Skip to Content

Volume I Chapter 15 : Meeting at Meryton

Chapter 15: Meeting at Meryton

மெரிடனில் ஏற்பட்ட சந்திப்பு

Summary: Collins decides he will ask for Jane’s hand in marriage, but is dissuaded when Mrs. Bennet tells him that there is another to whom Jane is likely to be engaged. Quickly, Collins decides on Elizabeth. The Bennet sisters, accompanied by Collins take a walk to Meryton where they run into Denny, one of Lydia and Kitty’s officer friends. He has with him Wickham, a recently commissioned corps member. All the girls find Wickham appealing. As the group meets and converses, Bingley and Darcy arrive. Elizabeth takes note of both Darcy and Wickham’s change in color at meeting each other, Darcy appears to be angry with the officer. The sisters move on with Collins to visit Mrs. Phillips, who invites them to dinner the next day.
 
சுருக்கம்: சொத்தினை அடையப்போகும் ஒரு நிர்பந்தம் இருப்பதால், திரு. காலின்ஸ் ஜேனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் கேட்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறான். ஆனால் அவள் விரைவில் வேறு ஒருவருக்குரியவளாகப் போகிறாள் என திருமதி. பென்னட் கூறியதைக் கேட்டு வேண்டாம் என நினைக்கிறான். தன்னுடைய விருப்பத்தை எலிசபெத்திற்கு மாற்றுகிறான். காலின்ஸுடன், பென்னட் சகோதரிகள் மெரிடனிற்குச் செல்கின்றனர். அங்கு கிட்டி, லிடியாவின் இராணுவ நண்பரான திரு. டென்னியை சந்திக்கின்றனர். அவருடன், சமீபத்தில் படைப்பிரிவில் சேர்ந்த திரு. விக்காம், இருக்கிறான், எலிசபெத்திற்கு அவனைப் பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. எல்லோரும் கூடி நின்று பேசும் சமயத்தில் பிங்கிலியும், டார்சியும் வருகின்றனர், டார்சி-விக்காமின் சந்திப்பில் இருவரது முகமும் நிறம் மாறுவதை எலிசபெத் காண்கிறாள், டார்சி, புதிய அதிகாரியின்மேல் கோபமாக இருப்பது தெரிகிறது. காலின்ஸுடன் சகோதரிகள், தங்களது சித்தி திருமதி. பிலிப்ஸ் வீட்டிற்குப் போகின்றனர், மறுநாள் விருந்துக்கு சித்தி அவர்களை அழைக்கிறாள். விருந்தில் சில இராணுவ அதிகாரிகள், திரு. விக்காமை தவிர வேறு பல விருந்தினர்கள் இருக்கப் போகின்றனர்.
 
1
Mr. Collins was not a sensible man, and the deficiency of nature had been but little assisted by education or society; the greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father; and though he belonged to one of the universities, he had merely kept the necessary terms, without forming at it any useful acquaintance. The subjection in which his father had brought him up had given him originally great humility of manner; but it was now a good deal counteracted by the self-conceit of a weak head, living in retirement, and the consequential feelings of early and unexpected prosperity. A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant; and the respect which he felt for her high rank, and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman, and his rights as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility.
திரு. காலின்ஸ் புத்திசாலி இல்லை, அவனது படிப்பும், பழகும் சமூகமும் அவனுக்கு அறிவையும் பெற்றுத் தரவில்லை. அவனுடைய வாழ்நாளில் பெரும்பகுதி படிப்பறிவில்லாத, கருமியாக விளங்கிய தகப்பனாரின் கண்காணிப்பில் கழிந்தது. பல்கலைக்கழகத்தில் பயின்றிருந்தாலும், கல்வியை உயர்ந்த முறையில் அவனால் பெற முடியவில்லை. அதன் புறத்தோற்றத்தையே பெற்றான். தந்தையின் கண்டிப்பில் வளர்ந்ததால் அடக்கமாக இருந்த அவன், இளவயதிலேயே நல்ல வேலையும், தனியாகவும் இருந்த காரணத்தினால், தன்னுடைய சிற்றறிவினை வைத்துக் கொண்டு கர்வமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான். அவனுடைய அதிர்ஷ்டம், ஹன்ஸ்போர்ட் இல்லம் காலியாக இருக்கும்பொழுது லேடி காதரினுடைய அறிமுகம் கிடைத்தது. உயர்ந்த பதவியில் இருக்கும், தன்னை ஆதரிக்கும் லேடி காதரின்மீது மிக்க மரியாதையும், மதிப்பும் இருந்தன. கூடவே தான் ஒரு பாதிரியாராக இருப்பதும், அதன் மூலம் சில உரிமைகளும் கிடைத்ததால் தன்னை ஒரு முக்கியமானவன் என தானே நினைத்துக் கொண்டு கர்வமாகவும், சில சமயம் பணிவாகவும் நடந்து கொண்டான்.
  1. Education can give information, not culture
    படிப்பால் விவரம் தெரியலாம், பண்பு வாராது.
  2. A university has an academic atmosphere larded with the culture of her tradition. It is for one to receive it
    பல்கலைக்கழகம் சமூகத்தின் பாரம்பரியத்தை புத்தகப்படிப்பு மூலம் தருகிறது. அதை மாணவர்க்குத் தரவல்லது.
