க்கப் புரியவில்லை என்பான்.
  4. Offended people constantly refer to the qualities that offend
    புண்பட்டவர் புண்படுத்திய குணங்களை நாடுவர்.
  5. Women are not sacred possessions in material societies
    பொருளை முக்கியமாகக் கருதும் சமுதாயத்தில் பெண்ணுக்குப் புனிதமில்லை.
20
"My dear, you flatter me. I certainly have had my share of beauty, but I do not pretend to be any thing extraordinary now. When a woman has five grown-up daughters she ought to give over thinking of her own beauty."
  “ரொம்ப புகழ வேண்டாம். ஐந்து வளர்ந்த பெண்களை வைத்துக் கொண்டு, எனக்கு என் அழகைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை.
  1. Shameful facts can be flattering
    அசிங்கமாகப் பேசுவது கேட்க ஆசையாக இருக்கும்.
  2. Flattery never fails
  3. A woman cannot cease to think of her beauty, regardless of age
  4. Man is shrewd enough to see others’ motives
    பிறர் நோக்கத்தை அறியும் சூட்சுமம் மனிதனுக்குண்டு.
  5. Mr. Bennet sees that Mrs. Bennet values her own beauty in that of her daughters
    மனைவி பெண்கள் அழகில் தன் அழகைக் காண்கிறாள் என பென்னட் நினைக்கிறார்.
  6. Man’s self-awareness of his defects makes him ridicule it but he reveals subconsciously to himself
    தன் குறையை அறியும் மனிதன் அதைக் கேலி செய்கிறான். ஆழ் மனம் தன்னை அவனுக்குப் புரியும்படிப் பேசுகிறது.
  7. Ignorance takes offence as a compliment.
    அறிவற்றவனைத் திட்டினால் அதைக் கவனம் எனக் கொள்வான்.
    To see the aspect of compliment alone in an otherwise offensive remark is the intelligence of Ignorance
    கோபமானச் சொல்லில் பாராட்டை மட்டும் காண்பது அறியாமையின் அறிவு
    Partial knowledge can hurt
    அரைகுறை ஞானம் அவஸ்தை தரும்.
  8. Folly is aware of its greatness even in offence
    பிறர் கோபத்திலும் தன் பெருமையை அறிவது மடமை
  9. To make one speak of his defects is a talent
    பிறர் குறையைப் பேச வைக்கத் திறமை வேண்டும்
21
"In such cases a woman has not often much beauty to think of."
இம்மாதிரி இருக்கும் பட்சத்தில் ஒரு பெண்மணிக்கு பெருமையாக நினைத்துக் கொள்வதற்கு பெரிய அழகு ஒன்றும் இருக்காது.”
 
  1. Spirit of contradiction is present everywhere
    மறுப்பு மனித சுபாவம்
  2. To speak out all one thinks is lack of culture
    தோன்றியதெல்லாம் பேசிவிட்டால் உள்ள தகுதியும் போகும்.
22
"But, my dear, you must indeed go and see Mr. Bingley when he comes into the neighbourhood."
அதனால் திரு. பிங்கிலி நமது ஊருக்கு வந்தவுடன் நீங்கள் கண்டிப்பாக அவனை சந்திக்க வேண்டும்.
 
