Skip to Content

Volume I Chapter 03: ‘Tolerable’

Chapter 3: ‘Tolerable’

பொறுத்துக் கொள்ளலாம்

Summary: Bingley returns Mr. Bennet’s visit and the Bennets invite him to have dinner with them but he declines as he has business in town. When he returns for a ball, he brings his own sisters and a friend, Darcy. The first introduction of Darcy is not favorable as the ladies observe that he is rich and attractive but too proud. He makes his own comments on Elizabeth, that she is not quite “handsome enough” for his tastes, turning down Bingley's suggestion that he ask her to dance. Jane, meanwhile dances with Bingley. Bingley’s interest in Jane excites Mrs. Bennet.
 
சுருக்கம் : திரு. பென்னட்டின் சந்திப்புக்கு பதிலளிப்பதுபோல் பிங்கிலி அவர்கள் வீட்டிற்கு வருகிறான். பென்னட் தம்பதிகள் அவனை விருந்துக்கு அழைக்கின்றனர். ஆனால் அவன் தனக்கு லண்டனில் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிடுகிறான். சர் வில்லியமும் , லேடி லூகாஸும் ஏற்பாடு செய்திருந்த நடனத்திற்கு தன்னுடைய சகோதரிகளையும் , திரு. டார்சியையும் அழைத்து வருகிறான். டார்சியின் முதல் அறிமுகம் திருப்தியாக இல்லை. பணக்காரனாக இருக்கிறான் , அழகாக இருக்கிறான் என பெண்மணிகள் நினைத்தாலும் , அவனை கர்வி என ஒதுக்குகின்றனர். எலிசபெத்துடன் நடனமாட பிங்கிலியின் யோசனையை மறுத்து தன்னுடைய ரசனைகேற்ப "அவள் அவ்வளவு அழகானவள் அல்ல"என்று கூறுகிறான். இதற்கிடையில் ஜேன் பிங்கிலியுடன் நடனமாடி , திருமதி. பென்னட்டை சந்தோஷப்படுத்துகிறாள்.
 
 
 
1
Not all that Mrs. Bennet, however, with the assistance of her five daughters, could ask on the subject was sufficient to draw from her husband any satisfactory description of Mr. Bingley. They attacked him in various ways -- with barefaced questions, ingenious suppositions, and distant surmises; but he eluded the skill of them all, and they were at last obliged to accept the second-hand intelligence of their neighbour, Lady Lucas. Her report was highly favourable. Sir William had been delighted with him. He was quite young, wonderfully handsome, extremely agreeable, and, to crown the whole, he meant to be at the next assembly with a large party. Nothing could be more delightful! To be fond of dancing was a certain step towards falling in love; and very lively hopes of Mr. Bingley's heart were entertained.
எவ்வளவு சாமர்த்தியமாகவும் , நேரிடையாகவும் , சுற்றி வளைத்தும் கேட்ட கேள்விகளுக்கு திரு.பென்னட்டிடமிருந்து பிங்கிலியைப் பற்றி திருப்திகரமான பதில் கிடைக்காததால் அவரது மனைவியும் , மகள்களும் வேறு வழியின்றி திருமதி.லூகாஸ் கூறிய விவரங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. திருமதி. லூகாஸ் கூறியவை உற்சாகமானதாக இருந்தது. திரு.வில்லியமிற்கு அவனை மிகவும் பிடித்து விட்டதாகத் தெரிந்தது. பழகுவதற்கு இனிமையானவனுமாய் , தோற்றத்தில் கம்பீரம் உடையவனுமாய் விளங்கிய அவனுக்கு நடனமாடுவதில் நாட்டம் உண்டு எனத் தெரிந்தது எல்லோரையும் மிகவும் பரவசப்படுத்தியது. அடுத்த நடனத்தில் நிறைய நண்பர்களுடன் கலந்து கொள்ளப் போவதாக செய்தி கிடைத்தது. நடனமாடுவதில் நாட்டம் இருந்தாலே காதல் வயப்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அவன்மீது அவர்களுக்கு மிக்க நம்பிக்கை பிறந்தது.
  1. Absence of sensible pleasant exchange leads one to enjoy it in secrecy
    அழகாக அறிவோடு பேசித் திளைக்க முடியவில்லையெனில் இரகஸ்யம் தேவைப்படுகிறது.
  2. Secrecy, when sought, becomes more secretive
    இரகஸ்யத்தை நாடினால், அது பெரு இரகஸ்யமாகும்.
  3. Secrecy, when it wants to preserve its secrecy, has a way of becoming stronger by external attack
    இரகஸ்யம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, சுறுசுறுப்பாய் வேலை செய்யும்.
  4. The more you try to elicit, the more it is resisted
  5. Sama, dhana, beda, dhandam are seen in bared faced questions, ingenious suppositions and distant surmises
    சாம, தான, பேத, தண்டம் அவர்கள் வெளிப்படையாக கேட்ட கேள்விகளில் தெரிகிறது. ஹேஷ்யம், இப்படியா எனக் கேட்டனர்.
  6. Bare faced questions, ingenious suppositions, and distant surmises are the products of ignorant imagination
    மடமையின் கற்பனையில் மொட்டையான கேள்விகள், இல்லாத கற்பனைகள், எவரும் அறியாத சந்தேகங்கள் எழும்
  7. Secrecy creates intensity in relationships, though negative
    இரகஸ்யம் பிறருக்கு ஆசையை எழுப்பும்.
  8. Secrecy makes the other seek you
    இரகஸ்யம் அடுத்தவை நம்மை நாட வைக்கும்.
  9. Ability to imagine the result in the beginning exhausts the imagination
    முதலிலேயே முடிவை நினைப்பவன் , நினைவே தெம்பிழக்கச் செய்யும்.
  10. Expectation, in its nascent stages, has a way of more than fulfilling itself
    எதிர்பார்ப்பு புதியதானால், தன்னை அபரிமிதமாகப் பூர்த்தி செய்து கொள்ளும்.
  11. To be expecting to be loved is to grow young in spirit
    காதலை எதிர்பார்த்தால் இளமை வலுக்கும்.
  12. To be fond of dancing is a step towards falling in love
    நடனம் காதலை நோக்கி எடுத்த முதற்படி.
  13. Dancing is the physical expression of vital interest
    உணர்ச்சியை வெளிப்படுத்தும் செயல் நடனம்.
2
"If I can but see one of my daughters happily settled at Netherfield," said Mrs. Bennet to her husband, "and all the others equally well married, I shall have nothing to wish for."
"என்னுடைய ஒரு மகள் நெதர்பீல்டில் வாழ்க்கைப்பட்டு , மற்றவர்களுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் நடந்து விட்டால் , வேறு என்ன வேண்டும் எனக்கு. வேறு எந்த ஆசையும் எனக்கு இல்லை" என்று திருமதி. பென்னட் தன் கணவரிடம் கூறினாள்.
  1. The physical cannot imagine
    உடல் கற்பனையை அறியாது.
  2. When it does, its energy cancels
    உடல் செய்வதை அதன் சுறுசுறுப்பு ரத்து செய்யும்.
  3. Wishful thinking fulfils by wishing
    மனப்பால் குடிப்பவன் மனத்தால் நிறைவு பெறுகிறான்.
  4. The physical articulates, seeks satisfaction in articulation
    ஜடமானவர் பேசுவர், பேசுவதில் திருப்தியடைவார்.
  5. The vital silently achieves, the mental allows the silent will to work
    உணர்ச்சி மௌனமாக சாதிக்கும், மனம் மௌன சக்தி வேலை செய்ய அனுமதிக்கும்.
  6. Expression of a wish eliminates its possibility
  7. Building on the first wish, is a sure indication of its impossibility
3
In a few days Mr. Bingley returned Mr. Bennet's visit, and sat about ten minutes with him in his library. He had entertained hopes of being admitted to a sight of the young ladies, of whose beauty he had heard much; but he saw only the father. The ladies were somewhat more fortunate, for they had the advantage of ascertaining from an upper window that he wore a blue coat, and rode a black horse.
