Skip to Content

Volume I Chapter 10: Darcy pays Attention to Elizabeth

Chapter 10: Darcy pays Attention to Elizabeth

எலிசபெத்மீது டார்சி செலுத்தும் கவனம்

 

Summary: As Jane continues recovering, with the women reading, writing, and playing music, Darcy asks Elizabeth to dance. She once again turns him down, unwilling to allow him “the pleasure of despising” her. Miss Bingley grows increasingly jealous of Darcy’s attention to Elizabeth, a girl she finds beneath her.
 
சுருக்கம்: ஜேன் குணமடைந்து வருகிறாள், படிப்பிலும், எழுத்திலும், இசைக்கருவியை வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்ற பெண்மணிகள் அங்கு இருப்பதால், டார்சி, எலிசபெத்தை நடனமாட அழைக்கிறான். தன்னையும், தன்னுடைய ரசனையையும் அவன் நிந்திப்பதில் மகிழ்ச்சியடைய அவளுக்கு விருப்பம் இல்லாததால், அவனது வேண்டுகோளை மீண்டும் மறுத்துவிடுகிறாள். தனக்கு கீழ்நிலையில் இருக்கும் எலிசபெத்தின்மேல், டார்சிக்கு கவனம் செல்வதைப் பார்த்து மிஸ். பிங்கிலி மேலும் பொறாமைப்பட ஆரம்பிக்கிறாள்.
 
 
1
The day passed much as the day before had done. Mrs. Hurst and Miss Bingley had spent some hours of the morning with the invalid, who continued, though slowly, to mend; and in the evening Elizabeth joined their party in the drawing-room. The loo-table, however, did not appear. Mr. Darcy was writing, and Miss Bingley, seated near him, was watching the progress of his letter and repeatedly calling off his attention by messages to his sister. Mr. Hurst and Mr. Bingley were at piquet, and Mrs. Hurst was observing their game.
என்றும்போல அன்றும் கழிந்தது. திருமதி. ஹர்ஸ்ட்டும், மிஸ். பிங்கிலியும் ஜேனுடன் சிறிது நேரம் செலவிட்டனர். ஜேன் உடல்நிலை மெதுவாக தேறி வந்தது. மாலை எல்லோருடனும் எலிசபெத் வரவேற்பறையில் கலந்து கொண்டாள். டார்சி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். மிஸ். பிங்கிலி அவன் அருகில் அமர்ந்து, அவனுடைய தங்கைக்கு சமாசாரங்களை எழுதச் சொல்லி அவனுடைய கவனத்தை தன்பால் ஈர்க்க முயற்சி செய்தாள். திரு. ஹர்ஸ்ட்டும், பிங்கிலியும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். திருமதி. ஹர்ஸ்ட் அதனை கவனித்துக் கொண்டிருந்தாள்.
  1. All days are the same. What changes is the Man
    நாள் மாறுவதில்லை. மாறுவது மனிதன்.
  2. Routine days speak of absence of excess energy
    வழக்கமான நாட்களில் தெம்பு பொங்கி வழியாது.
  3. Physical intimacy shows affection
    அருகிலிருந்தால் பாசம் தெரியும்.
  4. Men not entering Jane’s room shows the etiquette of those times
    ஆண்கள் ஜேன் அறைக்கு வராதது அந்த நாள் பழக்கத்தைக் காட்டுகிறது.
  5. Gentlemen are not ashamed of total idleness
    நல்லவர் (gentlemen) நாள் முழுவதும் சும்மாயிருக்க வெட்கப்படுவதில்லை.
  6. True affection does not exclude low criticism
    அன்பிருந்தால் மட்டமாகக் குறை கூறக் கூடாது என்பதில்லை.
  7. To be an unwelcome guest to one at home even if the others enjoy your company is an embarrassment to be avoided
    வீட்டில் அனைவரும் விரும்பினாலும், ஒருவருக்கு விருப்பமில்லாவிட்டால் அங்கு விருந்தாளியாக இருப்பது தவிர்க்க வேண்டியது.
  8. In a culture where privacy is sacred, one watches over his shoulder his writing a letter. They are not exceptions but contradictions
    ஒருவர் கடிதத்தைப் பிறர் படிக்காத நாட்டில், ஒருவர் எழுதும் கடிதத்தை பின்னிருந்து பார்ப்பது முரண்பாடு, விதிவிலக்கு.
  9. Observers of a game enjoy the game equally well
    ஆடுபவன் போல் அதைப் பார்ப்பவனும் ஆட்டத்தை அனுபவிப்பான்.
  10. To sit in a group and be watching is a common pastime as man is gregarious
    நாலு பேர் சேர்ந்து உட்கார்ந்து பேசுவது மனித சுபாவம்.
2
Elizabeth took up some needlework, and was sufficiently amused in attending to what passed between Darcy and his companion. The perpetual commendations of the lady, either on his handwriting, or on the evenness of his lines, or on the length of his letter, with the perfect unconcern with which her praises were received, formed a curious dialogue, and was exactly in unison with her opinion of each.
டார்சிக்கும், மிஸ். பிங்கிலிக்கும் இடையே நடந்து கொண்டிருந்ததை, கைவேலை செய்த வண்ணம் எலிசபெத் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அழகான கையெழுத்து பற்றியும், வரிவரியாக நேர்த்தியாக எழுதுவதை பற்றியும், கடிதத்தின் நீளத்தை பற்றியும் மிஸ். பிங்கிலி தொடர்ச்சியாக சொன்னதை டார்சி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர்களிடையே நடந்த உரையாடல், அவர்கள் இருவரை பற்றி எலிசபெத் கொண்டிருந்த அபிப்பிராயம் உண்மைதான் எனும்படி இருந்தது.
  1. Jealousy is a constant irritation as Love is a constant inspiration
  2. A lost cause clamours enough to destroy its little chances
  3. Toadying never wins respect. It is a sure way to lose the little one has
  4. Elizabeth is amused at Caroline as she understands Darcy better than Caroline
  5. A snob is oblivious of the slights or even snubs
  6. Physical mind repeats what it spoke a minute ago
  7. Caroline is squeamish
  8. The small talk is elegant
  9. Newness of a taste never reaches surfeit
    புதிய ருசி திகட்டாது.
  10. A Man may be speaking to one all the time while all his interest is in another to whom he does not speak
    மனம் ஒருவர் மேலும் பேச்சு அடுத்தவரிடமும் இருப்பதுண்டு.
  11. To draw an unwilling person into conversation, conversation will be of no use
    வலியப் பேசச் சொன்னால் பேச்சு எடுபடாது.
3
"How delighted Miss Darcy will be to receive such a letter!"
“மிஸ் டார்சி, இம்மாதிரி ஒரு கடிதம் கண்டு எவ்வளவு சந்தோஷமடைவாள்.”
 
