Skip to Content

Volume I Chapter 17 : Invitation to the Netherfield Ball

Chapter 17: Invitation to the Netherfield Ball

நெதர்பீல்ட் நடனத்திற்கு அழைப்பு

 

Summary: Elizabeth and Jane discuss the information Wickham has given. Jane, as one who always looks for the good, entreats Elizabeth to consider that there might be a misunderstanding somehow as no man would disrespect his father’s wishes in such a manner. Elizabeth believes Wickham however. The Bingley sisters arrive in the meantime to invite everyone to the Netherfield ball, though they leave quickly to avoid speaking with the younger Bennet sisters and their mother. The Bennets are duly excited. Collins asks Elizabeth for the first two dances, which she is disappointed by as she had hoped to save those for Wickham.
 
சுருக்கம்: எலிசபெத்தும், ஜேனும், விக்காம் தெரிவித்த விஷயங்களைப்பற்றி விவாதிக்கின்றனர். எப்பொழுதும் நல்லதாகவே நினைக்கும் ஜேன், எந்த ஒரு மனிதனும் தனது தந்தையின் விருப்பத்தை இவ்வாறு மதிக்காமல் இருக்கமாட்டான், ஆதலால் எங்கோ எப்படியோ தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என எலிசபெத்தைக் கருதுமாறு வேண்டுகிறாள். ஆனால் எலிசபெத், விக்காமை நம்புகிறாள். இதற்கிடையில் நெதர்பீல்டில் நடக்கப் போகும் நடனத்திற்கு அழைக்க பிங்கிலி சகோதரிகள் வருகின்றனர், ஆனால் ஜேனின் இளைய சகோதரிகளுடனும், தாயாருடனும் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எண்ணி விரைவில் கிளம்பிவிடுகின்றனர். எல்லோருக்கும் மிக்க சந்தோஷம், எல்லோரும் ஒத்துக் கொள்கின்றனர், இம்மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத மேரி தானும் வருவதாக கூறுகிறாள். முதல் இரண்டு நடனங்கள் விக்காமுடன் ஆட வேண்டும் என எலிசபெத் தீர்மானித்திருந்ததால், காலின்ஸ் தன்னுடன் ஆடும்படிக் கேட்டது அவளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
 
1
Elizabeth related to Jane the next day what had passed between Mr. Wickham and herself. Jane listened with astonishment and concern; she knew not how to believe that Mr. Darcy could be so unworthy of Mr. Bingley's regard; and yet, it was not in her nature to question the veracity of a young man of such amiable appearance as Wickham. The possibility of his having really endured such unkindness, was enough to interest all her tender feelings; and nothing therefore remained to be done, but to think well of them both, to defend the conduct of each, and throw into the account of accident or mistake whatever could not be otherwise explained.
தனக்கும் விக்காமிற்குமிடையே நடந்த உரையாடலைப்பற்றி எலிசபெத், ஜேனிடம் கூறினாள். ஜேன் மிகுந்த ஆச்சரியத்துடனும், அக்கறையுடனும் கேட்டுக் கொண்டாள். பிங்கிலியின் மதிப்பில் உயர்ந்து இருக்கும் டார்சி எப்படி அதற்கு அருகதையற்றவனாய் இருக்க முடியும் என அவளுக்குப் புரியவில்லை. மேலும் பார்ப்பதற்கு இனிமையானவனாய் இருக்கும் விக்காமின் உண்மையைப்பற்றி கேள்வி கேட்பது என்பதும் அவளால் முடியாதது. அவன் மிகவும் கடுமையாக நடத்தப்பட்டிருப்பான் என்பதே அவளுக்கு அவன்பால் இரக்க உணர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரைப் பற்றி நல்லவிதமாகவும் நினைக்கத் தோன்றியது. இருவரது நடத்தைக்குப் பின்னணியில் ஏதாவது ஒரு காரணம், அது தவறாகவும் இருக்கலாம் அல்லது சந்தர்ப்பவசத்தால் நடந்ததாகவும் இருக்கலாம் என மட்டும் நினைக்கத் தோன்றியது.
  1. Ultimate interest is seen as impatience to communicate
    விஷயத்தைக் கூற அவசரப்படுவதில் முழு ஆர்வமிருக்கிறது.
  2. The one exercise of Jane is NOT to think ill of anyone
    ஜேனுக்கு எவரையும் தவறாக நினைக்க முடியாது.
  3. She is following a great ideal at her level of foolishness
    அறிவில்லாமல் ஒரு பெரிய இலட்சியத்தை ஜேன் பின்பற்றுகிறாள்.
  4. Jane is the confidante of Elizabeth in a greater measure than Elizabeth is to Jane. It is her out going to Jane in an act of self-giving. Therefore she was able to bring Bingley to Jane
  5. From an integral point of view, we can discover some justification in Jane’s blatantly stupid attitude. One can become a genius if he can understand the original impulses of stupidity
    பூரண ஞானத்தின் பார்வையில் ஜேன் நினைப்பதும் சரியென நாம் கூறலாம். ஜேன் நினைவு அடிமுட்டாள்தனமானது. மடையன் மனம் வேலை செய்வதை அறிபவன் மேதை.
  6. As one progresses in the eight reversals, one discovers the folly of the previous stage. Instead, the knowledge of the Marvel can see it as a necessary stage of growth – the knowledge of Ignorance
    8 தலைகீழ் மாற்றங்களில் முன்னேறினால் முன்நிலையில் உள்ள அறியாமை தெரியும். அற்புதம் புரிந்தால் அனைத்தும் அவசியம் எனத் தெரியும். அதுவே அறியாமையின் ஞானம்.