சில நாட்களுக்குப் பின் பிங்கிலி , திரு. பென்னட்டை சந்திக்க அவரது இல்லத்திற்கு வந்தான். அவரது பெண்களின் அழகைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அவனுக்கு அவர்களை சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் தகப்பனாருடன் பேசிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று. ஆனால், நீல நிற உடையணிந்து கறுப்பு நிறக் குதிரையில் வந்திறங்கிய அவனை மேல்மாடி ஜன்னலிலிருந்து பார்க்கும் வாய்ப்பு பெண்களுக்குக் கிடைத்தது.
  1. The weak waits for the other to take the initiative
    எளியவர் அடுத்தவர் ஆரம்பிக்கட்டும் என்றிருப்பர்.
  2. The weak cannot act on their own
    எளியவர் தாமே செயல்பட முடியாது.
  3. Mr. Bingley without Darcy’s permission, cannot even see the ladies
    டார்சியின் உத்தரவில்லாமல் பிங்லியால் பெண்களைச் சந்திக்கவும் முடியாது.
  4. Smallness fulfils one aim at a time
    சிறியது ஒரு நேரம் ஒரு காரியம் பூர்த்தி செய்யும்.
  5. In human life property and beauty are the two greatest assets
    மனித வாழ்வில் சொத்தும், அழகும் முக்கியமானவை.
  6. Expectation cancels
  7. Imagination runs riot indicating the absence of results
  8. To be fortunate means to have a higher endowment than the environment. Here it is greater eagerness
    சந்தர்ப்பத்தை விட அதிக அம்சமிருப்பது அதிர்ஷ்டம் எனப்படும். இங்கு அபரிமிதமான ஆர்வம் அதிர்ஷ்டமாகிறது.
  9. Woman’s eagerness surpasses in intensity than the man’s for the woman
    ஆண் பெண்ணை நாடுவதை விட பெண் ஆணுக்காகக் காத்திருந்து ஏங்குவது அதிகம்.
4
An invitation to dinner was soon afterwards dispatched; and already had Mrs. Bennet planned the courses that were to do credit to her housekeeping, when an answer arrived which deferred it all. Mr. Bingley was obliged to be in town the following day, and, consequently, unable to accept the honour of their invitation, etc. Mrs. Bennet was quite disconcerted. She could not imagine what business he could have in town so soon after his arrival in Hertfordshire; and she began to fear that he might be always flying about from one place to another, and never settled at Netherfield as he ought to be. Lady Lucas quieted her fears a little by starting the idea of his being gone to London only to get a large party for the ball; and a report soon followed, that Mr. Bingley was to bring twelve ladies and seven gentlemen with him to the assembly. The girls grieved over such a number of ladies, but were comforted the day before the ball by hearing that instead of twelve he had brought only six with him from London -- his five sisters and a cousin. And when the party entered the assembly room it consisted of only five altogether -- Mr. Bingley, his two sisters, the husband of the eldest, and another young man.
<விருந்துக்கு அழைப்பு விடுத்து , அதற்கு வேண்டிய ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த திருமதி. பென்னட்டிற்கு ,வேறு வேலையாக நகரத்திற்குச் செல்வதால் தற்சமயம் வர இயலாது என பிங்கிலி அனுப்பிய செய்தி பெரும் கவலையைக் கொடுத்தது. ஹெர்ட்போர்ட்ஷயரில் வந்திறங்கியவுடனேயே அப்படி என்ன வேலை இருக்கும் நகரத்தில் என்று அவளால் கற்பனை செய்ய முடியவில்லை. நெதர்பீல்டில் நிரந்தரமாக தங்காமல் இப்படி ஒவ்வோர் இடமாக மாறிக் கொண்டே இருப்பானோ என்ற கவலை வந்தது. நண்பர்களை நடனத்திற்கு அழைத்து வருவதற்குத்தான் லண்டன் சென்றுள்ளான் என திருமதி. லூகாஸ் தெரிவித்தபின்தான் மனம் சற்று சமாதானமடைந்தது. பன்னிரெண்டு மகளிரும் , ஏழு ஆடவர்களும் வருகிறார்கள் என முதலில் தெரிந்தவுடன் , எதற்காக இவ்வளவு மகளிர் வருகின்றனர் என மனம் பதைபதைத்தது. ஆனால் நடனத்திற்கு முதல் நாள் ஐந்து சகோதரிகளும் , ஒரு சகோதரனும் வந்துள்ளனர் என்றவுடன் சிறிது அமைதியடைந்தனர். ஆனால் நடன அரங்கில் நுழைந்ததென்னவோ பிங்கிலி , இரண்டு சகோதரிகள் , ஒரு சகோதரியின் கணவர் மற்றும் ஒரு இளைஞன் மட்டுமே.
  1. Some mind enters into Man’s action while a woman’s action is all emotions
    மனிதன் ஓரளவு சிந்தித்து செயல்படுவான். பெண்ணின் செயல் முழுவதும் உணர்ச்சிமயமானது.
  2. Ready action indicates alert cancellation
    செயல்பட எந்த நேரமும் தயாராக இருப்பது ரத்து செய்ய உஷாராக இருப்பதாகும்.
  3. The more the mind is occupied, the more the work is spoiled
    மனம் செயலில் எந்த அளவுக்கு ஈடுபட்டுள்ளதோ, அந்த அளவுக்கு செயல் கெடும்.
  4. For the small mind, any great work reveals in terms of details
    பெரிய வேலை சிறிய புத்திக்கு வேலையாகவே தெரியும்.
  5. Small, selfish persons evaluate anything in their terms
    சுயநலமான சிறிய மனிதன் எதையும் தன் கண்ணோட்டப்படியே புரிந்து கொள்வான்.
  6. Small values cannot serve higher aims
    பெரிய இலட்சியங்களைச் சாதிக்க சிறிய பண்புகளின் குணம் பயன்படாது.
  7. Approaching a work through small selfishness postpones it
    சுயநலமாக சிறியதாக ஒரு வேலையை நினைத்தால் அது தள்ளிப் போகும்.
  8. Missing later is indicated by missing earlier
    பின்னால் தவறப் போவது இப்பொழுது தவறுதலால் தெரிகிறது.
  9. Dinner missed indicates severance after three weeks
    சாப்பாடு தவறியது 3 வாரத்திற்குப் பின் ஊரை விட்டுப் போவதைக் காட்டுகிறது.
  10. Negative replies come more readily than positive ones
    இல்லை என்ற சொல் உண்டு என்ற சொல்லை விடத் தயாராக எழும்.
  11. Present sentiment forecasts future settlement
    இன்றைய உணர்ச்சி எதிர்காலத்தில் முடிவதைக் காட்டுகிறது.
  12. Mr. Bingley’s leaving Netherfield permanently is now indicated
    பிங்லி நெதர்பீல்டை விட்டு நிரந்தரமாகப் போவதை இது காட்டுகிறது.
  13. Life responds more to the energy in the action than to the thought in it
    The power of thought, whether right or wrong, will prevail

    சிந்தனையை விட சக்தி செயல்பட உதவும்.
    செயலின் பலனும் திறனும் அதன் பண்பால் நிர்ணயிக்கப்படுகிறது.
  14. To Mrs. Bennet her own importance is the only thing that exists
  15. Imagination takes wings when interest is great
  16. Mind sees everything from its point of view
  17. The child is seen in the parent
    பெற்றோரில் குழந்தையைக் காணலாம்.
  18. Lady Lucas consoles Mrs. Bennet as Charlotte advises Lizzy
    லேடி லூகாஸ் Mrs. பென்னட்க்கு ஆறுதல் கூறுகிறார். ஷார்லோட் எலிசபெத்திற்கு ஆறுதல்.
