Skip to Content

Volume I Chapter 14: Collins at Longbourn

Chapter 14: Collins at Longbourn

லாங்பர்னில் காலின்ஸ்

 

Summary: Collins goes on and on about his patroness the Lady Catherine de Bourgh and her residence in Rosings Park. He tells the Bennets how he is exceptionally well suited at flattering Lady de Bourgh and her daughter. Mr. Bennet is not impressed and finds his cousin rather silly.
 
சுருக்கம்: இரவு உணவு உண்ணும் பொழுது, திரு. காலின்ஸ், தனக்கு ஆதரவளிக்கும் லேடி காதரின் டீ பர்க் பற்றியும், அவளுடைய இல்லமான ரோஸிங்ஸ் பார்க்பற்றியும் விரிவாக விளக்கிக் கொண்டே போகிறான். லேடி டீ பர்கையும் அவளது மகளையும் மகிழ்விப்பதில் தனக்குள்ள திறமையைப்பற்றியும் பேசுகிறான். திரு. பென்னட்டிற்கு அவன்மீது நன்மதிப்பு வருவதில்லை, அர்த்தமில்லாதவன் என நினைக்கிறார்.
 
 
1
During dinner Mr.Bennet scarcely spoke at all; but when the servants were withdrawn, he thought it time to have some conversation with his guest, and therefore started a subject in which he expected him to shine, by observing that he seemed very fortunate in his patroness. Lady Catherine de Bourgh's attention to his wishes, and consideration for his comfort, appeared very remarkable. Mr. Bennet could not have chosen better. Mr. Collins was eloquent in her praise. The subject elevated him to more than usual solemnity of manner, and with a most important aspect he protested that "he had never in his life witnessed such behaviour in a person of rank -- such affability and condescension, as he had himself experienced from Lady Catherine. She had been graciously pleased to approve of both the discourses which he had already had the honour of preaching before her. She had also asked him twice to dine at Rosings, and had sent for him only the Saturday before, to make up her pool of quadrille in the evening. Lady Catherine was reckoned proud by many people he knew, but he had never seen anything but affability in her. She had always spoken to him as she would to any other gentleman; she made not the smallest objection to his joining in the society of the neighbourhood, nor to his leaving his parish occasionally for a week or two, to visit his relations. She had even condescended to advise him to marry as soon as he could, provided he chose with discretion; and had once paid him a visit in his humble parsonage; where she had perfectly approved all the alterations he had been making, and had even vouchsafed to suggest some herself, -- some shelves in the closets up stairs."
இரவு விருந்தின்பொழுது திரு. பென்னட் பேசவேயில்லை. வேலைக்காரர்கள் சென்ற பிறகு விருந்தாளியுடன் ஏதாவது பேச வேண்டும் என நினைத்து, அவனுக்கு ஆதரவு அளிக்கும் லேடி காதரினைப் பற்றி பேசினால் அவனுக்குப் பிடிக்கும் என அவர் நினைத்ததால் அதைப்பற்றி பேசலானார். காலின்ஸினுடைய விருப்பங்களுக்கு அவள் கொடுத்த கவனிப்பும், அவனுடைய சௌகரியத்திற்கு காட்டிய கரிசனமும் பாராட்டுதற்குரியதாக இருந்ததால், திரு. பென்னட் இதைவிட சிறந்ததாக வேறு எந்த தலைப்பையும் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. காலின்ஸ் அவளைப் பற்றி வெகுவாக புகழ்ந்தான். இப்பேச்சு அவனை மேலும் கம்பீரமாக்கியது. இவ்வளவு உயர்ந்த இடத்திலுள்ள ஒரு பெண்மணி இவ்வளவு அன்பாகவும், பரிவாகவும் நடந்து கொள்வதை இதுவரை அவன் பார்த்ததில்லை. அவள் முன் தான் செய்த இரண்டு பிரசங்கங்களையும் அவள் மனதார பாராட்டியதாகச் சொன்னான். இரண்டு முறை ரோஸிங்ஸில் விருந்துண்ண அழைத்தாள். சனிக்கிழமையன்று சீட்டாடவும் அழைத்திருந்தாள். பலரும் லேடி காதரினை கர்வமுடையவள் என்று சொன்னாலும் தான் அவளுடைய அன்பை மட்டுமே பார்த்திருப்பதாகக் கூறினான். அவள் அவனை மரியாதையுடன் நடத்தினாள். அப்பகுதியிலுள்ள சமூகத்தோடு அவன் சேருவதற்கும், உறவினர்களை சந்திக்க அவ்வப்போது ஓரிரு வாரங்கள் செல்வதற்கும் அவள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி, ஆனால் பகுத்தறிவோடு பெண்ணை தேர்ந்தெடுக்கக் கூறினாள். அவனுடைய எளிய வீட்டிற்கு விஜயம் செய்து அங்கு செய்திருந்த மாற்றங்களை அங்கீகரித்து, சில இடங்களில் வேறு சில மாற்றங்களையும் செய்யுமாறு கூறினாள்.