  7. Reversals are brought about by fresh facts, changed context for the same facts, changing view, a new goal, a higher plane, the outer as the inner, the inner that includes the outer, abolition of the distinction of outer and inner
    புதிய விஷயம் வெளிவருவதாலும், மாறிய நிலையாலும், மாறிய நோக்கத்தாலும், புதிய இலட்சியத்தாலும், உயர்ந்த லோகத்தாலும், புறத்தை அகமாக அறிவதாலும், புறத்தை உட்கொள்ளும் அகம் என்பதாலும், புறத்திற்கும் அகத்திற்கும் உள்ள வித்தியாசம். அழிவதாலும் தலைகீழ் மாற்றம் எழுகிறது
  8. Jane evaluates Darcy in terms of Bingley’s regard as Bingley is her centre of emotions
  9. Jane’s policy is NOT to acknowledge anyone’s shortfalls
  10. It is one important reason for Bingley could come back to her as the one whose defects are not noticed expands himself to the other person. Expansiveness permits no failure
  11. An act is accomplished by the emotional strength not on the strength of understanding. This attitude contributes to Jane’s wedding
  12. No woman thinks of Wickham except in amiable appearance
  13. Jane identifies readily with the victim
  14. Scandal is readily transmitted
    ஆபாசமான வதந்தி அவசரமாகப் பரவும்.
2
"They have both," said she, "been deceived, I dare say, in some way or other, of which we can form no idea. Interested people have perhaps misrepresented each to the other. It is, in short, impossible for us to conjecture the causes or circumstances which may have alienated them, without actual blame on either side."
“இருவருமே ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். ஆனால் என்ன என்பது நமக்குத் தெரியாது. வேண்டாதவர் யாரேனும் ஒருவர் இருவருக்கும் இடையே தவறான அபிப்பிராயம் ஏற்படும்படி நடந்து கொண்டிருக்கலாம். இருவருமே தவறு செய்யாமல் இருந்திருக்கலாம். இருவரையும் பிரித்தது என்ன என்ற உண்மையான காரணத்தை கண்டுபிடிப்பது முடியாத காரியம்” என்றாள் ஜேன்.
  1. An unworthy friend of a worthy man is true life
    அர்த்தமற்றவனுடைய அர்த்தமற்ற நண்பன் வாழ்வைப் பிரதிபலிக்கிறான்.
  2. Not to question the veracity of another is temperamental culture born out of self-restraint
    சந்தேகப்படாமலிருக்க சுயக்கட்டுப்பாடு குணத்தைப் பண்படுத்த வேண்டும்.
  3. Inability for hard feelings is unwilling to think low of others
    பிறரைக் குறைத்து நினைக்க முடியாதவருக்கு கடுமையான உணர்வு எழாது.
  4. She would rather defend both. Any mistake is for Jane, accidental. This appears naïve, foolish, blind, but to take this position one needs a great strength of character
  5. She attributes the result to an unknown cause
  6. She attributes the mischief to interested outsiders
3
"Very true, indeed; -- and now, my dear Jane, what have you got to say in behalf of the interested people who have probably been concerned in the business? -- Do clear them too, or we shall be obliged to think ill of somebody."
“உண்மைதான். அந்த ஒருவர் செய்த குற்றம் என்ன என்பதனையும் கண்டுபிடித்து அவரும் நிரபராதி என்பதனை தெளிவாக்கிவிடு, இல்லையெனில் நாம் அந்நபரைப்பற்றி தேவையில்லாமல் தவறாக நினைக்க நேரிடும்.”
  1. The more Jane tries to justify both, the more Elizabeth is trying to fix the blame on some one
  2. The blame must rest on somebody is realistic common sense
    எவராவது குறையை ஏற்க வேண்டும் என்பது அவசியம்.
4
"Laugh as much as you chuse, but you will not laugh me out of my opinion. My dearest Lizzy, do but consider in what a disgraceful light it places Mr. Darcy, to be treating his father's favourite in such a manner -- one whom his father had promised to provide for. It is impossible. No man of common humanity, no man who had any value for his character, could be capable of it. Can his most intimate friends be so excessively deceived in him? -- oh! No."
நீ எவ்வளவு வேண்டுமானாலும் சிரி லிசி, ஆனால் என் அபிப்பிராயம் சரி என்று தெரிந்த பிறகு நீ சிரிக்கமாட்டாய். தன் தகப்பனாரால் மிகவும் நேசித்த ஒருவனை, யாருக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தாரோ அவனை இவ்வண்ணம் நடத்தியிருந்தால் அது டார்சிக்கு எவ்வளவு பெரிய அவமானத்தைக் கொடுத்திருக்கும். இப்படிச் செய்யவே முடியாது. சாதாரண மனிதாபிமானமும், தன்னுடைய நடத்தையை மதிப்பவனாகவும் இருக்கும் ஒருவனுக்கு இவ்வாறு நடந்து கொள்ள முடியாது. நெருங்கிய நண்பனாக இருப்பவனுக்கு எப்படி அவனைப்பற்றி தெரியாமல் இருக்க முடியும். இல்லை, முடியாது.”
  1. Those who are incapable of believing others wrong will never meet with failure in life
    பிறர் தவறு என நினைக்க முடியாதவருக்குத் தோல்வியில்லை.
  2. Opinions are to be laughed out
    அபிப்பிராயம் நம்மை சிரிக்க வைக்கும்.
  3. One can be good within one’s cocoon, not in real life
    சொந்த சூழலில் நல்லவராக இருக்கலாம், வெளியில் முடியாது.
