Skip to Content

Volume I Chapter 23 : The Bennets learn about Collins’ Engagement

Chapter 23: The Bennets learn about Collins’ Engagement

காலின்ஸின் திருமண நிச்சயத்தை பென்னட் குடும்பத்தினர் அறிதல்

 

Summary: When Sir William arrives to announce to the Bennets that Charlotte and Collins are engaged, Mrs. Bennet is angry. Elizabeth believes she and Charlotte can no longer be truly close in light of what has happened. Mrs. Bennet wonders if the Bingleys will return, upsetting Jane further. Elizabeth begins to fear herself that the Bingley sisters might be successful in their attempt to keep Bingley away from Jane.
 
சுருக்கம்: சார்லெட்டும், காலின்ஸும் திருமணம் செய்து கொள்ளப் போகும் செய்தியை சர் வில்லியம், பென்னட் குடும்பத்தினருக்கு அறிவிக்க வந்தபொழுது, திருமதி. பென்னட் மிகுந்த கோபம் கொள்கிறாள். சார்லெட்டும், எலிசபெத்தும் விரைவாக ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிகின்றனர். நடந்த விஷயத்தைக் கேட்டபின் தன்னால் அவளுடன் உண்மையாகவே நெருக்கமாக இனி இருக்க முடியாது என எலிசபெத் நம்புகிறாள். திருமதி. பென்னட்டிற்கு காலின்ஸ் மீது கோபம், அத்துடன் பிங்கிலி மீண்டும் வருவானா எனக் கேட்டு ஜேனையும் துன்பத்திற்கு ஆளாக்குகிறாள். ஜேனிடமிருந்து தனது சகோதரனை பிரிக்கும் முயற்சியில் அவளது சகோதரிகள் வெற்றியடைந்துவிடலாம் என எலிசபெத்தும் பயப்பட ஆரம்பிக்கிறாள்.
 
 
1
Elizabeth was sitting with her mother and sisters, reflecting on what she had heard, and doubting whether she were authorised to mention it, when Sir William Lucas himself appeared, sent by his daughter to announce her engagement to the family. With many compliments to them, and much self-gratulation on the prospect of a connexion between the two houses, he unfolded the matter -- to an audience not merely wondering, but incredulous; for Mrs. Bennet, with more perseverance than politeness, protested he must be entirely mistaken; and Lydia, always unguarded and often uncivil, boisterously exclaimed –
தனது தாயுடனும், சகோதரிகளுடனும் அமர்ந்திருந்த எலிஸபெத் தனக்குத் தெரிந்த விஷயத்தை சொல்வதா, வேண்டாமா என்று யோசனையில் இருந்த பொழுது, அங்கு தன் மகளால் அனுப்பப்பட்ட சர் வில்லியம் லூகாஸ் வந்தார். அவர்களை அன்புடன் வாழ்த்திவிட்டு, மிகுந்த பெருமிதத்துடன் தன் மகளின் நிச்சயதார்த்தத்தைப் பற்றியும், அவ்விரு குடும்பங்களிடையே நடக்கவிருக்கும் சம்பந்தத்ததைப் பற்றியும் கூறினார். விஷயத்தை அறிந்த அனைவரும் ஆச்சரியத்தாலும், நம்பாமலும் வாயடைத்துப் போயினர். திருமதி. பென்னட் சிறிதும் பண்பாடு இல்லாமல், மிக உறுதியாக அவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்க கூடும் என்றும், எப்பொழுதும் அடக்கமும், பண்பும் இல்லாத லிடியா,
  1. He who comes to you speaks your inmost thoughts that are incapable of utterance
    மனத்தில் ஆழ்ந்து பதிந்துள்ள எண்ணங்களை ஒருவர் வந்து பேசினால் நாமவரையறிய வேண்டும்.
  2. Expanding energy enjoys in continuous expansion
  3. In Elizabeth it is not only doubt whether she is authorised but the shame of shrinking prevents disclosure
  4. Sir Lucas delights in being related to Longbourn
  5. The wonderful is incredulous
    நம்பிக்கையைக் கடந்தது ஆச்சரியம்.
  6. Dislike expresses as disbelief
    பிடிக்கவில்லை என்பதை நம்பவில்லை என்கிறோம்.
  7. People refuse to believe what they do not like
  8. Existence requires self-confidence
  9. Wonder is at the enormity, disbelief at the dislike
  10. The incredulous protests of all the family were due to the loss of Longbourn
  11. The unguarded is boisterous
    கட்டுக்கடங்காதவன் ஆர்ப்பாட்டமாகப் பேசுவான்.
  12. Indelicate indecorum becomes boisterous
    சொரணையற்றவன் முறை தவறிப் பேசுவது ஆர்ப்பாட்டமாகும்.
  13. Manners are of the surface. We see Mrs. Bennet and Lydia are incapable of it. Mrs. Bennet not believing the truth of the engagement really expresses that it should be broken. Perceptive people infer the one from the other. Sir Lucas, apart from his forbearing courtesy, values the wealth of Mr. Bennet’s family in not reacting to the unkind remarks. Elizabeth finds it impossible for one reason. Mrs. Bennet does not approve of it for opposite reasons. It is worth noting that in one house the parents and daughter celebrate it and in the other house the parent and daughter disapprove of it. Social status validates itself
2
Good Lord! Sir William, how can you tell such a story? Do not you know that Mr. Collins wants to marry Lizzy?"
“அடக்கடவுளே, இப்படி ஒரு கதையை நீங்கள் எப்படிக் கூற முடியும் சர் வில்லியம்? காலின்ஸ் எலிஸபெத்தை மணமுடிக்க விரும்புகிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா”என்றாள்.
  1. Lydia exclaimed at Sir Willliam; the whole world did so to her later
3
Nothing less than the complaisance of a courtier could have borne without anger such treatment; but Sir William's good-breeding carried him through it all; and though he begged leave to be positive as to the truth of his information, he listened to all their impertinence with the most forbearing courtesy.
கோபத்தைத் தூண்டக்கூடிய வார்த்தைகளாயினும், மிக்க பெருந்தன்மையுடனும், பொறுமையுடனும் அதைப்பொருட்படுத்தாமல் தனக்குத் தெரிந்த விஷயம் உண்மையே என்று கூறினார்.
  1. To accept offensive boorishness good manners are not enough, deeply felt good will that understands folly is needed
    புண்படுத்தும் முரட்டுத்தனத்தை ஏற்க நல்ல பழக்கம் போதாது. அறிவின்மையை புரிந்து கொள்ளும் ஆழ்ந்த நல்லெண்ணம் வேண்டும்.
  2. To face life with equanimity, one needs as much good breeding as Sir Lucas had
  3. The offensive insult hurled at Sir Lucas is because of their wealth
4
Elizabeth, feeling it incumbent on her to relieve him from so unpleasant a situation, now put herself forward to confirm his account, by mentioning her prior knowledge of it from Charlotte herself; and endeavoured to put a stop to the exclamations of her mother and sisters by the earnestness of her congratulations to Sir William, in which she was readily joined by Jane, and by making a variety of remarks on the happiness that might be expected from the match, the excellent character of Mr. Collins, and the convenient distance of Hunsford from London.