  19. People’s knowledge has the power of determination
    நாலுபேருக்குப் புரிவது நடப்பதை நிர்ணயிக்கும்.
  20. Comfort here is pure self-centred petty selfishness
    சுயநலமான சிறுபிள்ளைத்தனமான ஆதாயம் இங்கு சௌகரியம் எனப்படும்.
  21. Selfishness limits others’ world to its own
    உலகத்தைச் சுயநலம் தன்னளவுக்குச் சுருக்கிக் கொள்ளும்.
  22. Selfishness exists in several varieties
    சுயநலத்தின் ரூபங்கள் பல.
    It can be blind
    அதற்குக் கண்ணில்லை.
    By its intensity it can become venom
    சுயநலம் தீவிரமானால் விஷமாகும்.
    By its attitude, it can offend
    அதன் நோக்கம் சுடும்.
    Its generosity too can be constrictive
    அதன் பெரும்தன்மையும் குறுகியது.
    Selfishness is directed inward and stops short of the Self
    சுயநலம் உள்ளே போய் ஆத்மாவிடம் நின்று விடும்.
    Its justice is tyrannical
    கொடுமை அதன் நியாயம்.
    Its uttermost fairness is unjust
    அதன் முடிவான நியாயம் அநியாயம்.
  23. Knowledge is power
    ஞானம் திறமை.
  24. The strong opinion of Meryton ladies abridges the twelve ladies into five and finally to two
    மெரிடன் பெண்களின் உறுதியான நினைவு பன்னிரண்டு பெண்களை ஐந்தாக்கி மீண்டும் இரண்டாக்கியது.
  25. The power of thought, whether right or wrong, will prevail
    சரியோ, தப்போ எண்ணம் தடையாக மட்டுமிருக்கும்
  26. Any lady instinctively hates another lady
    ஒரு பெண்ணுக்கு அடுத்த பெண் பிடிக்காது.
  27. A lady likes to be adored by all men present with undivided attention
  28. Man can handle a wife, but can never handle a mother-in-law
    மனைவியை சமாளிக்கலாம், மாமியாரைச் சமாளிக்க முடியாது.
5
Mr. Bingley was good-looking and gentlemanlike; he had a pleasant countenance, and easy, unaffected manners. His sisters were fine women, with an air of decided fashion. His brother-in-law, Mr. Hurst, merely looked the gentleman; but his friend Mr. Darcy soon drew the attention of the room by his fine, tall person, handsome features, noble mien, and the report, which was in general circulation within five minutes after his entrance, of his having ten thousand a year. The gentlemen pronounced him to be a fine figure of a man, the ladies declared he was much handsomer than Mr. Bingley, and he was looked at with great admiration for about half the evening, till his manners gave a disgust which turned the tide of his popularity; for he was discovered to be proud, to be above his company, and above being pleased; and not all his large estate in Derbyshire could then save him from having a most forbidding, disagreeable countenance, and being unworthy to be compared with his friend.
திரு. பிங்கிலி பார்ப்பதற்கு அழகாகவும் , நற்பண்புகள் உடையவனாகவும் , இனிய சுபாவம் படைத்தவனாகவும் , அலட்டிக் கொள்ளாத சுபாவம் உடையவனுமாக தோற்றமளித்தான். சகோதரிகள் அழகாகவும் , நாகரீகம் படைத்தவர்களுமாய் காட்சியளித்தனர். திரு. ஹர்ஸ்ட் தோற்றத்தில் வெறும் நற்பண்புகள் மட்டும் நிறைந்தவராய் இருந்தார். ஆனால் நண்பனாக வந்திருந்த டார்சி பார்ப்பதற்கு உயர்குடியில் பிறந்தவனாக இருந்தான். தன்னுடைய நுண்ணிய கம்பீரமான தோற்றத்தால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். அவன் நுழைந்த ஐந்தாவது நிமிடத்திலேயே வருடத்திற்குப் பத்தாயிரம் வருமானம் படைத்தவன் என்ற செய்தி எல்லோரிடமும் பரவ ஆரம்பித்தது. ஆடவரும் , பெண்டிரும் அவன் பிங்கிலியைவிட அழகானவன் என வியந்து ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல அவன் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் மாறுபட்ட கருத்தை தந்தது. தன் தகுதிக்கு கீழ் உள்ளவர்கள் மத்தியில் தான் இருப்பதாக நினைத்து கர்வமாக நடந்து கொண்டதும் , பழகுவதற்கு இனிமையற்றவனாக இருந்ததும் டெர்பிஷயரில் பெரிய சொத்து இருந்தும் , மற்றவர்களால் பிங்கிலியை ஏற்றுக் கொண்டதுபோல் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
  1. At first sight is a person known essentially
    பார்த்த மாத்திரம் ஒருவர் மூலம் வெளிப்பட்டு விடும்.
  2. One’s looks reveal
    பார்வை மனத்தைப் பளிங்காகக் காட்டும்.
  3. Exceeding folly is excessive goodness
    அளவு கடந்த மடமை அபரிமிதமான நல்ல குணம்.
  4. Absence of individuality is unaffected manners
    சுயமாக எதுவுமில்லாவிட்டால் அனைவரிடமும் கலந்து பழகலாம்.
  5. Air, fashion and dress matter in public
    உடையும், பழக்கமும், தோற்றமும் ஊருக்கு முக்கியம்.
  6. Air decides how fine a woman is
    நடை நளினத்தைக் காட்டும்.
  7. Tallness is striking
    உயரமானால் கண்ணில் படும்.
  8. Report does not follow; it accompanies a VIP
    செய்தி பின்னே வாராது. பெரிய மனிதனுடன் வரும்.
  9. News of wealth travels fast
  10. Interested reports do not wait even for a few minutes
    கேட்டதைச் சொல்ல இன்டர்நெட்டுக்கு க்ஷணம் போதும்.
  11. Knowledge of one’s wealth gives beauty to the figure
    செல்வச் செழிப்பு முகத்தில் அழகாகத் தோன்றும்.
  12. £10,000 a year is the fine figure of a man
    £10,000 வருமானம் மனிதனுக்கு அழகு.
  13. Wealth makes one good looking
  14. The richer the man the more handsome he is
    £ 10,000 நாலாயிரத்தை விட அழகு.
  15. Social smallness looking up to social greatness is admiration
    எளியவன் பணக்காரனை நிமிர்ந்து பார்ப்பது உயர்வாக நினைப்பது.
  16. The tiniest of men equates himself to the greatest of men
    மிக எளியவன் மிகப் பெரியவனுடன் தன்னைச் சமமாக நினைப்பான்.
  17. Two people are compared by what they are to oneself
    ஒருவர் வேறு இருவரை ஒத்துப்பார்க்கத் தன்னுடன் ஒத்துப் பார்ப்பார்.
  18. Values are reflections of likes and dislikes
    உயர்வு என்பது பிடிக்கும், பிடிக்காததைப் பொருத்தது.
  19. Measure of satisfaction is determined by the measure of expectation
  20. Values are recognized by comparison
    ஒத்திட்டுப் பார்த்தால் உயர்வு தெரியும்.
  21. In the absence of comparison high values are lost sight of
    ஒத்திட்டுப் பார்க்க முடியாவிட்டால் உயர்ந்தவை மறந்து போகும்.
  22. The secret of popularity is self-adulation
    தன் பெருமையை உணர்பவர் பிரபலமடைவர்.
  23. Admiration is the expansiveness of the unformed
  24. Pleasant exterior may be hollow inside
  25. The merest exterior is taken for the inmost content
  26. Pride pricks
  27. The unseen possibility becomes a wonder
  28. Man is indifferent to the unattainable
  29. One’s own prestige is more valued than another man’s property
  30. Indifference issues out of inaccessibility
  31. Unavailability alters its character
    கிடைக்கவில்லையெனில் வெறுப்பு எழும்.