  4. The unwillingness to impute blame to another has the power to acquit him
    அடுத்தவர் மீது குறை கூற மனம் வராதவர் எந்த சூழ்நிலையிலிருந்தும் விடுதலை பெறுவார்.
  5. Jane would not place Darcy in a disgraceful light. Nor would she allow that Bingley was deceived in that. Her opinion, a fully positive one, was firm. That is her character
  6. Changing context makes the impossible possible
    நிலைமை மாறினால் நடக்காதது நடக்கும்.
5
"I can much more easily believe Mr. Bingley's being imposed on, than that Mr. Wickham should invent such a history of himself as he gave me last night; names, facts, everything mentioned without ceremony. If it be not so, let Mr. Darcy contradict it. Besides, there was truth in his looks."
“எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல், நடந்த விஷயங்கள், பெயர்கள் உள்பட விக்காம் சொன்னதிலிருந்து, அவனாகவே கற்பனை செய்து சொன்னாற்போல் தெரியவில்லை. பிங்கிலிதான் சுலபமாக ஏமாந்து இருக்கிறான் என நான் நம்புகிறேன். உண்மை இல்லையெனில் டார்சி வந்து இதற்கு மறுப்பு கூறட்டுமே. மேலும் விக்காமின் தோற்றத்தில் உண்மை இருந்தது” என்றாள் எலிசபெத்.
  1. Jumping to conclusions fosters prejudice
    சிந்திக்காமல் எடுக்கும் முடிவு தப்பபிப்பிராயம் தரும்.
  2. All life circumstances admit of infinite inventions
    எந்த சூழ்நிலையிலும் ஏராளமாகப் புனைய முடியும்.
  3. He who accuses must prove it. It is not for the accused to contradict it
    குற்றம் சாட்டுபவன் அதை நிரூபிக்க வேண்டும். அது எதிரியின் கடமையில்லை.
  4. Culture taking upon itself the role of a rogue or scoundrel allows ceremony to disappear, whereas the scoundrel thrives on the energy of ceremony
    ஒரு போக்கிரி, அல்லது மோசடிக்காரன் வேலையைப் பண்புள்ளவர் ஏற்றால், சம்பிரதாயம் தேவையில்லை. அதனால் போக்கடா பிரபலமாவான். சம்பிரதாயம் அவனுக்குத் தெம்பும் உற்சாகமும் தரும்.
  5. The liar lies and invites the man of truth to contradict it
    ஒரு பொய்யைச் சொல்லி, இல்லையென நிரூபிக்க சவால் விடுகிறார்கள்.
  6. Life permits the possibility of the impossible or irrational
    முடியாதது, அறிவில்லாததும் வாழ்க்கை அனுமதிப்பதுண்டு.
  7. Elizabeth would more easily believe that Bingley was naïve than imputing falsification to Wickham. For no reason she could see any blemish in her favourite. It was her grave digger. It was there Life was atrocious to her. It was there she was called upon to reverse
  8. Names, facts, everything Wickham mentioned were without ceremony. To her they were gospel truth
  9. It is Wickham who falsified, fabricated, insinuated countless innuendoes. She wants Darcy to contradict as if it was his birth right. The crime is Wickham’s. She wants the onus of proof on the accused! It is the rationality of an adoring heart, adoring falsehood
  10. ‘Truth in his looks’ from one in love means ‘I like him’
    ‘நியாயம் பொலிகிறது’ எனில் ‘எனக்கு அவரைப் பிடிக்கும்’ எனப் பொருள்.‘
6
"It is difficult indeed -- it is distressing. One does not know what to think."
“மிகவும் கஷ்டம், -- மனத்திற்கு வேதனையாக இருக்கிறது. என்ன நினைப்பது என புரியவில்லை.”
  1. Jane’s whole personality is non-plussed
    ஜேனுடைய முழு சுபாவமும் திணறி விட்டது.
  2. Jane refuses to think. Obstinacy of stupidity seeks refuge in stillness
  3. Confusion of Mind is questioning the basic beliefs
    அடிப்படை நம்பிக்கை ஆட்டம் கண்டால் குழப்பம் வரும்.
7
"I beg your pardon; one knows exactly what to think."
“நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். என்ன நினைப்பது என சரியாகப் புரிகிறது.”
  1. A prejudiced mind has no confusion. It is always clear
    தவறான நினைவுடையவர்க்குக் குழப்பமில்லை. தெளிவாக இருக்கும்.
8
But Jane could think with certainty on only one point -- that Mr. Bingley, if he had been imposed on, would have much to suffer when the affair became public.
பிங்கிலி ஏமாந்திருக்கிறான் என வெளியே தெரியவந்தால் மிகவும் கஷ்டப்பட வேண்டிவரும் என்பதனைப் பற்றி மட்டுமே ஜேனால் அப்பொழுது நினைக்க முடிந்தது.
  1. Jane thinks of the consequences to Bingley, if there was any truth in the accusation
  2. In any issue, each man thinks of his own interest
  3. Jane’s deep concern for Bingley brings Bingley as Life Response
    ஜேனுக்குள்ள ஆழ்ந்த ஆசை பிங்லியைக் கொண்டு வருகிறது.
  4. Jane’s concern is Bingley, Elizabeth’s Wickham
    ஜேன் மனதிலிருப்பது பிங்லி, எலிசபெத் மனதிலிருப்பது விக்காம்.
  5. All philosophies give way when personal interest is touched
    சொந்த விஷயம் வந்தால் இலட்சியம் காற்றில் பறந்து போகும்.