தர்மசங்கடமான சூழ்நிலையின் இறுக்கத்தை நீக்க வேண்டியதை உணர்ந்த எலிஸபெத் தனக்கு இவ்விஷயத்தை சார்லெட் முன்னதாகவே தெரிவித்திருப்பதாகவும், காலின்ஸ் மிக்க நல்ல மனிதர் என்றும் ஹன்ஸ்போர்ட், லண்டனுக்கு வெகு அருகில் இருப்பதைப்பற்றியும் மிக்க சந்தோஷத்துடன் தெரிவித்தாள். ஜேனும் மிக ஆவலுடன் வாழ்த்துவதில் கலந்து கொண்டாள்.
  1. Information can change the entire atmosphere by its authenticity; also it can reverse the course of events if significant
    நம்பத்தகுந்த விஷயம் நடை முறையை மாற்றவல்லது. விஷயம் முக்கியமானால் நடைமுறையைத் தலைகீழேயும் மாற்றும்.
  2. The rightness of an action is confirmed by the material or moral support that readily arises
    ஒரு விஷயம் சரி என்பதை அதற்குக் கிடைக்கும் பொருளுதவி, ஆதரவு காட்டும்.
  3. Politeness discovers excellence in what is excessively disgusting
    அளவு கடந்து அருவெருப்பானதை அற்புதமாகக் கருதும் நல்ல பழக்கம் உண்டு.
  4. Whatever view one takes circumstances will support with more points of approval
    ஒருவர் எதை நினைத்தாலும் சந்தர்ப்பம் பல கோணத்திலும் ஆதரவு தரும்.
  5. Elizabeth does not come forward readily at the first outburst to reveal the truth as she endorses their behaviour
  6. Jane is drawn to the picture when Elizabeth goes into action
  7. Jane alone is capable of seeing the varieties of happiness for Charlotte
  8. Everyone can see enough excellence in any other if they try like Jane
5
Mrs. Bennet was, in fact, too much overpowered to say a great deal while Sir William remained; but no sooner had he left them than her feelings found a rapid vent. In the first place, she persisted in disbelieving the whole of the matter; secondly, she was very sure that Mr. Collins had been taken in; thirdly, she trusted that they would never be happy together; and fourthly, that the match might be broken off. Two inferences, however, were plainly deduced from the whole; one, that Elizabeth was the real cause of all the mischief; and the other, that she herself had been barbarously used by them all; and on these two points she principally dwelt during the rest of the day. Nothing could console and nothing appease her. Nor did that day wear out her resentment. A week elapsed before she could see Elizabeth without scolding her, a month passed away before she could speak to Sir William or Lady Lucas without being rude, and many months were gone before she could at all forgive their daughter.
வாயடைத்து சொல்வதறியாமல் அமர்ந்திருந்த திருமதி. பென்னட், சர் வில்லியம் சென்றதும் தன் உணர்ச்சிகளுக்கு வடிகாலைத்தேடி வேகமாகப் பேச ஆரம்பித்தாள். தான் இவ்விஷயத்தை நம்பவில்லை என்றும் காலின்ஸை சார்லெட் குடும்பத்தினர் தங்கள் பக்கம் திருப்பிவிட்டதாகவும், அவர்கள் நிச்சயமாக சந்தோஷமாக இருக்கமாட்டார்கள் என்றும், இந்த சம்பந்தம் முறியக்கூடும் என்றும் அங்கலாய்த்தாள். அவளுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது இரண்டு விஷயங்கள். ஒன்று எலிஸபெத் தான் இதற்கெல்லாம் காரணம், மற்றொன்று தன்னை நியாயமற்ற முறையில் உபயோகித்திருக்கிறார்கள். திருமதி. பென்னட்டை எதைச் சொல்லியும் சமாதானப்படுத்தவோ, திருப்திப்படுத்தவோ முடியவில்லை. அவள் எலிஸபெத்துடன் சகஜமாகப் பேசுவதற்கு ஒரு வாரமும், சர் லூகாஸ் தம்பதியுடன் கடுமையின்றி பேசுவதற்கு ஒரு மாதமும், எலிஸபெத்தை மன்னிப்பதற்கு வெகு நாட்களும் ஆயிற்று.
  1. The untamed, unformed, sometimes tries to acquire culture out of necessity. Mrs. Bennet suffers from the suffocation of culture
  2. Such an outburst travels through the rationality of its logic. Mrs. Bennet enumerates four possibilities by the exercise of such a faculty
  3. The gradation in her logic that it is not true, is mistaken, will not yield fruit and finally will be broken is exactly the understanding of the physical of a thing which it dislikes
  4. Mrs. Bennet claims to be in the fashion of martyrdom
  5. Dynamic people are inconsolable
  6. It would be Mrs. Bennet’s victory over her husband if Elizabeth had married Mr. Collins
  7. The hardest thing for a man is to accept that he is foolish, much more so to the genuine fool
  8. The four stages of opinions Mrs. Bennet moves through are the normal negative human thinking as it looks at life from its centre and seeks a justification of itself
  9. Time heals Mrs. Bennet’s sufferings in stages
  10. Life contradicts announcing luck; Man is oppressed
    அதிர்ஷ்டத்தைக் கொண்டு வர சந்தர்ப்பம் வழக்கத்திற்கு மாறாகச் செயல்படும்பொழுது மனிதன் சுருங்கி வாடுகிறான்.
  11. An abusive person is inhibited by the physical person whom she abuses
    திட்டும் குணமுள்ளவர் தான் திட்ட விரும்புகிறவர் முன்னிலையில் திட்ட முன் வருவதில்லை.
  12. Abuse is an emotion, cannot be suppressed for long or when the inhibition disappears
    திட்டுவது உணர்ச்சி. தொடர்ந்து அடக்க முடியாது. திட்டுக்கு உரியவர் இல்லையெனில் கட்டுப்படுத்துவது கடினம்.
    Abuse is the absence of sensational appreciation
    பிறரை உணர்ச்சிமயமாய் பாராட்டினால் திட்டுவது குறையும்.
    Society has progressed from physical abuse that is murder to vital abuse of the enemy or rival
    கொலை செய்தவன் முன்னேறியதால் எதிரியைத் திட்டுகிறான்.
    Disagreement is mental extension of it
    மனம் வளர்ந்தால் திட்டுவது குறை கூறுவதாக மாறும்.
    In the spiritual plane abuse reverses itself into appreciation
    ஆன்ம விழிப்பு குறையை நிறையாக்கும்.
    Spirit perceives abuse of another as misuse of oneself
    பிறரைக் குறை கூறுவது தன் நிலையிலிருந்து இழிவதாகும்.
  13. Human progress, then, is from murder to abuse to disagreement to appreciation. In the Supermind it becomes a complement which fulfills his spiritual destiny
    மனித முன்னேற்றம் கொலையில் ஆரம்பித்து கடுமையாகத் திட்டி, அபிப்பிராயபேதம் கொண்டு, பாராட்டுகிறது. சத்திய ஜீவியத்தில் இவை (complement) பூர்த்தி செய்யும் அம்சங்களாக மாறி ஆன்மீகக் கடமையை நிறைவேற்றுகின்றன.
  14. One is taken in if he is uninformed or inexperienced. One can be taken in even if informed or experienced. Valuing the valueless one can be taken in
    அனுபவமில்லாவிட்டாலும், விஷயம் தெரியாவிட்டாலும் ஏமாந்து போவார்கள். அனுபவமிருந்து, விபரம் அறிந்தாலும் ஏமாறலாம். அர்த்தமற்றதை அர்த்தமுள்ளதாகக் கருதினால் ஏமாறுவார்கள்.