  32. Man does not care for the opportunities lost
    தானிழந்ததை அறியாதவன் மனிதன்.
    Nor does he care for the opportunities availed of
    பெற்றதும் மறந்து போகும்.
    His asserts against great opportunities when they are out of his reach
    கிடைக்காத வாய்ப்பை வேண்டாம் என்பான்.
    He will sacrifice any degree of self-respect to secure any small advantage
    அல்பத்தைப் பெற புரண்டு புரண்டு அழுவான்.
  33. The vital man can never know the mental man
    உணர்ச்சிமயமானவனுக்கு அறிவாளி புரியாது.
6
Mr. Bingley had soon made himself acquainted with all the principal people in the room; he was lively and unreserved, danced every dance, was angry that the ball closed so early, and talked of giving one himself at Netherfield. Such amiable qualities must speak for themselves. What a contrast between him and his friend! Mr. Darcy danced only once with Mrs. Hurst and once with Miss Bingley, declined being introduced to any other lady, and spent the rest of the evening in walking about the room, speaking occasionally to one of his own party. His character was decided. He was the proudest, most disagreeable man in the world, and every body hoped that he would never come there again. Amongst the most violent against him was Mrs. Bennet, whose dislike of his general behaviour was sharpened into particular resentment, by his having slighted one of her daughters.
பிங்கிலி , அங்கு இருப்பவர்களுடன் சுலபமாகப் பழகி , எல்லோருடனும் சேர்ந்து நடனமாடி , தன்னுடைய இனிமையான குணத்தால் அனைவரையும் கவர்ந்து , அடுத்த நடனத்தை தான் ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தான். ஆனால் டார்சியோ அதற்கு நேர்மாறாக யாருடனும் கலந்து கொள்ளாமல் ஒரு முறை திருமதி. ஹர்ஸ்டுடனும் , மற்றொரு முறை பிங்கிலியின் சகோதரியுடனும் மட்டுமே நடனமாடி மற்றவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தன்கூட வந்தவர்களுடன் மட்டுமே பேசி காலத்தைக் கழித்தான். அதனால் அவன் மிகவும் கர்வமானவன் , பழகுவதற்கு கடினமானவன் என்று தீர்மானித்து அவன் இனி வராமல் இருந்தாலே பரவாயில்லை என்ற நிலைக்கு மற்றவர்கள் வந்து விட்டனர். அதுவும் திருமதி. பென்னட்டிற்கு தன்னுடைய மகளை பற்றிய கடுமையான விமரிசனத்தைக் கேட்ட பிறகு அடியோடு பிடிக்காமல் போய்விட்டது.
  1. The unformed takes the form of the vessel into which it is poured
    விவரமற்றவன் தானுள்ள இடத்தைப் போல் மாறிக் கொள்வான்.
  2. Life is intense interchange
    வாழ்வு தீவிரமாக அனைத்துடனும் இணைந்து செயல்படும்.
  3. Availability is amiability
    அணுக முடிவது இனிமையெனப்படும்.
  4. Wealth making itself available to all is amiability
    செல்வர் அனைவருடனும் பழகுவது இனிய பழக்கம்.
  5. Bourgeois goes out seeking social approval
    மத்தியதர வர்க்கத்தினர் சமூகம் ஏற்பதை நாடுவர்.
    An aristocrat offers social approval to those who come to him
  6. The neo-rich like to be ever present in social gatherings
    புது பணக்காரன் ஊர் கூடுமிடத்திற்கு வர விரும்புவான்.
  7. Superiority is supercilious
  8. Inaccessibility and exclusiveness are hallmarks of superiority
    தனித்திருப்பதும், அணுக முடியாததும் உயர்ந்த நிலையை அறிவிக்கும்.
  9. Superiority enjoys its superiority by the nearness of inferiority
    தாழ்ந்தவனருகிலிருப்பதால் தான் உயர்வு என நினைப்பதுண்டு.
  10. Vanity seeks no solitude. It seeks isolation in company
  11. Inferiority never wants to see superiority. Superiority enjoys near inferiors but keeps aloof
    தாழ்ந்தது உயர்ந்ததைக் காணப் பிரியப்படாது.
    உயர்ந்தவன் உடனுள்ளவரின் தாழ்ந்த நிலையை அனுபவிப்பான்.
    பழகப்பிரியப்படமாட்டான்.
  12. Respectable people will avoid a proud man
    கர்வமான மனிதனை நல்லவர் விலக்குவர்.
    Submissive squeamish people will court him
    நாதியற்றவன் தேடிப் போவான்.
  13. Untouchability in India is social aloofness in England
  14. Social attitudes are decided by social benefit, not by the intrinsic value
  15. People cannot decide one’s character. Their opinion can be decided
    பிறர் சுபாவத்தை அறிய முடியாது, அறிபவன் பெறுவது அபிப்பிராயம்.
  16. Lasting friendships are ones of violent contrasts
    முரண்பாடான நண்பர்கள் நெடுநாள் நண்பராக நீடிப்பர்.
  17. Contrast sustains the relationship
    உறவை நீடிக்க வேறுபாடு உதவும்.
  18. Character is self-revealing
    சுபாவம் தன்னைத் தானே வெளிப்படுத்தும்.
  19. The wife is subtly aware of her husband’s success a year later and now loudly protests against it
    ஓராண்டிற்குப் பின் கணவன் நிலை உயர்வதைச் சூட்சுமமாக அறிந்து மனைவி தடை செய்வாள்.
  20. The greatest final beneficiary will be most violent in opposing
    முடிவாகப் பெரும் பலனை அனுபவிப்பவர் முழு வீச்சுடன் எதிர்ப்பார்.
  21. Resentment is organised dislike
    வெறுப்பு நிலையாக உருவகப்பட்டால் அது விரக்தியாகும்.
  22. Pleasant exterior makes for popularity
  23. Liveliness attracts
  24. Psychological liveliness is excess energy
    தெம்பு நிறைந்தவர் கலகலப்பாக இருப்பார்கள்
  25. Social liveliness is an active interchange
    பலருடனும் பழகினால் சமூகத்தில் பளிச்சென இருக்க முடியும்
  26. Unreserved behaviour is self-giving
  27. Popularity is to accept a population at their level
  28. Intensity longs for eternity
  29. Amiability is universal indulgence
  30. Goodness shines by contrast
  31. Any value prefers to preserve it
7
Elizabeth Bennet had been obliged, by the scarcity of gentlemen, to sit down for two dances; and during part of that time Mr. Darcy had been standing near enough for her to overhear a conversation between him and Mr. Bingley, who came from the dance for a few minutes, to press his friend to join it.
நடனமாட தகுந்த நபர் கிடைக்காததால் எலிசபெத் அங்கிருக்கும் ஓர் இருக்கையில் வந்தமர்ந்தாள். அவள் அருகே டார்சி நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவனை நடனமாட அழைக்க வந்த பிங்கிலிக்கும் , டார்சிக்கும் இடையே நடந்த உரையாடலை அவள் கேட்கும்படி ஆயிற்று.
  1. Earliest events indicate the ultimate outcome
    முடிவான நிகழ்ச்சிகளை முதலில் நடப்பவை காட்டும்.
  2. The best is ejected out of the ordinary
    உயர்ந்ததை எளியவை விலக்கும்.
  3. Complements have something in common
    ஒத்துப் போகும் நபர்களுக்குப் பொதுவானதிருக்கும்.
  4. Vital dislike is physical detachment
  5. Violence is reverse of attraction
  6. Intense feelings always find excuses
  7. Eligible men are ever scarce
  8. Darcy and Elizabeth were all by themselves, for different reasons
  9. Do as I do
  10. Strength asserts, weakness conforms
  11. Conservatism insists on conformity
  12. Darcy attends all balls having found the first insupportable
  13. Man refuses vehemently what he will soon court
8
"Come, Darcy," said he, "I must have you dance. I hate to see you standing about by yourself in this stupid manner. You had much better dance."