  6. Intense conversation communicates the intensity
    ஆழ்ந்த உரையாடல் தீவிரத்தைக் கொடுக்கும்.
  7. That which we avoid most comes to us insistently
    முயன்று விலக்குவது மீண்டும் மீண்டும் வரும்.
9
The two young ladies were summoned from the shrubbery, where this conversation passed, by the arrival of some of the very persons of whom they had been speaking: Mr. Bingley and his sisters came to give their personal invitation for the long-expected ball at Netherfield, which was fixed for the following Tuesday. The two ladies were delighted to see their dear friend again -- called it an age since they had met, and repeatedly asked what she had been doing with herself since their separation. To the rest of the family they paid little attention: avoiding Mrs. Bennet as much as possible, saying not much to Elizabeth, and nothing at all to the others. They were soon gone again, rising from their seats with an activity which took their brother by surprise, and hurrying off as if eager to escape from Mrs. Bennet's civilities.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நடனம், வரும் செவ்வாயன்று நடத்த தீர்மானிக்கப்பட்டு, அதற்கு அழைக்க பிங்கிலியும், அவனது சதோகரிகளும் நேரில் வந்ததால், தோட்டத்தில் இருந்த இரு சகோதரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. இரு பெண்மணிகளும் ஜேனைப் பார்த்து மிக்க சந்தோஷமடைந்தனர். பார்த்து வெகு நாட்களாகிவிட்டதாகவும், தங்களை விட்டுப் பிரிந்து வந்த பிறகு என்ன செய்து கொண்டிருக்கிறாள் எனவும் விசாரித்தனர். அவர்கள், குடும்பத்திலுள்ள மற்றவர்களைக் கண்டு கொள்ளவில்லை, திருமதி. பென்னட்டை எவ்வளவு தூரம் தவிர்க்க முடியுமோ அவ்வளவு தூரம் தவிர்த்தனர். எலிசபெத்திடமும் அதிகம் பேசவில்லை, மற்ற எல்லோரிடம் அறவே பேசவில்லை. திருமதி. பென்னட்டின் உபசாரத்திலிருந்து தப்பிக்கும் வண்ணம், தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து அவசரமாகக் கிளம்பியது, அவர்களுடைய சகோதரனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
  1. Life responds bringing Bingley and his sisters. We can say Jane’s refusal to accuse Bingley brings him there
  2. Loaded formalities are loathsome
    முறையை முக்கியமாக்கினால் கசந்த வெறுப்பெழும்.
  3. Close friendship makes Time Timeless
    நெகிழ்ந்த நட்பில், நேரம் போவது தெரியாது.
  4. Parted friendship renders days into ages
    இழந்த நட்பு ஒரு நாளை ஒரு யுகமாக்கும்.
  5. It is certainly an age since they met as Jane delights them so intensely as to derive the pleasure of an age in a day
    அவர்கள் சந்தித்து ஒரு யுகமாயிற்று. ஒரே நாளில் ஓர் யுகத்தை அனுபவிக்கலாம். ஜேனை அவர்கள் அப்படி அனுபவிக்கிறார்கள்.
  6. Man seeks only the flower from the tree, but its thorns prick
    மனிதன் மரத்திடம் கேட்பது மலர். மரம் முள்ளால் குத்தும்.
  7. Friends coming together after an interval make sensation ecstasy
    பிரிந்தவர் கூடினால் உணர்ச்சிக்குப் புனர்ஜென்மமுண்டு.
  8. One delights in a human context that is fully receptive
    மனிதர்களை சந்திப்பதிலுள்ள இன்பம் பெரிது. அது பூரணமாக அனுபவிக்க உதவும்.
  9. With Elizabeth it is human interaction with a formed personality. With Jane who absorbs their energy as a blotting paper, both the sisters express themselves fully and expand during the process of self-expression
    அவர்கள் எலிசபெத்தை சாதாரண தோழியாக ஏற்றுப் பழகுகிறார்கள். ஜேன் மணலில் ஊறும் நீர் போல் அவர்கள் ஆசையைக் கவருவதால் அவர்களை ஜேனில் திளைத்து மகிழ்கிறார்கள். ஜேனுடன் பழகும்பொழுது அவர்களுடைய சொந்த ஆர்வம் பன்மடங்கு உபரியாகி - அணு அனந்தமாக வியாபித்து - மலர்கிறது.
  10. Jane’s receptivity is full as she accepts them as they are
    ஜேன் அவர்களை இருப்பதைப் போல் ஏற்பதால் அவர்கள் பெருமகிழ்வு எய்துகிறார்கள்.
  11. As Elizabeth holds a grudge against Darcy, the visitors would not say much to her. The subtle sense is perceptive
  12. Mrs. Bennet is all energy. The sisters are energyless and dread her dynamism more than her boorishness
    Mrs. பென்னட் சக்திமயமானவர். இந்த சகோதரிகட்கு அந்தத் தெம்பில்லை. அவருடைய மட்டமான பழக்கத்தை விட அவர் அபரிமிதமான சக்தியைக் கண்டு இருவரும் அஞ்சுகிறார்கள்.
10
The prospect of the Netherfield ball was extremely agreeable to every female of the family. Mrs. Bennet chose to consider it as given in compliment to her eldest daughter, and was particularly flattered by receiving the invitation from Mr. Bingley himself, instead of a ceremonious card. Jane pictured to herself a happy evening in the society of her two friends, and the attentions of their brother; and Elizabeth thought with pleasure of dancing a great deal with Mr. Wickham, and of seeing a confirmation of everything in Mr. Darcy's looks and behaviour. The happiness anticipated by Catherine and Lydia depended less on any single event, or any particular person; for though they each, like Elizabeth, meant to dance half the evening with Mr. Wickham, he was by no means the only partner who could satisfy them, and a ball was, at any rate, a ball. And even Mary could assure her family that she had no disinclination for it.