  15. The energy released by one when not received by anyone comes back to realize itself at the source
    தெம்பு எழுந்து போவதை உடையவர் ஏற்கவில்லையெனில் தன்னைப் பூர்த்தி செய்ய அனுப்பியவரிடமே திரும்ப வரும்.
  16. The antecedent is not the cause; the cause is that which causes it
    முன் நிகழ்ச்சி காரணமானது. காரியத்தைச் செய்தது காரணம்.
  17. To spoil something wantonly is mischief
    வேண்டுமென்று ஒரு காரியத்தைக் கெடுப்பது விஷமம்.
    One indulges in mischief as it affords a greater pleasure
    விஷமம் செய்வது பெரும் திருப்தி தருவதால் அதை நாடுகின்றனர்.
    The unintentional result is a mishap, not a mischief
    தெரியாமல் நடந்தது துர்அதிர்ஷ்டம், விஷமமில்லை
    Self-defence against ignorant mischief is described as mischief
    அறியாமல் நடந்த விஷமத்திலிருந்து தற்காப்பு தேடுவது விஷமம் எனப்படும்.
    The best of vital intentions to the mental ends in mischief
    உணர்ச்சியின் உயர்ந்த எண்ணம் மனத்திற்கு விஷமமாகும்.
    Creative destruction is mischief
    அழிப்பதை புதியது புனைவதாகச் செய்வது விஷமம்.
  18. The principal occupation is the primary engagement of one’s energies
    தன் தெம்பெல்லாம் முழுவதும் பயன்படுத்த முயல்வது தலையாய கடமை.
    Energies touching the centre of personality the occupation becomes principal
    பர்சனாலிட்டி மையத்தைத் தெம்பு தொட்டால் அது முக்கிய கடமையாகும்.
    Such a principal occupation always expresses motive
    அப்படிப்பட்ட செயல் நோக்கத்தை வெளியிடும்.
    Motive is seated in the centre of being, not in any part
    நோக்கம் ஜீவனின் மையத்திலுள்ளது. எந்தப் பகுதியிலும் இல்லை.
    Each part can have a motive e.g. mental motive
    உடலின் கரணங்கள் ஒவ்வொன்றிற்கும் நோக்கமுண்டு. உ-ம். மனத்தின் நோக்கம்.
    The attitude of the being is motive
    ஜீவனுடைய அபிப்பிராயம் நோக்கமாகும்.
    Motive includes the attitudes and opinions
    நோக்கத்துள் அபிப்பிராயம் உண்டு.
    Opinion is of the mind, attitude is of the vital
    அபிப்பிராயம் மனத்திலுள்ளது, நோக்கம் உணர்ச்சிக்குரியது.
    Attitude includes the opinion as motive includes the attitude
    ஜீவன் உணர்வை உட்கொள்வது போல் உணர்வு அறிவை உட்கொள்ளும்.
    Each part, in theory, can have opinion, attitude and motive
    ஒவ்வொரு பகுதிக்கும் அறிவு, உணர்வு, நோக்கமுண்டு.
  19. Consolation is to be satisfied with less
    குறைத்துப் பெறுவதில் திருப்தியடைவது சமாதானம்.
    Appeasement is a compromise of sorts
    எப்படியாவது சமாளிப்பது விஷயத்தை மறைப்பது.
    The frustrated energy runs out in time at its own pace
    விரக்தி தன் போக்கில் ஓடி நிற்கும்
  20. Resentment is the mental approval of the vital dislike
    வெறுப்பான உணர்ச்சியை மனம் ஏற்பது எரிச்சலாக ஏற்பது.
  21. A word expressing the heat of inner abuse that is intense is scolding
    திட்டுவது என்பது உள்ளே எழும் வெறுப்பான வேகம் சொல்லாக வெளி வருவது
  22. Exhausting the energy of abuse one comes to forgive
    திட்டும் தெம்பு அழிந்தால் மன்னிக்க முடியும்.
6
Mr. Bennet's emotions were much more tranquil on the occasion, and such as he did experience he pronounced to be of a most agreeable sort; for it gratified him, he said, to discover that Charlotte Lucas, whom he had been used to think tolerably sensible, was as foolish as his wife, and more foolish than his daughter!
திரு. பென்னட் விஷயத்தை அமைதியாக ஏற்று, தனது திருப்தியை தெரிவித்து, அதே சமயம் இவ்விஷயத்தில் சார்லெட் தான் நினைத்தது போலல்லாமல், தனது மனைவி, மகள்களை விடவும் இன்னும் முட்டாளாக இருப்பது திருப்தியை தந்தது.
  1. Mr. Bennet’s one consolation is to find another like his wife
  2. It is an inverse subconscious memory of his proposal to Mrs. Bennet. He went by her beauty and was disappointed. Now Charlotte goes by Mr. Collins’ future wealth
  3. Mr. Bennet is unable to see the wisdom of Charlotte
  4. Outer events in tune with inner emotions, one is tranquil
    செயலும் உணர்வும் ஒத்துப் போனால் மனம் சமாதானமடையும்.
  5. Appearance of tolerable sensibility can express abominable foolishness
    பொறுத்துக் கொள்ளும் சுபாவமாகத் தோன்றுவது பயங்கர மடமையாக இருக்கும்.
7
Jane confessed herself a little surprised at the match; but she said less of her astonishment than of her earnest desire for their happiness; nor could Elizabeth persuade her to consider it as improbable. Kitty and Lydia were far from envying Miss Lucas, for Mr. Collins was only a clergyman; and it affected them in no other way than as a piece of news to spread at Meryton.
ஜேனின் ஆச்சரியம் குறைவாகவே இருந்தது. காலின்ஸ் --சார்லெட் இருவரது சந்தோஷத்தில் அவள் மகிழ்ச்சியடைந்தாள். கிட்டியும், லிடியாவும் இதனால் பொறாமைப்படவும் இல்லை, பொருட்படுத்தவுமில்லை. ஏனென்றால் காலின்ஸ் கேவலம் ஒரு பாதிரியாராக இருந்ததுதான்.
  1. Jane’s character is organised appearance of goodness
  2. Jane maintains her poise of positive thinking
  3. Jealousy does not arise from another plane
  4. Abhorrence to understanding is surprise to incomprehension
    பயங்கரம் எனப் புரிவது மடமைக்கு ஆச்சரியமாக இருக்கும்.
  5. Sounds of a higher or lower vibration are not detected by the human ear
    சப்த அலைகள் அளவுக்கு மீறியதும், குறைந்ததும் காதுக்குக் கேட்காது.
8
Lady Lucas could not be insensible of triumph on being able to retort on Mrs. Bennet the comfort of having a daughter well married; and she called at Longbourn rather oftener than usual to say how happy she was, though Mrs. Bennet's sour looks and ill-natured remarks might have been enough to drive happiness away.
லேடி லூகாஸ் தனது மகளுக்கு நல்ல சம்பந்தம் கிடைத்த வெற்றியை திருமதி. பென்னட்டிற்கு உணர்த்துவதுபோல் லாங்க்பர்னுக்கு அடிக்கடி வந்து, அவளது பார்வையையும், கடும் சொற்களையும் மீறி தனது சந்தோஷத்தைத் தெரிவித்தாள்.