  1. Mr. Bennet has the restraint not to talk before the servants which his wife does not have. That is the only measure of his difference
    Mrs.பென்னட் வேலைக்காரர் முன்னிலையில் பேசுவதில்லை. அவர் மனைவிக்கு அக்கட்டுப்பாடில்லை. இது அவரிடையே உள்ள வித்தியாசம்.
  2. To choose to speak about a subject of another’s preference is culture
    அடுத்தவருக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றிப் பேசுவது நாகரீகம்.
  3. The value of any act lies in the motive
    நோக்கம் செயலை நிர்ணயிக்கும்.
  4. Though inoffensive to tickle Collins about his patron, there is the underlying meanness of the act or its intention. It is a trait of the gentry who value themselves more than the townspeople
    காலின்ஸ்ஸை சீண்டுவதில் தவறொன்றுமில்லை என்றாலும் அடிப்படையில் அது மட்டமான தவறு. செல்வந்தர் ஊராரை விட உயர்ந்தவர் என்பது அவர் நினைவு. இது போன்ற நிகழ்ச்சிகள் கதையில் பயன்படும்.
  5. What releases one’s eloquence is his heart
    உணர்ச்சி மேலிட்டால் சொல் வளம் பெருகும்.
  6. Collins’ praise issues out of the sense of wonder he had not yet outlived
    பெண்களைக் கண்டு வியந்த காலின்ஸ் இன்னும் தெளியவில்லை. அம்மனநிலையில் அவர் பேசுகிறார்
  7. His sense of elevation is nascent. The education of Oxford raised him from his status of non-entity as much as he now feels the gap between him and Lady Catherine
    (Vicar)பாதிரியாரான புதிது. ஆக்ஸ்போர்ட் பட்டம் நடுத்தெருவிலிருந்தவரை உயர்த்திற்று. தனக்கும் லேடி காதரீனுக்கும் உள்ள இடைவெளிபோய் பட்டம் அவரை உயர்த்தியது.
  8. Condescension was a value of aristocracy not in democracy
    ஆதரவாகப் பழகுவது அந்த நாட்களுக்குரியது. இன்று அர்த்தமில்லை.
  9. He is a snob in the sense that he is pleased by pleasing her
    லேடி காதரீனை மகிழ வைப்பதே அவர் இலட்சியம்.
  10. To him, her pleasure is an act of grace that descends from nobility
    லேடி காதரீன் மகிழ்வது செல்வந்தர் பெரிய மனத்துடன் இவரை சிறப்பிப்பது.
  11. Mr. Collins is a clownish buffoon devoid of not only good manners but the capacity for common sense
    காலின்ஸ் கோமாளி. நல்ல பழக்கமில்லை. நாலு பேர் அறிந்ததை அறிய முடியாதவர்.
  12. Lady Catherine’s greatness is the living centre of his human existence. He feels all the privilege all the time of being a snob
    லேடி காதரீன் அவருக்குப் பெருமை உறையுமிடம். அவரருகேயிருக்கும் பாக்கியத்தை எந்த நேரமும் நன்றியுடன் அவர் ஏற்று மகிழ்பவர்.
  13. Arrogance is affability when the power of arrogance shapes the unformed substance in him
    லேடி காதரீனுடைய கர்வம் அவர் சுபாவத்திற்கு அழகு தருவதால் காலின்ஸூக்கு அது பாக்கியமாகிறது.
  14. He has not seen any pride in her. His motto is, “It is a joy to die for greatness”
    லேடி காதரீன் தற்பெருமையுடையவரென்று அவரால் கருத முடியவில்லை.அவர் இலட்சியம் “பெருந்தன்மையில் சேவையில் உயிர் போக வேண்டும்”.