  3. Education cannot compensate for deficiency of nature
  4. University education by itself cannot make one a gentleman
    பல்கலைக் கழகப் படிப்பு ஒருவரை gentleman ஆக்க முடியாது.
  5. Society educates is true, it educates the personality in its own ways
    மனிதனைச் சமூகம் பண்படுத்துகிறது. மனித சுபாவத்தை சமூகம் தனக்கேற்றவாறு பதப்படுத்துகிறது.
  6. Parental guidance is composed of 75% of authority and 25% of their follies
    பெற்றோர் பொறுப்பு முக்கால் பாகம் அதிகாரம் கால் பாகம் அறியாமை.
  7. An illiterate father having an educated son inverts the complex of poverty
    படிக்காத தகப்பனார் மகனைப் படிக்க வைத்தால், அவரது வறுமை அவன் சுபாவமாகும்.
  8. Miserliness in a parent is infection, if not in money, but at least in generosity
    தகப்பனார் கருமியானால், மகனுக்கு அக்குணம் பணத்திலில்லாவிட்டாலும் பெருந்தன்மையில் வரும்.
  9. The subjection of humility can release itself as volubility
    அடக்கத்தை வலிய ஏற்றால் அது அர்த்தமற்ற பேச்சை அதிகமாக்கும்.
  10. The self-conceit of a weak head in life tends to place itself at the disposal of conceited arrogance
    தலைகாலியானவன் கர்வமடைந்தால், கர்வமே உருவானவருடைய துணைவனாவான்.
  11. Self-importance expressing humility makes one clownish
    தான் முக்கியம் என்பவன் அடக்கத்தை மேற்கொண்டால் கோமாளியாவான்.
  12. Self-conceit is the result of prosperity without commensurate culture, particularly education
    போதுமான பண்பு, பக்குவம் இல்லாதபொழுது சொத்து வருவது கர்வம் வளரும். முக்கியமாகப் படிப்பு தேவை.
  13. Fortune is excess of energy in a person because of a social or psychological disequilibrium
    சமூகத்தில் அல்லது மனநிலையில் ஏற்படும் மாறுதல்களால் உற்பத்தியாகும் உபரி சக்தி தருவது அதிர்ஷ்டம்.
  14. The educational effort of a weak illiterate mind attracts luck of prosperity
  15. The curious mixture of Collins’ traits fully reflects the position of Lady Catherine and is an equally curious complement to Charlotte
    காலின்ஸிடம் பல குணங்கள் வேடிக்கையாகக் கலந்துள்ளன. அதுவே லேடி காதரீன் நிலை. ஷார்லோட்டிடம் பார்த்தாலும் இக்குழறுபடியிருக்கும்.
  16. Submission is not humility
  17. Submission under authority creates self-conceit
  18. He who falsely praises another will have a good opinion about himself
  19. Mixtures of the opposite qualities are found in fresh efforts of the low
2
Having now a good house and very sufficient income, he intended to marry; and in seeking a reconciliation with the Longbourn family he had a wife in view, as he meant to chuse one of the daughters, if he found them as handsome and amiable as they were represented by common report. This was his plan of amends -- of atonement -- for inheriting their father's estate; and he thought it an excellent one, full of eligibility and suitableness, and excessively generous and disinterested on his own part.
நல்ல வீடும், கணிசமான வருமானமும் இருந்ததால், திருமணம் செய்து கொள்ளலாம் என தீர்மானித்து, லாங்க்பர்ன் குடும்பத்தினரிடம் சமாதானம் செய்து கொள்ளலாம் என விரும்பி, அவன் கேள்விப்பட்டிருந்தபடி அக்குடும்ப பெண்கள் அழகாகவும், இனிமையாகவும் இருந்தால், யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து மனைவி ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் வந்திருந்தான். அவர்களுடைய தகப்பனாருடைய சொத்துக்கு வாரிசாக இருப்பதால் அதற்கு பிராயச்சித்தம்போல் இருந்த தன்னுடைய முடிவைக் கண்டு பெருமைப்பட்டான். தான் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்வதாக நினைத்தான், தான் இதற்கு முழு தகுதியானவன், பொருத்தமானவன் என்றும் எண்ணினான்.
  1. Ownership of a good house inflates the pride of physical security
  2. Man, who kneels before a lady seeking her hand, wants her to value his pride
  3. Simple man’s humility is self-appreciation
  4. Even genuine help or offer of help by a low man hurts
  5. He who is capable of help does not offer it
  6. One should not seek help; nor should he offer it
  7. When a right occasion arises for help and help is around, then one can seek it and the other can offer it
  8. One can be evaluated by the help he offers or accepts
  9. Generosity comes from excess of benevolence. Here it is assumed generosity, ignorant of the situation of the recipient
    தாராளமான உணர்வு அதிகமானால் பெரும்தன்மை வரும். பெறுபவருடைய தகுதியை அறியாமல் இங்கு நாம் பெருந்தன்மையைக் கருதுகிறோம்.
  10. Mr. Collins takes all his decisions on his own without reference to the opinion of the other persons
    காலின்ஸ் எந்த முடிவும் எவரையும் கலக்காமல் தானே எடுத்து விடுகிறார்.
  11. Generosity trying to express through selfishness finds itself cancelled
    சுயநலம் பெருந்தன்மையாக இருக்க முயன்றால் அது ரத்தாகும்.