இக்குடும்பத்தின் எல்லா பெண்களுக்கும் நெதர்பீல்டில் நடக்க இருக்கும் நடனம் மிக்க சந்தோஷத்தை அளித்தது. பகட்டான அழைப்பிதழ் அனுப்புவதற்கு பதில் பிங்கிலி நேரிலேயே வந்து கூப்பிட்டது தனது மூத்த மகளுக்குக் கிடைத்த பெருமையாக திருமதி. பென்னட் நினைத்தாள். தன் இரு தோழிகளுடன் சந்தோஷமாக இருக்கப்போவதைப் பற்றியும், அவர்களது சகோதரனின் கவனிப்பும் கிடைக்கும் என்பதைப் பற்றியும் ஜேன் கற்பனை செய்து கொண்டிருந்தாள். விக்காமுடன் நிறைய நடனங்கள் ஆடலாம் என்று சந்தோஷமாக நினைத்த எலிசபெத், டார்சியின் தோற்றம் மற்றும் அவனது நடத்தை, விக்காம் கூறியனவெல்லாம் உண்மை என உறுதிபடுத்தும் என எதிர்பார்த்தாள். காதரின், லிடியா, இருவரது சந்தோஷமும் ஏதாவது ஒரு விஷயத்தையோ, ஒரு நபரையோ சார்ந்து இருக்கவில்லை, மாறாக மாலை நேரம் பெரும்பாலும் விக்காமுடன் நடனமாட வேண்டும் என்று தீர்மானித்து இருந்தனர். இருந்தாலும் ஒருவருடன் மட்டும் நடனம் ஆடுவது அவர்களை திருப்திப்படுத்தாது. மேரியும் நடனத்திற்கு வர சம்மதம் தெரிவித்தாள்.
  1. What expands life is extremely agreeable to people
    மலர்வது மனநிறைவு தரும்.
  2. A ball is the theatre for several weddings
    ஒரு நடனத்தில் பல திருமணம் முடியும்.
  3. Balls are enlivening occasions to energetic ladies
  4. Wedding is more interesting than marriage. Courtship has an unequalled charm
    காதலின் பெருமை கல்யாணத்திலில்லை. திருமண விழாவின் முக்கியத்துவம் திருமண வாழ்வுக்கில்லை.
  5. Man is at his best to consider himself the centre of life whatever the eventm
  6. Man is the centre of his world and he sees the same thing about the world
    மனிதனுக்கு அவனே முக்கியம், மையம். அவன் உலகைத் தன்னைப் போல் நினைக்கிறான்.
  7. Attention pleases, personal attention is flattery itself
    கவனம் இதமானது. நம்மைக் கவனித்தால் அது முகஸ்துதியாகும்.
  8. Attention that is recognition is flattering
  9. Anticipation is more enjoyable than the actual fact as it is in the imagination
  10. More than a personal victory, the humiliation of the rival is more interesting
    தான் வெல்வதை விட எதிரியின் தோல்வி ருசிக்கும்.
  11. Humiliation is the real relationship the woman offers to her future husband
    வரப் போகும் கணவனுக்கு பெண் தயாராக வைத்திருக்கும் பொக்கிஷம் அவமானம்.
  12. Elizabeth’s anticipation of seeing Wickham is overridden by the expectation of Darcy’s behaviour
  13. Man dwells on the prospect of pleasure which is an occasion of expansive vital. It is joy that makes one live
    இனிய செயல் உணர்ச்சி இன்பமாகப் பெருகும் நேரம். மனிதன் அதற்குக் காத்திருப்பான். மனிதன் இந்த இன்பத்திற்காகவே உயிர் வாழ்கிறான்.
  14. Happiness is general to start with, later it becomes particularised
    சந்தோஷம் பொதுவாக ஆரம்பிக்கும். பிறகு அது குறிப்பிட்டதாகும்.
  15. Every female has Wickham in her mind
  16. Expectation is ever alive and is eternal
    எதிர்பார்ப்பது எல்லா நேரத்திலும் உண்டு. அது யுகாந்த காலத்திற்கும் நிலையானது.
  17. No one ever dances with Mary. Still she attends the balls
    மேரியுடன் எவரும் டான்ஸ் ஆடுவதில்லை. இருந்தாலும் எல்லா டான்ஸூக்கும் அவள் வருகிறாள்.
  18. At the age of 15 no individuality of any description is formed. One is a field of energy
    15 ம் வயதில் பெண் பெறக்கூடிய பழக்கம், பண்பு எதுவுமில்லை. இளமையின் வலிமை எடுப்பாக இருக்கும்.
  19. Attraction is general, attachment is particular
    கவனம் பொது. ஆசை குறிப்பானது.
  20. The poignancy of the particular does not exhaust one’s expectations. The generality of dissipation is also sought
    தீவிரமாக அனுபவித்தால் எதிர்பார்ப்பு திருப்தியடைவதில்லை. பொதுவான ஆர்ப்பாட்டம் மனம் நிறையும்.
11
"While I can have my mornings to myself," said she, "it is enough -- I think it no sacrifice to join occasionally in evening engagements. Society has claims on us all; and I profess myself one of those who consider intervals of recreation and amusement as desirable for everybody."