  15. ‘He had never seen’ is a common meaningless phrase to express one’s sense of wonder. Collins had not seen any of the world. In his mouth it is absurd. Small men using fine phrases renders them ridiculous
    ‘நான் பார்த்ததேயில்லை’ என்பது பொதுவாகப் பலரும் அர்த்தமில்லாமல் பயன்படுத்தும் சொல். ஆச்சரியத்தை அப்படிக் கூறுகிறார். காலின்ஸ் எதையும் கண்டவரில்லை. அவர் அப்படிப் பேசுவது அபத்தம்.சிறிய புத்தியுள்ளவன் உயர்ந்த சொற்களைப் பயன்படுத்துவது அவர்களைக் கேலிக்குரியவராக்கும்.
  16. Attention can pass for affection
    கவனத்தைப் பிரியம் எனக் கொள்வர்.
  17. Collins is incapable of knowing the difference between deference and neglect. Lady Catherine is incapable of good behaviour towards anyone. In this combination of circumstance, Collins is doubly ridiculous
    மரியாதைக்கும் உதாசீனப்படுத்துவதற்கும் வித்தியாசம் தெரியாதவர் காலின்ஸ். லேடி காதரீனுக்கு எவரிடமும் முறையாகப் பழகத் தெரியாது. இது போன்ற சந்தர்ப்பத்தில் காலின்ஸ் இருமடங்கு அர்த்தமற்றவனாகிறான்
  18. Personalities expand at their weakest points
  19. Education without culture makes one pompous
  20. The outer social strength of rank pleasantly fills the inner vacuum
  21. Man excels himself in appreciating his own value
  22. Rank accords equality at the table
  23. Officiousness is rank’s smallness
  24. To talk of a subject not related to the hearer is unmannerly. Collins is boorish
    கேட்பவருக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தைப் பற்றிப் பேசுவது மரியாதையில்லை. காலின்ஸ் அவலக்ஷணமானவன்.
  25. Lady Catherine’s advice to Collins to marry is no condescension but officious interference
    காலின்ஸைத் திருமணம் செய்து கொள்ள லேடிகாதரீன் கூறுவது பெருந்தன்மையில்லை. பிறர் விஷயத்தில் அழைப்பில்லாமல் குறுக்கிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது.
  26. No one can ask another to marry according to her ideas. This only shows the absurdity of her personality
    எவரும் அடுத்தவரை தன் கருத்துப்படித் திருமணம் செய்யும்படிக் கேட்க முடியாது. இது லேடி காதரீனுடைய சுபாவம் அபத்தம் எனக் கூறுகிறது
  27. She is officious, silly, and pompous
    லேடி காதரீன் அர்த்தமற்றவர். பிறர் விஷயத்தில் தலையிடுபவர், ஆர்ப்பாட்டக்காரர் என்கிறது.
2
"That is all very proper and civil, I am sure," said Mrs. Bennet, "and I dare say she is a very agreeable woman. It is a pity that great ladies in general are not more like her. Does she live near you, sir?"
“எல்லா செயல்களும் முறையாகவும், நாகரீகமாகவும் இருக்கின்றன”என்ற திருமதி. பென்னட், “அவள் மிகவும் இனிமையான பெண்மணியாக இருப்பாள் என நினைக்கிறேன். உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்மணிகள் இவளைப்போல் இல்லாததுதான் மிகவும் வருந்தத்தக்கது. உங்களுக்கு அருகில் வசிக்கின்றாளா?”என்றும் கேட்டாள்.
  1. To Mrs. Bennet, Lady Catherine is agreeable
    Mrs.பென்னட்டிற்கு லேடி காதரீன் ஒத்துப் போகிறது.
  2. Man constantly compares with himself any news that comes to him
    அனைவருடனும் தன்னை ஒப்பிடுவது சுபாவம்.
3
"The garden in which stands my humble abode, is separated only by a lane from Rosings Park, her ladyship's residence."
“தோட்டத்தில் அமைந்திருக்கும் எனது எளிய இல்லத்தையும், லேடி காதரினுடைய இல்லமான ரோஸிங்ஸ் பார்க்கையும் பிரிப்பது ஒரு சிறிய பாதைதான்”.
  1. He prides in the proximity of his residence to hers
    தன் வீடு லேடி காதரின் வீட்டிற்கருகிலிருப்பதற்காக பெருமைப்படுகிறான்.
4
"I think you said she was a widow, sir? Has she any family?"
“அவள் ஒரு விதவை என நீங்கள் கூறியதாக நினைக்கிறேன். அவளுக்கென குடும்பம் ஏதேனும் இருக்கிறதா?”