3
His plan did not vary on seeing them. Miss Bennet's lovely face confirmed his views, and established all his strictest notions of what was due to seniority; and for the first evening she was his settled choice. The next morning, however, made an alteration; for in a quarter-of-an-hour's tête-à-tête with Mrs. Bennet before breakfast, a conversation beginning with his parsonage-house, and leading naturally to the avowal of his hopes, that a mistress for it might be found at Longbourn, produced from her, amid very complaisant smiles and general encouragement, a caution against the very Jane he had fixed on. "As to her younger daughters she could not take upon her to say -- she could not positively answer -- but she did not know of any prepossession; her eldest daughter, she must just mention -- she felt it incumbent on her to hint, was likely to be very soon engaged."
அப்பெண்களைப் பார்த்த பிறகும் அவன் எண்ணம் மாறவில்லை. ஜேனுடைய அழகு அதை உறுதி செய்தது. மூத்த மகள் என்பதால் அவனுடைய தேர்வு முதல் நாள் மாலைவரை ஜேனாக இருந்தது. மறுநாள் காலை திருமதி. பென்னட்டுடன் கால் மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பொழுது, தனது எளிய இல்லத்திற்கு எஜமானியைத் தேடி லாங்க்பர்னுக்கு வந்திருப்பதாக அவன் கூறியதை கேட்டு திருமதி. பென்னட் மிக்க சந்தோஷம் அடைந்தாள். அவனை உற்சாகப்படுத்தும் வண்ணம் நடந்து கொண்டாள். இளைய மகள்களைப் பற்றி அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் ஜேனிற்கு வெகு விரைவில் விவாகம் நிச்சயமாகப் போவதை அவனுக்கு உணர்த்தினாள்.
  1. One’s choice is made by life, not by him
    நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது வாழ்வு தருவது.
  2. England is not a country where, in matters of marriage, there is any seniority rule either for men or women
    திருமணம் மூத்தவனுக்கு முதலில் என்ற சட்டம் இங்கிலாந்தில் ஆண்களுக்கோ பெண்கட்கோ இல்லை.
  3. Mrs. Bennet’s assumption about the possible engagement of Jane postponed it
    Mrs. பென்னட் ஜேனுக்கு நிச்சயதார்த்தம் வருகிறது என எதிர்பார்த்ததில் அது தள்ளிப் போகிறது.
4
Mr. Collins had only to change from Jane to Elizabeth -- and it was soon done -- done while Mrs. Bennet was stirring the fire. Elizabeth, equally next to Jane in birth and beauty, succeeded her of course.
உடனே அவன் ஜேனிடமிருந்து, எலிசபெத்திற்கு மாறினான். அழகில் ஜேனுக்கு அடுத்ததாக இருந்த எலிசபெத்தை மண முடிக்க தயாரானான்.
  1. Expectations form themselves in a trice
    எதிர்பார்ப்பது க்ஷணத்தில் எழும்.
  2. The quick arrangements between Mrs. Bennet and Mr. Collins explain themselves when Elizabeth refuses and Jane is disappointed. Life does not permit us to take it for granted. What is the indication of life here for Collins? Some of the girls evincing interest in him would be that indication. A distant trace of it is seen from Mary only
    எலிசபெத் ஜேன் ஏமாந்ததை ஏற்கவில்லை. காலின்ஸூம், Mrs. பென்னட்டும் செய்த விரைவான ஏற்பாடுகள் அதை விளக்குகின்றன. எதையும் உண்டு என நினைக்க வாழ்வு இடம் தராது. காலின்ஸூக்கு வாழ்க்கை என்ன கூறுகிறது. வேறு பெண்களை காலின்ஸ் மீது அக்கறை காட்டுவது அந்த சின்னம். மேரியின் போக்கு ஓரளவு அதைக் காட்டும்.
  3. Mr. Collins and Mrs. Bennet planned the marriage of Elizabeth according to social norms. It was done breaking the social sphere
  4. In a rich positive atmosphere the planning of small minds is broken according to the atmosphere
  5. As Collins takes Elizabeth into his scheme, Wickham enters the picture
5
Mrs. Bennet treasured up the hint, and trusted that she might soon have two daughters married; and the man whom she could not bear to speak of the day before, was now high in her good graces.
திருமதி. பென்னட்டிற்கு அவன் எண்ணம் புரிந்தது. சந்தோஷமடைந்த அவள், விரைவில் தனது இரு பெண்களுக்கும் திருமணம் நடந்து விடும் என உறுதியாக நம்பினாள். முதல் நாள்வரை பேசக்கூட பிடிக்காமல் இருந்த காலின்ஸ் இப்பொழுது அவளது மதிப்பில் வெகுவாக உயர்ந்திருந்தான்.
  1. One does not relate to another, but to what he can do
    ஒருவர் செயல் அடுத்தவரைப் பொருத்ததில்லை, அவரால் என்ன முடியும் என்பதைப் பொருத்தது.
  2. Expectation of an event either postpones it or cancels
    எதிர்பார்த்தால் தள்ளிப் போகும், ரத்தாகும்.
6
Lydia's intention of walking to Meryton was not forgotten; every sister except Mary agreed to go with her; and Mr. Collins was to attend them, at the request of Mr. Bennet, who was most anxious to get rid of him, and have his library to himself; for thither Mr. Collins had followed him after breakfast, and there he would continue, nominally engaged with one of the largest folios in the collection, but really talking to Mr. Bennet, with little cessation, of his house and garden at Hunsford. Such doings discomposed Mr. Bennet exceedingly. In his library he had been always sure of leisure and tranquillity; and though prepared, as he told Elizabeth, to meet with folly and conceit in every other room in the house, he was used to be free from them there; his civility, therefore, was most prompt in inviting Mr. Collins to join his daughters in their walk; and Mr. Collins, being in fact much better fitted for a walker than a reader, was extremely well pleased to close his large book, and go.