  1. Initiative is reinforced by insistence
    திரும்பத் திரும்பச் சொன்னால் ஆரம்பித்ததை வலியுறுத்தலாம்.
23
"It is more than I engage for, I assure you."
நான் இதைக் கண்டிப்பாக செய்யப் போவதில்லை என உறுதியளிக்கிறேன்.
  1. Man acts in spite of self-awareness
    தெரிந்தும் மனிதன் எதிராக நடப்பான்
24
"But consider your daughters. Only think what an establishment it would be for one of them. Sir William and Lady Lucas are determined to go, merely on that account, for in general, you know, they visit no new-comers. Indeed you must go, for it will be impossible for us to visit him if you do not."
உங்களது பெண்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அவர்களில் ஒருவருக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு என நினைத்துப் பாருங்கள். திரு. வில்லியம்ஸ், திருமதி. லூகாஸும் இதே காரணத்திற்காகத்தான் அவனை சென்று சந்திக்கப் போகிறார்கள். நீங்கள் போகாவிட்டால் நாங்களாக அவனைச் சென்று சந்திக்க முடியாது. ஆதலால் நீங்கள் அவசியம் போக வேண்டும்.
  1. Canvassing for a thing beyond acceptance spoils the work
    அளவு கடந்து ஒரு விஷயத்தை நாடினால் அது கெட்டுப் போகும். விளக்கம் வேண்டி வற்புறுத்தினால் காரியம் கெடும்.
  2. Imitation is social instruction
    ஒருவர் போல் நாமும் நடப்பது சமூகம் கற்றுக் கொடுப்பது.
  3. Imitation is socially dynamic
    பிறரை பின்பற்றுதல் சமூகத்தை வளர்க்கும்.
  4. Insistence is the intelligence of the body
    பிடிவாதம் உடலின் அறிவு
  5. Insensitivity, sarcasm, spirit of contradiction go together
    சொரணையற்றது, குத்தல், மறுப்பு ஒரு கூடை செங்கல்.
  6. Insistence of insensitivity is coarse
    சொரணையற்றிருப்பதை பிடிவாதமாகப் பின்பற்றுவது மந்தமான நிலையை இலட்சியமாக்கும்.
25
"You are over-scrupulous surely. I dare say Mr. Bingley will be very glad to see you; and I will send a few lines by you to assure him of my hearty consent to his marrying whichever he chuses of the girls: though I must throw in a good word for my little Lizzy."
நீ ரொம்ப வெளிப்படையாகப் பேசுகிறாய். நீ கவலைப்படாமல் போய் பார். திரு. பிங்கிலி உன்னை சந்திப்பதில் நிரம்பவும் சந்தோஷமடைவான். நமது பெண்களில் யாரை கல்யாணம் செய்து கொண்டாலும் எனக்கு முழுச் சம்மதம் என்று நான் கடிதம் எழுதுகிறேன். இருந்தாலும் எனது அருமை எலிசபெத்மேல் எனக்கு ஒருபடி அதிக அக்கறை உண்டு என்றும் சொல்.
  1. Parents are partial
  2. Self interest readily rises on all occasions
    விஷயம் எதுவானாலும் சுயநலம் முந்திக் கொள்ளும்.
  3. Selfishness expresses as preference to oneself
    சுயநலம் தன்னை முன்வைக்கும்
  4. Married life is a field where one tries to dominate the other.
    அடுத்தவரை அதிகாரம் செய்ய திருமணம் இடம் தரும்.
    All human relationship is an occasion for domination.
    பழக்கம் அதிகாரத்திற்கு இடம் தரும்
    One relates to see if domination is possible
    அதிகாரம் செய்யவே பழக்கம் ஏற்பட்டது.
26
"I desire you will do no such thing. Lizzy is not a bit better than the others; and I am sure she is not half so handsome as Jane, nor half so good-humoured as Lydia. But you are always giving her the preference."
அம்மாதிரி எதுவும் காண்பித்துக் கொள்ள வேண்டாம். லிஸ்ஸி மற்றவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் உசத்தி இல்லை. ஜேனைப் போல் அழகோ, லிடியாவைப் போல் உற்சாகமானவளோ கிடையாது. ஆனாலும் அவளைத்தான் உங்களுக்குப் பிடிக்கும்.
  1. Rivalry rarely escapes protest. The last born is the mother’s pet
    போட்டிக்கு எதிர்ப்பு எழும். தாயார் கடைசி குழந்தைக்கு செல்லம் தருவார்.
  2. Attachment can see all that it wants
  3. Liking is irrational
  4. Boisterousness is physicality’s good humour
    ஜடம் கலகலப்பானால் ஆர்ப்பாட்டம் செய்யும்.
  5. Handsome appearance attracts
    அழகான தோற்றம் இதமான உணர்வு
  6. Good humour attracts
    கலகலப்பானவரை அனைவரும் விரும்புவர்
  7. One who prefers resents others’ preference
    தனக்குப் பிடித்ததைப் பொறுக்கி எடுப்பவர் பிறர் பொறுக்குவதை விரும்ப மாட்டார்.
  8. The wife resents the husband in her children.
    பிள்ளைகள் தகப்பனார் போலிருப்பதை மனைவி வெறுக்கிறாள்.
    The husband avoids the child that expresses the wife.
    மனைவி போல் உள்ள மக்களை கணவன் விலக்குகிறான்.
  9. Any occasion, family or organisation, nation is an occasion for Man to respect his own traits in them
    குடும்பத்திலும் வெளியிலும் எந்த சந்தர்ப்பத்திலும் மனிதன் தன் குணங்கள் வெளிப்படுவதைக் காண முயல்கிறான்.
27
"They have none of them much to recommend them," replied he; "they are all silly and ignorant, like other girls; but Lizzy has something more of quickness than her sisters."
அதற்கு திரு. பென்னட் நமது மற்ற பெண்கள் எல்லோரும் மிகவும் சாதாரணமானவர்கள். இவர்களைப் பற்றி பரிந்துரைக்க அதிகம் எதுவும் இல்லை. மற்ற சகோதரிகளிடம் இல்லாத ஒரு புத்திசாலித்தனம் லிஸியிடம் இருக்கிறது என்றார்.
 