  1. How Mrs. Bennet inferred that Catherine is a widow is not known
    லேடி காதரீன் விதவையென எப்படி Mr.பென்னட் புரிந்து கொண்டார் எனத் தெரியவில்லை.
5
"She has one only daughter, the heiress of Rosings, and of very extensive property."
“பெரிய சொத்தின் வாரிசாக அவளுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள்.”
 
6
"Ah!" Cried Mrs. Bennet, shaking her head, "then she is better off than many girls. And what sort of young lady is she? Is she handsome?"
“ஆஹா! அப்படியெனில் மற்ற பெண்களைவிட இவள் மேம்பட்டவள். எப்படிப்பட்ட பெண் இவள்? அழகானவளா?” என்று கேட்டாள் திருமதி. பென்னட்.
 
7
"She is a most charming young lady indeed. Lady Catherine herself says that, in point of true beauty, Miss De Bourgh is far superior to the handsomest of her sex; because there is that in her features which marks the young woman of distinguished birth. She is unfortunately of a sickly constitution, which has prevented her making that progress in many accomplishments, which she could not otherwise have failed of, as I am informed by the lady who superintended her education, and who still resides with them. But she is perfectly amiable, and often condescends to drive by my humble abode in her little phaeton and ponies."
“அவள் மிகவும் அழகானவள். ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கேயுரிய லட்சணங்களையுடைய மிஸ். டி பர்க் உண்மையான அழகு என்று எடுத்துக் கொண்டால் எல்லோரைக் காட்டிலும் மிகவும் அழகானவள் என்று லேடி காதரின் சொல்வாள். ஆனால் தேகநலக் குறைவின் காரணமாக பல திறமைகளில் முன்னேற்றமடைய முடியவில்லை என்று அவளுடனேயே வசிக்கும் அவளது படிப்பினை மேற்பார்வையிடும் பெண்மணி என்னிடம் கூறியிருக்கிறாள். பழகுவதற்கு மிகவும் இனிமையானவள். அடிக்கடி எனது எளிய இல்லத்திற்கு அவளுடைய குதிரையில் வருகை புரிவாள்.”
  1. Wealth and beauty are important virtues of a young lady
    இளம் பெண்ணுக்கு அழகும், செல்வமும் அந்தஸ்து தரும்.
  2. Superior wealth does not give superior appearance or superior manners
    பெரும் செல்வம் உயர்ந்த பழக்கத்தையோ, உயர்ந்த அந்தஸ்த்தையோ தராது.
  3. Marks of high birth are unmistakable
    உயர்குடிப் பிறப்பின் அறிகுறிகளைக் காணாமலிருக்க முடியாது
  4. Sickness is an obstacle to any accomplishment accomplishment
    எந்த சாதனைக்கும் நோய் தடை.
8
"Has she been presented? I do not remember her name among the ladies at court."
“அவள் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டாளா? பெண்மணிகளின் சபையில் அவள் பெயரை இதுவரை நான் கேட்டதாக ஞாபகமில்லையே.”
  1. It is a wonder Mr. Bennet could know if Lady Anne was presented
    லேடி ஆன் கோர்ட்டில் வருவது Mr.பென்னட்டிற்கு எப்படித் தெரிய முடியும்.
9
"Her indifferent state of health unhappily prevents her being in town; and by that means, as I told Lady Catherine myself one day, has deprived the British court of its brightest ornament. Her ladyship seemed pleased with the idea; and you may imagine that I am happy on every occasion to offer those little delicate compliments which are always acceptable to ladies. I have more than once observed to Lady Catherine, that her charming daughter seemed born to be a duchess, and that the most elevated rank, instead of giving her consequence, would be adorned by her. These are the kind of little things which please her ladyship, and it is a sort of attention which I conceive myself peculiarly bound to pay."
“நகரத்திற்குப் போய்வர முடியாமல் தடுப்பதே அவளுடைய உடல்நலக் குறைவுதான். அதனாலேயே இங்கிலாந்து சபை ஒரு நல்ல பெண்மணியை இழந்துவிட்டது என லேடி காதரினிடம் நான் கூறினேன். இதனை கேட்டு லேடி காதரின் சந்தோஷமடைந்தாள் என்று தோன்றுகிறது. பெண்மணிகள் ஏற்றுக் கொள்ளும் சில நல்ல பாராட்டுகளை சொல்வதில் நான் மிக்க சந்தோஷம் அடைவேன். ஒரு உயர்ந்த பதவியான, பிரபுவின் மனைவி என்ற இடத்திற்குப் பொருத்தமாக அவளுடைய மகள் பிறந்திருக்கிறாள் என லேடி காதரினிடம் நான் ஒரு முறைக்குமேல் கூறியிருப்பேன். லேடி காதரினை சந்தோஷப்படுத்தும் இதுபோல சிறுசிறு விஷயங்களில் நானும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வேன்.”