“காலை நேரம் மாத்திரம் எனக்குப் போதும் அவ்வப்போது மாலை நேர விருந்துகளில் கலந்து கொள்வது பெரிய தியாகம் ஆகாது என நினைக்கிறேன். சமூகத்தோடு ஒன்றி நாம் வாழ வேண்டும். நடுநடுவே, எல்லோருக்கும் பொழுதுபோக்கும், கொண்டாட்டங்களும் வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருத்தி ஆவேன்” என்றாள் மேரி.
  1. Neglected Mary is anxious to join the ball. Mary is not averse to ball; but she is conscious that no man has offered to dance with her. Still, a lingering hope makes her go to Netherfield
  2. However much one is neglected, Man continues to court the society
    ஊரார் ஒதுக்கினாலும், மீண்டும் மனிதன் வந்து சேருவான்.
  3. Austerity is skin deep
    விரதம் உதட்டளவில்.
  4. Self-justification is active and insistent when no one seeks any justification for the simple reason of not being aware of you
    தான் சரி என்பது அனைவருக்கும் உண்டு. எவரும் கண்டு கொள்ளாதபொழுது அது மீண்டும் மீண்டும் வரும். நீயிருப்பது எவர் கண்ணிலும் படாததால் எவரும் கண்டுகொள்ளவில்லை.
12
Elizabeth's spirits were so high on the occasion that, though she did not often speak unnecessarily to Mr. Collins, she could not help asking him whether he intended to accept Mr. Bingley's invitation, and if he did, whether he would think it proper to join in the evening's amusement; and she was rather surprised to find that he entertained no scruple whatever on that head, and was very far from dreading a rebuke either from the Archbishop or Lady Catherine de Bourgh, by venturing to dance.
எலிசபெத் மிகவும் உற்சாகமாக இருந்தாள். காலின்ஸிடம் அதிகம் பேசாவிட்டாலும், திரு. பிங்கிலியின் அழைப்பினை ஏற்றுக் கொள்ள முடியுமா, அப்படி ஏற்றுக் கொண்டால் மாலையில் நடக்கப் போகும் நடனத்தில் வந்து கலந்து கொள்வது சரியாகுமா என அவனை கேட்காமல் இருக்க முடியவில்லை. அப்படி கலந்து கொண்டால் ஆர்ச்பிஷப் மற்றும் லேடி காதரினுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற சிந்தனையும் அவனிடத்தில் இல்லாதது கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டாள்.
  1. The desire to speak when there is no context brings out the exact opposite to your intention
    தேவையில்லாதபொழுது பேச ஆரம்பித்தால், நினைத்ததற்கு எதிரானது நடக்கும்.
  2. Spirits highly rise when hopes are full and intense
    நம்பிக்கை தீவிரமாக உயர்ந்தால், ஆர்வம் அளவு கடந்து உபரியாகும்.எலிசபெத்தின் ஆர்வம் உச்சகட்டத்திலிருக்கிறது.
  3. Elizabeth has an urge to speak to Collins
    காலின்ஸூடன் பேச எலிசபெத்திற்குத் தோன்றுகிறது.
  4. She has a deep urge to speak to Wickham. As he is not there, her urge reaches the one man she has to overcome to reach Darcy
    விக்காமுடன் பேச கட்டுங்கடங்காத ஆசை. விக்காமில்லாததால் அந்த ஆசையை காலின்ஸிடம் காட்டுகிறாள். டார்சியை அடைய எலிசபெத் காலின்ஸ், விக்காமைக் கடக்க வேண்டும்.
  5. She expected Collins not to attend the dance but evoked invitation to two dances
    காலின்ஸ் டான்சுக்கு வர மாட்டான் என நினைத்தாள். ஆனால் அவளுடன் இரண்டு டான்ஸ் ஆட வேண்டும் என்கிறான்.
  6. The will of life rises in us differently, in intense moments oppositely
    வாழ்வு நம்முள் வேறு வகையாக எழுகிறது. முக்கியமான நேரத்தில் எதிராக வேலை செய்கிறது.
  7. High spirits release the impulses which attract the very opposite. Elizabeth could not help speaking to Collins and ends up with two dances with him
13
"I am by no means of opinion, I assure you," said he, "that a ball of this kind, given by a young man of character, to respectable people, can have any evil tendency; and I am so far from objecting to dancing myself, that I shall hope to be honoured with the hands of all my fair cousins in the course of the evening; and I take this opportunity of soliciting yours, Miss Elizabeth, for the two first dances especially -- a preference which I trust my cousin Jane will attribute to the right cause, and not to any disrespect for her."
“ஒரு நல்ல மனிதனால், கௌரவமான மனிதர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்த நடனத்தில் எந்த கெடுதலும் இல்லை என உறுதியாக நம்புகிறேன். நடனம் ஆடுவதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் கிடையாது. இன்று, சகோதரிகள் உங்களுடன் நடனமாடலாம் என்றிருக்கிறேன். அதுவும் முதல் இரண்டு நடனங்கள் உன்னுடன் ஜோடி சேரலாம் என்றிருக்கிறேன். தகுந்த காரணம் இருப்பதால் ஜேன், நான் அவளை அவமதித்ததாக நினைத்துக் கொள்ள மாட்டாள் என நம்புகிறேன்.”
  1. Man justifies what he likes. Liking first, justification next
    பிடித்தது சரி. பிடித்தம் முதலில், அபிப்பிராயம் அடுத்தது.
  2. Man is in love with the whole of the other sex
    ஆண் ஒரு பெண்ணை விரும்பவில்லை. பெண் குலத்தின் மீதே அவனுக்கு ஆசை.