  1. When success replaces humiliation one feels triumph
    அவமானம் போய் வெற்றி வந்தால் சந்தோஷம் எழும்.
  2. Inner success is outer display
    அகம் பெற்ற வெற்றியை புறம் கொண்டாடும்.
  3. Sense of triumph is greater than material accomplishment
  4. Lady Lucas’ frequent visits to Mrs. Bennet explain the carrier of gossip
  5. The greatest moment in a lady’s life is the moment of her daughter’s wedding
  6. Sour looks and ill-natured remarks issue from being thwarted
    முடியாவிட்டால் குணம் கெட்டு விடும், அவச் சொல் வாயில் எழும்.
9
Between Elizabeth and Charlotte there was a restraint which kept them mutually silent on the subject; and Elizabeth felt persuaded that no real confidence could ever subsist between them again. Her disappointment in Charlotte made her turn with fonder regard to her sister, of whose rectitude and delicacy she was sure her opinion could never be shaken, and for whose happiness she grew daily more anxious, as Bingley had now been gone a week, and nothing was heard of his return.
எலிஸபெத்துக்கும், சார்லெட்டிற்கும் நடுவில் ஒரு திரை விழுந்ததுபோல் ஆகிவிட்டது. பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் உரையாடுவது இனி நடக்காது என்றும், தனது ஏமாற்றத்தைப் போக்கிக் கொள்வதுபோல், தனது சகோதரியின்மேல் அதிக பாசத்தைப் பொழிந்து, அவளின் சந்தோஷத்திற்காக கவலைப்பட்டாள். பிங்கிலி ஊருக்குச் சென்று ஒரு வாரமாகியும் தகவல் ஒன்றும் வரவில்லை என்றும் வருந்தினாள்.
  1. Appreciation of the opposite views leads to restraint in behaviour
    எதிரியின் எண்ணத்தைப் பாராட்டினால் செயலில் கட்டுப்பாடுண்டு.
  2. Inner restraint is outer silence
    அகக் கட்டுப்பாடு புற மௌனம்.
  3. Enthusiasm is between similar vibrations. Restraint is between dissimilar circumstances
  4. Charlotte, after marriage, has become more like Elizabeth. Previously Elizabeth’s superiority could condescend. Now it cannot
  5. Confidence shares inner intensities
    அகத்தின் தீவிரத்தை நம்பிக்கையால் பகிர்ந்து கொள்கிறோம்.
  6. Worldly wisdom in action is similar to naïve incomprehension
    விபரம் தெரியாத அறியாமையும் அனுபவம் பெற்ற விவேகமும் ஒன்றே.
  7. Rectitude and delicacy sometimes express mental ineptitude
    மனத்தின் இயலாமை சமயத்தில் நேர்மையாகவும் பக்குவமாகவும் தெரியும்.
  8. Anxiety is not having the object of adoration before the eyes
    எவர் மீது உணர்ச்சி நெகிழ்ந்துருகுகிறதோ அவரெதிரிலில்லாவிட்டால் கவலை எழும்.
  9. There is a parallel between Elizabeth’s disapproval of Charlotte’s marriage and her father’s disapproval of Darcy. Elizabeth knew the distances she travelled in accepting Darcy and the various stages. She does not know that Charlotte passed all those stages and distances in her disappointed youth and arrived at accepting Collins. She pities Charlotte in her youthful ignorance of inexperience
10
Jane had sent Caroline an early answer to her letter, and was counting the days till she might reasonably hope to hear again. The promised letter of thanks from Mr. Collins arrived on Tuesday, addressed to their father, and written with all the solemnity of gratitude which a twelvemonth's abode in the family might have prompted. After discharging his conscience on that head, he proceeded to inform them, with many rapturous expressions, of his happiness in having obtained the affection of their amiable neighbour, Miss Lucas, and then explained that it was merely with the view of enjoying her society that he had been so ready to close with their kind wish of seeing him again at Longbourn, whither he hoped to be able to return on Monday fortnight; for Lady Catherine, he added, so heartily approved his marriage that she wished it to take place as soon as possible, which he trusted would be an unanswerable argument with his amiable Charlotte to name an early day for making him the happiest of men.
கரோலினுக்கு, ஜேன் விரைவாக பதில் எழுதினாள். மறுபடியும் அவள் பதிலுக்காக காத்திருந்து நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். காலின்ஸ் தான் வாக்களித்தபடி தனது அளவிலா நன்றியை தெரிவித்து, திரு. பென்னட்டிற்கு கடிதம் எழுதியிருந்தான். அவர்கள் அருகில் வசிக்கும் மிஸ். லூகாஸின் அன்பை பெற்றிருப்பதைப் பற்றியும் அதனால் மீண்டும் லாங்க்பர்னுக்கு இரண்டு வாரங்களில் வருவதாகவும், முக்கியமாக மிஸ். லூகாஸின் அருகில் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தான். மேலும் லேடி காதரின் தனது திருமணத்திற்கு ஒப்புதலை தெரிவித்து, அது மிக விரைவிலேயே நடக்க வேண்டும் என்பதைப்பற்றியும், அதற்கு சார்லெட் மறுப்பு தெரிவிக்காமல், மிக விரைவில் நாள் குறித்து, அவனை மிக சந்தோஷத்தில் ஆழ்த்துவாள் என நம்புகிறேன் என்றும் எழுதியிருந்தான்.
  1. Formality wears thin by passage of time
    நாளானால் முறைக்கு முக்கியத்துவம் குறையும்.
  2. Expectation brings the unexpected
    எதிர்பார்த்தால் எதிர்பாராதது வரும்.
  3. Expectation is greatest when no answer could come
  4. Expectation works, inadvertently
  5. Gratitude and solemnity do not go together as it is lively, expansive and infectious
    நன்றியறிதல் வளரும், பரவும், கலகலப்பானது. அதுள்ள இடத்தில் தீவிர நிதானமிருக்க முடியாது.
  6. Formality feels the intimacy of twelve months in twelve days
    நெறியான முறை 12 மாத பழக்கப் பலனை 12 நாளில் தரும்.
  7. Formality too has a conscience
    முறைக்கும் மனச்சாட்சியுண்டு.
  8. Love before wedding is not without rapture in the least circumstances
    காதல், திருமணம் வரை சிறிய விஷயங்களிலும் புளகாங்கிதம் அடையும்.
  9. Joy insists on celebrating itself
  10. His offer to stay at Longbourn has its foretaste of ownership
  11. Jane’s greatest depths are of the surface
  12. To refer to the centre of one’s emotional existence in the least of acts totally unconnected with that centre is the native urge of his being
    தொடர்பேயில்லாத சிறு விஷயங்கட்கும் உணர்ச்சி முக்கியத்துவம் தருவது ஜீவனுடைய அடிப்படை சுபாவம்.
  13. Men do become the happiest on earth on their wedding day
    திருமண நாளில் மனிதன் அதிகபட்ச சந்தோஷமடைகிறான்.
11
Mr. Collins's return into Hertfordshire was no longer a matter of pleasure to Mrs. Bennet. On the contrary, she was as much disposed to complain of it as her husband. -- It was very strange that he should come to Longbourn instead of to Lucas Lodge; it was also very inconvenient and exceedingly troublesome. -- She hated having visitors in the house while her health was so indifferent, and lovers were of all people the most disagreeable. Such were the gentle murmurs of Mrs. Bennet, and they gave way only to the greater distress of Mr. Bingley's continued absence.