  1. Mr. Collins is elated by his sycophancy
    காலின்ஸ் தன் முகஸ்துதியை நினைத்துப் பெருமைப்படுகிறான்.
  2. The normal tendency is to evaluate another by one’s own standard
  3. An admirer is obviously oblivious
  4. Man imagines to his credit the lost opportunities
  5. A clown is one who compliments himself on his blemishes
    கோமாளி தன் குறைகளுக்காகப் பெருமைப்படுவான்.
10
"You judge very properly," said Mr. Bennet, "and it is happy for you that you possess the talent of flattering with delicacy. May I ask whether these pleasing attentions proceed from the impulse of the moment, or are the result of previous study?"
“நீங்கள் சரியாக எடை போட்டிருக்கிறீர்கள். மற்றவரை சந்தோஷப்படுத்துவதற்காக புகழ்வது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கிறது. இதை இயல்பாக செய்வீர்களா? அல்லது முன்கூட்டித் தயார் செய்து கொள்வீர்களா?” என்று கேட்டார் திரு. பென்னட்.
  1. Mr. Bennet’s meanness acquires vigour
    Mr.பென்னட்டின் மட்டமான குணம் சூடு பிடிக்கிறது.
  2. Mr. Bennet enjoys tickling Mr. Collins, an unbecoming act which recoiled on him through two letters of his later
  3. Even in this dubious vocation, Mr. Bennet provides for creativity
    இந்த கோமாளி வேடிக்கையிலும் Mr. பென்னட் புதிய சிருஷ்டிக்கு இடம் வைக்கிறார்.
  4. To persuade a clown to be clownish is clownishness
    கோமாளியைத் தூண்டி விடுவது கோமாளித்தனம்.
11
"They arise chiefly from what is passing at the time, and though I sometimes amuse myself with suggesting and arranging such little elegant compliments as may be adapted to ordinary occasions, I always wish to give them as unstudied an air as possible."
“சமயத்திற்கு ஏற்றாற்போல் இயல்பாகவேதான் செய்வேன். ஆனால் சில சமயம் தயார் செய்து கொண்டு இடத்திற்கு பொருந்துவதுபோல பாராட்டுகளைத் தெரிவிப்பேன். ஆனால் நான் முன்கூட்டி தயார் செய்தது என்று அவர்களுக்குத் தெரியாதவண்ணம், என்னால் முடிந்தவரை இயல்பாக பாராட்டுவதுபோல் கூறுவேன்.”
  1. One symptom of stupidity is its pride over things others will be ashamed of
  2. Even fools appreciate the value of the moment
    நேரம் எழுந்தால் மடையனும் அதை அறிவான்
12
Mr. Bennet's expectations were fully answered. His cousin was as absurd as he had hoped, and he listened to him with the keenest enjoyment, maintaining at the same time the most resolute composure of countenance, and, except in an occasional glance at Elizabeth, requiring no partner in his pleasure.
திரு. பென்னட் எதிர்பார்த்தது போலவே, காலின்ஸ் முட்டாள்தனமாக இருந்தான். அவன் பேசியதை அவர் மிகவும் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை. எலிசபெத்தை எப்போதாவது ஒரு முறை பார்ப்பதைத் தவிர பொறுமையோடும், அமைதியாகவும் அவன் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தார்.
  1. A trick that works yields great pleasure
    பலிக்கும் யுக்தி இதமானது.
    A trap that catches the prey is jubilant
    பொறியுள் ஏமாந்தவன் மாட்டிக் கொள்வது ஆனந்தம் தரும்.
    A ruse that is successful is gratifying
    பலிக்கும் யுக்தி இதமானது.
    There are men who do not know the joy of not using a ruse
    யுக்தியின் பலனை அனுபவித்தறியாதவருண்டு.
    It is a greater joy to save one from becoming a prey to a play
    பொறியில் அகப்படுபவனைக் காப்பாற்றுவது பெரிது.
    To capture another in a trap of opportunity is elevating
    வாய்ப்பின் பொறியுள் வரச் சொல்வது மனம் நிறை மகிழ்ச்சி இலட்சியத்தைக் காண்பிப்பது அரிது.