4
He made no answer.
அதற்கு அவன் பதிலேதும் சொல்லவில்லை.
 
5
"You write uncommonly fast."
“நீ அசாதாரண வேகத்துடன் எழுதுகிறாய்.”
  1. Flattery leads to contradictions
    முகஸ்துதி முரண்பாடாகும்.
6
"You are mistaken. I write rather slowly."
“நீ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். நான் சற்று மெதுவாகத்தான் எழுதுகிறேன்.”
  1. Praise misses facts, sees them upside down
    புகழ்ந்தால் உண்மை வெளிவராது, தலைகீழே தெரியும்.
7
"How many letters you must have occasion to write in the course of the year! Letters of business, too! How odious I should think them!"
“ஒரு வருடத்தில் எவ்வளவு கடிதங்கள் எழுத வேண்டிவரும்! வியாபார சம்பந்தமாகவும் கடிதங்கள் இருக்கும்! இவைகளை நினைத்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது.”
  1. When interest and employment are divided, one becomes beside the point
    ஆசை ஒரு பக்கம், வேலை வேறிடத்திலுமிருந்தால் மனிதன் அர்த்தமற்றவனாவான்.
8
"It is fortunate, then, that they fall to my lot instead of to yours."
“நல்ல வேளை நான்தானே எழுதுகிறேன். நீ அல்லவே.”
 
9
"Pray tell your sister that I long to see her."
“உன் தங்கையை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று அவளிடம் சொல்ல வேண்டுகிறேன்.”
 
10
"I have already told her so once, by your desire."
“நீ விருப்பப்பட்டபடி நான் ஏற்கனவே ஒரு முறை சொல்லி விட்டேன்.”
 
11
"I am afraid you do not like your pen. Let me mend it for you. I mend pens remarkably well."
“உன் பேனா, உனக்குப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன். நான் சரி செய்து தருகிறேன். நான் மிகவும் நன்றாக பேனாவை சரி செய்வேன்.”
  1. Love is blind
    காதலுக்குக் கண்ணில்லை.
12
"Thank you -- but I always mend my own."
“நன்றி -- ஆனால் என்னுடையதை நானேதான் எப்பொழுதும் சரி செய்வேன்.”
  1. Caroline never gets a single encouragement
    காரலினுக்கு ஆதரவாக ஒரு சொல்லில்லை.
13
"How can you contrive to write so even?"
“எப்படி இப்படி நேர்த்தியாக எழுத முடிகிறது.”
  1. It is a truism that the folly of a fool sounds great in his own ears, as it emerges as his own talk expressing his own thoughts. What is enjoyed is not the intelligence of his words, but the fact it is his own voice, the product of a self-creative genius
    மடையனின் மடமை அவன் காதில் இன்பமாக ஒலிப்பது உண்மை. அவனுடைய எண்ணங்களை அவன் சொல்லால் அவனே கேட்பதே காரணம். அவன் சொல்லில் உள்ள அறிவு ஆனந்தம் தரவில்லை. தன் மேதாவிலாசம் எழுப்பிய தன்னுடைய குரல் அவன் காதிற்கு இனிமையாக இருக்கிறது.
14
He was silent.
டார்சி மௌனமாக இருந்தான்.
  1. The balance of energies found in this page can be compared with that of another similar conversation at a few other places in the story
    இந்தப் பக்கத்தில் காணும் சக்திகளின் சமநிலையை கதையில் வரும் வேறு இடங்களில் ஒத்திட்டுப் பார்க்கலாம்.
15
"Tell your sister I am delighted to hear of her improvement on the harp; and pray let her know that I am quite in raptures with her beautiful little design for a table, and I think it infinitely superior to Miss Grantley's."
“யாழ் வாசிப்பதில் உனது தங்கையின் முன்னேற்றத்தை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று உன் தங்கையிடம் சொல். அவளது மேஜை விரிப்பின் அழகினை கண்டு நான் மிகவும் பரவசமடைந்தேன் என்றும் சொல். மிஸ். கிரான்டிலிஸின் விரிப்பைவிட அழகாக உள்ளது.”
  1. One does not forget a rival all his life
    எதிரி ஆயுள் முடியும் வரை நினைவிருக்கும்.
16
"Will you give me leave to defer your raptures till I write again? At present I have not room to do them justice."
“நான் மறுபடியும் எழுத ஆரம்பிக்கும்வரை உன்னுடைய சந்தோஷத்தை சற்று தள்ளிப் போடுவாயா? இந்த கடிதத்தில் அதற்கு இடமில்லை.”
  1. One can be in raptures, if he chooses, about a table
    ஆசை பொருள் மீதும் பொங்கி வழியும்.
17
"Oh! It is of no consequence. I shall see her in January. But do you always write such charming long letters to her, Mr. Darcy?"
“இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நான் அவளை ஜனவரியில் சந்திக்கிறேன். ஆனால் நீ எப்பொழுதும் அவளுக்கு இம்மாதிரி நீண்ட கடிதம் எழுதுவாயா டார்சி?”
  1. There is an instinctive urge to compliment a rich man
    பணக்காரனைப் புகழத் தோன்றும்.
18
"They are generally long; but whether always charming, it is not for me to determine."
“நீளமாக இருக்கும். ஆனால் நன்றாக இருக்குமா என்பதை நான் தீர்மானிக்கக் கூடாது.”
 
19
"It is a rule with me that a person who can write a long letter with ease cannot write ill."
“இவ்வளவு சுலபமாக நீண்ட கடிதம் எழுதும் பொழுது ஒருவரால் மோசமாக எழுத முடியாது என்பதை திட்டவட்டமாக நான் நம்புகிறேன்.”
 
20
"That will not do for a compliment to Darcy, Caroline," cried her brother, "because he does not write with ease. He studies too much for words of four syllables. Do not you, Darcy?"
“டார்சிக்கு இது பாராட்டாகாது, கரோலின்” என்ற பிங்கிலி “அவன் சுலபமாக எழுதவில்லை. யோசித்துதான் பெரிய பெரிய வார்த்தைகளை எழுதுவான். இல்லையா டார்சி?”
 
21
"My style of writing is very different from yours."
“நான் எழுதும் பாணி உன்னுடையதிலிருந்து வேறுபட்டது.”
 