  3. Man, especially those whom no one thinks of, has a high opinion of himself that everyone needs him
    எவரும் சீண்டாத மனிதன், தன்னைப் பற்றி மிக உயர்வாக நினைப்பதுடன், உலகம் தான் இல்லாமல் நடக்காது எனவும் நினைக்கிறான்.
  4. Collins’ attention to her caught no one’s notice, not even her. As his intention has no life, no one notices it
    காலின்ஸ் எலிசபெத் பக்கத்திலேயேயிருப்பதை எவரும் காணவில்லை. அவளுக்கும் தெரியவில்லை. காலின்ஸ் நினைவுக்கு ஜீவனில்லை என்பதால் எவர் கண்ணிலும் படவில்லை.
  5. Collins’ apology to Jane is certainly clownish as it reveals the high self-esteem only a clown can have
    காலின்ஸ் ஜேனிடம் கேட்கும் மன்னிப்பு கோமாளித்தனம். கோமாளியே தன்னைப் பற்றி அவ்வளவு பெரிய நினைப்புள்ளவன்.
  6. Collins is not averse to dancing. Only he needs an excuse to join. He is incapable of the right steps but still joins the dancing. What is upper most in his mind is his propriety
  7. Man always invites the catastrophe on himself. So does Elizabeth
14
Elizabeth felt herself completely taken in. She had fully proposed being engaged by Wickham for those very dances; and to have Mr. Collins instead! -- her liveliness had been never worse timed. There was no help for it, however. Mr. Wickham's happiness and her own was per force delayed a little longer, and Mr. Collins's proposal accepted with as good a grace as she could. She was not the better pleased with his gallantry from the idea it suggested of something more. It now first struck her that she was selected from among her sisters as worthy of being the mistress of Hunsford Parsonage, and of assisting to form a quadrille table at Rosings, in the absence of more eligible visitors. The idea soon reached to conviction, as she observed his increasing civilities toward herself, and heard his frequent attempt at a compliment on her wit and vivacity; and though more astonished than gratified herself by this effect of her charms, it was not long before her mother gave her to understand that the probability of their marriage was exceedingly agreeable to her. Elizabeth, however, did not chuse to take the hint, being well aware that a serious dispute must be the consequence of any reply. Mr. Collins might never make the offer, and till he did, it was useless to quarrel about him.
இதனைக் கேட்டு எலிசபெத்திற்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது. அந்த முதல் இரண்டு நடனங்களும் விக்காமுடன் ஆட தீர்மானித்திருந்தாள். அதற்கு பதில் காலின்ஸ் என்றால்! நேரம், காலம் தெரியாமல் இம்மாதிரி அவள் நடந்து கொண்டதே இல்லை. ஆனாலும் அவளால் இனி செய்வதற்கு ஒன்றும் முடியவில்லை. விக்காமுடைய சந்தோஷம், தன்னுடைய சந்தோஷம் இரண்டையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, காலின்ஸினுடைய வேண்டுகோளைப் பணிவாக ஏற்றுக் கொண்டாள். அவனுடைய இந்த செய்கை அவளுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக இதற்கு மேலேயும் ஏதோ விஷயம் இருக்கிறது என புரிந்து கொண்டாள். தனது சகோதரிகளில், தன்னை, அவனது ஹன்ஸ்போர்ட் இல்லத்திற்கு எஜமானியாகவும், விருந்தினர் இல்லாத சமயங்களில் நான்கு பேர்கள்கூடி ஆடும் நடனத்திற்கு கை கொடுக்கவும் அவன் தேர்வு செய்திருக்கிறான் என்று அவளுக்கு அப்பொழுது புரிய ஆரம்பித்தது. அவன் தன்னிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொண்டதும், தன்னுடைய கலகலப்பான சுபாவத்திற்கும், நகைச்சுவை உணர்ச்சிக்கும், அவன் அடிக்கடி கொடுத்த பாராட்டும் தன் எண்ணத்தை உறுதிபடுத்துவதாக இருந்ததைக் கண்டாள். தன்னுடைய சுபாவம் அவனை கவர்ந்ததை கண்டு சந்தோஷப்படுவதைவிட அதிக ஆச்சரியம் அடைந்தாள். அவர்களது திருமணம் நடக்கும் பட்சத்தில் அதில் தனக்கு பூரண திருப்தி என அவளது தாயாரும் கூறினாள். தாயார் கூறியதைக் கேட்டுக் கொள்ளாத எலிசபெத், எந்த ஒரு பதிலும் பெரிய வாக்குவாதத்தில் முடியும் என தெரிந்ததால் மௌனமாக இருந்தாள். காலின்ஸ் ஒரு வேளை, எதுவும் கேட்காமலேயேகூட இருக்கலாம். அதனால் அதுவரை அவனைப்பற்றி சண்டை போடுவது அனாவசியம்.
  1. The omen at the first decisive initiative is richly indicative
    முதற்காரியம் முடிவைத் தெளிவாகத் தெரியப்படுத்தும்.
  2. An idea rejected at its first emergence in the mind can never take shape
    முதலில் மறுத்தது பிறகு பூர்த்தியாகாது.
  3. The greatest compliment to the feminine graces of a young lady is the desirability of the young man who falls in love with her
    அழகான இளைஞன் ஒரு பெண்ணை மணக்க விரும்புவதே அவள் பெறும் பெரிய பாராட்டு.
  4. The difference between parents and children in marriage is that of generations
    பெற்றோர் திருமணமும், பிள்ளைகள் திருமணமும் வேறுபட்டவை. இடையே ஒரு தலைமுறையுள்ளது.
  5. Strong personalities confront a trouble when they face it, do not always cautiously avoid it
    சிரமம் வந்தால் வலியவன் எதிர்கொள்வான். ஜாக்கிரதையாக ஒதுங்க மாட்டான்.