மெரிடனிற்கு போக வேண்டும் என்ற லிடியாவின் விருப்பத்தை யாரும் மறக்கவில்லை. மேரியைத் தவிர அனைவரும் அவளுடன் செல்ல ஒப்புக் கொண்டனர். காலை சிற்றுண்டிக்குப் பிறகு காலின்ஸ், பென்னட்டுடன் நூலகத்திற்கு வந்து, அங்கு ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து படித்துக் கொண்டே, ஹன்ஸ்போர்டிலுள்ள தனது வீட்டைப் பற்றியும், தோட்டத்தைப் பற்றியும் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்ததால் எப்படியாவது அவனை அங்கிருந்து நீக்க வேண்டும் என தீர்மானித்து அவனையும் அவர்களுடன் செல்லுமாறு பணிந்தார். நூலகத்தில் அமைதி கெடுவது அவருக்குப் பிடிக்காது . முட்டாள்தனமாகவும், தற்பெருமையாய் பேசுபவர்களிடமிருந்து விடுபெற்று, தன்னுடைய நூலகத்தில் ஏகாந்தமாய் ஓய்வெடுத்துக் கொள்வது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆதலால் அவர் காலின்ஸை தனது பெண்களுடன் செல்லுமாறு மரியாதையுடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, படிப்பதைவிட, வெளியில் செல்வதையே விரும்பிய காலின்ஸ் சந்தோஷத்துடன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு கிளம்பலானான்.
  1. A marriage proposal in the air energises all the girls
    திருமணம் என்ற பேச்சு எல்லா பெண்கட்கும் உற்சாகம் தரும்.
  2. The energies of solitude of one can activate every other person at home socially, as it is the nature and purpose
    தனித்திருந்தால் வீட்டில் அனைவரும் சுறுசுறுப்பாவார்கள். அதுவே அதன் சுபாவம், நோக்கம்.
  3. One who buys a house will have the house in all his conversation for some decades to come
    வீடு கட்டியவர் எவரிடம் பேசினாலும், எங்கு பேசினாலும், பல வருஷம் வரை அவர் பேச்சில் வீடு வராமலிருக்காது.
  4. One can defend himself from other people, not the folly of those in your family as it is in you
    பிறரிடமிருந்து நம்மைப் பாதுகாக்கலாம், வீட்டு மனிதரிடமிருந்து தப்புவது கடினம். நம் அறியாமையிலிருந்து தப்பவே முடியாது.
  5. Volubility and active walking go together
    அளவுகடந்து பேசுவதும் விரைவாக நடப்பதும் ஒன்றே.
  6. All the girls go to Meryton in search of the officers is the social truth for Caroline’s picking at Elizabeth at Pemberley
    காரலின் பெம்பர்லியில் எலிசபெத்தை சீண்டுகிறாள். பெண்கள் மெரிடனுக்கு ஆபீசர்களை நாடிப் போவது பின்னணியில் உள்ள உண்மை.
7
In pompous nothings on his side, and civil assents on that of his cousins, their time passed till they entered Meryton. The attention of the younger ones was then no longer to be gained by him. Their eyes were immediately wandering up in the street in quest of the officers, and nothing less than a very smart bonnet indeed, or a really new muslin in a shop window, could recal them.
மெரிடன் போய் சேரும் வரை அவனுடைய வீண் ஜம்பத்தை, மரியாதை கருதி , பெண்கள் கேட்டுக் கொண்டு வந்தனர். மெரிடனில் நுழைந்தவுடன் இளைய பெண்களின் கவனத்தை அவனால் தன்பால் திருப்ப முடியவில்லை. ஆபிசர்களைத் தேடி அவர்களது கண்கள் அங்குமிங்குமாய் அலைந்து கொண்டிருந்தது. கடையில் இருந்த அழகிய தொப்பிகளையும், நுண்ணிய உடைகளையும் கண்ணாடி வழியாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
  1. Conversations carried on for courtesy’s sake deliver no purpose
    மரியாதைக்காகப் பேசும்பொழுது காரியம் முடியாது.
  2. New muslin in a shop and the new face of an officer are equal to the younger girls
8
But the attention of every lady was soon caught by a young man, whom they had never seen before, of most gentlemanlike appearance, walking with an officer on the other side of the way. The officer was the very Mr. Denny, concerning whose return from London Lydia came to inquire, and he bowed as they passed. All were struck with the stranger's air, all wondered who he could be; and Kitty and Lydia, determined if possible to find out, led the way across the street, under pretence of wanting something in an opposite shop, and fortunately had just gained the pavement when the two gentlemen, turning back, had reached the same spot. Mr. Denny addressed them directly, and entreated permission to introduce his friend, Mr. Wickham, who had returned with him the day before from town, and he was happy to say had accepted a commission in their corps. This was exactly as it should be; for the young man wanted only regimentals to make him completely charming. His appearance was greatly in his favour; he had all the best part of beauty, a fine countenance, a good figure, and very pleasing address. The introduction was followed up on his side by a happy readiness of conversation -- a readiness at the same time perfectly correct and unassuming; and the whole party were still standing and talking together very agreeably, when the sound of horses drew their notice, and Darcy and Bingley were seen riding down the street. On distinguishing the ladies of the group the two gentlemen came directly towards them, and began the usual civilities. Bingley was the principal spokesman, and Miss Bennet the principal object. He was then, he said, on his way to Longbourn on purpose to inquire after her. Mr. Darcy corroborated it with a bow, and was beginning to determine not to fix his eyes on Elizabeth, when they were suddenly arrested by the sight of the stranger, and Elizabeth, happening to see the countenance of both as they looked at each other, was all astonishment at the effect of the meeting. Both changed colour; one looked white, the other red. Mr. Wickham, after a few moments, touched his hat -- a salutation which Mr. Darcy just deigned to return. What could be the meaning of it? -- It was impossible to imagine; it was impossible not to long to know.