22
"Oh!" Cried Miss Bingley, "Charles writes in the most careless way imaginable. He leaves out half his words, and blots the rest."
“ஓ!”என்ற மிஸ். பிங்கிலி “சார்லஸ் மிகவும் அலட்சியமாக எழுதுவான். பாதி வார்த்தைகளை விட்டுவிடுவான். மீதி வார்த்தைகள் புரியாது.”
  1. One belittles another to praise another
    புகழ்பவரைப் பார்ப்பவர் இகழ்வார்.
  2. Praise by comparison hurts
    ஒருவருடன் அடுத்தவரை ஒத்துப் பார்ப்பது விரசம்.
23
"My ideas flow so rapidly that I have not time to express them -- by which means my letters sometimes convey no ideas at all to my correspondents."
“என்னுடைய எண்ணங்கள் அவ்வளவு வேகமாக ஓடுவதால் எனக்கு அதனை வெளியிடவே நேரம் போதவில்லை. அதனால் சில சமயம் நான் என்ன எழுத வருகிறேன் என கடிதம் வாசிப்பவர்களுக்குப் புரியாது.”
  1. Pleading humility is an easy way to escape blame
    பணிந்து போனால் பாரமில்லை.
24
"Your humility, Mr. Bingley," said Elizabeth, "must disarm reproof."
“இது உன்னுடைய அடக்கம் திரு. பிங்கிலி. இதனால் உன்மேல் யாருக்கு கோபம் வரும்?” என்றாள் எலிசபெத்.
  1. Elizabeth describes Bingley’s naïve behaviour as humility
25
"Nothing is more deceitful," said Darcy, "than the appearance of humility. It is often only carelessness of opinion, and sometimes an indirect boast."
“அடக்கமாக தோற்றமளிப்பதுபோல ஏமாற்றுவது வேறெதுவும் இல்லை. சரியாக கவனிக்காத பொழுது அடக்கமாக இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் அப்படி இல்லாமலும் இருக்கலாம். தன்னைப் பற்றிய மறைமுகமான பெருமை எனவும் சொல்லலாம்”என்றான் டார்சி.
  1. Darcy’s stricture is, to say the least, uncharitable
    டார்சி கண்டிப்பது, முறையாகாது
  2. Showing off before the ladies is a pardonable weakness in youth
    பெண்கள் முன்னிலையில் பெருமையாகப் பேசுவது இளைஞரிடம் மன்னிக்கக் கூடியது.
  3. Darcy, who wants Elizabeth’s praises, cannot stand her praising Bingley
  4. Innocent talk of a lady to a man can irritate her lover
    பெண் வேறொரு ஆணுடன் பேசினால் காதலனுக்கு எரிச்சல் வரும்.
  5. Jealousy in love easily arises for absolutely no reason
    காதலில் பொறாமை காரணமின்றி வரும்.
  6. Jealousy qualifies for it
    அது பொறாமைக்கே உரிய பொருத்தம்.
26
"And which of the two do you call my little recent piece of modesty?"
“இந்த இரண்டில் எது எனக்குப் பொருந்தும்.”
  1. A submissive person protests to prove his submissiveness
    பணிபவன் தன் பணிவை வற்புறுத்துவான்.
27
"The indirect boast; for you are really proud of your defects in writing, because you consider them as proceeding from a rapidity of thought and carelessness of execution, which if not estimable, you think at least highly interesting. The power of doing anything with quickness is always much prized by the possessor, and often without any attention to the imperfection of the performance. When you told Mrs. Bennet this morning that if you ever resolved on quitting Netherfield you should be gone in five minutes, you meant it to be a sort of panegyric, of compliment to yourself -- and yet what is there so very laudable in a precipitance which must leave very necessary business undone, and can be of no real advantage to yourself or any one else?"
“மறைமுகமான பெருமை. ஏனெனில் எழுதுவதிலுள்ள குறைபாடுகளை நீ உண்மையில் கர்வமாக நினைக்கிறாய். வேகமாக வரும் எண்ணங்களை வார்த்தைகளாக மாற்ற முடியாததை நீ சிறந்ததாக நினைக்காவிடினும், சுவாரசியமாக இருப்பதாக நினைக்கிறாய். வேகமாக எழுதுவதை திறமை என எழுதுபவர் கருதலாம். ஆனால் திருத்தமாக எழுத அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இன்று காலையில் திருமதி. பென்னட்டிடம் பேசும் பொழுது, தீர்மானம் செய்துவிட்டால் நெதர்பீல்டை விட்டு ஐந்து நிமிடத்திலேயே கிளம்பி விடுவேன் என்றாய். வந்த வேலையை முடிக்காமல் கிளம்புவதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை. இதனால் உனக்கும், மற்றவருக்கும் எந்தவித லாபமுமில்லை.”
  1. Darcy who really wants to address Elizabeth at length does so with Bingley
  2. A submissive man is not permitted to be proud of his submission
    பணியும் எளியவனுக்கு பணிவின் பெருமையும் அனுமதிக்கப்படாது.
  3. Humility can be proud. Pride can be humble
    பணிவு கர்வப்படும். கர்வம் பணியும்.
  4. Quickness of execution results in imperfection
    குறையை அனுமதித்தால் வேலை வேகமாக முடியும்.
  5. When his love is around, Man thinks of all events associated with her, even if it is derogatory to him
    தான் விரும்பும் பெண் அருகிலிருந்தால் அனைத்தையும் அவள் மூலம் அறிவது அவள் பாணி. தனக்கு அது குறைவானாலும் அதை அவன் செய்வான்.
28
"Nay," cried Bingley, "this is too much, to remember at night all the foolish things that were said in the morning. And yet, upon my honour, I believed what I said to myself to be true, and I believe it at this moment. At least, therefore, I did not assume the character of needless precipitance merely to shew off before the ladies."
“ஆஹா. காலையில் நான் அர்த்தமில்லாமல் சொன்னதை இப்பொழுது ஞாபகம் வைத்துக் கொண்டு சொல்வது சரியில்லை. ஆனாலும் என்மேல் ஆணை, நான் என்னைப் பற்றி கூறியது நிஜம்தான் என்று இந்த க்ஷணம்வரை நம்புகிறேன். இப்பெண்மணிகள்முன் என்னை உயர்வாக காண்பித்துக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை.”
  1. To show off before the ladies is a constant European behaviour
  2. To attract his love in all that he does is a constant pre-occupation of a lover
    காதலிக்குத் தன் திறமை தெரிய வேண்டும் என்பது காதலன் இலட்சியம்.
  3. The submissive man submits in all his activities
    பணிபவன் எல்லா செயல்களிலும் பணிவான்.
29
"I dare say you believed it; but I am by no means convinced that you would be gone with such celerity. Your conduct would be quite as dependant on chance as that of any man I know; and if, as you were mounting your horse, a friend were to say, 'Bingley, you had better stay till next week,' you would probably do it, you would probably not go -- and at another word, might stay a month."
“நீ சட்டென முடிவெடுத்து கிளம்பமாட்டாய் என என்னால் உறுதியாக சொல்ல முடியும். எல்லோரையும்போல் சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வாய். நீ ஒரு குதிரையில் ஏறும் பொழுது ஒரு நண்பன் வந்து, பிங்கிலி, ஒரு வாரம் தங்கிச் செல் என்றால் நீ அதனை கேட்டாலும் கேட்பாய். மீண்டும் ஏதேனும் சொன்னால் ஒரு மாதம் வரை தங்கவும் செய்வாய்.”
 