திருமதி. பென்னட்டிற்கு, காலின்ஸ் மீண்டும் ஹர்ட்போர்ட்ஷயருக்கு வருவது சந்தோஷத்தை அளிப்பதாக இல்லை. மாறாக அவள் அதைப்பற்றி தன் கணவனிடம் புகார் செய்யத் தொடங்கினாள். அவன், லூகாஸ் இல்லத்திற்குப் போகாமல் இங்கு வருவது விசித்திரமான விஷயம் என்றும் அவன் வருகை தொல்லைதான் கொடுக்கும் என்றும், மேலும் அவள் உடல் நிலைக் குறைவாக இருக்கும், இச்சமயம் விருந்தினர் வருவது, அதுவும் காதல் விஷயத்திற்காக வருவது சரியல்ல என்றும் முணுமுணுத்தாள். பிங்கிலி வராதது மேலும் வருத்தத்தை அதிகப்படுத்தியது.
  1. Pleasure in anticipation is greater than in pleasure of enjoyment
    எதிர்பார்ப்பது அனுபவிப்பதை விட அதிக சந்தோஷம்.
  2. Right of ownership is enhanced by the sensation of the physical
    சொந்தம் கொண்டாடும் உரிமை பொருளைத் தீண்டுவதால் அதிகரிக்கும்.
  3. From the beginning of his first letter till Lydia’s elopement, Mr. Collins is a source of annoyance
  4. Collins lives his experience of marital bliss in his eloquent composition
  5. Superstition makes the irrelevant important
  6. It is the subtle infectious personality of the entail
  7. The same annoyance brought them Darcy later
  8. Good health enjoys attending on visitors
    திடகாத்திரமான உடல் விருந்தாளிகளை உபசரிக்கும்.
  9. Lovers are irksome to those who have trapped a husband into a loveless marriage
    வரனைப் பொறி வைத்துப் பிடித்தால், விருந்தாளியாக வரும் காதலர்களைக் கண்டால் வெறுப்பெழும்.
  10. Presence of lovers is an annoyance to Mrs. Bennet
  11. “Lovers of all the people are disagreeable” to Mrs. Bennet as it is a subconscious reminder to her of her own trap and chase of her husband in her youth
  12. In her own marriage she had to strain her nerves to get Mr. Bennet. Now wooing reminds her of her earlier ordeal
  13. Murmurs can be gentle, irksome or even violent
    முணுமுணுப்பது மெதுவாகவோ, எரிச்சலாகவோ, காரமாகவோ இருக்கும்.
  14. Murmurs are generated by distress
    மனப்புழுக்கம் முணுமுணுப்பை உற்பத்தி செய்யும்.
  15. Inner comfort and outer convenience go together
    அகத்தின் நயம் புறத்தின் வசதி.
  16. Bingley’s continued absence releases negative energy
  17. These developments organise that energy
12
Neither Jane nor Elizabeth were comfortable on this subject. Day after day passed away without bringing any other tidings of him than the report which shortly prevailed in Meryton of his coming no more to Netherfield the whole winter; a report which highly incensed Mrs. Bennet, and which she never failed to contradict as a most scandalous falsehood.
ஜேனும், எலிஸபெத்தும் இவ்விஷயத்தை நினைத்து நிம்மதி இழந்து தவித்தனர். நாட்கள் கடந்தனவே தவிர பிங்கிலியைப்பற்றி தகவல் ஒன்றும் இல்லை. மேலும் மெரிடனில், பிங்கிலி நெதர்பீல்டிற்கு குளிர்காலம் முடியும்வரை வரமாட்டான் என்ற செய்தி பரவியது. இதைக் கேட்ட திருமதி. பென்னட் ஆவேசத்துடன் அது தவறான செய்தி என்று எச்சரித்தாள்.
  1. Intense expectation generates the inveterate opposite
    தீவிரமாக எதிர்பார்த்தால் நேர் எதிரானது வரும்.
  2. Bingley’s arrival there is postponed till they all lost hope
  3. More than a disagreeable fact, mention of it incenses
  4. Appropriate phrases appear again and again. Scandalous falsehood which is repeated later appears here first
    பொருத்தமான சொற்கள் திரும்பத் திரும்ப வரும். அவதூறான பொய் கதையில் இருமுறை வருகிறது. இங்கு முதலாவதாகக் காணப்படும்.
  5. Opinion that is contradicted by an event refuses to die
    நிகழ்ச்சி மறுக்கும், அபிப்பிராயம் அறியாது. மீண்டும் மீண்டும் வரும்.
13
Even Elizabeth began to fear -- not that Bingley was indifferent -- but that his sisters would be successful in keeping him away. Unwilling as she was to admit an idea so destructive of Jane's happiness, and so dishonourable to the stability of her lover, she could not prevent its frequently recurring. The united efforts of his two unfeeling sisters and of his overpowering friend, assisted by the attractions of Miss Darcy and the amusements of London, might be too much, she feared, for the strength of his attachment.
எலிஸபெத்துக்கும் அச்சம் தோன்றியது. பிங்கிலியின் ஆசையைப்பற்றி அல்ல, ஒருவேளை அவன் சகோதரிகள் அவனை வரவிடாமல் தடுத்திருக்கலாம் என்று. ஜேனின் சந்தோஷத்தைக் கெடுக்கும் விஷயத்தை நினைக்கக் கூடாது என்று தோன்றினாலும் அவ்வப்போது அந்த எண்ணம் தோன்றி அவளை அச்சப்படுத்தியது அவன் சகோதரிகளின் இணைந்த முனைப்பாலும், அவன் தோழனின் சகோதரி மிஸ். டார்சியின் ஈர்ப்பாலும், லண்டனின் கேளிக்கைகளும் அவனை பாதித்திருக்குமோ என்று பயந்தாள்.
  1. Elizabeth clings to her illusion of Bingley’s loyalty and it came true
  2. One’s faith in an idea makes it happen, even if it is not true
  3. Liking that is prejudice for, refuses to condemn the guilty and condemns another
    பிரியம் ஏற்பட்டு விட்டால் குற்றத்திற்காகத் தண்டிக்க மனம் வாராது. அடுத்தவரைக் குறை கூறும்.
  4. Even as an idea a destructive thought is not admitted
    அழியும் எண்ணம் எண்ணமாகவும் எழவில்லை.
  5. To vacillate in love is dishonourable
    காதலில் ஊசலாட்டம் அவமானப்பட வேண்டியது.
    Charm survives the dishonourableness of vacillation
    மனம் எவ்வளவு அலைமோதினாலும் முடிவாகக் கவர்ச்சி நிலைக்கும், பேசும்.
  6. Fact that is reality insists on recurrence when refused
    உண்மையை மறுத்தால் மீண்டும் மீண்டும் வரும்.
  7. Elizabeth sees her judgement of Bingley fail
  8. Compunction for the loss of the offender is one major characteristic of submissiveness
  9. Sisters are naturally unfeeling towards brothers
    சகோதரன் உணர்ச்சியை சகோதரிகள் புறக்கணிப்பார்கள்.
  10. Louisa does not take initiative. She is always an accomplice
  11. Elizabeth feels sorry for the ill-reputation of Bingley due to desertion
  12. Belief arises out of what one likes or needs
  13. Unwilling to admit to so destructive an idea, Elizabeth never believed it
  14. For submissive characters, friendship is fulfilling in subordination
  15. Friendship expands personality, does not overpower
    நட்பு நண்பன் வாழ்வை மலரச் செய்யும், அதிகாரம் செய்யாது.