ஆனால் விரைவிலேயே, எல்லோரது கவனமும் பாதையின் மறுபக்கத்தில் ஒர் அதிகாரியுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஒர் இளைஞனிடம் சென்றது. அவனை, அவர்கள் இதுவரை பார்த்ததில்லை. மேலும் அவன் பார்ப்பதற்கு மிகவும் கண்ணியமானவன்போல் தோற்றமளித்தான். யாரைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கு லிடியா வந்தாளோ, அதே திரு. டென்னிதான் அவ்விளைஞனுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர்களை தாண்டி செல்கையில், வணக்கம் கூறி சென்றார். அவனுடைய தோற்றத்தைப் பார்த்து பிரமித்த அனைவரும், யாராக இருக்கும் என ஆச்சரியப்பட்டனர். கிட்டியும், லிடியாவும் அவனைப்பற்றி தெரிந்து கொள்ள கடையில் ஏதோ வாங்கப் போவதைபோல் பாதையைத் தாண்டி எதிர்புறம் சென்றனர். அதிர்ஷ்டவசமாக அவ்விருவரும் சரியாக அதேசமயம் அவ்விடத்திற்கு திரும்பி வந்து சேர்ந்தனர். திரு. டென்னி பெண்களைப் பார்த்து தன் நண்பனை அறிமுகப்படுத்தலாமா என கேட்டு, திரு. விக்காம் நேற்று தான் ஊரிலிருந்து தன்னுடன் வந்ததாகவும், தங்களுடைய படைப்பிரிவில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார். இராணுவத்தில் சேருவதற்கே விருப்பப்பட்ட அவ்விளைஞன் இராணுவ உடையில் மேலும் கம்பீரமாக இருந்தான். அவனுக்குச் சாதகமாகவே அவனுடைய தோற்றமும் இருந்தது. அழகின் அம்சங்களான அழகிய முகம், நல்ல தோற்றம், இனிமையான பேச்சு எல்லாமே அவனிடம் இருந்தன. அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவன் அவர்களுடன் பேச தயாராக இருந்தான். எளிமையாகவும் , இயல்பாகவும் அவனது பேச்சு இருந்ததால் எல்லோரும் அங்கு நின்று கொண்டு அவனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, குதிரையின் காலடி ஒசை கேட்டு அதில் டார்சியும், பிங்கிலியும் வருவதைக் கண்டனர். பெண்மணிகளை கண்ட அவர்கள் நேராக வந்து நலன் விசாரித்தனர். பிங்கிலிதான், பிரதானமாக பேசிக் கொண்டிருந்தான். ஜேன் உடல்நிலை பற்றி விசாரிக்க லாங்க்பர்னுக்கு தாங்கள் வந்து கொண்டிருப்பதாக அவன் கூறினான். ஆம் என்பதுபோல் தலையசைத்த டார்சி எலிசபெத்தின்மீது தன் பார்வை விழக்கூடாது என தீர்மானித்து வேறுபுறம் திரும்பிய பொழுது விக்காமை கண்டு அவன் பார்த்த விதத்தையும், இருவரும் நடந்துக் கொண்ட விதத்தையும் மிக்க பிரமிப்புடன் எலிசபெத் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் முகமும் மாறியது. ஒருவனது முகம் வெளிறியது, மற்றொருவனின் முகம் சிவந்தது. சில வினாடிகளுக்குப்பின் விக்காம் தன்னுடைய தொப்பியை கழற்றி டார்சிக்கு வணக்கம் செலுத்தினான். டார்சி அதை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டான். இதற்கு அர்த்தம் என்னவாக இருக்கும். கற்பனை செய்யவும் முடியவில்லை, தெரிந்து கொள்ளாமலும் இருக்க முடியவில்லை.
  1. Note Collins comes with the girls. They run into Wickham while Darcy and Bingley soon join them. All these four men are to marry. Only Charlotte is not there. There is a significance in the absence of Charlotte as in the presence of these men
    காலின்ஸ் பெண்களுடன் வருகிறார். வழியில் விக்காமைப் பார்க்கிறார்கள். டார்சியும், பிங்லியும் வருகிறார்கள். இந்நால்வரும் திருமணம் செய்யப் போகிறவர்கள். ஷார்லோட் அங்கில்லை. ஷார்லோட் இல்லாததற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
  2. A handsome face catches attention most readily
    அழகு மயக்கும்.
  3. Nature creates beauty to attract others
    கவர்ச்சிக்காக இயற்கை அழகை உற்பத்தி செய்தது.