    To lead one to Light is a privilege
    அடுத்தவர் இருளை இழக்கும் ஜோதியாவது அனைவருக்கும் கிடைக்காது.
    To be the Light in which another can shed his darkness is no mean privilege
    அடுத்தவரில் இலட்சிய ஜோதியை எழுப்புவது இலட்சியத்தின் ஊற்றாவதாகும்.
    To awaken the Light in another is to be the fountainhead of Light
    Knowledge is Light, is its origin

    ஞானம் ஜோதி, ஜோதியின் உற்பத்தி ஸ்தானம் ஞானம்.
  2. Culture does not resort to ruses; if resorted to, it soon cloys
    பண்பானவர் தந்திர யுக்திகளைப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்தினால் எளிதில் திகட்டும்.
  3. His mean stratagem fully worked. Think of this in the context of Darcy and Caroline resorting to a ruse and Wickham’s scandal
  4. ‘Nothing can come to us that is not in us.’ Analyse this conversation in the light of 1) his proposal 2) his wedding, 3) Elizabeth’s visit to Hunsford, 4) Darcy’s proposal to Elizabeth, 5) Collins’ two letters on Lydia and Darcy, 6) His hiding from Lady Catherine at Meryton
    அவர் மட்டமான யுக்தி பலித்தது. டார்சியும் காரலினும் செய்த யுக்தியை, விக்காம் கூறிய அவதூறுகளை இதன் நோக்கில் ஆராய வேண்டும். ’நம்மிடம் இல்லாதது நமக்கு வாராது’. இந்த உரையாடலை கீழ்க்கண்ட நோக்கில் ஆராய வேண்டும். 1) Proposal, 2) திருமணம், 3) எலிசபெத் ஹன்ஸ்போர்ட் வருவது, 4) டார்சியின் proposal, 5) காலின்ஸ் எழுதிய இரண்டு கடிதங்கள் லிடியாவைப் பற்றியும், டார்சியைப் பற்றியும், 6) லேடி காதரீனிடமிருந்து முடிவில் ஒளிந்தது.
  5. To take advantage of one’s ignorance or lack of culture is mean
  6. Form without content enjoys empty forms embellished
  7. The satisfaction of fulfilled expectation is real. Mr. Bennet is not magnanimous to enjoy at the expense of Mr. Collin’s lack of upbringing
  8. Pleasure shared is pleasure doubled
13
By tea-time, however, the dose had been enough, and Mr. Bennet was glad to take his guest into the drawing-room again, and, when tea was over, glad to invite him to read aloud to the ladies. Mr. Collins readily assented, and a book was produced; but on beholding it (for everything announced it to be from a circulating library) he started back, and begging pardon, protested that he never read novels. Kitty stared at him, and Lydia exclaimed. Other books were produced, and after some deliberation he chose Fordyce's Sermons. Lydia gaped as he opened the volume, and before he had, with very monotonous solemnity, read three pages, she interrupted him with –
தேநீர் அருந்தும் சமயம்வரை திரு. பென்னட், காலின்ஸினுடைய பேச்சைக் கேட்டு, இதற்கு மேலும் தாங்காது என நினைத்ததால் தேநீர் அருந்தியபின் வரவேற்பறைக்கு அழைத்துச் சென்று பெண்மணிகளுக்காக புத்தகத்தை உரக்க வாசித்துக் காண்பிக்குமாறு வேண்டினார். காலின்ஸ் ஒத்துக் கொண்டான். ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. ஆனால் அது வாடகை நூலகத்திலிருந்து வாங்கி வந்திருப்பதை அறிந்த அவன், தான் கதைப் புத்தகம் படித்ததே இல்லை என்றான். கிட்டி அவனை உற்று நோக்கினாள், லிடியா தனது ஆச்சரியத்தை வெளியிட்டாள். வேறு புத்தகங்கள் அவனுக்கு வழங்கப்பட்டன. வெகுநேர ஆராய்ச்சிக்குப்பின் சமய புத்தகமான “ ஃபார்டிஸ் ஸெர்மன்ஸ்” எனும் புத்தகத்தை எடுத்துக் கொண்டான். அவன் அப்புத்தகத்தை திறப்பதை வாயைப் பிளந்து கொண்டு பார்த்த லிடியா, சுவாரசியமே இல்லாமல் மிக்க பயபக்தியுடன் மூன்று பக்கங்களை அவன் படித்து முடிப்பதற்குள் அவனை இடைமறித்து,
  1. To entertain a guest is a cultural exercise
    விருந்துபசாரம் பண்பான வாழ்வு.