  16. Darcy is the overpowering friend
  17. Mind believes what it hears, even if it is non-existent
  18. Infatuation is as deep as amusements
    மையல் கேளிக்கைக்குச் சமமாகும்.
  19. Love in youth is as powerful as the attractions of a city
  20. The attachment of Bingley or its reality is secondary. Jane was married primarily on the strength of her sister’s good will and her own silent will
14
As for Jane, her anxiety under this suspence was, of course, more painful than Elizabeth's; but whatever she felt she was desirous of concealing, and between herself and Elizabeth, therefore, the subject was never alluded to. But as no such delicacy restrained her mother, an hour seldom passed in which she did not talk of Bingley, express her impatience for his arrival, or even require Jane to confess that if he did not come back, she should think herself very ill used. It needed all Jane's steady mildness to bear these attacks with tolerable tranquillity.
இந்த விஷயம் எலிஸபெத்தைவிட ஜேனுக்குத்தான் அதிகம் வலி தருவதாக இருந்தும் அவள் அதை மறைக்க நினைத்து எலிஸபெத்துடன் இதைப்பற்றி பேசுவதைத் தவிர்த்தாள். இந்த விஷயத்தின் தீவிரத்தை அறியாத அவள் தாய், பிங்கிலியைப்பற்றி மணிக்கொருமுறை பேசுவதும், அவன் எப்பொழுது வருவான் என பொறுமை இழந்து அவன் வரவில்லை எனில், அவர்களை கேவலமாக உபயோகித்திருப்பதாகவும் புலம்பித் தீர்த்தாள். ஜேனின் பொறுமையும், சீரான மென்மையான சுபாவமும் இதையெல்லாம் ஓரளவுக்கு அமைதியாக ஏற்றுக் கொள்ள உதவியது.
  1. Suspense intensifies anxiety
    என்ன நடக்கப் போகிறது எனத் தெரியாவிட்டால் கவலை எழும்.
  2. Suspense is painful, anxiety under this suspense is even more painful
  3. It brings out the truth that the vital is more powerful than the physical
  4. One’s own feeling is stronger than the strongest sympathy
    பெரும் அனுதாபத்தை விடச் சொந்த உணர்ச்சி வலுவானது.
  5. Capacity to conceal creates silent will
    மறைக்க முடிவது மௌன சக்தியைத் தரும்.
  6. Jane conceals whatever she felt. Naturally, it increases her pain
  7. Speaking out relaxes. Silence creates tension
  8. The daughters have developed a delicacy the mother has not
  9. Delicacy is of the mind when it expresses through the vital
    Physical knows no delicacy

    மௌன சக்தியை உணர்ச்சி வெளிப்படுத்தினால் மனம் மென்மையாகும். உடல் மென்மையை அறியாது.
  10. The crudest touch of the spirit is delicacy in the subtle plane
    ஆன்மாவின் முரட்டுத்தனமும் சூட்சுமத்தில் மென்மையாகும்.
    Delicacy is a combination of softness and sweetness, rather an effort to evoke a response of soft sweetness from the other
    மென்மையும் இனிமையும் கலந்தது மிருதுத்தன்மை. அது பிறரை இதமாகப் பழகச் செய்யும்.
    Courtesy in behaviour is delicacy in sensitivity
    இதமாகப் பழகினால் உணர்வில் மென்மையாகும்.
  11. An hour missed is an age of misfortune for the physical
    உடல் 1 மணி இழந்தால் அது துர்அதிர்ஷ்டமான யுகமாகும்.
  12. A work cancelled changes patience into utter impatience
    ரத்தான வேலை பொறுமையை அவசரமாக்கும்.
  13. The process of indelicate unrestraint becoming delicacy is vitally painful
  14. Cultural evolution in the society is slow, as it is painful
  15. One justifies one’s failures by the imagined defects of others
  16. Mrs. Bennet was ready to think that Jane was ill-used
  17. It is noteworthy that the same lady never felt Lydia ill-used them all
  18. Mildness absorbs the attack
    மிருதுவானவரைத் தாக்கினால் பொறுத்துக் கொள்வார்.
  19. Jane’s suffering is due to double causes, disappointment and the need to appear unconcerned. The latter makes one stoic
  20. Bingley would not come as long as he is expected
  21. In fact, he really comes, when everyone exhausts their expectation
  22. Impassive inner stillness is tranquility that can tolerate the intolerable
    அசைவற்று அகம் அமைதியானால் அப்படி எழும் சாந்தி பொறுக்க முடியாததைப் பொறுத்துக் கொள்ளும்.
15
Mr. Collins returned most punctually on the Monday fortnight, but his reception at Longbourn was not quite so gracious as it had been on his first introduction. He was too happy, however, to need much attention; and, luckily for the others, the business of love-making relieved them from a great deal of his company. The chief of every day was spent by him at Lucas Lodge, and he sometimes returned to Longbourn only in time to make an apology for his absence before the family went to bed.
காலின்ஸ் அவன் சொன்னதைப்போல் திங்கட்கிழமை லாங்க்பர்னுக்குத் திரும்பினான். ஆனால் அவனுக்கு உற்சாகமற்ற வரவேற்பே கிடைத்தது. ஆனால் அதிக சந்தோஷத்தில் இருந்த காலின்ஸ் அதைப் பொருட்படுத்தவில்லை. மேலும் காதலில் மூழ்கியிருந்த அவனுக்கு இவர்கள் துணை தேவைப்படவில்லை. பெரும்பாலான நேரம் லூகாஸ் இல்லத்தில் செலவிட்டதால் உறங்குவதற்கு முன்பு மட்டும் வீடு திரும்பி, மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
  1. Lovers cannot waste time to honour punctuality
    குறித்த நேரம் வரும்வரை காத்திருக்கும் பொறுமை காதலருக்கில்லை.
  2. In a sensitive atmosphere, positive people arrive with sympathy; negative people, for their reason, arrive in such a fashion to intensity by their sensitivity
  3. Collins, full of anticipated joy, punctually arrives to irritate everyone
  4. Mr. Collins’ first reception was out of curiosity based on his letter
  5. His second reception anticipates his wedding
  6. Note he visits Longbourn twice; later he writes twice. To start with, he thought of Jane, proposed to Elizabeth. That too was two-pronged
  7. One who is overflowing with ecstasy needs no attention. He cannot notice inattention. Nor can he observe in the person on whom he pours his energies that no notice is taken of it. Cheerfulness is a safe foundation of yoga
  8. It is a self-forgetful condition well suited to move towards Self
  9. In happiness or sorrow or even coma, habit survives
  10. Graciousness is sweetness received by softness
    இனிமை மிருதுவானால் செயல் அருள் வெளிப்பாடாகும்.
  11. Dead formality and dry mercenaries can enjoy courtship
    ஜீவனற்ற சம்பிரதாயமும் வறண்ட ஆதாய மனப்பான்மையும் திருமணத்தை நாடி இடம் பெறலாம்.
    Courtship is the longing for the unattainable
    ஆண் பெண்மையை திருமணத்திற்காக நாடுவது கிடைக்காததற்கு ஏங்குவதாகும்.