  4. Beauty is ananda in lines
    ஆனந்தம் உருவம் பெறுவது அழகு.
  5. Wickham’s appearance electrifies the girls. He is from Pemberley though now in the army
  6. Upbringing is all
  7. The pleasant exterior of Pemberley wins hands down in Meryton
    பெம்பர்லியின் புறத்தோற்றம் மெரிடனில் எளிமையாக ஜெயிக்கிறது
  8. Being the son of a steward, Wickham had no occasion to play a role in Pemberley. He assimilates the best of upbringing with the humblest of attitudes. He was far more handsome than Darcy and far more pleasing than Bingley
  9. Personality is expressed in his air
    சுபாவம் சொரூபத்தால் வெளிப்படும்.
  10. Those struck with beauty are more ready to accept it instantaneously than to know everything about its origin
    அழகின் கவர்ச்சிக்கு ஆராய்ச்சி தேவையில்லை.
  11. When someone is sought, as a rule, he is met with
    நாடிப் போனால், தேடி வருவார்.
  12. The uniform which makes the soldier ugly is taken to be an ornament of beauty
    அழகொழுகப் பேசுவது ஆண்மையின் கவர்ச்சி.
  13. Pleasing address is the externals of character
    உணர்ந்ததை உள்ளபடிக் காட்டும் முகம் பார்வைக்குப் பரவசமூட்டும்.
  14. Fine countenance is the pleasant exterior
    தடையின்றிப் பேச உள்ளம் தாராளமாக மலர வேண்டும்.
  15. Happy readiness of conversation is willing emotions to go out
    பொங்கி வரும் உணர்ச்சி பொருத்தமாக வெளிப்படுவது இனிமை இதமாவது.
  16. Very agreeable feeling is the excess energy enjoying the expression
    உரியதை விட்டு நகரும் பார்வை எதிரியை அழைக்கும் குரல்.
  17. All the four gentlemen who are to marry in the story meet here
  18. Note the simultaneity of Wickham and Darcy meeting the girls
    டார்சியும், விக்காமும் ஒரே சமயத்தில் பெண்களை சந்திப்பது கவனிக்கத்தக்கது.
  19. It was only Elizabeth who saw the exchange between Darcy and Wickham
  20. Conscious turning away from one’s love creates an opening in her to turn towards another
    உரியவன் வலிந்து நகர்ந்தால் உதவாக்கரை உள்ளே நுழைய இடம் ஏற்படும்.
  21. When one turns away from another, she turns towards you to oblige the rule
    பிடித்து ஆட்டும் பிசாசு விலகினால், அவள் உன்னைத் திரும்பிப் பார்ப்பது சட்டம்.
  22. Elizabeth falls for the captivating softness of Wickham which is helped by Darcy’s indecision about fixing his look on her
    டார்சி எலிசபெத்தைப் பார்க்க வேண்டாம் என முடிவு செய்தது, எலிசபெத் விக்காமின் கவர்ச்சிக்குப் பலியாக உதவியது.
  23. Darcy catches sight of Wickham when he chooses NOT to fix his eyes on her
    எலிசபெத்தை விட்டுப் பார்வையை டார்சி அகற்றியபொழுது டார்சி விக்காமைப் பார்க்கிறான்.
  24. Anger in one raises fear in another
    நம்மில் எழும் கோபம், அடுத்தவருக்கு பயம் தரும்.
  25. Thoughts can be hidden, not emotions
    எண்ணத்தை மறைக்கலாம், உணர்ச்சி ஒளியாது.
  26. It is the subconscious interest that catches sight of an event and again the subconscious interest that longs to know
    ஆழ்மனம் தவறாது காணும், இரகஸ்யத்தை அறிய ஏங்கும்.
  27. The looks of Elizabeth, Darcy, Wickham almost converge at the first moment
    எலிசபெத், டார்சி, விக்காம் இவர்களது பார்வை முதலிலேயே ஒன்றாக இணைவது இங்கே.
  28. Bingley is not a part of the scheme. He does not notice Darcy and Wickham saluting each other. Elizabeth is the centre of it. She took full notice of it
    பிங்லிக்கு இதில் பங்கில்லை. டார்சியும், விக்காமும் சல்யூட் செய்வதை பிங்லி பார்க்கவில்லை. அவர்கட்குப் பொதுவான மையம் எலிசபெத். எலிசபெத் இருவரையும் நன்றாகக் கவனிக்கிறாள்.
9
In another minute Mr. Bingley, but without seeming to have noticed what passed, took leave and rode on with his friend.
என்ன நடந்தது என்பதை கவனிக்காத பிங்கிலி, ஒரு சில நிமிடத்தில் விடைபெற்றுக் கொண்டு தனது நண்பனுடன் குதிரையில் சென்றான்.
  1. What is most important to one is of no moment to another
    ஒருவருக்கு மிக முக்கியமானது, அடுத்தவருக்கு அலட்சியம்.
  2. However small an event, its aspects are indicative of what is to come in recent future if not the ultimate result
    எந்த சிறிய நிகழ்ச்சியும், முடிவைக் காட்டாவிட்டாலும், உடன் வருவதைக் குறிக்கும்.
  3. Those involved in the first event will be there at the end
    ஆரம்பத்திலிருந்த அனைவரும் முடிவிலும் இருப்பார்கள்.