  2. Culture develops by devising cultured living for the leisure hours
    ஓய்வுக்கு உயர்ந்த பக்குவமான வேலையை ஏற்பது பண்பான வாழ்வாகும்.
  3. The physical presence of the other sex exercises a cultural influence
    பெண்களும் ஆண்களும் கலந்து செயல்படுவது பண்பின் பக்குவம் வளர உதவும்.
  4. Giving a novel to a clergyman is inappropriate
    பாதிரியாரை நாவல் படிக்கச் சொல்வது சரியில்லை
  5. The reading ended abruptly
    படிப்பு திடீரென முடிந்தது.
  6. Vast differences in culture do not permit even a slight compromise
  7. In those days, novel reading was looked upon as dissipation
  8. Lydia’s elopement is foreshadowed by this event
    லிடியா ஓடிப் போனதை இந்நிகழச்சியில் காணலாம்.
  9. In the absence of governess children learn good manners by their own personal effort which can be better
    வீட்டில் ஆசிரியை இல்லாவிட்டால் குழந்தைகள் தாமே கற்கும் நல்ல பழக்கம் உயர்ந்ததாகும்.
  10. Manners is denying oneself rough impulses
    முரட்டுத்தனமான முனைப்பு மழுங்குவது பழக்கம்.
  11. To generate sweet speaking impulses by the force of circumstances, one learns good manners which directly becomes an expression of formed settled culture
    சந்தர்ப்பம் இனிமையாக உணர நிர்பந்தப்படுத்துவதால் நல்ல பழக்கம் உற்பத்தியாகிறது. அதன் மூலம் நெடுநாள் நீடிக்கும் நிரந்தரப் பண்பு உற்பத்தியாகிறது.
  12. A clown treated well justifies his clownishness
    ஒரு கோமாளியை மரியாதையாக இனிமையாக நடத்தினால், அவன் கோமாளித்தனம் இயல்பாகத் தெரியும்.
  13. The most boorish in the family readily announces the failure of boorishness
    வீட்டில் ஒருவர் அநாகரீகமாகப் பழகுவது அநாகரீகத்தின் தோல்வி
  14. A clown’s offer of clumsy good will can directly bring in ten times greater luck
    கோமாளி நல்லெண்ணத்தால் உளறினால் 10 மடங்கு அதிர்ஷ்டம் வருவதைக் காட்டும்.
  15. Good will from any quarter can, ultimately, be only good will
    எவருடைய நல்லெண்ணமும் முடிவாக நல்லதே செய்யும்.
  16. To know what life offers by what it presents is life knowledge
    வருவதைக் கொண்டு பெறுவதை அறிவது சூட்சும ஞானம்.
  17. Good will attracts good will; it also permits ill-will
    நல்லெண்ணம் நல்லெண்ணத்துடன் சேரும். அது கெட்ட எண்ணத்தையும் அனுமதிக்கும்.
  18. The first meeting on the road, perhaps, indicates the family being dragged to the road
    நான்கு வரன்களும் 5 பெண்களை முதல் முறை ரோட்டில் சந்திப்பது வீடு ரோடிற்கு வருவதைக் காட்டுகிறது
  19. Monotonous solemnity can only organise monstrously dull dead uniformity
    ஜீவனற்ற தீவிரம் பயங்கர ஜீவனற்ற வாழ்வை எழுப்பும்.
14
"Do you know, mama, that my uncle Philips talks of turning away Richard; and if he does, Colonel Forster will hire him. My aunt told me so herself on Saturday. I shall walk to Meryton to-morrow to hear more about it, and to ask when Mr. Denny comes back from town."
“அம்மா, உனக்குத் தெரியுமா, ரிச்சர்டை வெளியேற்றப் போவதாக பிலிப்ஸ் சித்தப்பா கூறினார். அப்படி அவர் செய்தால், கர்னல் பார்ஸ்டர், ரிச்சர்டை தான், வேலைக்கு வைத்துக் கொள்வதாக கூறினார். சித்தி என்னிடம் இதைப்பற்றி சனிக்கிழமையன்று கூறினாள். நான் நாளை மெரிடனுக்குச் சென்று மேலும் இதைப்பற்றி தெரிந்து கொள்ளப் போகிறேன். மேலும் திரு. டென்னி எப்பொழுது நகரத்திலிருந்து திரும்பி வருகிறார் என்றும் கேட்க வேண்டும்.”