30
"You have only proved by this," cried Elizabeth, "that Mr. Bingley did not do justice to his own disposition. You have shewn him off now much more than he did himself."
“இதிலிருந்து நீ என்ன நிரூபித்திருக்கிறாய் என்றால், பிங்கிலியின் சுபாவத்தை பற்றி அவனைவிட நீ தான் உயர்வாக வெளிப்படுத்துகிறாய்” என்றாள் எலிசபெத்.
  1. Elizabeth responds to Darcy’s unexpressed intention by addressing him
  2. An idea or statement admits of opposite interpretations
    எதைக் கூறினாலும் அதற்கு எதிரான அர்த்தம் கற்பிக்கலாம்.
31
"I am exceedingly gratified," said Bingley, "by your converting what my friend says into a compliment on the sweetness of my temper. But I am afraid you are giving it a turn which that gentleman did by no means intend; for he would certainly think the better of me if, under such a circumstance, I were to give a flat denial, and ride off as fast as I could."
“எனது சுபாவத்தை பற்றி எனது நண்பன் கேலியாக சொன்னதை, நீ புகழாரமாக மாற்றி சொல்வது எனக்கு மிக்க சந்தோஷம். எந்த நோக்கத்தோடு அவன் கூறினானோ அதற்கு ஒரு திருப்பம் கொடுத்துவிட்டாய். ஆனால் என்னை போக வேண்டாம் என தடுத்து, நான் அதனை லட்சியம் செய்யாமல் உடனே கிளம்பிவிட்டால்தான், நான் ஒரு மேலான மனிதன் என அவன் நினைப்பான்.”
  1. Bingley was overwhelmed by Elizabeth’s resourcefulness
  2. The helpless admire unsolicited help
    வலிய வரும் உதவியை திராணியற்றவர் போற்றுவர்.
32
"Would Mr. Darcy then consider the rashness of your original intention as atoned for by your obstinacy in adhering to it?"
“அப்படியெனில் நீ முதலில் சொன்னது போல், சட்டென தீர்மானித்து உடனே ஒரு இடத்தை விட்டு கிளம்பினால், நாம் எடுத்த முடிவில் நாம் உறுதியாக இருக்கிறோம் என ஆகிறது. இது ஒரு நல்ல குணம்தானே. இதனை டார்சி ஒத்துக் கொள்வானா” என்றாள் எலிசபெத்.
  1. Any behaviour permits any interpretation within limits
    எந்த பழக்கத்திற்கும், அளவுக்குட்பட்டு, எந்த விமர்சனமும் தரலாம்.
  2. Darcy has succeeded in drawing Elizabeth into his conversation but is unyielding
  3. Even a strong desire cannot overcome character
  4. Even abuse is sweet out of the mouth of his lover
    காதலன் திட்டுவதும் இனிக்கும்.
33
"Upon my word I cannot exactly explain the matter -- Darcy must speak for himself."
“என்னால் இதை பற்றி விளக்க முடியாது. டார்சிதான் சொல்ல வேண்டும்.”
 
34
"You expect me to account for opinions which you chuse to call mine, but which I have never acknowledged. Allowing the case, however, to stand according to your representation, you must remember, Miss Bennet, that the friend who is supposed to desire his return to the house, and the delay of his plan, has merely desired it, asked it without offering one argument in favour of its propriety."
“நீங்களாகவே ஏதேதோ கருத்துகளை கூறி, அவை என்னுடையதாக கருதி என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்டால் நான் எப்படி பதிலளிக்க முடியும்? சரி மிஸ். பென்னட், நான் கூறியதாகவே இருக்கட்டும். ஒரு நண்பன் கிளம்ப வேண்டாம் என்று சொல்லும் பொழுது அதற்கு ஒரு காரணமே இல்லை, காரணமே இல்லாமல் சொல்கிறான் என்பதையும் நீ கவனிக்க வேண்டும்.”
  1. Darcy is capable of a logical argument. But he is confronted later with the logic of life
    டார்சி அர்த்தபுஷ்டியாகப் பேசுவான். ஆனால் பிற்காலத்தில் வாழ்வு அவனுக்குச் சவால் விடும்.
35
"To yield readily -- easily -- to the persuasion of a friend is no merit with you."
“அப்படி எனில் ஒரு நண்பன் கூறியதற்கிணங்கி நடப்பது உசிதமில்லை என்கிறீர்களா?”
  1. Elizabeth’s first encounter with Darcy is to deprive him of this merit
  2. Love grows stronger in opposition than in agreement
  3. To be persuaded is to be human
    பிறர் கூறுவதை ஏற்பது மனிதத் தன்மை.
36
"To yield without conviction is no compliment to the understanding of either."
“தன்னம்பிக்கை இல்லாமல் மற்றவர் சொல்வதற்கிணங்க நடப்பது பாராட்டக் கூடிய விஷயமில்லை என்கிறேன்.”
 