10
Mr. Denny and Mr. Wickham walked with the young ladies to the door of Mr. Philips's house, and then made their bows, in spite of Miss Lydia's pressing entreaties that they would come in, and even in spite of Mrs. Philips' throwing up the parlour window and loudly seconding the invitation.
திரு. டென்னியும், விக்காமும் இவ்விளம் பெண்களுடன் திரு. பிலிப்ஸ் வீட்டு வாசல்வரை வந்து, லிடியாவும், திருமதி. பிலிப்ஸும் இவர்களை வீட்டிற்குள் வரும்படி அழைத்தும், அவர்களுக்கு வணக்கம் கூறி விடைபெற்றுச் சென்றனர்.
  1. Lydia was the first to invite Wickham into the house of Phillips. We realise its significance at the end. The basic attraction emerges as attention
    பிலிப்ஸ் வீட்டிற்குள் விக்காமை முதலில் அழைத்தது லிடியா. அதன் முக்கியத்துவம் பின்னால் தெரிகிறது. அடிப்படைக் கவர்ச்சி கவனமாகிறது.
  2. Mrs. Bennet’s family is very affectionate. Mrs. Phillip’s invitation is ready and solicitous
    Mrs.பென்னட் குடும்பம் பிரியமானது. Mrs.பிலிப்ஸ் ஆபீசர்களைப் பிரியமாக தயக்கமின்றி அழைக்கிறாள்.
  3. Every small incident is a carrier of news
    எந்த சிறு நிகழ்ச்சியும் செய்தியைத் தாங்கி வரும்.
11
Mrs. Philips was always glad to see her nieces; and the two eldest, from their recent absence, were particularly welcome, and she was eagerly expressing her surprise at their sudden return home, which, as their own carriage had not fetched them, she should have known nothing about, if she had not happened to see Mr. Jones's shop-boy in the street, who had told her that they were not to send any more draughts to Netherfield because the Miss Bennets were come away, when her civility was claimed towards Mr. Collins by Jane's introduction of him. She received him with her very best politeness, which he returned with as much more, apologising for his intrusion, without any previous acquaintance with her, which he could not help flattering himself, however, might be justified by his relationship to the young ladies who introduced him to her notice. Mrs. Philips was quite awed by such an excess of good breeding; but her contemplation of one stranger was soon put an end to by exclamations and inquiries about the other; of whom, however, she could only tell her nieces what they already knew, that Mr. Denny had brought him from London, and that he was to have a lieutenant's commission in the -- -- shire. She had been watching him the last hour, she said, as he walked up and down the street, and had Mr. Wickham appeared, Kitty and Lydia would certainly have continued the occupation, but unluckily no one passed the window now except a few of the officers, who, in comparison with the stranger, were become "stupid, disagreeable fellows." Some of them were to dine with the Philipses the next day, and their aunt promised to make her husband call on Mr. Wickham, and give him an invitation also, if the family from Longbourn would come in the evening. This was agreed to, and Mrs. Philips protested that they would have a nice comfortable noisy game of lottery tickets, and a little bit of hot supper afterwards. The prospect of such delights was very cheering, and they parted in mutual good spirits. Mr. Collins repeated his apologies in quitting the room, and was assured with unwearying civility that they were perfectly needless.
திருமதி. பிலிப்ஸ் எல்லோரையும் பார்த்து மிக்க சந்தோஷமடைந்தாள். சிறிது நாட்களாக வீட்டில் இல்லாத மூத்த இரு பெண்களையும் பார்த்து அதிக சந்தோஷமடைந்தாள். அவர்கள் தங்கள் வண்டியில் திரும்பாமல் வேறு ஒரு வண்டியில் திரும்பியதால், இவளுக்கு விஷயம் தெரியாமல் போய்விட்டது. டாக்டர் ஜோன்ஸ் கடையில் இருக்கும் பையன் இனி நெதர்பீல்டிற்கு மருந்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை என கூறிய பிறகே தனக்கு தெரிய வந்தது, இல்லாவிடில் தனக்கு எதுவுமே தெரியாமல் போயிருக்கும் என திருமதி. பிலிப்ஸ் கூறினாள். அப்பொழுது ஜேன், காலின்ஸை அறிமுகம் செய்து வைத்தாள். திருமதி. பிலிப்ஸ் மிக்க மரியாதையுடன் அவனை வரவேற்றாள். காலின்ஸ் அதனை ஏற்றுக் கொண்டு, ஜேன் தன்னை அறிமுகப்படுத்தினாலும் முன்பின் தெரியாத அவர்கள் வீட்டிற்கு தான் திடீரென நுழைந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவனுடைய இந்த உயர்ந்த பண்பினை கண்டு ஆச்சரியமடைந்த திருமதி. பிலிப்ஸ், தன்னுடைய தமக்கையின் பெண்கள் விக்காமை பற்றி கேட்கும் கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்றும், திரு. டென்னி லண்டனிலிருந்து அழைத்து வந்திருக்கிறான், இராணுவத்தில் சேர்ந்திருக்கிறான் என்பது மட்டுமே தெரியும் என பதில் கூறினாள். கடந்த ஒரு மணி நேரமாக இந்த தெருவில் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்ததாக திருமதி. பிலிப்ஸ் கூறியதைக் கேட்டு, கிட்டியும், லிடியாவும் அவன் மீண்டும் வருகிறானா என பார்த்தபொழுது வேறு சில அதிகாரிகளே அவ்வழியாகச் செல்வதைக் கண்டனர். விக்காமுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொழுது முட்டாளாக தெரிந்த அவர்களை, கிட்டி, லிடியாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்களில் சிலர் மறுநாள் திரு. பிலிப்ஸ் வீட்டிற்கு விருந்துண்ண வருவதாக இருந்தனர். லாங்க்பர்னிலிருந்து பென்னட் குடும்பத்தினரும் வருவதாக இருந்ததால் தன் கணவனிடம் கூறி விக்காமையும் அழைக்கச் சொல்வதாக திருமதி. பிலிப்ஸ் வாக்களித்தாள். இதற்கு சம்மதம் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் விளையாடிவிட்டு, பிறகு உணவு உண்ணலாம் என்றாள் அவள். இதனை கேட்டு சந்தோஷமடைந்த பெண்கள் உற்சாகமாகக் கிளம்பினர். காலின்ஸ் மீண்டும், தான் அங்கு வந்ததற்கு மன்னிப்புக் கேட்டான். ஆனால் அதற்கு அவசியமில்லை என திருமதி. பிலிப்ஸ் கூறினாள்.