  6. Her disappointment indicates later developments
    அவள் ஏமாந்தது வரப் போவதைப் காட்டுகிறது.
  7. Life releases liveliness by its excess of energy but Man directs it and tries to direct it as his surface inclination prompts, as he is on the surface
    உபரியான சக்தியால் வாழ்வு கலகலப்பாகிறது. மனிதன் மேல் மனத்திலிருப்பதால் அதன்படி அந்த சக்தியைப் பயன்படுத்த முனைகிறான். முடியுமோ, முடியாதோ செய்து பார்க்கிறான்.
  8. Expectation brings the very opposite. Expects Wickham and gets Collins What is a shame to the receiver, the benefactor feels is a rare privilege to confer on
    பெறுபவர் வெட்கப்படும் காரியம், கொடுப்பவருக்குப் பாக்கியமாக இருக்கிறது.
  9. Elizabeth was mortified by the proposal of Collins
    எலிசபெத் காலின்ஸ் proposal ஆல் அவமானப்படுகிறாள்.
  10. As anyone else, Elizabeth is unaware of his attentions to her
  11. It is a truth of life that Elizabeth deserves Darcy only when she exhausts her opportunity with Collins
    காலின்ஸ் அனுபவத்தைக் கடந்து எலிசபெத் டார்சியை அடையவேண்டும் என்பது வாழ்க்கை நியதி.
  12. Nor will Darcy win Elizabeth before she is disillusioned with Wickham
    விக்காம் மையலினின்று மீளாமல் டார்சி எலிசபெத்தைப் பெற முடியாது.
  13. Understanding comes out of the attitude, not by itself. The moment she suspects his intention, the whole thing is clear to her
  14. In one it was humiliating to her and in the other it was a death blow to the family
    ஒன்று அவமானம், அடுத்தது குடும்ப நாசம்.
  15. It is significant that Darcy, Elizabeth, Wickham undergo painful transformations which are shared by Mr. Bennet while Mrs. Bennet is apparently the full beneficiary of the whole change with only a fifteen day confinement to her room
    டார்சி, எலிசபெத், விக்காம் ஆகியோர் வேதனையான அனுபவத்தால் திருவுருமாறுகிறார்கள். அதன் பங்கு Mr. பென்னட்டிற்கும் உண்டு. Mrs. பென்னட்டே முழுப்பலனையையும் பெறுபவர். 15 நாள் அறையிலிருந்து அவர்படும் அவதி பெரியது. அவதியின் பலன் மூன்று திருமணம்.
  16. To evaluate each one’s benefit in proportion to his or her suffering is a valuable exercise
    ஒவ்வொருவர் அனுபவித்ததையும் அவர் பெற்ற பலனையும் இணைத்து ஆராய்ந்தால் பலன் பெரியதாகும்.
15
If there had not been a Netherfield ball to prepare for and talk of, the younger Miss Bennets would have been in a pitiable state at this time; for from the day of the invitation to the day of the ball, there was such a succession of rain as prevented their walking to Meryton once. No aunt, no officers, no news could be sought after -- the very shoe-roses for Netherfield were got by proxy. Even Elizabeth might have found some trial of her patience in weather which totally suspended the improvement of her acquaintance with Mr. Wickham; and nothing less than a dance on Tuesday could have made such a Friday, Saturday, Sunday, and Monday endurable to Kitty and Lydia.
நெதர்பீல்ட் நடனத்திற்கு ஏற்பாடு செய்வதும் அதனைப்பற்றி பேசுவதும் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் கடைசி இரண்டு பெண்களின் நிலமை பரிதாபத்திற்குரியதாக இருந்திருக்கும். ஏனெனில் அழைப்பு வந்ததிலிருந்து தொடர்ந்து ஒரு தடவைகூட மெரிடனிற்குப்போக முடியவில்லை, சித்தியைப் பார்க்க முடியவில்லை, எந்த அதிகாரிகளையும் சந்திக்க முடியவில்லை, ஒரு செய்தியும் கிடைக்கவில்லை; நெதர்பீல்டிற்கு தேவையான பூக்களுமே வேறு ஒருவர் மூலம் வரவழைக்கப்பட்டது. விக்காமுடன் மேலும் பழகுவதற்குத் தடையாக இருந்த மழை எலிசபெத்தின் பொறுமையையும் சோதித்தது. செவ்வாயன்று நடனம் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் இந்நான்கு நாட்களையும் கிட்டி, லிடியாவிற்கு சகித்துக் கொண்டிருக்க முடியாமற் போயிருக்கும்.
  1. Man lives on hope, grows on expectation
    நம்பிக்கையால் வளர்ந்து, எதிர்பார்த்து மனிதன் வாழ்கிறான்.
  2. Shopping as an activity is more engaging than the articles purchased
    வாங்கும் பொருள்களை விட வாங்குவது ரசிக்கும்.
  3. Waiting makes Time longer, life unendurable
    காத்திருப்பவருக்குக் காலம் நீளும்.
  4. Their impatience for enjoyment which they never deserved directly led them to a humiliating sorrow
    அவர்கட்குத் தகுதியற்றப் பலனை அனுபவிக்க அவர்கள் பட்ட அவசரம் நேரடியாகப் பெரிய சோகத்துள் அவரை அமிழ்த்தியது.
  5. Subconsciously Elizabeth is attracted to Collins. It is really the attraction to Darcy. Heavy rains on many days before the ball announces the approval of heaven of the final outcome of the ball

 



story | by Dr. Radut