  1. Self-awareness helps achieve
  2. Vicarious abuse is the politeness of perversity
    குதர்க்கம் பவ்யமானால் மறைமுகமாகத் திட்டும்.
  3. Vicarious self-praise is the blind spot of better manners
    நல்ல பழக்கம் மறைமுகமாகத் தன்னை உயர்த்திப் பேசும்.
  4. A parent who prefers a child is cruel
    செல்லக் குழந்தை என்பது கடுமையான உள்ளம்.
  5. Conscious cruelty alienates the child
    அறிந்து செய்யும் கொடுமை குழந்தை உள்ளத்தை அழிக்கும்.
  6. Parental authority must mould the character of children.
    குழந்தையின் சுபாவம் பெற்றோரால் பேணப்படும்.
    A parent who uses the authority in favour of one child does not qualify to be a parent. (Lydia’s running away can be traced to it)
    ஒரு குழந்தைக்கு பாரபட்சமுள்ளவர் பெற்றோரில்லை.(லிடியா ஓடியதின் காரணம் அதுவே).
  7. No endowment in a child qualifies the child for preference. Culture requires one to treat a child as a child
    குழந்தையின் திறமை பாரபட்சத்திற்குக் காரணமாகாது.
    குழந்தையைக் குழந்தையாக நடத்துவது பெற்றோர் இலட்சணம்.
  8. Abusing children is self-abuse
    குழந்தையிடம் தவறாக நடப்பது தன்னை அழிப்பதாகும்
28
"Mr. Bennet, how can you abuse your own children in such a way! You take delight in vexing me. You have no compassion on my poor nerves."
திரு. பென்னட், எப்படி உங்களால் உங்கள் குழந்தைகளைப் பற்றியே இப்படிப் பேச முடிகிறது. என்னைக் கிளறுவதில் உங்களுக்கு அலாதி இன்பம். என்னைப் பற்றிய கவலை உங்களுக்கு சிறிதும் கிடையாது.
 
  1. Weak defence moves one step down
    எளியவன் மறுப்பு அவனை வலுவிழக்கச் செய்யும்.
  2. As pleasantness is a human medium, unpleasantness too serves as a human medium
    இனிமை பழக்கம் தருவது போல் கடுமையும் செயல்படும்.
  3. Poor nerves are superstitious
  4. One who contracts to live a higher social life finds his nerves taxed. He is always nervous
    உயர்ந்த குடும்பங்களுடன் பழகுவது அவசியமானால் படபடப்பு நிரந்தரமாகும்.
  5. Nerves that expand before marriage, contract after marriage
    திருமணத்திற்கு முன்னிருந்த நிதானம் திருமணத்திற்குப் பின் சுருக்கமாகும்.
  6. People suffer if their low consciousness is not approved
    தாழ்ந்த பழக்கங்கட்கு இடமில்லாவிட்டால் மனம் புழுங்கும்.
  7. Success expands nerves, failure contracts them
    வெற்றிக்குச் சந்தோஷம். தோல்விக்குச் சோகம்.
  8. To accept an idea by refusing it is the spirit of contradiction
    மறுக்கும் குணம் ஏற்க மறுக்கும்.மறுப்பு மறுப்பின் ஏற்பு
  9. One who has money, education, status does not acquire culture automatically. By an assiduous cultivation, culture is acquired
    பணம், படிப்பு, அந்தஸ்துள்ளவனுக்குப் பண்பு தானே வருவதில்லை
    பண்பு பெற பெருமுயற்சி பல துறைகளிலும் தேவை
29
"You mistake me, my dear. I have a high respect for your nerves. They are my old friends. I have heard you mention them with consideration these twenty years at least."
என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். உன்னைப் பற்றிய கவலை எனக்கு நிச்சயம் உண்டு. இந்த இருபது வருட வாழ்க்கையில் எவ்வளவு தடவை இதை நீ சொல்லி நான் கேட்டிருப்பேன்.
  1. Managing incapacity is marriage
  2. Man congratulates himself on his patience
    தன் பொறுமையை மனிதன் தானே பாராட்டிக் கொள்வான்
  3. One suffers for one’s lack of endowments
  4. Sarcastic humour despoils the atmosphere of its potential generosity
30
"Ah! You do not know what I suffer."
பொய், நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என உங்களுக்குத் தெரியாது.
 
 
31
"But I hope you will get over it, and live to see many young men of four thousand a year come into the neighbourhood."
கவலைப்படாதே. இம்மாதிரி வருடத்திற்கு நாலாயிரம் வருமானம் உள்ள பல இளைஞர்கள் நம் ஊரில் நீ சந்திக்கத்தான் போகிறாய்.
  1. Generalisation can be used to contradict a particular idea
    குறிப்பானதைப் பொதுவானது மறுக்கும்.
32
"It will be no use to us if twenty such should come, since you will not visit them."
இதுபோல் இருபது பேர்கள் வந்தாலும் என்ன பிரயோஜனம். நீங்கள்தான் அவர்களை சந்திக்கப் போக மாட்டீர்களே.
 