  1. Apology is the manners of the absurd
    அபத்தமானவன் மன்னிப்புக் கேட்பதை மரியாதையென நினைக்கிறான்.
  2. Village news spreads through Jones’ shop boy
  3. Apology is the courtesy of the aborigines
  4. Awkward absurdity is excessive good breeding to the uninformed
    விபரம் அறியாதவர்க்கு விகாரமான அபத்தம் பெரிய உன்னதமான பழக்கம்.
  5. Vulgar Mrs. Philips finds the apologetic Collins well bred
  6. Wickham is easily the outstanding man of irresistible charm
    விக்காம் இங்கு எடுப்பான பெரிய மனிதன். கவர்ச்சி மிக்க   இளைஞன்.
  7. Mr. Wickham suddenly becomes popular
  8. No news escapes one who looks for it
    செய்தியே குறியானவரிடம் அகப்படாத செய்தியில்லை.
  9. Excessive expression excites the awe of the inexperienced
    அதிகமாக வெளிவரும்பொழுது அனுபவமற்றவருக்கு ஆச்சரியம் ஏற்படும்.
  10. Window dressing and news gathering go together
    விளம்பரம் தேடுவதும் செய்தி சேகரம் செய்வதும் ஒன்றே.
  11. Failure to excite sympathy from whom it is sought is pathetic
    தேடிப் போகும் ஆதரவு கிடைக்காதது பரிதாபம்.
12
As they walked home, Elizabeth related to Jane what she had seen pass between the two gentlemen; but though Jane would have defended either or both, had they appeared to be wrong, she could no more explain such behaviour than her sister.
வழியில் எலிசபெத், ஜேனிடம் அவ்விரு இளைஞர்களிடையே நடந்ததைப் பற்றி விவரித்தாள். தவறு என்பதுபோல் தோன்றியிருந்தாலும் ஜேன் யாராவது ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே பரிந்து கொண்டு பேசியிருப்பாள். தன் சகோதரியைப்போல அவர்களது நடத்தைக்கு இவளால் விளக்கம் கொடுக்க முடியவில்லை.
  
13
Mr. Collins on his return highly gratified Mrs. Bennet by admiring Mrs. Philips's manners and politeness. He protested that, except Lady Catherine and her daughter, he had never seen a more elegant woman; for she had not only received him with the utmost civility, but had even pointedly included him in her invitation for the next evening, although utterly unknown to her before. Something, he supposed, might be attributed to his connection with them, but yet he had never met with so much attention in the whole course of his life.
வீடு திரும்பிய காலின்ஸ். திருமதி. பிலிப்ஸின் உபசாரத்தையும், மரியாதையாக நடந்து கொண்ட விதத்தை பற்றியும் வெகுவாக புகழ்ந்து திருமதி. பென்னட்டை சந்தோஷப்படுத்தினான். லேடி காதரின் மற்றும் அவளது மகளைத் தவிர, இவ்வளவு சிறந்த பெண்மணியை தான் பார்த்ததில்லை எனவும், தன்னை மிக்க மரியாதையுடன் நடத்தியதோடு மட்டுமில்லாமல் முன்பின் தெரியாத தன்னையும் மறுநாள் மாலை விருந்துக்கு அழைத்திருப்பதாக கூறினான். தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள தொடர்புக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கலாம் என அவன், நினைத்தான். ஆனாலும் வாழ்நாளில் இந்த அளவு கவனம் அவன் பெற்றதில்லை.
  1. Anything new is overwhelming
    புதியதின் அனுபவம் பூரணமாக மூழ்கடிக்கும்.
  2. The small man’s great experience is the savour of his life
    சிறிய மனிதன் பெறும் பெரிய அனுபவம் அவன் வாழ்வின் வளமான ருசி.
  3. In the estimation of Collins, Mrs. Phillips is next only to Lady Catherine
    காலின்ஸூக்கு Mrs.பிலிப்ஸ் லேடி காதரீனுக்கு அடுத்தபடி.
  4. Mr. Collins was wise enough to bracket Mrs. Philips and Lady Catherine
  5. Stupidity counts one, and hundred, next knows no measure [Stupidity does not know the vast difference between one and hundred. Whoever is pleasant to Collins is a great person. Stupidity does not know what comes after one]



story | by Dr. Radut