37
"You appear to me, Mr. Darcy, to allow nothing for the influence of friendship and affection. A regard for the requester would often make one readily yield to a request without waiting for arguments to reason one into it. I am not particularly speaking of such a case as you have supposed about Mr. Bingley. We may as well wait, perhaps, till the circumstance occurs before we discuss the discretion of his behaviour thereupon. But in general and ordinary cases between friend and friend, where one of them is desired by the other to change a resolution of no very great moment, should you think ill of that person for complying with the desire, without waiting to be argued into it?"
“நட்பு, பாசம் இவை இரண்டுக்கும் நீ மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கிறாய். நண்பன் ஒருவன் சொன்னால், வாதாடாமல் அவன் சொன்னபடி செய்வதுதான் நட்புக்கு அழகு. பிங்கிலியை பற்றி இங்கு பேச முற்படவில்லை. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் வரும் பொழுது, பிங்கிலி எப்படி நடந்து கொள்கிறான் என்பதை அச்சமயம் விவாதிக்கலாம். ஆனால் பொதுவாக நண்பனுக்கு நண்பன் அடிபணிவது எந்த விதத்திலும் தவறல்ல.”
  1. As Elizabeth is accusing Darcy, he, without defending himself, derides Bingley. It is that role Bingley plays in his life
    எலிசபெத் டார்சியைக் குறை கூறுவது போல, டார்சி பிங்லியைக் குறை கூறுகிறான். பிங்லிக்கு அதுவே கடமை.
  2. Take the arguments in this page and examine them in the context of the post proposal period. Both would have benefitted by them
    இப்பக்கத்து வாதத்தை, டார்சி எலிசபெத்தை மணக்கக் கேட்டபின், ஆராய்வது பலன் தரும். இருவருக்கும் அது அப்பொழுது பலன் தரும்.
  3. Friendship and affection merit all consideration
    பிரியத்திற்கும் நட்பிற்கும் எதையும் விட்டுக் கொடுக்கலாம்.
  4. Ready acquiescence is good friendliness
    நட்புக்கு அடையாளம் கேட்பதைத் தருவது.
  5. A request is as much as an order among friends
    வேண்டுகோள் உத்தரவாகும்.
  6. Arguments are defensive
    வாதம் குறை தன்னைக் காப்பாற்றுவது.
  7. Reason, is after all, irrational superstition
    பகுத்தறிவு என்பது அறிவில்லாத மூட நம்பிக்கை.
  8. Any case is not merely unique but also is infinite
    எதுவும் அனந்தம், இணையற்றதுமட்டுமில்லை.
  9. Wait and hope are the two words into which the wisdom of ages is abridged
    நம்பிக்கையுடன் காத்திருப்பது உலகம் கண்ட பெரு உண்மை.
  10. A circumstance is exactly of what you are inwardly
    அகம் புறம்.
  11. Discretion relates to only wise men
    பாகுபாடு விவேகிக்கு.
  12. Resolution is Will
    முடிவு உறுதி.
  13. Desire need not be complied with
    ஆசையை அனுமதிக்க வேண்டாம்.
  14. He who is willing can be argued into any situation
    கேட்டுக் கொள்பவன் எதையும் நம்புவான்.
38
"Will it not be advisable, before we proceed on this subject, to arrange with rather more precision the degree of importance which is to appertain to this request, as well as the degree of intimacy subsisting between the parties?"
“இதைபற்றி மேலும் பேசுவதற்கு முன், விஷயம் என்ன, நட்பின் ஆழம் என்ன என்பதும் முக்கியம்.”
  1. A lover delights to find his love clever or intelligent
    தான் விரும்பும் பெண்ணின் அறிவு மனிதனுக்கு உசிதம்.
39
"By all means," cried Bingley; "let us hear all the particulars, not forgetting their comparative height and size; for that will have more weight in the argument, Miss Bennet, than you may be aware of. I assure you that, if Darcy were not such a great tall fellow, in comparison with myself, I should not pay him half so much deference. I declare I do not know a more awful object than Darcy, on particular occasions, and in particular places; at his own house especially, and of a Sunday evening, when he has nothing to do."
“கண்டிப்பாக” என்ற பிங்கிலி “எல்லா விவரங்களும் நமக்குத் தெரிய வேண்டும். உயரம், பருமன்கூட இவ்விவாதத்தில் முக்கியம். மிஸ். பென்னட், ஒன்று மட்டும் நிச்சயம். டார்சி இவ்வளவு உயரமாக இல்லாதிருந்தால் நான் இப்பொழுது கொடுக்கும் மதிப்பில் பாதிகூட கொடுக்க மாட்டேன். குறிப்பிட்ட இடங்களில் , குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் முக்கியமாக ஞாயிறு மாலை, செய்ய எதுவும் இல்லாத பொழுது டார்சியைபோல ஒரு மோசமான மனிதனை நான் பார்த்ததில்லை என கூற முடியும்.”
  1. Bingley agrees on how tall Darcy is
    டார்சி உயரமானவன் என பிங்லி ஏற்கிறான்.
  2. The pride of a snob has nothing elevating in it
    கோழையின் பெருமையில் போற்றக் கூடியதில்லை.
40
Mr. Darcy smiled; but Elizabeth thought she could perceive that he was rather offended, and therefore checked her laugh. Miss Bingley warmly resented the indignity he had received, in an expostulation with her brother for talking such nonsense.
டார்சி சிரித்தான். ஆனால் எலிசபெத்தோ அவன் மனம் புண்பட்டிருக்குமோ என எண்ணி தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தன் அண்ணனுடைய அர்த்தமற்ற பேச்சை மிஸ். பிங்கிலி கண்டித்தாள்.
  1. Elizabeth checks herself finding Darcy offended. Look for a similar border which she consciously gained in his proposal calling him ungentlemanly
    டார்சி மணக்கக் கேட்டபொழுது ‘ நீ நல்லவனில்லை ’ (not a gentleman) எனக் கூறியபின் தன்னைத் தடுத்துக் கொள்வதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
  2. Sensitivities are to be honoured if friendship is to endure
    நட்பு நீடிக்க பழக்கம் நுட்பமாக இருக்க வேண்டும்.
  3. The lover loves to lose to his love
    காதலியிடம் தோல்வி காதலுக்கு வெற்றி.
41
"I see your design, Bingley," said his friend. "You dislike an argument, and want to silence this."
டார்சியோ “ உன் எண்ணம் புரிகிறது பிங்கிலி. உனக்கு இவ்விவாதம் பிடிக்கவில்லை. அதனை நிறுத்தச் சொல்கிறாய்.”
  1. Darcy is good at arguments which he resorted to in the proposal. It is a place where attitude, not arguments, work
    Proposal இல் டார்சி பேசிய வாதங்கள் நியாயமானவை.
    Proposal இல் வாதம் எடுபடாது, நோக்கம் எடுபடும்.
  2. Darcy’s domination over Bingley is total. He says he is without conviction
  3. Without doing anything intentionally Darcy made Elizabeth speak at length
  4. The subconscious fulfils itself
42
"Perhaps I do. Arguments are too much like disputes. If you and Miss Bennet will defer yours till I am out of the room I shall be very thankful; and then you may say whatever you like of me."
“இருக்கலாம். விவாதம் செய்வது சண்டை போடுவதுபோல் ஆகிவிடுகிறது. நான் இவ்வறையை விட்டு செல்லும்வரை நீயும் , மிஸ். பென்னட்டும் இவ்விவாதத்தை தள்ளி வைத்தால் நான் நன்றியுடையவனாக இருப்பேன். பின்னர் நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்.”
  1. Those who cannot argue resent an argument
    பேச இயலாவிட்டால் வாதம் எரிச்சலூட்டும்.
  2. The presence of an acrimonious person can lead any innocent argument into annoyance
    விதண்டாவாதக்காரன் இருந்தால், எளிமையான சொல் எரிச்சலைக் கிளப்பும்.
43
"What you ask," said Elizabeth, "is no sacrifice on my side; and Mr. Darcy had much better finish his letter."
 “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. டார்சியும் அவனது கடிதத்தை முடிக்க வேண்டும்.”
  1. In suggesting Darcy finish the letter, already we see the wife in action. It is exactly like a married wife Elizabeth talked to Darcy in her dance