"வா , டார்சி , ஏன் இப்படி நீ முட்டாள்தனமாக நின்று கொண்டிருக்கிறாய். அது எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல நடனங்கள் இருக்கின்றன. வா , வந்து கலந்து கொள்" என்றழைத்தான் பிங்கிலி.
  1. No event occurs by itself without an initiative from oneself
    நாம் முனைந்து செயல்படாமல் ஒரு காரியம் நடக்காது.
  2. Darcy’s later interference is suggested by Bingley’s interference
    நடனமாடச் சொன்னதால் டார்சி ஜேன் திருமணத்தைத் தடுத்ததற்குக் காரணம் பிங்லி இப்பொழுது அவனை மடையன் என்றான்.
  3. A weak man unsuccessfully interfering with a strong man invites the strong man to successfully interfere with him
    எளியவன் வலியவன் வாழ்வில் பலனின்றித் தலையிட்டால், வலியவனைத் தன் வாழ்வை அழிக்க அழைப்பதாக முடியும்.
  4. The stupid calls another or all others stupid
    மடையன் அடுத்தவனை மடையன் என்பான். அனைவரையும் மடையன் என்பான்.
  5. Weakness knowing its weakness cannot but take initiative
    தன் பலஹீனத்தை அறிந்தவர் முனைந்து செயல்படாமலிருக்க மாட்டார்.
9
"I certainly shall not. You know how I detest it, unless I am particularly acquainted with my partner. At such an assembly as this it would be insupportable. Your sisters are engaged, and there is not another woman in the room whom it would not be a punishment to me to stand up with."
"நிச்சயமாக என்னால் முடியாது. அறிமுகமில்லாதவருடன் சேர்ந்து நடனமாட எனக்குப் பிடிக்காது என உனக்குத் தெரியும். உன்னுடைய சகோதரிகள் வேறு யாருடனோ நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற எவருடன் ஆடினாலும் அது எனக்குத் தண்டனையாகத்தான் இருக்கும்".
  1. To invite refusal or abuse is the trait of weakness
    பலஹீனமானவன் பிறர் மறுக்கும்படி அல்லது திட்டும்படி நடப்பான்.
  2. Superiority is in its elements when giving offence
    பிறரைச் சுடும்படிப் பேசினால் உயர்ந்தவனுக்கு மனம் நிம்மதியாகும்.
  3. One who hates an activity will be later forced to seek its help when it will refuse
    ஒரு வேலையை செய்யப் பிடிக்காவிட்டால்
    , அதை மீண்டும் நாட வேண்டியிருக்கும். அந்த நேரம் அவ்வேலை மறுக்கும்.
  4. Participating in activities one disapproves of will create situations that will humble him
    ஒத்து வராத வேலைகளில் கலந்து கொள்வது , பின்னர் அவமானப்பட வேண்டும்.
10
"I would not be so fastidious as you are," cried Bingley, "for a kingdom! Upon my honour, I never met with so many pleasant girls in my life as I have this evening; and there are several of them you see uncommonly pretty."
"உன்னைப் போல் நான் இப்படிப்பட்ட தனி அபிப்பிராயங்கள் உடையவன் இல்லை. நான் இங்கு இருக்கும் பெண்களைப் போல் அழகானவர்களை இதுவரை சந்தித்ததில்லை. சில பேர்கள் அசாதாரண அழகுடையவர்களாக இருக்கிறார்கள்" என்றான் பிங்கிலி
  1. Popularity of a weak man makes him assert against the strong
    எளியவன் பிரபலமானால் வலியவனிடம் கர்வமாக நடப்பான்.
11
"You are dancing with the only handsome girl in the room," said Mr. Darcy, looking at the eldest Miss Bennet.
"உன்னுடன் ஆடும் பெண் ஒருத்தி மட்டும்தான் இங்கு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள்" என்றான் டார்சி , ஜேனை நோக்கி.
 
12
"Oh! She is the most beautiful creature I ever beheld! But there is one of her sisters sitting down just behind you, who is very pretty, and I dare say very agreeable. Do let me ask my partner to introduce you."
"ஆமாம் , நான் பார்த்த பெண்களிலே இவள்தான் மிகவும் அழகானவள். ஆனால் உனக்குப் பின்னால் அவள் தங்கை உட்கார்ந்திருக்கிறாளே அவளும் அழகிதான். அவளை உனக்கு அறிமுகப்படுத்தச் சொல்லவா?"
  1. Bingley is in love with the whole sex
  2. Bingley first spoke of Elizabeth to Darcy
  3. Darcy interfered with Bingley’s marriage – injury in return of a reward
  4. Rudeness appreciates value by abuse
  5. He who is slighted by everyone talks of slight
  6. Beauty is valuable. Even extraordinary beauty cannot by itself get a girl married
    அழகு முக்கியம். பிரபலமான அழகிற்காக மட்டும் ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடப்பது அரிது.
13
"Which do you mean?" And turning round, he looked for a moment at Elizabeth, till catching her eye, he withdrew his own and coldly said, "She is tolerable; but not handsome enough to tempt me; and I am in no humour at present to give consequence to young ladies who are slighted by other men. You had better return to your partner and enjoy her smiles, for you are wasting your time with me."
"யாரைச் சொல்கிறாய்?" என்று திரும்பி எலிசபெத்தைப் பார்த்த டார்சி அவள் தன்னை கவனித்ததைக் கண்டு திரும்பி "பரவாயில்லை , ஆனால் என்னைக் கவரும் அளவுக்கு அவ்வளவு அழகியில்லை. மேலும் மற்றவர் ஒதுக்கிய அப்பெண்ணுடன் ஆடுவதற்கு எனக்குச் சுவாரஸ்யமில்லை. நீ என்னுடன் வீணே காலத்தைக் கழிக்காமல் உன்னுடைய ஜோடியுடன் நடனமாடி அவளுடைய புன்னகையை சந்தோஷமாக அனுபவி."
  1. One’s behaviour is determined by the environment
    சந்தர்ப்பம் நடத்தையை நிர்ணயிக்கும்
  2. Darcy does not mind speaking audibly ‘tolerable’
    பரவாயில்லையென டார்சி குரல் காதில் விழும்படிப் பேசினான்.
  3. Luck chases Man. Man runs away from luck
    அதிர்ஷ்டம் மனிதனைத் தொடர்கிறது. மனிதன் அதைவிட்டு ஓடுகிறான்.
  4. There is no giving without taking
    கொடுக்காமல் பெற இயலாது.
  5. Smallness waxes eloquent about the value of everything and everyone
    அர்த்தமற்றவன் அனைத்தையும் பாராட்டுவான்.
  6. Subsequent actions create their base in present circumstances
    வரும் நிகழ்ச்சிகளின் அஸ்திவாரம் இன்றைய செயலில் எழும்.
  7. Man refuses luck not without knowing it
    அதிர்ஷ்டத்தை மறுக்கும் மனிதன் தெரியாமல் செய்வதில்லை.
  8. Luck is condemned on its first perception
    பார்த்தவுடன் அதிர்ஷ்டத்தின் மீது மனிதனுக்கு எழும் உணர்வு வெறுப்பு
  9. Present conversation is the present version of future conversation
    உரையாடல் என்பது உள்ளதல்ல, உள்ளதைப் பற்றி உள்ளம் நினைப்பது.
  10. Man refuses now what he will run after later
    எதிர்காலத்தில் எது முக்கியமாகப் போகிறதோ அதை இன்று மனிதன் மறுப்பான்.
14
Mr. Bingley followed his advice. Mr. Darcy walked off; and Elizabeth remained with no very cordial feelings towards him. She told the story, however, with great spirit among her friends; for she had a lively, playful disposition, which delighted in any thing ridiculous.