    Romance is to see forever that what appears to be attainable is really the unattainable
    எட்டுவதைப் போல் தோன்றும் கிடைக்காத ஒன்றை கண்முன் நிறுத்துவது காதல்.
    Marriage does not seek, considers it has more than attained
    விரும்பியது கிடைத்தது திருமணம். அதன் பின் தேட எதுவுமில்லை.
    Romance is ever living as the infinity cannot be exhausted
    காதல் அனந்தமென்பதால் அதற்கு முடிவு என்று ஒன்றில்லை.
    To court the dangerous because it never ceases to be dangerous is romance
    காதல் ஆபத்தானது, என்றும் ஆபத்து நிறைந்தது. ஆபத்தை ஆர்வமாகத் தேடுவது காதல்.
    Having seen God’s face; one becomes romantic
    தெய்வத்தை முகத்தில் கண்டபின் கண்டது காதல்.
    As it is constantly eluding romance is ever living
    கைக்கு எட்டுவதில்லை என்பதால் காதல் உயிருடனுள்ளது.
    To convert the dull material relationship into live spiritual one is romance
    ஜீவனற்ற ஜடமான உறவை ஜீவனுள்ள ஆன்மீக உறவாக்குவது காதல்.
    There is no romance between human hearts
    மனிதரிடையே காதல் எழுவதில்லை.
    Romance is the path of the human changing into Divine
    மனிதன் இறைவனாகும் பாதையில் எழுவது காதல்.
    Romance releases the universal energy into the personal life
    பிரபஞ்ச சக்தியை ஒருவர் வாழ்வில் எழுப்புவது காதல்.
    Man lives as he unconsciously feels Romance behind life
    காதல் வாழ்வுக்குப் பின்னணி என்பதால் மனிதன் உயிருடனிருக்கிறான்.
    The very material things acquire divine consciousness in romance
    காதலால் ஜடப்பொருள்கட்கு தெய்வீகம் வந்து விடுகிறது.
    God eluding Man is romance present in his life
    மனிதன் கைக்கு எட்டாத ஆண்டவன் வாழ்வைக் காதலாக்குகிறான்.
    Evil itself lets out glimpses of most intense divine vibrations
    கெட்டவர் மீது எழும் காதலிலும் மின்னலென காதற்பொறிகள் எழும்.
    When man seeks romance is seen in an evil person
    காதலை நாடுபவனுக்கு பொல்லாதவரிடமும் அது தெரியும்.
    Man becoming romantic is short lived
    மனித வாழ்வில் எழும் காதல் நீடிக்காது
    Romance possessing Man has a longer life in him
    காதல் வாழ்வை ஆக்ரமித்தால் நீடிக்கும்.
    Romance becoming romantic in Man’s life, compelling him to seek what is inside outside makes romance eternal
    மனித வாழ்வு காதல் மயமாகி புறத்தை அகத்தில் தேடச் செய்தால் அழியாத காதல் எழும்.
    In Time, romance has a glorious glow that is fleeting
    காலத்தில் காதல் பெருமையாக மிளிர்ந்து மின்னலாக மறையும்.
    In Timelessness, romance silently learns to enjoy it in absorption
    காலத்தைக் கடந்தவருக்கு காதல் மௌனமாக நிரந்தரமாகும்.
    In Simultaneous Time, Romance rises in Time, compels Timelessness to coexist, making the everlasting divinely eternal
    மூன்றாம் நிலைக்காலத்தில் காதல் காலத்திலெழுந்து காலத்தைக் கடந்ததை ஏற்று காதலை அமரக் காதலாக்குகிறது.
  12. Regularly calling on the neighbour is neighbourliness
    ஊரில் உள்ளவர்களைப் போய் அடிக்கடிப் பார்ப்பது ஊருக்குடையவராவது.
  13. In Collins, love-making, behaving in public, existing, functioning are all one, one of obsequious apologising 
16
Mrs. Bennet was really in a most pitiable state. The very mention of anything concerning the match threw her into an agony of ill-humour, and wherever she went she was sure of hearing it talked of. The sight of Miss Lucas was odious to her. As her successor in that house, she regarded her with jealous abhorrence. Whenever Charlotte came to see them, she concluded her to be anticipating the hour of possession; and whenever she spoke in a low voice to Mr. Collins, was convinced that they were talking of the Longbourn estate, and resolving to turn herself and her daughters out of the house as soon as Mr. Bennet were dead. She complained bitterly of all this to her husband.
திருமதி. பென்னட்டின் நிலை பரிதாபத்திற்குரியதாயிற்று. எங்கு சென்றாலும் இந்த சம்பந்தத்தைப்பற்றியே பேச்சு அவள் மனதை மேலும் பாதித்தது. மிஸ். லூகாஸைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு உண்டானது. இந்த வீட்டை ஆளப்போகிறவள் என்பதை நினைத்தாலே அவளுக்குப் பொறாமையாக இருந்தது. சார்லெட் அவர்களை சந்திக்க வரும்போதெல்லாம் வீட்டை எந்த தருணத்தில் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என கணக்கிடுகிறாள் என்று முடிவு செய்தாள். திருமதி. பென்னட், காலின்ஸ் தணிந்த குரலில் உரையாடும் பொழுதெல்லாம் அவர்கள் லாங்பர்ன் எஸ்டேட்டைப்பற்றியும், திரு. பென்னட்டின் மரணத்திற்குப் பிறகு அவளையும் அவள் மகள்களையும் வீட்டைவிட்டு விரட்டுவதைப் பற்றிப் பேசுவதாக நினைத்தாள். இதைப்பற்றி மிகவும் கசப்புடன் திரு. பென்னட்டிடம் புகார் செய்தாள்.
  1. Intensity for Mr. Collins or Mrs. Bennet is apologising or pitiableness
  2. Collins trespasses on Mr. Bennet’s hospitality longer than necessary because Darcy is to come through him
  3. One becomes pitiable when she fully activates her lowest part
    தம் தாழ்ந்த குணங்களை வலியுறுத்தினால் பரிதாபத்திற்குள்ளாவார்.
  4. While at the highest pitch, the sensitivity is the highest
    உச்ச கட்டத்தில், சொரணை உச்ச கட்டமாகும்.
  5. Someone’s ill humour gives us discomfort; our own agony
    குணம் கெட்டவரால் நம் குணம் கெட்டுப் போகும், வேதனை தரும்.
  6. Mrs. Bennet is a dynamo of energy. It can either be in ecstasy or an agony of ill-humour. She knows of no state in-between
  7. Of the five senses, sight is comprehensive, voice is pleasingly penetrative, touch is deeply fulfilling, smell elevates, taste sweetens the depths
  8. For the woman, children are more important than the husband, the house is all important next only to children.
  9. The house for the woman is the material husband
  10. You project yourself into others
  11. Often by our intensity of non-existing thoughts we create the very thoughts we want them not to have
  12. More than losing the house, what hurts Mrs. Bennet is that Charlotte will be the successor
  13. If man is incapable of the other man’s point of view, he is infinitely capable of non-existing points of view of his own on an issue
  14. The way in which one lets his overflowing joy express or sorrow express, reveals his character
  15. “threw Mrs. Bennet into an agony of ill humour”. Apparently this is because the match came to spoil her plans and rob her of the estate. By a long term perception a subtle sense can have, Darcy coming into her family giving Elizabeth £10,000 a year and a status inconceivable is now subconsciously felt by Mrs. Bennet as a great fulfillment of her deepest aspiration which is too much for her nerves and temperament to bear
  16. A current topic is discussed at all points of social gatherings
    எங்கு எவர் கூடினாலும் செய்தியை விவாதிப்பர்.