    டார்சி கடிதத்தை முடிக்கட்டும் என எலிசபெத் மனைவி போலப் பேசுகிறாள். நெதர்பீல்ட் டான்ஸிலும் எலிசபெத் மனைவியின் தோரணையில் பேசுகிறாள்.
  2. The rational end to which the conversation ends reflects the end of the story
    உரையாடல் முறையாக முடிவது, கதை முடிவில் முறையாக முடிவதைக் காட்டுகிறது.
44
Mr. Darcy took her advice, and did finish his letter.
அவள் சொற்படி அவனும் கடிதத்தை எழுதி முடித்தான்.
  1. A lover loves to obey the most distant wishes of his love
    காதலியின் எண்ணத்திலிருப்பதாகக் கருதும் கருத்தையும் காதலன் ஏற்க முன் வருவான்.
  2. Darcy, a little later, offers to dance with Elizabeth. This he does as he subconsciously submitted to her wishes of writing the letter
    சிறிது நேரம் கழித்து டார்சி அவளை டான்ஸ் ஆட அழைக்கிறான். கடிதம் எழுத அவளிட்ட உத்தரவை ஏற்றதால், இப்பொழுது டான்ஸ் ஆட கூப்பிடுகிறான்.
  3. Darcy was eager to take her advice as a lover would
45
When that business was over, he applied to Miss Bingley and Elizabeth for the indulgence of some music. Miss Bingley moved with alacrity to the pianoforte; and, after a polite request that Elizabeth would lead the way, which the other as politely and more earnestly negatived, she seated herself.
எல்லாம் முடிந்த பின்பு டார்சி, மிஸ். பிங்கிலி-எலிசபெத் இருவரையும் இசையால் எல்லோரையும் மகிழ்விக்குமாறு கேட்டுக் கொண்டான். மிஸ். பிங்கிலி உடனே பியானோவை நோக்கி சென்றாள். அவள் பணிவோடு எலிசபெத்தை முதலில் வாசிக்குமாறு கேட்டுக் கொண்டாள். ஆனால் எலிசபெத் அதே பணிவுடன் மறுத்து, மிஸ். பிங்கிலியின் வாசிப்பை கேட்க அமர்ந்தாள்.
  1. A singing lover is an angel in the eyes of a lover
    பாடும் ஆடவன் பெண்ணுக்கு முழுக் கவர்ச்சி தருவான்.
  2. One does not look for talents in a lady’s singing when he is in love with her
    தான் விரும்பும் பெண் பாடும்பொழுது இசை நயத்தை எதிர்பார்ப்பதில்லை.
  3. Her song is celestial because it is she who is singing
    அவள் பாடுவதால் அது தெய்வீக கானம்.
46
Mrs. Hurst sang with her sister; and while they were thus employed, Elizabeth could not help observing, as she turned over some music books that lay on the instrument, how frequently Mr. Darcy's eyes were fixed on her. She hardly knew how to suppose that she could be an object of admiration to so great a man; and yet that he should look at her because he disliked her was still more strange. She could only imagine, however, at last, that she drew his notice because there was a something about her more wrong and reprehensible, according to his ideas of right, than in any other person present. The supposition did not pain her. She liked him too little to care for his approbation.
திருமதி. ஹர்ஸ்ட் தன் தங்கையுடன் பாடினாள். எலிசபெத் பியானோவில் இருக்கும் இசை புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, டார்சி அடிக்கடி தன்னையே நோக்குவதைக் கண்டாள். டார்சியைப்போல ஒரு பெரிய மனிதன் எப்படி தன்னை இவ்வாறு பார்க்க முடியும், அதுவும் அவனுக்குத் தன்னை பிடிக்காத பொழுது என வியந்தாள். டார்சியின் கணிப்பில் தன்னிடம் ஒரு பெரிய குறை இருப்பதால் அவன் அவ்வாறு பார்க்கிறானோ என எண்ணினாள். அவ்வெண்ணம் அவளுக்கு வருத்தத்தை தரவில்லை. மாறாக அவளுக்கும் அவனை பிடிக்காததால் அவனது அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை.
  1. Darcy’s looks stay on Elizabeth and she reacts to it by refusing to sing or dance, recognition of the woman of the man’s seeking
    டார்சி அவளையே பார்த்தபடியிருக்கிறான்.
    அதை எதிர்த்துப் பாட ஆட மறுக்கிறாள்.
    டார்சி தன்னை நாடுவதை அவள் உள்ளூர அறிந்து அப்படி நடக்கிறாள்.
  2. Life that develops is never without subtle hints. Elizabeth could see Darcy’s eyes on her
  3. Man may fail to take note of what develops. Life never fails
  4. The greatest of surprises will certainly have announced themselves in some fashion
    பெரும் ஆச்சரியங்கள் தாமே வெளி வரும்.
47
After playing some Italian songs, Miss Bingley varied the charm by a lively Scotch air; and soon afterwards Mr. Darcy, drawing near Elizabeth, said to her –
மிஸ். பிங்கிலி சில இத்தாலிய பாடல்களை வாசித்தாள். பிறகு உற்சாகமான ஸ்காட்ச் பாடல்களை வாசித்தாள். உடனே டார்சி எலிசபெத்தின் அருகில் வந்து,
  1. Darcy was untouched by Miss Bingley’s musical charms. Elizabeth was totally attractive. His wanting to dance with her was such an occasion
  2. A lady sings wonderfully to please her lover not knowing his mind was pleasantly lost in another woman and that this pleasing song has served as a pleasant background to his own indulgence
    டார்சியின் மனம் எலிசபெத்தில் லயித்திருப்பதும், அதற்கு தன் இசை பின்னணியாக அமைந்திருப்பதையும் அறியாமல் காரலின் அழகாகப் பாடுகிறாள்.
48
"Do not you feel a great inclination, Miss Bennet, to seize such an opportunity of dancing a reel?"
“மிஸ். பென்னட் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு நடனமாட வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்றான்.
  1. Darcy’s proposal can be seen in several initial acts of advance. His direct offer to dance only with her, her considered refusal on his reminding her is a miniature subtle proposal in inversion
    ஆரம்பத்திலிருந்தே டார்சியின் செயல்களில் proposal வருவது தெரியும். அவளிடம் மட்டும் டான்ஸ் ஆடக் கேட்கிறான். அவள் மறுத்த பிறகும் கேட்கிறான். இது சூட்சுமமாகப் பார்த்தால் proposal க்கு இது தலைகீழ் மாற்ற அறிமுகம்.
  2. The offence she implied in his looks should have melted away by his offer
  3. Romantic love rises in its intensity by refusal
    காதலின் வேகம் மறுப்பால் அதிகரிக்கும்.
49
She smiled, but made no answer. He repeated the question, with some surprise at her silence.
அவள் பதில் ஏதும் கூறாமல் வெறும் புன்னகை புரிந்தாள். டார்சி அவளது மௌனத்தை கண்டு ஆச்சரியமாக மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.
  1. She goes silent by her subconscious consent in spite of conscious disapproval
  2. Silence indicates indecision because of conflict
50
"Oh!" Said she, "I heard you before, but I could not immediately determine what to say in reply. You wanted me, I know, to say 'Yes,' that you might have the pleasure of despising my taste; but I always delight in overthrowing those kind of schemes, and cheating a person of their premeditated contempt. I have, therefore, made up my mind to tell you, that I do not want to dance a reel at all -- and now despise me if you dare."
“ஓ! உங்கள் கேள்வி எனக்குக் கேட்டது. ஆனால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் “ஆமாம்” என்று கூறி, என் ரசனையை வெறுக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என நீங்கள் எதிர்பார்த்தது எனக்கு தெரியும். முன்கூட்டி தீர்மானித்த எந்த திட்டத்தையும் தகர்ப்பதில் எனக்கு ஒரு சந்தோஷம் உண்டு. அதனால் எனக்கு நடனமாட விருப்பமில்லை என கூற தீர்மானித்து விட்டேன். தைரியம் இருந்தால் இப்பொழுது நீ என்னை நிந்தனை செய்யலாம்.”
  1. Her character prevails which pleases Darcy more than the dance
  2. Prejudice takes the expression of ardent love as a ruse to despise
    தப்பெண்ணம் உண்மையான காதலை சந்தேகப்படுகிறது.தன்னை வெறுக்கும் உபாயமாக அதை நினைக்கிறது.
  3. Invitation to despise is invitation to adore
    எலிசபெத் தன்னை டார்சி வெறுக்கட்டும் என நினைத்தது தன்னைப் பாராட்ட அழைத்ததாகிறது.
51
"Indeed I do not dare."
“எனக்கு அதற்கெல்லாம் தைரியம் கிடையாது.”