  1. Women are downright practical-minded
    பெண்கட்குக் காரியம் நடக்க வேண்டும்.
  2. Women are practical to the last detail of life
    பெண்கட்கு எந்த சிறு விஷயத்திலும் காரியம் ஆக வேண்டும்.
33
"Depend upon it, my dear, that when there are twenty, I will visit them all."
என்னை நம்பு, அப்படி இருபது பேர்கள் வந்து விட்டால் நான் கண்டிப்பாக எல்லோரையும் சென்று சந்திப்பேன்.
 
  1. A wider agreement in theory negatives a single action
    பொதுவான சொல்லை ஏற்றால் ஒரு காரியத்தைத் தவிர்க்கலாம்.
34
Mr. Bennet was so odd a mixture of quick parts, sarcastic humour, reserve, and caprice, that the experience of three-and-twenty years had been insufficient to make his wife understand his character. Her mind was less difficult to develope. She was a woman of mean understanding, little information, and uncertain temper. When she was discontented she fancied herself nervous. The business of her life was to get her daughters married; its solace was visiting and news.
கிண்டல், கேலி, ஹாஸ்யம், அமைதி, என்ற பல கலவைகளான திரு.பென்னட்டை புரிந்து கொள்ள இருபத்தி மூன்று வருட திருமண வாழ்க்கை திருமதி. பென்னட்டிற்குப் போதவில்லை. குறுகிய மனமும், விவரமற்றவளாக இருக்கும் திருமதி. பென்னட்டிற்கு நிலைகொள்ளாத மனநிலையும் உண்டு. தனக்கு ஏதாவது ஒரு விஷயம் திருப்தியளிக்கவில்லை எனில் தனக்கு உடல் நலமில்லை என நினைத்துக் கொள்வாள். அவளது குறிக்கோளே எப்படியாவது தனது பெண்களுக்குக் கல்யாணம் ஆக வேண்டும் என்பதுதான். அதற்கு அவள் எடுக்கும் முயற்சி, நண்பர்களை சந்திப்பதும் விஷயம் சேகரிப்பதும்தான்.
 
  1. Mrs. Bennet protests to the maximum but within limits. Ultimately she obeys her husband which was the culture of the collective at that time
    பென்னட் முடிந்த அளவு கணவனை மறுத்துப் பேசுகிறார். அதற்களவுண்டு.முடிவாகக் கணவனுக்கு அடங்குகிறார். அது அந்த நாள் இங்கிலாந்து வாழ்க்கை முறை.
  2. Information, understanding, liberality of mind, self-restraint can generate culture by a conscious attempt to acquire values
    அனுபவம், அறிவு, பரந்த மனப்பான்மை, தன்னடக்கமிருந்தால் பண்பை முயன்று பெறலாம்.
  3. Wealth gives an opportunity to acquire culture, not culture
    பணம் பண்பைப் பெறும் சந்தர்ப்பம் தரும். நேரடியாகப் பண்பைத் தாராது
  4. More wealth than culture can sustain results in an uncertain temper
    பண்பை மீறிய பணமும் கோபத்தின் மீது கட்டுப்பாட்டை இழக்கும்.
  5. Knowledge that requires intelligence cannot be acquired by experience
  6. Sarcasm is the intelligence of poverty
    ஏழ்மை அறிவு பெற்றால் குத்தலாகப் பேசும்.
  7. Caprice is the emotion of one who has an inner struggle
    மனப்போராட்டமுள்ளவர் நினைத்து நினைத்து மாற்றிப் பேசுவார்கள்.
  8. Reserve is due to culture or shame
    பண்பு ஒதுக்கும், வெட்கமும் ஒதுங்கும்.
  9. Contentment of low consciousness is steady nerves
    தாழ்ந்த குணம் கட்டுப்பட்டால் நிதானமிருக்கும்.
  10. Uncertain temper is the result of more energy and less self-control
    தன்னடக்கத்தை மீறிய தெம்பிருந்தால் கோபம் கட்டுப்படாது
  11. Nervousness is the discontentment of the less developed mind
  12. Human determination is fulfilled by the social atmosphere
  13. Even the subtle atmosphere can do it
  14. Compensation by an opposite value is a rule
  15. The woman is fulfilled in the marriage of her daughters
    பெண் திருமணம் தாய்மைக்குப் பூரணம்.
 

 



story | by Dr. Radut