<பிங்கிலியும் , டார்சியும் அவ்விடத்தை விட்டகன்றனர். இவர்களது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எலிசபெத் இதனால் ஒரு துளியும் பாதிக்கப்படவில்லை. கலகலப்பான , விளையாட்டுத்தனமான சுபாவம் கொண்ட எலிசபெத் இவ்வுரையாடலை மற்றவர்களுடன் பகிர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
  1. The small advising the great gracefully cherishes the snubbing
    சிறியது பெரியதற்கு அறிவுரை வழங்கி பெறும் கொட்டை ரசிக்கிறது.
  2. Submissiveness takes advice
    பணிவு உள்ளவன் அறிவுரையை ஏற்பான்.
  3. Failures turn into opportunities by the attitude of reception
    தோல்வியை ஏற்கும் வகையில் அது வெற்றியாகும்.
  4. Excessive cheerful energy becomes playfulness
    பூரித்து எழும் உவகை கலகலப்பாகும்.
  5. Liveliness is expanding life-energy
    தெம்பு பீறிட்டெழுந்தால் வாழ்வு ஜீவனுள்ளதாகும்.
  6. Laughing at abuse is strength
  7. Liveliness and playful disposition is psychological strength
  8. Wisdom delights in the ridiculous
  9. Strength is not easily hurt
    நிதானமானவர் மனம் புண்படுவதில்லை.
  10. Liveliness taunts petulance with recognition
    அல்பமாகப் பேசுவதை ஏற்று கலகலப்பாக அலட்சியம் செய்யலாம்.
  11. The ridiculous hurts incomprehension
    அர்த்தமற்றவர் புரியாவிட்டால் மனம் புண்படும்.
  12. Absurdity delights liveliness
    அபத்தம் கலகலப்பானவரைச் சிரிக்க வைக்கும்.
  13. The ridiculous is unconventional
    பழக்கமில்லாதது கேலிக்குரியது.
    Appreciation of the ridiculous needs an unconventional mind
    அனைவரும் கேலி செய்வதைப் பாராட்ட மனம் புத்துணர்ச்சி பெற வேண்டும்.
  14. Courage rises when challenged
    சவாலை ஏற்றால் தைரியம் வளரும்.
  15. Cheerfulness is a sure foundation of success
    சிரித்த முகமானவர்க்கு வெற்றி நிச்சயம்.
15
The evening altogether passed off pleasantly to the whole family. Mrs. Bennet had seen her eldest daughter much admired by the Netherfield party. Mr. Bingley had danced with her twice, and she had been distinguished by his sisters. Jane was as much gratified by this as her mother could be, though in a quieter way. Elizabeth felt Jane's pleasure. Mary had heard herself mentioned to Miss Bingley as the most accomplished girl in the neighbourhood; and Catherine and Lydia had been fortunate enough to be never without partners, which was all that they had yet learnt to care for at a ball. They returned, therefore, in good spirits to Longbourn, the village where they lived, and of which they were the principal inhabitants. They found Mr. Bennet still up. With a book he was regardless of time; and on the present occasion he had a good deal of curiosity as to the event of an evening which had raised such splendid expectations. He had rather hoped that all his wife's views on the stranger would be disappointed; but he soon found that he had a very different story to hear.
பென்னட் குடும்பத்தினருக்கு அம்மாலைப் பொழுது முழுவதும் இனிமையாகக் கழிந்தது. நெதர்பீல்ட் குடும்பத்தினர் ஜேனை மிகவும் கவனித்தனர் , பாராட்டினர். பிங்கிலி--ஜேனுடன் இருமுறை நடனமாடினான். அவனது சகோதரிகள் அவளை பிரத்யேகமாக கவனித்தனர். தாயாரைப் போல் ஜேன் சந்தோஷப்பட்டாலும் , அமைதியாக இருந்தாள். எலிசபெத்திற்கு அவளது சந்தோஷத்தை உணர முடிந்தது. திறமைசாலி பெண்ணாக மேரி , பிங்கிலியின் சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டாள். கிட்டியும் , லிடியாவும் சக நபர்களுடன் ஜோடி சேர்ந்து நடனமாடிய வண்ணம் இருந்தனர். அதனால் எல்லோரும் மிக உற்சாகத்தோடு தங்களது இடமான லாங்பர்னுக்கு திரும்பினர். திரு. பென்னட் அவர்களை எதிர்பார்த்த வண்ணம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். ஏமாற்றத்துடன் தன் மனைவி திரும்புவாள் என எதிர்பார்த்தவருக்கு மாறுபட்ட செய்தி காத்திருந்தது.
  1. Mr. Bennet’s family is always cheerful
    பென்னட் குடும்பம் குதூகலமானது.
  2. The atmosphere is rendered pleasant by pleasant initiatives
    இனிமையான செயல்களை ஆரம்பித்தால் சூழல் இனிமையாகும்.
  3. Attention is admiration
    கவனம் பாராட்டு.
  4. People admire what the leader admires
    தலைவர் போற்றுவதை மக்கள் போற்றுவர்.
  5. Gratification comes from recognition
    பலரும் பாராட்டினால் மனம் நிறையும்.
  6. Either giving or receiving can give gratification
    பெறுவதிலுள்ள திருப்தி கொடுப்பதிலும் உண்டு.
  7. Gratification is contagious
    திருப்திப்படுத்த ஆரம்பித்தால் அது தொடரும்.
  8. Biological relationship helps emotional contagion
    உறவில் குணம் ஒன்று போலிருக்கும்.
  9. Accomplishment catches attention
    சாதனையை உலகம் கவனிக்கும்.
  10. Emotional understanding is instantaneous
    உணர்ச்சி உடனே புரிந்து கொள்ளும்.
  11. Goodwill feels another’s pleasure
    பிறரினிக்கப் பழகுவது நல்லெண்ணம்.
  12. To delight in another’s triumph is self-giving
    பிறர் வெற்றியில் பூரிப்பது தன்னல அர்ப்பணம்.
  13. Goodwill is to feel in others’ sensation
    மற்றவர் உணர்ச்சியில் பங்கு கொள்வது நல்லெண்ணம்.
  14. Each in its own way shares the atmosphere
    ஓரிடத்தின் சூழலில் அனைவருக்கும் பங்குண்டு.
  15. One is oblivious of the wonders when saturated
    பூரணமான நிலையில் அதிசயம் உற்பத்தியாவது தெரிவதில்லை.
  16. All are equal in inner capacity
    அறிவில் அனைவரும் சமம்.
  17. Thwarting another is selfish triumph
    சுயநலம் அடுத்தவர் தோல்வியில் வெற்றி காணும்.
  18. Jealousy is limited to one’s emotional circle
    பழகுபவரிடமே பொறாமை எழும்.
  19. What one does not care for does not excite jealousy
    அக்கரையில்லாவிட்டால் பொறாமை வாராது.
  20. Energy expressed is good spirit
    தெம்பிருந்தால் கலகலப்பாக இருக்கலாம்.
  21. Excessive energy is good spirits
    அளவு கடந்த தெம்பு சந்தோஷம்.
  22. The principal inhabitant is socially pivotal
    ஊரில் முக்கியமான குடும்பம் ஊருக்கு மையம்.
  23. Energy in everyone energises the rest
    ஒருவர் தெம்பு அனைவரையும் உற்சாகப்படுத்தும்.
  24. Mind’s energy is absorbed by thoughts written about
    எழுத்தில் மனம் ஊறும்.
  25. One cares for what he ridicules
    பெரும் ஆர்வத்துடன் கேலியும் சேரும்.
  26. Good deal of curiosity can go with ridicule
    ஆர்வமும் கேலியும் சேர்ந்து எழும்.
  27. Indifference is unexpressed expectation
    எதிர்பார்ப்பதை மறைப்பவர் பராமுகமானவர்.
  28. Contraries go together
    எதிரானவை உடன் வரும்.
  29. Expectation brings the opposite
    எதிர்பார்த்தால் எதிராகும்.