  1. He dare not despise her, not from gallantry but as a fact of his love
52
Elizabeth, having rather expected to affront him, was amazed at his gallantry; but there was a mixture of sweetness and archness in her manner which made it difficult for her to affront anybody, and Darcy had never been so bewitched by any woman as he was by her. He really believed that, were it not for the inferiority of her connexions, he should be in some danger.
எலிசபெத் டார்சியை கிண்டல் செய்யலாம் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள். ஆனால் அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவன் பெருந்தன்மையைக் கண்டு வியந்தாள். அவனது நல்ல குணத்தால் அவனால் யாரையும் அவமதிக்க முடியாது. எலிசபெத்தைபோல் வேறு எந்த பெண்ணும் டார்சியை கவர்ந்ததில்லை. எலிசபெத்தை தன் தகுதிக்குகீழ் என அவன் நினைத்திருக்காவிடின், அவளை நேசிக்கத் தொடங்கியிருப்பான்.
  1. A mixture of sweetness and archness in her prevents her from offending anyone. Till the end she is unable to offend Wickham who callously ruined her family
    குறும்பும் இனிமையும் கலந்த அவள் சுபாவம் எவரையும் புண்படுத்தாது. கடைசி வரை விக்காமை அவள் கடிந்து கொள்ளவில்லை. அவன் குடும்பத்தையே அழித்த காலாடி
  2. Darcy was bewitched by Elizabeth. She is unaware of it as she is in her mind, not sensations
    எலிசபெத் டார்சியை மனமாரக் கவர்ந்தாள். அவள் அதை அறிய மாட்டாள். உணர்ச்சி வசப்பட்டவள் அறிவாள். அவள் அறிவால் செயல்படுவதால் அறிய மாட்டாள்.
  3. Love cannot offend, nor sweetness nor goodness
    இனிமை. நல்ல குணம், பிரியம் இவற்றால் மனம் புண்படாது.
  4. A mixture of archness and sweetness can bewitch a man, but a woman can be bewitching to a lover with no endowment at all. In the absence of any endowment the romance can be more intense
    இனிமையும் விளையாட்டும் ஆண்மகனைக் கட்டிப் போடும் கவர்ச்சி. எந்த இனிமையும், குணமுமில்லாவிட்டாலும் , அவள் கவர்ச்சி குறையாது. எந்த சிறப்புமில்லாவிட்டாலும் காதல் தீவிரமாக இருக்கும்.
  5. No inferior status ever stood in the way of love
    பெண்ணின் எந்த குறையும் காதலுக்குத் தடையானதாக சரித்திரமில்லை.
  6. A developed mind is sweet even in differing
  7. Darcy sees how much he has gone out to her
53
Miss Bingley saw, or suspected enough to be jealous; and her great anxiety for the recovery of her dear friend Jane received some assistance from her desire of getting rid of Elizabeth.
இவையெல்லாம் கண்ட மிஸ். பிங்கிலி பொறாமைப்பட்டாள். அவளது தோழி ஜேன் முழுமையாக குணமடைந்தால்தான் எலிசபெத் அவர்கள் வீட்டிலிருந்து கிளம்புவாள் என புரிந்து கொண்டாள்.
  1. Attention of the high to the low is often unnoticed
  2. The only persons who saw the loss of Darcy is the jealous rival
    டார்சி இழந்ததை போட்டியிடும் காரலின் மட்டும் அறிவாள்.
  3. Jealousy is the tether end of negative social growth
    சமூகம் தாழ்ந்த பகுதியில் பொறாமையால் வளர்கிறது.
  4. A rival understands directly from sensations
    போட்டியிடும் பெண் உணர்வால் அறிவாள்.
  5. The evolutionary aim is best served by support as well as attack
    ஆதரவாலும் எதிர்ப்பாலும் சமூக வளர்ச்சி தொடரும்.
  6. An attack turns the sub-conscious in favour of the opposite side
    எதிர்ப்பு ஆழ் மனத்தை எதிராக மாற்றும்.
  7. Angry people are not rational. As their anger grows, their irrationality increases. Anger is the disequilibrium of sensations. Trying to restore it, it resorts to more of sensations, here it is dislike
    கோபக்காரருக்கு புத்தி மட்டு. கோபம் வளர்ந்தால் குழப்பம் வளரும். உணர்ச்சி உருவமிழப்பது கோபம். குழப்பத்தை விலக்க மேலும் மனிதன் உணர்ச்சியை நாடுகிறான். அது இங்கு வெறுப்பாகிறது.
  8. Caroline is a big girl. Elizabeth is little. Caroline begins to feel the importance of being big
    காரலின் பெரிய உருவம். எலிசபெத் சிறிய உருவம். பெரிய உருவத்திற்குரிய முக்கியத்துவத்தை காரலின் கருதுகிறாள்.
  9. No one except Miss Bingley, not even Elizabeth, noticed how Darcy melted
  10. Love as well as jealousy is perceptive
  11. Stupidity does the opposite of what it would like
  12. Miss Bingley ultimately destroys any chance for her with Darcy
54
She often tried to provoke Darcy into disliking her guest, by talking of their supposed marriage, and planning his happiness in such an alliance.
டார்சிக்கும், எலிசபெத்திற்கும் நடக்கப் போகும் திருமணத்தைப் பற்றியும், அதனால் கிடைக்கும் சந்தோஷத்தைப் பற்றியும் பேசிபேசி டார்சிக்கு, எலிசபெத் மேல் வெறுப்பு வரவழைக்க முயற்சி செய்தாள்.
  1. Lovers who dare not mention their lady lover’s name, are pleased to listen to it from others whatever the content or context
55
"I hope," said she, as they were walking together in the shrubbery the next day, "you will give your mother-in-law a few hints, when this desirable event takes place, as to the advantage of holding her tongue; and if you can compass it, do cure the younger girls of running after the officers. -- And, if I may mention so delicate a subject, endeavour to check that little something, bordering on conceit and impertinence, which your lady possesses."
அடுத்த நாள் டார்சியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பொழுது, “இந்த திருமணத்திற்கு பின்னர், முடிந்தால் உனது மாமியாரின் பேச்சை கட்டுப்படுத்த முயற்சி செய், அந்த வீட்டு பெண்கள் இராணுவ அதிகாரிகள் பின்னால் சுற்றுவதை நிறுத்த வேண்டும். நான் சொல்லலாம் என்றால், கர்வமும், துடுக்குத் தனமும் கொண்ட எலிசபெத்தை நீ கட்டுப்படுத்த வேண்டும்” என்றாள் மிஸ். பிங்கிலி.
  1. Criticism of a rival helps the Man to overcome the defects of his love in his subconscious
    போட்டியிடும் எதிரியின் குற்றச் சாட்டு காதலன் தன் குறைகளை ஆழத்தில் திருத்த உதவும்.
56
"Have you anything else to propose for my domestic felicity?"
“எனது இல்வாழ்க்கைக்கு வேறு ஏதேனும் அறிவுரைகள் உண்டா?”
  1. Even Darcy’s sarcasm energises her folly
    டார்சியின் கேலியும் காரலினுடைய உற்சாகத்தை வளர்க்கிறது.
  2. When the lady love of a Man is attacked by her rival, he becomes more devoted to his lover
    தான் விரும்பும் பெண்ணை அவளுடன் போட்டியிடுபவள் தாக்கினால் அவன் பிரியம் மேலும் வளரும்.
57
“Oh! Yes. Do let the portraits of your uncle and aunt Philips be placed in the gallery at Pemberley. Put them next to your great-uncle the judge. They are in the same profession, you know; only in different lines. As for your Elizabeth’s picture, you must not attempt to have it taken, for what painter could do justice to those beautiful eyes?”
“ஆம்! உன் வருங்கால சித்தப்பா பிலிப்ஸ், சித்தியின் படங்களை பெம்பர்லியில் கண்டிப்பாக மாட்ட வேண்டும். சிறந்த வக்கீலாக விளங்கிய உன் மாமாவின் புகைப்படத்தின் அருகில் வை. எப்படியும் அவர்களது தொழில் ஒன்றுதான், துறைதான் வேறு. உன் எலிசபெத்தின் படத்தை நீ யாரை கொண்டும் வரைய வைக்க முடியாது. எந்த ஓவியனால் இந்த அழகான கண்களை வரைய முடியும்?”
  1. Life sets limits to stupidity and acts to prevent it
  2. Physical intelligence becomes physical arrogance when thwarted
    ஜடமான அறிவு தடையை மீற முடியாத நேரம் கர்வமாக மாறும்.
58
"It would not be easy, indeed, to catch their expression, but their colour and shape, and the eye-lashes, so remarkably fine, might be copied."
“அவளுடைய அழகான விழிகளின் நிறத்தையும், வடிவத்தையும், கண் இமைகளையும் வேண்டுமானால் வரையலாம். ஆனால் அக்கண்களிலுள்ள பாவத்தை யாராலும் கொண்டு வர முடியாது.”
 