  1. The lack of culture expresses as lack of restraint in the children
    பண்பற்ற குடும்பத்தில் பிள்ளைகள் கட்டுப்பட மாட்டார்கள்.
  2. Lydia knows no discipline of any kind
  3. Not to be offended by ignorance is a degree of culture
  4. Indelicacy pampered is indecorous
  5. Visits of guest expose vulnerable families
  6. Mr. Bennet has no implicit authority at home; it has to be enforced
  7. Lydia’s unabashed indecorous behaviour is seen here
  8. Mature culture accommodates all shades of behavior. A family that collectively absorbs such shocks from outside or inside is of course traditionally rich in culture
15
Lydia was bid by her two eldest sisters to hold her tongue; but Mr. Collins, much offended, laid aside his book, and said –
லிடியாவை பேசாமல் இருக்கும்படி மூத்த இரு சகோதரிகள் கட்டளையிட்டனர். இதனால் மிகவும் கோபமடைந்த காலின்ஸ், புத்தகத்தை பக்கத்தில் வைத்துவிட்டு,
  1. Mr. Collins’ unsuccessful proposal too is seen subtly here
    காலின்ஸ் proposal கூடி வராததும் இதில் உண்டு
  2. Offence is given by intention, not act
    செயலை விட நினைவே சுடும்.
16
"I have often observed how little young ladies are interested by books of a serious stamp, though written solely for their benefit. It amazes me, I confess; for, certainly, there can be nothing so advantageous to them as instruction. But I will no longer importune my young cousin."
“எப்படி இளம் பெண்களுக்கு, அவர்களது நலனுக்காகவே எழுதப்பட்ட சிறந்த புத்தகங்களில் சிறிதுகூட நாட்டமே இல்லாமல் போகிறது என்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். இதுபோன்ற அறிவுரைகள் அவர்களுக்கு எவ்வளவு பெரிய நலனை தரும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நான் என்னுடைய இளம் உறவினளை இனியும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.”
  1. Lydia was to be controlled
    லிடியாவைக் கண்டிக்க வேண்டும்.
  2. It is not wise to write books of serious stamp for the youth
    இளைஞர்கட்கு எழுதும் புத்தகங்கள் கடினமானதாக இருக்கக் கூடாது.
  3. He who is stung by the expressed ignorance is oblivious of the implied one
    ஒருவர் அறியாமை அடுத்தவர் மனத்தைப் புண்படுத்தும்போது, அவர் அறியாத அறியாமை ஏற்படுத்தும் பெரும் புண் தெரிவதில்லை.
17
Then, turning to Mr. Bennet, he offered himself as his antagonist at backgammon. Mr. Bennet accepted the challenge, observing that he acted very wisely in leaving the girls to their own trifling amusements. Mrs. Bennet and her daughters apologised most civilly for Lydia's interruption, and promised that it should not occur again, if he would resume his book; but Mr. Collins, after assuring them that he bore his young cousin no ill-will, and should never resent her behaviour as any affront, seated himself at another table with Mr. Bennet, and prepared for backgammon.
திரு. பென்னட்டை நோக்கி, சதுரங்கம் விளையாடலாமா எனக் கேட்டான். பெண்கள் தங்களுடைய அற்பத்தனமான சந்தோஷங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளட்டும் என்று எண்ணி, காலின்ஸ் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதைப் போற்றி அவனுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். லிடியாவின் நடத்தைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட திருமதி. பென்னட்டும், அவளது பெண்களும் புத்தகத்தை அவன் தொடர்ந்து படித்தால் இனி அவ்வாறு நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதாகக் கூறினர். ஆனால் காலின்ஸ் தனக்கு அவள்மேல் எந்த வெறுப்பும் இல்லை, அவளுடைய நடத்தை தன்னை அவமரியாதை செய்ததாக தான் நினைக்கவில்லை என உறுதியளித்து, திரு. பென்னட்டுடன் விளையாட மற்றொரு மேஜையில் உட்கார்ந்தான்.
  1. Offence received cannot be neutralised by apologies offered
    புண்பட்ட மனம் மன்னிப்பால் மகிழாது.
  2. Generosity in forgiving is psychological grace
    மன்னிக்கும் பெருந்தன்மை மனம் வெளியிடும் அருள்.
  3. Authority can control, not civilise the brute
    அதிகாரம் அடக்கும், முரடனைப் பண்படுத்தாது.



story | by Dr. Radut