  30. The success of the daughter is a greater fulfillment to the mother
  31. Psychological gratification can cancel the accomplishment
  32. The new event raises expectations
    புதியது எதிர்பார்ப்பை எழுப்பும்.
  33. The opposite of expectation occurs in a weak atmosphere
    எளிமையான சூழலில் எதிர்பார்க்க ஒன்றுமில்லை.
  34. To delight in another’s joy is spiritual
  35. Recognition reconciles
  36. Occupation is the ultimate joy for the youth
  37. Occupation does not oust expectation
  38. Mr. Bennet’s expectation of disappointment comes true later
  39. Spite against the wife overcomes the welfare of children
16
"Oh! My dear Mr. Bennet," as she entered the room, "we have had a most delightful evening, a most excellent ball. I wish you had been there. Jane was so admired, nothing could be like it. Everybody said how well she looked; and Mr. Bingley thought her quite beautiful, and danced with her twice. Only think of that my dear; he actually danced with her twice! And she was the only creature in the room that he asked a second time. First of all he asked Miss Lucas. I was so vexed to see him stand up with her! But, however, he did not admire her at all: indeed, nobody can, you know; and he seemed quite struck with Jane as she was going down the dance. So he inquired who she was, and got introduced, and asked her for the two next. Then the two third he danced with Miss King, and the two fourth with Maria Lucas, and the two fifth with Jane again, and the two sixth with Lizzy and the Boulanger."
உள்ளே நுழைந்தவள் "எனதருமை திரு. பென்னட்" என ஆரம்பித்தாள்."இன்று மாலை மிகவும் சந்தோஷமாக இருந்தது , நடனம் மிகவும் சிறப்பாக இருந்தது. நீங்கள் அங்கு இல்லையே என இருந்தது. எல்லோரும் ஜேனை மிகவும் ரசித்தனர். எவ்வளவு அழகாக இருக்கிறாள் என எல்லோரும் கூறினர். பிங்கிலிக்கு ஜேனை மிகவும் பிடித்து விட்டதால் அவளுடன் இருமுறை நடனமாடினான். வேறு யாருடனும் அவன் இரண்டாவது முறையாக நடனமாடவில்லை. மிஸ். லூகாஸுடன் முதலில் ஆடியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் அவனுக்குமே அது ரசிக்கவில்லை , ஏனெனில் ஜேன் அவனை அவ்வளவு கவர்ந்து விட்டாள். யார் அவள் என விசாரித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவளுடன் நடனமாடினான். பிறகு மிஸ். கிங் , அடுத்தது மேரியா லூகாஸ் , மீண்டும் ஜேனுடன் , பிறகு லிசியுடன் , ---- "
  1. Speech is energy that cannot be contained
    பேச்சு உருவானால் வெளி வருவதைத் தடுக்க முடியாது.
  2. Delight issues out of human contact or human relationship
    மனித உறவு ஆனந்தம் தரும்.
  3. One wants his success to be witnessed
    தன் வெற்றியை உலகம் அறிய வேண்டும் என மனிதன் நினைக்கிறான்.
  4. Not the enjoyment but its recognition by those who matter is important
    அனுபவிப்பதை விட முக்கியமானவர் கவனிப்பதே முக்கியம்.
  5. Man wants his success to be witnessed by his master
    தன் வெற்றியைத் தலைவர் காண மனிதன் விழைகிறான்.
  6. Mrs. Bennet wants him to sanction her triumph
    Mrs. பென்னட் கணவர் தன் வெற்றியைப் பாராட்டவேண்டுமென நினைக்கிறார்.
  7. Sense of success in mind repeats as work non-stop
    வெற்றியைக் கண்ட மனம் வாய் ஓயாமல் அதையே பேசும்.
  8. Nothing succeeds like success
    வெற்றி ஜெயிப்பதைப் போல் எதுவும் ஜெயிக்காது.
  9. The greatest is seen at first sight. The next best comes as a second
    பெரியது முதலில் கண்ணில் படும். அடுத்தது அடுத்தாற்போல் படும்.
  10. Enjoyment exhausts
  11. Mrs. Bennet admires and praises herself in Jane
    பெண்ணின் அழகில் தாயார் தன்னைக் காண்கிறார்.
  12. In positive attitude, the smallest becomes the greatest
  13. One, who admires me, should admire none else
  14. Small minds are exclusive
  15. No detail escapes the interested mind
  16. Selfishness likes any gain to be exclusive to oneself even if there is no loss in others getting it
    பிறர் பெறுவதால் நஷ்டமில்லையெனினும் சுயநலம் தான் மட்டும் பெற விழைகிறது.
  17. It is no enjoyment if it is not exclusively one’s own
    தனக்கு மட்டுமில்லையெனில் ருசியிருக்காது.
  18. Selfishness never shares any shade of success
    வெற்றியின் எந்த ஒரு சிறு பகுதியையும் சுயநலம் விட்டுக் கொடுக்காது
  19. As an animal mates away from the sight of others, enjoyment of any type is not even to be seen by another pair of eyes.
    பெட்டையை நாடும் மிருகம் மறைவாகப் போவது போல், தான் அனுபவிப்பது எதுவும் எவர் கண்ணிலும் பட மனிதன் விரும்ப மாட்டான்.
  20. Constant admiration of the self is the vital exercise for growth
    எந்த நேரமும் தன்னைப் பற்றிப் பெருமையாக நினைப்பவன் சுயநலமாக வளர்வான்.
  21. To think low of another implies you are higher in consciousness
    பிறரை மட்டமாக நினைத்தால் உனது ஜீவியம் உயர்ந்ததெனக் கொள்வதாகும்.
  22. He who can see that all others are high in consciousness, is of the higher consciousness
    அனைவருக்கும் உயர்ந்த ஜீவியம் உண்டு என அறிபவனது ஜீவியம் உயர்ந்தது.
  23. One way of raising one’s consciousness is to discover the higher element in others
    பிறர் ஜீவியம் உயர்ந்தது என அறிவது தன் ஜீவியம் உயர உதவும்.
  24. He who finds only higher consciousness in others has no low consciousness in him
    மட்டுமிருப்பதைக் காண்பவனுக்கு தாழ்ந்த ஜீவியமில்லை.
  25. Higher consciousness sees higher consciousness in others
    உயர்ந்த ஜீவியம் உயர்ந்த ஜீவியத்தைக் காணும்
  26. To see the lower consciousness of others as higher consciousness, one must possess Divine consciousness
    அடுத்தவர் தாழ்ந்த ஜீவியத்தை உயர்ந்த ஜீவியமாகக் காண்பது தெய்வீக ஜீவியம்.
  27. She who tasted a little of the high will not readily accept the offer of the low
    உயர்ந்ததை அனுபவித்தவர் தாழ்ந்ததை ஏற்க மாட்டார்.
  28. Man aspires for the highest he ever enjoyed
    தானறிந்ததில் உயர்ந்ததை மனிதன் நாடுவான்.
  29. Accepting the lowest available is survival
    இருப்பதில் தாழ்ந்ததை ஏற்பது பிழைக்கும் வழி.
    Receiving more than necessary permits growth
    தேவைக்கு மேல் பெறுவது வளர உதவும்.
    Getting what you ask for is satisfaction
    கேட்பது கிடைப்பது திருப்தி தரும்.
    Receiving what you long for is gratification
    ஏங்குவது கிடைப்பது ஆழ்ந்த திருப்தி.
    What you dreamt of gives you fulfillment
    நீ கண்ட கனவு உனக்குத் திருப்தி தரும்.
    What you cannot ever dream of is luck or grace
    உன்னால் கனவும் காண முடியாதது அதிர்ஷ்டம், அருள்.
    To receive what the best among you deserve is luck
    உங்களில் உயர்ந்தவர் தகுதி உனக்கு அதிர்ஷ்டம்.