59
At that moment they were met from another walk by Mrs. Hurst and Elizabeth herself.
அப்பொழுது அவர்கள் திருமதி. ஹர்ஸ்டையும் எலிசபெத்தையும் சந்தித்தனர்.
60
"I did not know that you intended to walk," said Miss Bingley, in some confusion, lest they had been overheard.
“நீங்களும் உலாவ வருவீர்கள் என எனக்குத் தெரியாது” என்ற மிஸ். பிங்கிலி, அவளும் டார்சியும் பேசியது அவர்களுக்கு கேட்டிருக்குமோ என கவலைப்பட்டாள்.
  1. When your comment is overheard by the person concerned, it means it will be later fulfilled in his favour
    நாம் ஒருவரைப் பற்றிப் பேசும்பொழுது அது அவர் காதில் விழுமானால் அவர் வாழ்வில் அது பூர்த்தியாகும்.
61
"You used us abominably ill," answered Mrs. Hurst, "running away without telling us that you were coming out."
“எங்களிடம் கூறாமல் நீங்கள் மட்டும் வெளியே வந்து விட்டீர்களே” என்று திருமதி. ஹர்ஸ்ட் கூறினாள்.
  1. All of them have excessively good conversational ability
    உரையாடலை உயர்ந்த கலையாகக் கற்று, பயின்றவர் அவர்கள்.
  2. It prevents sincerity
    அழகாகப் பேசும் பயிற்சி உண்மை (sincerity) க்குக் குந்தகம் விளைவிக்கும்.
62
Then, taking the disengaged arm of Mr. Darcy, she left Elizabeth to walk by herself. The path just admitted three. Mr. Darcy felt their rudeness and immediately said, --
எலிசபெத்தை தனியாக விட்டு டார்சியின் மற்றொரு கையை பிடித்துக் கொண்டு அவள் நடக்கத் தொடங்கினாள். அப்பாதையில் மூன்று பேருக்கு மட்டுமே இடம் இருந்தது. அவ்வாறு நடப்பது அநாகரீகம் என்று கருதி டார்சி உடனே --
  1. The walk is not wide enough. The earth reflects their narrow minds
    பாதை அகலம் போதாது. பூமியின் அமைப்பு அவர் குறுகிய மனம்.
  2. Darcy feels the rudeness. But he is unable to prevent it. The situation here is partially reflective of their thoughts. Jane Austen has the very physical sensation of the story she writes
    டார்சிக்கு இது தவறு எனப் படுகிறது. டார்சியால் அதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலை அவர் மனநிலை. ஜேன் ஆஸ்டின் எழுதும் கதையை உடலில் உணர்வாக அறிகிறாள்.
  3. He who seeks flattering company cannot be aware of being rude to others
    பெரிய மனிதர் தொடர்பை நாடுபவன் தான் முரட்டுத்தனமாக இருப்பதை அறியான்.
  4. Flattery makes one dizzy, oblivious, and insensitive
    முகஸ்துதி தலையைச் சுற்றும், தன்னை மறக்கும், சொரணையை இழக்கச் செய்யும்.
  5. By definition it will be rude to all others
    முரட்டுத்தனமின்றி, மட்டமான பழக்கமில்லாமல், முகஸ்துதியைப் பயன்படுத்த முடியாது.
  6. Flattering company is psychological coma
    முகஸ்துதி மனத்தை மையலால் மயங்க வைக்கும்.
63
"This walk is not wide enough for our party. We had better go into the avenue."
“இந்த பாதையில் நம் எல்லோருக்கும் இடமில்லை. நாம் இதைவிட பெரிய பாதைக்கு செல்வோம்” என்றான்.
  1. Darcy takes steps not to be rude
64
But Elizabeth, who had not the least inclination to remain with them, laughingly answered, --
ஆனால் எலிசபெத்தோ இவர்களுடன் செல்வதில் சிறிதுகூட விருப்பம் இல்லாததால் சிரித்துக் கொண்டே,
  1. Elizabeth laughs when left out. This is what charms Darcy
    விட்டுப் போனபின் எலிசபெத் சிரிக்கிறாள். அதுவே டார்சியைக் கவர்கிறது.
  2. Elizabeth’s gaiety was partly due to Darcy’s constant superior attention
  3. An affront announces coming affluence in a hostile atmosphere
    எதிரான சூழலில் வரும் தாக்குதல் வரும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.
  4. He who laughs at being isolated will be swarmed around by the same persons later
    தான் ஒதுக்கப்படும்பொழுது கலகலப்பாக சிரிப்பவனை அவர்களே சூழும் நிலை எழும்.
65
"No, no; stay where you are. You are charmingly grouped, and appear to uncommon advantage. The picturesque would be spoilt by admitting a fourth. Good-bye."
“நீங்கள் மூவரும் சேர்ந்து செல்வது பார்க்க அழகாக உள்ளது. அதனை கெடுக்க நான் விரும்பவில்லை, நான் சென்று வருகிறேன்”என்றாள்.
  1. They are charmingly grouped excluding Elizabeth. It clearly indicates their coming together to act against Jane
    எலிசபெத் அகன்றபின் அவர்கள் அழகாக வருகிறார்கள். இந்த அமைப்பு ஜேனுக்கு எதிராக அவர் செயல்படப் போகும் அமைப்பு.
  2. Buried as you are among the rivals of your lady love, it is impossible for you not to offend your love
    தான் விரும்பும் பெண்ணின் எதிரிகளால் சூழப்பட்டவனால் அப்பெண்ணின் மனம் புண்படும்படி நடக்காமலிருக்க முடியாது.
66
She then ran gaily off, rejoicing, as she rambled about, in the hope of being at home again in a day or two. Jane was already so much recovered as to intend leaving her room for a couple of hours that evening.
பின்னர், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் சந்தோஷமாக உலாவிக் கொண்டிருந்தாள். ஜேனும் அன்று மாலை தன் அறையை விட்டு இரண்டு மணி நேரம் வரும் அளவிற்கு குணமடைந்திருந்தாள்.
  1. Running is natural for her. An Indian girl cannot conceive of running
    எலிசபெத் இயல்பாக ஓடுபவள். இந்தியப் பெண்ணுக்கு ஓடத் தோன்றாது.



story | by Dr. Radut