  17. Insecurity is unsettling; dwelling on it gives abhorrence
    பாதுகாப்பில்லாவிட்டால் நிலையில்லை. அதையே நினைத்தால் பயங்கரமாகும்.
  18. An innocent act of yesterday, in a changed context, becomes an evil of today
    நேற்றைய நல்ல காரியம் நிலை மாறியதால் இன்றைய கெட்ட காரியமாகும்.
  19. Rights granted raises Man several levels
    உரிமை வந்தால் மனிதன் உளறுவான்.
  20. A suspicious eye is capable of evil creation
    சந்தேகம் மனத்தை விஷமாக்கும்.
  21. Evil thus created expands by a lively imagination
    கெட்டது உற்பத்தியானால் கற்பனை அதை வளர்க்கும்.
  22. When a grievance cannot be contained, it is expressed as a complaint, creative grievances acquire the voice of a complaint
    குறையை ஏற்க முடியவில்லையெனில், குறையாக வாய்வழி வரும். ஜீவனுள்ள குறைகள் குறை கூறும் கூச்சலாகும்.
  23. The greatest of energies issue from the self
    அதிக பட்ச தெம்பு ஆன்மாவுக்குரியது.
17
"Indeed, Mr. Bennet," said she, "it is very hard to think that Charlotte Lucas should ever be mistress of this house, that I should be forced to make way for her, and live to see her take my place in it!"
“திரு. பென்னட், நினைப்பதற்கே கஷ்டமாக உள்ளது. சார்லெட் லூகாஸ் இந்த வீட்டின் எஜமானியாகவும், நான் விட்டுக்கொடுத்து, அவள் இங்கு என் இடத்தில் இருப்பதும், நான் அதை உயிரோடு இருந்து பார்ப்பதும் ” என்றாள்.
  1. She has no delicacy not to mention his death to him
  2. Mrs. Bennet has a rich practical imagination of the physical mind. The sight of Charlotte is anathema to her. Her imagination runs riot in her mind
  3. She is a woman who must speak as she thinks about Charlotte. To her what she imagines is more than real
  4. His consolation is refined. She has no instrument to respond to it
  5. One characteristic of the physical is it repeats its position verbatim after it is fully analysed, answered and warded off
  6. Mr. Bennet draws her particular attention to her indelicacy by asking what she would not mind. She is oblivious of the sting
  7. The entail is a legal detail she cannot comprehend. It is foolish for her to talk of something she does not know. Only after listening to her insensible, foolish repetition, does it strike Mr. Bennet that she is incorrigible
18
My dear, do not give way to such gloomy thoughts. Let us hope for better things. Let us flatter ourselves that I may be the survivor."
“என் அன்பே, அந்த மாதிரியான இருண்ட எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதே. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம். நானே உனக்குப் பிறகு உயிர் வாழ்வேன் என்று நினைப்போம்.”
  1. Thoughts encouraged become personality of force
    எண்ணத்தைப் பாராட்டினால் சுபாவம் வீரியமடையும்.
  2. It requires stoical courage to face the inevitable
    தவிர்க்க முடியாததை ஏற்க ஊரை எதிர்க்கும் தைரியம் வேண்டும்.
  3. This page reveals the reality of his marriage or all marriages
19
This was not very consoling to Mrs. Bennet, and therefore, instead of making any answer, she went on as before,
இது திருமதி. பென்னட்டிற்கு பெரிதும் சமாதானம் அளிக்கவில்லை. எனவே பதில் ஏதும் கூறாமல் முன்போலவே,
  1. A fact cannot be wished away
    நடந்த செயலைப் பேசி அழிக்க முடியாது.
  2. Obstinacy can be obstinately foolish
    பிடிவாதம் பிடிவாதமாக மடத்தனமாக இருக்கும்.
  3. She ignores his explanation as she has ignored his existence all her life
20
"I cannot bear to think that they should have all this estate. If it was not for the entail, I should not mind it."
“என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர்களுக்கு இந்த சொத்து போகும் என்கிற சட்டம் மாத்திரம் இல்லையெனில் நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன்.”
  1. Man is perishable, property is not
  2. She almost says she would not mind his dying if the entail were not there
  3. A woman needs the property of her husband, not the husband
    பெண்ணுக்கு கணவன் சொத்து வேண்டும், கணவனில்லை.
21
"What should not you mind?"
“நீ எதைப் பொருட்படுத்த மாட்டாய்?”
  1. The truth the husband missed during the courtship strikes him later
    திருமணத்தின்முன் கணவன் அறியாதது திருமணத்தின் பின் தெரிய வரும்.
  2. He is crude enough to ask what she would not mind
  3. He wants one more occasion for his perennial complaint
22
"I should not mind anything at all."
“நான் எதையும் பொருட்படுத்த மாட்டேன்.”
  1. Nothing matters to her except herself and her comforts
  2. The urge for independence seeks utterance
    சுதந்திர வேட்கை சொல்லாக எழும்.
23
"Let us be thankful that you are preserved from a state of such insensibility."
“நல்லவேளை இந்த சட்டம் மாத்திரம் இல்லையெனில் நீ எதையும் பொருட்படுத்தாத நிலையில் இருப்பதிலிருந்து தப்பித்தாய்.”
  1. Another’s ill opinion even when you know it is not pleasant in the hearing of it
    கேட்க கசப்பானாலும் அடுத்தவர் தப்பபிப்பிராயத்தில் உண்மையுண்டு.
24
"I never can be thankful, Mr. Bennet, for anything about the entail. How any one could have the conscience to entail away an estate from one's own daughters, I cannot understand; and all for the sake of Mr. Collins too! -- Why should he have it more than anybody else?"
“இந்த சட்டம் இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை திரு. பென்னட். எப்படி தன்னுடைய பெண்களுக்கு போக வேண்டிய சொத்தை, இன்னொருவருக்கு, அதுவும் காலின்ஸுக்கு கொடுப்பதற்கு மனது வரும்! எனக்குப் புரியவில்லை. மற்றவரைவிட அவனுக்குப் போக வேண்டிய அவசியம் என்ன?”
  1. The desire to hurt resorts to falsehood in a complaint
    புண்படுத்தும் ஆசை பொய் சொல்லும்.
  2. Dark personalities find a fulfillment in unreal complaints
    இல்லாத குறையைச் சொல்லத் தவறானவர் ஆசைப்படுவார்.
  3. She does not understand. In her ignorance she accuses him of the entail. As all thoughts are evil, ignorance in its active state can only be evil. She thinks of her own thoughts only – Mr. Collins
  4. Jane Austen has this page to emphasise the insensitivity of Mrs. Bennet
25
"I leave it to yourself to determine," said Mr. Bennet.
“நீயே இதைப்பற்றி தீர்மானம் செய்” என்றார் திரு. பென்னட்.
  1. A page that reveals Austen’s genius about human nature
  2. Courtesy and culture have no chance against ignorant ill will
    கெட்ட எண்ணத்தை பண்பும் பக்குவமும் வெல்ல முடியாது.
 

 

 

 



story | by Dr. Radut