    To get what no one can ever conceive of is super grace
    எவரும் நினைக்க முடியாதது அருள்.
  30. One can receive to survive, grow, develop, evolve or form luck, grace or super grace
    பிழைக்க, வளர, உயர, மலர, ஒருவர் பெறலாம்.
    அதிர்ஷ்டம், அருள், பேரருளும் பெற முடியும்.
  31. To be sour by a rival’s success is to be human, but mean
    எதிரி ஜெயித்தால் கசப்பது இயற்கை. ஆனால் அது தாழ்ந்த குணம்.
  32. To wish him ill is perverse, if not malicious
    அவன் கெட்டுப் போக நினைப்பது தவறு. பாதகமான நினைவன்று.
17
"If he had had any compassion for me," cried her husband impatiently, "he would not have danced half so much! For God's sake, say no more of his partners. O that he had sprained his ancle in the first dance!"
"போதும் , என் மேல் ஏதேனும் அனுதாபம் இருந்திருந்தால் நீ சொன்னதில் பாதி கூட ஆடியிருக்க மாட்டான். முதல் நடனத்திலேயே அவனது காலில் சுளுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். ஜோடி சேர்ந்த சக பெண்களைப் பற்றி எனக்கு வேண்டாம்".
  1. What my will is sour about, delights me
    எதிரிக்குக் கசக்கும் விஷயம் எனக்கு இனிக்கும்.
  2. The more my rival is bitter about a thing, the richer it grows in my view
    எவ்வளவுக்கெவ்வளவு எதிரிக்குக் கசக்கிறதோ, அந்த அளவுக்கு எனக்கு சந்தோஷம்.
  3. Perverse petulance is the cynical response to one’s own success
    தன் வெற்றியை குதர்க்கமான அல்பமாகப் பேசினால் அது தவறு.
  4. Perversity leads to a break or lapse or even complete failure
    குதர்க்கம் வேலையைக் கெடுக்கும், தடை செய்யும், ஒத்திப் போடும்.
  5. Bingley quits Netherfield
    பிங்லி நெதர்பீல்டை விட்டுப் போய் விட்டான.
  6. Mr. Bennet was petulant, a reason for initial reversal
  7. Mr. Bennet was disappointed for Lizzy
  8. He could not triumph over the wife, nor was Lizzy recognised
18
"Oh! My dear," continued Mrs. Bennet, "I am quite delighted with him. He is so excessively handsome! And his sisters are charming women. I never in my life saw any thing more elegant than their dresses. I dare say the lace upon Mrs. Hurst's gown -- "
ஆனாலும் விடாமல் திருமதி. பென்னட் தொடர்ந்தாள். "எனக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. மிகவும் கம்பீரமாக இருக்கிறான். அவனுடைய சகோதரிகள் அழகாக உள்ளனர். அவர்களுடைய உடை மிக நேர்த்தியாக இருந்தது. இதுவரை அம்மாதிரியான உடையை நான் பார்த்ததில்லை , அதுவும் திருமதி. ஹர்ஸ்டின் உடையின் சிறப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்."
  1. Air and fashion can be charming at a distance
    தோற்றமும் , பாஷனும் தூரத்தில் பளிச்சென இருக்கும்.
  2. The 18th century was known for the submissiveness of the family
    18 ஆம் நூற்றாண்டில் குடும்பங்கள் பணிந்து இருந்தன.
  3. Not the essence, but the small gratification matters
    முக்கியமானவை முக்கியமில்லை. சிறு விஷயங்கள் முக்கியம்.
  4. Mrs. Bennet’s silliness and Mr. Bennet’s petulance balance each other
  5. Not Bingley, but the lace matters
    பிங்லி இல்லை. லேஸ் முக்கியம்.
  6. Women live on appearances and not on content
    பெண்கட்கு விஷயத்தை விடத் தோற்றம் முக்கியம்.
19
Here she was interrupted again. Mr. Bennet protested against any description of finery. She was therefore obliged to seek another branch of the subject, and related, with much bitterness of spirit and some exaggeration, the shocking rudeness of Mr. Darcy.
திரு. பென்னட், இவ்விவரத்தைப்பற்றி தீர்மானமாக அறிய விருப்பப்படவில்லை எனத் தெரிந்தவுடன் , திரு. டார்சியின் கடுமையான நடத்தையைப்பற்றி வெறுப்புடன் சிறிது மிகைப்படுத்தியும் விளக்க முற்பட்டாள்.
  1. Indulgence has a limit
    இடம் எடுத்துக் கொள்வதற்கும் அளவுண்டு.
  2. There is no unprovoked attack
    கிளறாமல் கோபம் எழாது.
  3. Conversation is interrupted when content is not received
    பேசுவதை ஏற்காத பொழுது குறுக்கீடு வரும்.
  4. It is in small acts the significances of life are
    வாழ்வின் முக்கியத்துவம் சிறு விஷயங்களில் உள்ளது.
  5. Mr. Bennet is sensitive about the lace
    Mr. பென்னட்டிற்கு லேஸ் பிடிக்காது.
  6. Mr. Bennet’s irritation was not against the lace, but an expression of his failure
  7. The subject does not change, its presentation changes
    விஷயம் மாறவில்லை, சொல்வது மாறும்.
  8. It is not Darcy’s rudeness that is shocking, but Mr. Bennet’s rudeness
    டார்சியின் முரட்டுத்தனமல்ல, Mணூ. பென்னட்டின் பராமுகம் முக்கியம்.
  9. When strength is not recognized, weakness is attacked
    வலிமையை ஏற்பார், எளிமையைத் தாக்குவார்.
20
"But I can assure you," she added, "that Lizzy does not lose much by not suiting his fancy; for he is a most disagreeable, horrid man, not at all worth pleasing. So high and so conceited that there was no enduring him! He walked here, and walked there, fancying himself so very great! Not handsome enough to dance with! I wish you had been there, my dear, to have given him one of your set downs. I quite detest the man."
"ஆனால் ஒன்று சொல்கிறேன் எனத் தொடர்ந்தாள். லிசியுடன் அவன் நடனமாட விரும்பாததில் அவள் ஒன்றும் குறைந்து விடவில்லை. பார்க்கப் போனால் மோசமாக நடந்துக் கொண்ட அவனுடன் ஆடாததே மேல். தன்னை மிகவும் பெரிய ஆளாக நினைத்து அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். நீங்கள் அங்கு இருந்திருந்தால் அவனுக்கு அது உரைக்கும்படி விமரிசித்திருப்பீர்கள். எனக்கு அவனை கட்டோடு பிடிக்கவில்லை.
  1. Life acts vicariously
    வாழ்வு மறைமுகமாகச் செயல்படும்.
  2. Darcy’s slight of Lizzy is a reflection of the husband’s mocking the wife
    மனைவியை பென்னட் கேலி செய்ததால் அவமானம் நேர்ந்தது.
  3. The most worthy is most abused
    முக்கியமானவரை அதிகமாகத் திட்டுவார்கள்.
  4. Mrs. Bennet abuses Darcy
    Mrs. பென்னட் டார்சியைத் திட்டுகிறார்.
  5. A man can give a set down to another man thinks Mrs. Bennet
    Mrs. பென்னட் தம் கணவர் டார்சியை சமாளிப்பார் எனக் கூறுகிறார்.
  6. It was a period when women were in fetters
    அது பெண்கள் அடங்கியிருந்த காலம்.
  7. Mrs. Bennet’s excitement turns to bitterness against Darcy
  8. Excitement and bitterness are the same
  9. Mrs. Bennet’s description of Darcy is a self-portrayal
  10. Mrs. Bennet’s abuse of Darcy was an inverse prelude of her speechless admiration in the end
  11. Man flares up when a defect in his strongest point is pointed out
    தனக்கு முக்கியமான இடத்தில் பிறர் குறை கண்டால் கோபம் ஆவேசமாக வரும்.



story | by Dr. Radut